.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சச்சின்!. Show all posts
Showing posts with label சச்சின்!. Show all posts

Friday, November 29, 2013

சச்சினுக்கு 'பாரத ரத்னா' விருது தர எதிர்ப்பு : சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!



சச்சினுக்கு பாரதரத்னா விருது வழங்கும் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனகசபை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 விருது பெறுவதற்கான தகுதி சச்சினுக்கு இல்லை என மனுவில் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.


அதிகாரப்பூர்வமாக விருதை அறிவிக்கும் முன் அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும் எனவும், அரசாணையும் இல்லாமல் பாரத ரத்னா விருதை அறிவித்தது தவறு எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்த மனுவில் கலை, இலக்கியம், அறிவியல்துறையில் சிறந்து விளங்குவோருக்கே விருது தரப்பட்டு வருகிறது எனவும்,


சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கும் அரசின் முடிவை ரத்து செய்யவும் மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Thursday, November 14, 2013

சச்சின் பற்றி சில சுவாரசியங்களும்!


* சச்சின் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், ஒருபோதும் 3வது வீரராக களம் இறங்கியது இல்லை.

* இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் மீதான அபிமானத்தால், தன்னுடைய மகனுக்கு அப்பெயரை சேர்த்துக்கு கொண்டார் சச்சின் டெண்டுல்கரின்   தந்தை.

* ஒருமுறை பிரபல குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் பேட் பட்டு, பந்து உடைந்து தெரிப்பது போன்ற நடிக்க வேண்டும் என்று சச்சினிடம்   கேட்கப்பட்டது. ஆனால், கிரிக்கெட்டின் மீதுள்ள அபிமானத்தால் தன்னால் அதுபோன்று நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

* 1990ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்து மும்பை திரும்பியபோது, விமான நிலையத்தில் முதல் முறையாக தன்னுடைய வருங்கால   மனைவி அஞ்சலியை சந்தித்தார்.

* அணியினர் பயணம் செய்யும் பஸ்சில், எப்போதுமே முதல் வரிசையில் இடதுபுறம் உள்ள ஜன்னலோர இருக்கையில்தான் சச்சின் அமர்வார்.

* 1987ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து உலகப்கோப்பை அரையிறுதிப் போட்டியின்போது, பவுண்டரி லைனில் பந்தை எடுத்துப்போடும் சிறுவனாக   சச்சின் இருந்துள்ளார்.

* 2002ல் பெங்களூரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் ஸ்டம்பிங் ஆனார். டெஸ்ட் போட்டியில் இதுதான் அவரது   ஒரே ஸ்டம்பிங்காக பதிவாகி உள்ளது.

சிகரத்துக்கு கிடைத்த கவுரவங்கள்!


* சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை தொடர்ந்து, இதன் நினைவு தபால்தலை இன்று வெளியிடப்படுகிறது. இந்தியாவில்   முதல் முறையாக உயிருடன் இருக்கும் நபருக்கு தபால்தலை வெளியிடப்பட்ட பெருமையை பெற்றவர் அன்னை தெரசா மட்டுமே (1980 ஆகஸ்ட்   27).   இதற்கு அடுத்தபடியாக சச்சின் இப்பெருமையை பெறுகிறார்.

* 1999ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வென்றார்.
* விஸ்டனின் உலக லெவன் நிரந்தர கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமை சச்சினையே சாரும்.

* விமானப்படையின் பின்னணி இல்லாமல், குரூப் கேப்டன் என்ற கவுரவ பதவியை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் சச்சினுக்கே   கிடைத்துள்ளது.

* டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடனான போட்டியில், குறைந்தபட்சம் 2 செஞ்சூரிகளை அடித்த இந்தியர் என்று பெருமை.

* டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களை கொண்டவர் என்ற பெருமை பெற்ற இந்தியர்.

வான்கடே அதிர களமிறங்கினார் சச்சின்!


தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் களமிறங்கினார். வான்கடே அதிர அவர் களமிறங்கிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. அவர் களமிறங்கிய போது அரங்கம் முழுவதும் ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி சச்சினை உற்சாகப்படுத்தினர். மேற்கு இந்திய தீவு அணி வீரர்களும் ஒன்று சேர்ந்து கைதட்டி சச்சினை வரவேற்றனர். அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கி பேட்டிங்கில் அசத்தினார். இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரின் 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இது என்பதால், அவரது சரித்திர சாதனையில் தாங்களும் பங்கு கொண்டதற்கு சாட்சியமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இப்போட்டியை பார்ப்பதற்காக வான்கடேயில் இன்று குவிந்தனர்.

மும்பை வான்கடேவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவு அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சச்சினின் கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவு அணி ஓஜா மற்றும் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய ஓஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

சச்சின் 38 ரன்களுடனும், புஜரா 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சச்சின் சந்தித்த ஒவ்வொரு பந்துகளும் ரசிகர்கள் கர ஒலிகளில் அரங்கமே அதிர்ந்தன. இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரி அடித்து அசத்தினார்.

நாளையும் வான்கடேவில் திருவிழா தான்...

இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் சச்சின் இருப்பதால் நாளை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும் எந்த வித சந்தேகமும் இல்லை.

சதம் அடிப்பாரா சச்சின்

தற்போது சிறப்பாக ஆடி வரும் சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்று உலக முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். கோடி கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை சச்சின் நாளை நிறைவேற்றார் என எதிர்பார்க்கலாம்.
 
back to top