.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, September 4, 2013

ஸ்டெம் செல் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு!


இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவதாகக் கூறப்படுகிற ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. 

அதை பற்றி விசாரித்தால்,”‘‘நமது உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியாகிற இடங்கள் இரண்டு. 2 மார்பகங்களுக்கும் இடையில் உள்ள எலும்பிலும், இடுப்பெலும்பிலும்தான் உற்பத்தியாகும். அந்த இடங்களில் ஊசியைச் செலுத்தி, திசுக்களை எடுத்து, அதிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுக்க வேண்டும். அப்படி எடுத்த செல்களை, உடலின் எந்த உறுப்பில் செலுத்தினாலும், அந்த உறுப்புக்குரிய செல்களாக உருமாறிக் கொள்ளும்.

sep 4 stem-cells-

 


உதாரணத்துக்கு ஒருவருக்கு கல்லீரல் பழுதடைந்து விட்டது என வைத்துக் கொள்வோம். வேலை செய்யாத கல்லீரல் பகுதியில் அவரது ஸ்டெம் செல்களை செலுத்தினால், அந்த செல்கள் கல்லீரல் செல்களாகவே மாறி, ஊட்டம் கிடைத்து, அந்த உறுப்பின் வளர்ச்சிக்கு உதவும். இப்படி இன்று சிறுநீரகம், இதயம், நுரையீரல் என எல்லா உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கும் ஸ்டெம் செல் பயன்படுகிறது. அதே டெக்னிக்தான் குழந்தையின்மை சிகிச்சையிலும் பயன்பட ஆரம்பித்திருக்கிறது.

பெண்களின் கர்ப்பப் பையின் உள் சுவர் என்டோமெட்ரியம் எனப்படும். மாதவிலக்கின் போது அது உறைந்து, ரத்தப் போக்காக வெளியேறும். மாதவிடாய் நின்னதும், மறுபடி அந்தச் சுவர் வளர ஆரம்பிக்கும். கருத்தரித்து விட்டால், அது உறையாது. அதில்தான் கருவானது ஒட்டி வளர ஆரம்பிக்கும். பெண்களுக்கு வயது கூடக் கூட, அதாவது, மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் போது, இந்த என்டோமெட்ரியம் வளர்ச்சியும் குறைய ஆரம்பிக்கும். 

30 பிளஸ்சிலேயே சில பெண்களுக்கு திசுக்களின் பாதிப்பினால், இந்த என்டோமெட்ரியம், ‘ப்ரீ மெச்சூர் ஏஜிங்’ எனப்படுகிற முன்கூட்டிய முதுமை நிலையை அடையும். உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை என இதற்கு எத்தனையோ காரணங்கள்… அதன் தொடர்ச்சியாக, குழந்தையின்மைக்காக ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, எல்லாம் நல்லபடியாக முடிந்தாலும், கடைசியில் கருவானது, ஒட்டாமலேயே போகும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை.

ஸ்கேன் மூலம் இதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலிலிருந்தே ஸ்டெம் செல்களை எடுத்து, உடனடியாக கர்ப்பப் பையின் உள்ளே செலுத்தி, என்டோமெட்ரியத்தை வளரச் செய்யலாம். அதன் பிறகு ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, கருவானது ஒட்டி, நன்கு வளரும் என நிரூபிக்கப்பட்டு வருகிறது. 

ஸ்டெம் செல்களை செலுத்திய பிறகு, அடுத்த மாதவிலக்கு வரும் வரை காத்திருந்து, என்டோமெட்ரியம் வளர்ச்சியடைகிறதா எனப் பார்த்து, பிறகு குழந்தையின்மைக்கான சிகிச்சையைத் தொடரலாம். குழந்தையில்லாத தம்பதியருக்கு இது நிச்சயம் இனிப்பான செய்தியாக அமையும்…’’ என்கிறார்கள்.

ஃபேஸ்புக்கில் குற்றம் கண்டுபிடித்து 8 லட்சம் அன்பளிப்பினைப் பெறும் தமிழர்!

             
           முகநூல் எனப்படும் ஃபேஸ்புக் என்பது பிரபல சமூக இணையதளம் ஆகும். இதன் மூலம் பல தகவல் பரிமாற்றங்கள் உலகெங்கிலும் நொடிப்பொழுதில் கொண்டு செல்ல முடியும் என்பதும் இதில் தனி நபருக்கான தகவல் பக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளதால் தனி ஒரு நபர் தன்னுடைய தகவல் தொடர்புகள் அனைத்தையும் இதன் மூலம் பராமரித்துக் கொள்ள முடியும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷ்யம்தான்.அதே சமயம் இத்தகைய வலைத்தளங்களிலும் தொழில்நுட்பக் குறைகள் ஏற்படுவது உண்டு. அவ்வாறான குறைகள் தலைமை நிறுவனத்திற்குத் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படுமேயானால் அந்த நபர்களுக்குத் தகுந்த சன்மானமும் அளிக்கப்பட்டு வருகின்றது.

sep 4 -facebook-paying-

 


இதையடுத்து தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த அருள் என்ற 21 வயது பொறியியல் பட்டதாரி சமீபத்தில் இப்படிப்பட்ட பிழை ஒன்றினை அந்நிறுவனத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளார். கோயம்புத்தூரில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன்னர்தான் தகவல்தொடர்பு துறையில் தனது பட்டப்படிப்பை இவர் முடித்துள்ளார். தொழில்நுட்பக் குறைகளை கண்டறிவோருக்கு பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் இதனைப் பார்க்க ஆரம்பித்தவர் அதன்மூலம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டுள்ளார்.


இதே சமயம் ஒரு மாதத்திற்கு முன்னாலும், பிழை ஒன்றினை சுட்டிக்காட்டி அருள் எழுதியபோது அவருக்கு 1,500 டாலர் அன்பளிப்பாகத் தரப்படும் என்று பேஸ்புக் நிறுவனத்திலிருந்து தகவல் வந்துள்ளது. ஆயினும், இன்னும் அந்தப் பணம் அவருக்குக் கிட்டவில்லை. இப்போது, ஒருவரால் தனது தகவல் பக்கத்தில் போடப்படும் போட்டோவை அவருக்குத் தெரியாமல் அழிக்ககூடிய தவறினை அருள் கண்டறிந்தார். இதனை முதலில் நிறுவனத்திடம் தெரியப்படுத்தியபோது அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர். 


பின்னர், தகுந்த வீடியோ ஆதாரங்களுடன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் வெளியிட்டிருந்த போட்டோ ஒன்றினை அகற்றும் முறையை அருள் விளக்கியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனம் பரிசுத்தொகையாக 12,500 டாலர் அளிப்பதாகத தெரிவித்துள்ளது.


மேலும் சமீபத்தில், பாலஸ்தீனிய ஆராய்ச்சியாளர் ஒருவர் இதுபோன்ற பிழை ஒன்றினைக் குறித்து எழுதியபோது பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் அதனை நிராகரித்தனர். அதனால், அந்த ஆராய்ச்சியாளர் நிறுவனர் மார்க் சக்கர்பர்கின் தகவல் பக்கத்திலேயே நுழைந்து இதனைத் தெரிவித்திருந்தார். இது தவறான அணுகுமுறை என்று கூறிய பேஸ்புக் நிறுவனம் ஆராய்ச்சியாளரது தகவல் தொடர்புப் பக்கத்தையும் துண்டித்து விட்டது நினைவுகூறத்தக்கது.


Facebook to pay over Rs 8 lakh to Indian engineering graduate for finding critical bug.
 
*****************************************************


 Arul Kumar, a 21-year-old engineering graduate, has netted a $12,500 bounty from Facebook after he found a critical bug that allowed anyone to delete any photo hosted on the social networking website. At the current rate of dollar, the bounty which Arul will get this month, is worth around Rs 8,25,000.

சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள்!



thulasi 



சர்க்கரை நோயால பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவதுஇருதயம்,கிட்னி,கண்கள்,நரம்புகள் மற்றும் பாதம்.பொதுவாக துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் மூலம் அலர்ஜி மற்றும் ஆஸ்த்மா போன்றவைகள் குணமாவது நாம் ஏற்க்கனவே அறிந்த ஒன்று.

துளசி இலைகள் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறைக்க மட்டுமின்றி உடல் உறுப்புகளையும் பாதிக்கப்படாமல்பாதுகாக்கும் என ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர்.ஜி. முரளி கிர்ஷ்ணன் தலைமையிலான மாணவர்குழு மேற்கொண்ட ஆய்வில் துளசி இலையில் உள்ள ஆசிமம் சாங்க்டம் என்ற சத்து சர்க்கரை நோயை போக்கிவிடும் என கண்டுபித்து ஆய்வு பூர்வமாக நிருபித்துள்ளனர்.

இந்த குழு முதலில் எலிகளை கொண்டுஅதற்க்கு ஸ்ரேப்டோசிசின் என்ற ரசாயனத்தை செலுத்தி அதனுடைய சர்க்கரை அளவை அதிகபடுத்தி பின்ன இந்ததுளசி இலைகளில் கண்டு பிடித்த் மருந்தை ஒரு நாளுக்கு ஒரு முறை என 30 நாளும் செலுத்தி வந்தனர். முடிவில் உடலில் உள்ள சர்க்கரை அளவு குறைவது மட்டுமின்றி உடல் உறுப்புகளான கிட்னி, மற்றும் லிவ்வர் பாதிக்கப்படாமல்பாத்காக்கப்பட்டதையும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் குழு ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர்வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும்,புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

கோடை காலம்த்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசிஇலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.
சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்குவது கடினம்.
துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாகசீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.....

இன்னும் நிறைய மருத்துவம் உடையது துளசி.


கற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’ Death Valley National Park Inyo County, California


164268_355991057845829_953912859_n 

அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா?


இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்க ளோ, மரம் மட்டைகளோ கிடை யாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப் பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந் திருக்கும்.

இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்க ள் தெளிவாகக் காணப் படுகி ன்றனவாம்.

           இங்குள்ள கற்கள் இரண் டு அல்லது மூன்று வருட ங்க ளில் முழு பிர தேச த்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.


             சில சமயங்களில் இரு கற் கள் ஒரே நேரத்தில் பயண த்தை ஆரம்பிக் கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமி யைச் சுற்றி வருகின்ற ன.


சில சமயங்களில் அவற்றி ல் ஒருகல் வலது பக்க மோ இடது பக்க மோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு.


இவை பின்னோக்கி நகர் ந்த சந்தர்ப்பங்களும் இரு க்கவே செய்கிற து.
இந்த பரந்த நிலப்பரப்பிற் கு அருகில் இருக்கும் மலையி ல் இருந்து கற்துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங் கும் நடமாடுகின்றன.


இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன.


இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.


கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்கு ள்ள களி மண் தட்டா காரணம்?


இவை வேகமான காற்றினால்தான் நகர் கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால் இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில் லையாம். எனவே அந்த வாதமும் எடு படாது.


நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தி யே கற்கள் நகர்வதற்குக் காரணம் என      மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்து ள்ளனர்.


வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வரு டம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர் ந்திருக்கிறது. கல்லின் அளவுக் கும் அவை நகர்வதற்கும் எது வித தொடர்பும் கிடையாது என் பதை இது காட்டுகிறது.


இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல் லாவிட்டாலும் கற்களின் நட மாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும் தான்.

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?


 
 
             
இங்கிலாந்தின் ’சில்பரி’ என்னுமிடத்தில் 37 மீட்டர் உயரமும், 167 மீட்டர் அகலமும் கொண்ட மலை ஒன்று உள்ளது. மலைகள் என்றாலே இயற்கையால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த மலையும் இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால், ஏதோ ஒரு சீரான வடிவம் அந்த மலையில் இருந்தது. கீழே வட்டவடிவமான அடித்தளமும், கூம்பு போன்ற அமைப்பும், ‘இது இயற்கையாய் அமைந்தது இல்லை’ என்று ஆராய்ச்சியாளர்களை உறுதியாய் முடிவெடுக்க வைத்தது. அப்புறம் அதை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது. இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதன் மலை போன்ற பிரமிட் அமைப்பைக் கட்டியிருக்கிறான். 
 
 
எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகள் மன்னனின் இறந்த உடலை வைத்துக் கட்டப்பட்ட கல்லறையாக, நமக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறது. ஆனால் இந்த ’சில்பரி பிரமிட்’ கட்டப்பட்டதற்குக் காரணமே தெரியவில்லை. ஆனால், இதைக் கட்டிய விதமும், கட்டியவர்களின் உழைப்பையும் நாம் அறியும் போது, அதிர்ந்து போகும் அளவுக்கு இருக்கிறது. அவ்வளவு மனித உழைப்பைக் கொட்டி இந்தப் பிரமிட் எதற்காகக் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை.
 

       முழுக்க முழுக்க வெண்கட்டிக் கற்களால் (Chalk) கட்டப்பட்டது சில்பரி பிரமிட். இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள அந்தப் பிரமிட்டைக் கட்டி முடிக்க ஆறு மில்லியன் மனித மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். ஆயிரம் பேர் சேர்ந்து ஒன்றாகக் கட்டியிருந்தாலும் 200 வருடங்கள் கட்டுவதற்கு எடுத்திருக்கும். 

ஆனால் வெறும் 50 வருடங்களில் அது கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக சமீபத்துக் கார்பன் திகதிப் பரிசோதனையில் (Carbon Dating) தெரிய வந்திருக்கிறது. இப்போது பச்சைப் புற்களால் முற்றாக மூடப்பட்டிருக்கும் அந்தப் பிரமிட், கை தேர்ந்த கட்டட வல்லுனர்கள் கட்டடங்களை எழுப்புவதற்கு சுண்ணாம்புக் கற்களை எப்படிப் பயன்படுத்துவார்களோ அப்படிக் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். ஆனாலும் நமது பிரச்சினையே, இந்த அளவுக்கு மனித உழைப்பை வீணாக்கி இப்படி ஒரு பிரமிட் ஏன் கட்டப்பட்டது என்பதுதான். யாருக்குமே இன்று வரை சரியான பதில் தெரியவில்லை. 

அதுபற்றி தற்சமயம் சிலரால் சொல்லப்படும் ஒரு கருத்துத்தான் கொஞ்சம் அதிர வைக்கிறது. அதாவது இது ஒரு பறக்கும் தட்டு வடிவில் கட்டப்பட்ட கட்டடம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக் கட்டடத்துக்குள் என்ன இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. சிறிய சுரங்கம் போலத் தோண்டிப் பார்த்தபோது, அது உடைந்து விழுந்து விடும் சாத்தியம் இருந்ததால், அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அமைதியாக நிற்கிறது அந்தப் பிரமிட். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு.  இந்த சில்பரி பிரமிட்டுக்கு அருகில்தான் அதிகப்படியான பயிர் வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அப்படி உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்கள் எவை? அவை எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதை நாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.


 
 
இங்கிலாந்தில் இருக்கும் வட்ட வடிவ அமைப்புகளின் ஆச்சரியங்கள் இத்துடன் முடிந்து போகவில்லை. இந்தப் பிரமிட்டிலிருந்து 20 நிமிட நடைப் பயணத்தில், இன்னுமொரு ஆச்சரியமும் நம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் (Avebury) 100 தொன்களுக்கும் அதிக எடையுள்ள, நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. 500 மீட்டர் அகலமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. இதுவும் 5000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதையும் யார் அமைத்தார்கள்? ஏன் அமைத்தார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
 
 
 
 
“தற்செயலாக எகிப்தில் இருக்கும் பிரமிட்டைப் போல, சில்பரியிலும் ஒரு பிரமிட் இருந்திருக்கிறது. இதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் எப்படி மர்மங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வருவது?” என்று மீண்டும் மீண்டும் உங்களுக்கு சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் சந்தேகம் கொள்ளும் மனசுதானே நமக்கு உள்ளது. ஒரு வகையில் இந்தச் சந்தேகங்களும் சரியான பாதைக்கே நம்மை இட்டுச் செல்லும். 
 
 
சந்தேகங்கள் அடிக்கடி தோன்றினால்தான், விளக்கங்களும், விடைகளும் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதற்காக கணவன், மனைவி அடிக்கடி சந்தேகப்பட்டு,விளக்கங்களும் விடைகளும் தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்றல்ல அதன் அர்த்தம். வாழ்க்கை என்பது மிஸ்டரிகளாலான பிரமிடுகள் அல்ல. ஆனால், அறிவியல் நமக்குச் சொல்லும் முக்கிய பாடமே சந்தேகப்படு என்பதுதான். மேலே உங்களது கேள்விக்குப் பதிலாக, நான் இன்னுமொரு அதிசயம் பற்றியும் சொல்கிறேன்………..
 
 


இங்கிலாந்தில் ’யோர்க் ஷையர்’ (Yorkshire) என்னுமிடத்தில் உள்ள கிராமமான தோர்ன்ப்ரோவில் (Thornbrough) 5500 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மிக நீண்ட வட்ட வடிவ அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது.அதைப் பார்த்தீர்களானால் இப்போது வரையப்படும் பயிர் வட்டங்களைப் போலவே இருக்கும். இதைக் கூட மேலே இருந்துதான் முழுமையாகப் பார்க்க முடியும். அவ்வளவு பெரியது அது. மொத்தமாக மூன்று வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு அது அமைக்கப்பட்டுள்ளது. 


இதுவரை சொன்னது போல பயிர்களாலோ, கற்களாலோ அமைந்த வட்டங்கள் அல்ல இவை. வட்டவடிவமாக திட்டுகளால் உருவாக்கப்பட்டிக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட இந்த மூன்று வட்டங்களையும் இணைக்கும் அமைப்பு, நேர்கோடான அகலமான பாதை போன்ற ஒன்றால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 5500 ஆண்டுகளில் ஏற்பட்ட எத்தனையோ காலநிலை மாற்றங்களினாலும் இது அழியாமல் அப்படியே இருக்கின்றன என்பதுதான். வழமை போல ஏன், எதற்கு இவை அமைக்கப்பட்டன என்னும் கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால் நமக்கு இவை பற்றி வேறு ஒரு வித்தியாசமானதும், ஆச்சரியமானதுமான  தகவல் கிடைக்கிறது. அந்தத் தகவல் எகிப்தின் பிரமிட்டுகளையும், தோர்ன்ப்ரோ வட்டங்களையும், வேறொன்றுடன் இணைக்கும் அதிசயம்.



 
 
எகிப்தில் மொத்தமாக 138 பிரமிட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் புராதனமான கீஸா பிரமிட்டுகளான மூன்று பிரமிட்டுகளும் மிக முக்கியமானவை. கூஃபு பிரமிட், காஃப்ரே பிரமிட், மென்கௌரே பிரமிட் (Khufu, Khafre, Menkaure) என்பனதான் அந்த மூன்று பிரமிட்டுகளும். இந்த மூன்றையும் கவனித்தால் மூன்றும் ஒரு நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருப்பவை போலத் தோன்றும். ஆனால் உண்மையாக அதில் ஒன்று மட்டும் சற்றே விலகியிருக்கும். 
 
 
ஏன் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்ற காரணத்தைப் பின்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். வானில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில் ஓரியன் (Orion) நட்சத்திரங்களும் ஒன்று. ஓரியன் நட்சத்திரங்களில் முக்கிய மூன்று நட்சத்திரங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல இருக்கும். ஆனால் அதிலும் ஒரு நட்சத்திரம் மட்டும் சற்றே விலகியிருக்கும். அந்த ஓரியன் நட்சத்திரங்கள் மூன்றும் எப்படி அமைந்திருக்கின்றனவோ அதே போல, மிகச் சரியாக கீஸா பிரமிட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து தோர்ன்ப்ரோவில் அமைந்த மூன்று வட்டங்களின் அமைப்பும் எந்த மாற்றமுமில்லாமல் அதே வரிசையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதே திசை. அதே வரிசை.
 
 


எகிப்தில் பிரமிட்டுகள், இங்கிலாந்தில் வட்ட அமைப்புகள், வானத்தில் நட்சத்திரங்கள் என மூன்றுமே ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்பாகின? தொலைத் தொடர்பு என்னும் பேச்சுக்கே இடமில்லாத, 4500ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள காலத்தில், இவை எப்படிச் சாத்தியமாகின? மனிதர்களால் இவை நிச்சயம் சாத்தியமாகி இருக்க முடியாது என்றே பலர் சந்தேகப்படுகிறார்கள். அப்படிச் சாத்தியமாகி இருக்கும் பட்சத்தில், மனிதர்களுக்கு அதிபுத்திசாலிகளான அயல் கிரகவாசிகள் யாராவது உதவியிருக்கலாம். அப்படி உதவி செய்த அந்த அயல் கிரகவாசிகளுக்கும் ஓரியன் நட்சத்திரங்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர்.


 இவை எல்லாமே வெறும் ஊகங்கள்தான். ஆனால் அர்த்தங்கள் இல்லாதவை என ஒதுக்கித் தள்ளக் கூடிய ஊகங்கள் அல்ல. இவை ஊகங்களாக இருந்தாலும், அவை சுட்டிக் காட்டும் திசை, நாம் நம்பியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துபவை.    ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்ல யாருமே இல்லை. 


ஒரு வேளை ஊகங்களே உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த உண்மைகள் ஏன் நம்மிடமிருந்து மறைக்கப்படுகின்றன? இல்லாவிட்டால் நாம் நினைப்பது போல எதுவுமே இல்லையா? இவையெல்லாமே மனிதனால் தற்செயலாகவும், திட்டமிட்டும் உருவாக்கப்பட்ட அமைப்புகள்தானா? இவையெல்லாவற்றையும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் இதுவரை விட்டு விலகியிருந்த பயிர் வட்டங்களை நோக்கிச் செல்ல வேண்டும். எங்கு நாம் ஆரம்பித்தோமோ அங்கேயே நமது விடையையும் தேடிக் கொள்ள வேண்டும். எனவே க்ராப் சர்க்கிள் என்று சொல்லப்படும் பயிர் வட்டங்களை நோக்கி நாம் நகரலாம்.
அதற்கு அடுத்த வாரம் வரை காத்திருப்பீர்களா?

பேஸ்புக்கில் நீங்கள் பெண்களை கவர மேலும் ஒரு வசதி அறிமுகம்!

உலகில் அதிக அடிமைகளை வைத்திருப்பவர் மார்க் ஸுக்கர்பர்க் தான் என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா? பேஸ்புக் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும் வசதி. 


        மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி  கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்த வசதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள குட்டி குட்டி படங்களை உங்கள் நண்பர்களுக்கு சாட் மூலம் அனுப்பலாம்.

 நீங்கள் சாட் செய்யும் போது சாட் விண்டோவின் வலது கீழ் மூலையில் ஒரு ஸ்மைலி இருக்கும் அதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல Stickers உங்களுக்கு வரும். 

எதை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டுமோ அதன் மீது ஒரு கிளிக் செய்தால் போதும் அது உங்கள் நண்பருக்கு சென்று விடும். இதில் Free என்பதை கிளிக் செய்தால் குறிப்பிட்ட Sticker உங்கள் சாட்டில் சேர்ந்து விடும். அதன் பின் அவற்றை உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பலாம். தற்போது அனைத்து Sticker களும் இலவசமாக கிடைக்கின்றன. இன்னும் என்னவெல்லாம் போட்டு அடிமைகளின் எண்ணிக்கையை பெருக்க போறாங்களோ ஆண்டவா!!! இதோ அந்த ஸ்டிக்கர்ஸின் இமெஜ்கள்….

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்: நாசா கண்டுபிடிப்பு!

அமெரிக்க நாசா நிறுவனம் மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி செவ்வாய் கிரகத்தை தற்பொழுது ஆராய்ந்து வருகின்றது.

இந்த விண்கலமானது, முன்னர் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமான பெர்குளோரேட்ஸ் என்ற உப்பு படிமங்களை கண்டுபிடித்துள்ளது.

இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களை சூடுபடுத்தும்பொழுதும் இதிலிருந்து குளோரினேட்டட் ஹைட்ரோ கார்பன்கள் வெளியேறியது.
அப்பொழுது கூடவே அதிக அளவிலான ஆக்சிஜனும் வெளியேறுவதை விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர்.

இந்த பெர்குளோரேட் உப்புகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் முன்னர் உயிரினங்களின் புழக்கங்கள் இருந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

mars_earth 



கண் கருவிழி மூலம் இனி கோமா நோயாளிகள் தவல்களை பரிமாறிக்கொள்ளலாம்!

news_15213 (1)


ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய ஒரு வெட்டும்விளிம்பு தொழில்நுட்பம் பயன்படுத்தி இதன் மூலம் நகர்த்த அல்லது பேச முடியாத மூளை பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் கண் கருவிழி விரிவுபடுத்தி தகவல் பரிமாற்றிக் கொள்ள முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு லேப்டாப் மற்றும் கேமரா உதவியுடன் கண் கருவிழி அளவை கொண்டு தொடர்பு கொள்ள முடியாத நோயாளிகள் எளிய முறையில் ஆம் அல்லது இல்லை என்ற கேள்விகளுக்கு நொடிகளுக்குள் பதில் சொல்ல முடியும். இந்த கருவி மக்கள் மனக்கணிதம் செய்யும் போது இயற்கையாகவே ஏற்படும் கருவிழி அளவில் ஏற்படும் மாற்றங்களை பயன்படுத்தி எடுக்கிறது.

இதில் சிறப்பு கருவிகளோ அல்லது பயிற்சியோ தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கணினியில் தொழில்நுட்ப இடையூறுகள் உள்ளதால் இன்னும் அதன் அமைப்பை வேகம் மற்றும் துல்லியம் வகையில் முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கிறது. என்ஹாசர் அவர்கள் இந்த இடையூறுகளை உடனடியாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். உணர்வற்ற நோயாளிகள், கோமா அல்லது மற்ற செயற்படாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எந்த தகவல்தொடர்பும் ஒரு பெரிய முன்னோற்ற நடவடிக்கை ஆகும்,’ என்று அவர் கூறினார்.
 
back to top