.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, August 26, 2013

முடி வளர எளிய மருத்துவம்..!!


முடி வளர எளிய மருத்துவம்..!! 
 
 
முடி உதிர்வதை தடுக்க: வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடிகொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
 

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

உங்களுக்கு தெரியுமா..? 

 

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..
குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..

புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். 
( கொசுக்களிலுமா?)

சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 – 6 வயதில் தான் வளர்கிறது.

எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?


பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி? 
 
 
1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
 
 2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.

14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.
 

IP Address என்றால் என்ன?

IP Address என்றால் என்ன?


பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு! 

 

leave 
 
 
குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர்.

கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

பச்சைத்தண்டு :

கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும்.

செங்கீரைத்தண்டு :

பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை கட்டுப்படுத்தும்.

பெண்கள் நோய் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத்தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு, செங்கீரைத்தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி வேதனைகளைப் போக்கும்.

வெண்கீரைத் தண்டு :

வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும். கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடுகட்ட இந்த கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்.
 

அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வாழைப்பழம்!


bana 
 
 
நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது.

இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதோடு மட்டுமல்லாமல் நோய்கள் வராமல் தடுக்க நோய்எதிர்ப்பு நாசினியும் கூட செயல்படுகிறது.

எப்போதும் மந்தமாக இருக்கிறோம் என கருதுபவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த உணவாகும்.. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகரிக்கிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால் நீர் சத்துகளை சரியாக வைத்துக்கொள்கிறது. இம்மூன்றும் சேர்வவதால் உடல் மந்தம் நீங்கிவிடும்.

வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு தொந்தரவு நீங்கி குணம் பெறலாம். மேலும் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை மூலம் குடற்புண்ணை அழித்து குடற்புண் வராமல் பாதுகாக்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும். மூன்று நேர உணவு இடைவேளைக்கு பின்னர் வாழைப்பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு அதிகமாகி காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
 

பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……


pre 
 
 
* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.

* மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.

* மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.

* அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அகாலத்தில் நழுவலாம்.

* உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும்.

* சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் சிசுவுக்குக் காக்கை வலிப்பு உண்டாகும்.

* எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இவையனைத்தும் சுகப் பிரசவத்தைக் கெடுக்கும்.
 

ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?

 

 ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?



     நமது பள்ளிகள் குறித்த பார்வையை உருவாக்குவதில் சில அடிப்படையான உளவியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன . சமூகம் சார்ந்த உளவியல் இதில் முக்கிய பங்குவகிக்கிறது. பொது புத்தி என்ற பதத்தின் அடிப்படையில் அதிக விளம்பரம் செய்யற , பணக்காரர்கள் படிக்க வைக்கும் பள்ளியில் தனது பிள்ளை சேர்க்க வேண்டும் என்ற மனரீதியான ஆசை, அதற்கு ஏற்றார் போல இந்த நவின பள்ளிகள் தேவையான பகட்டு வேலைகளை செய்து விடுகிறது. அதுகுறித்த கிழ்கண்டபதிவுவை படிங்கள் பள்ளிகள் மாறி வருகின்றன. ஆடம்பரமான தனியார் பள்ளிகள் பகட்டான விளம்பரங்களை செய்து வருகின்றன. அவற்றின் தோற்றப்பொலிவும் அழகும் கண்ணைக் கவர்கிற விதத்தில் உள் ளன என்றால் மிகையல்ல. முன்பு பள் ளிகளில் கரும்பலகைகள் இருந்தன. வெள்ளைச் சாக்பீஸ் இருந்தது. இப்போது வெள்ளைப் பலகைகள் உள்ளன. கருப்பு மை ஸ்கெட்ச் பேனாக்கள் பயன் படுத்தப்படுகின்றன. கணினி ஆய்வகம் உள்ளது. கழிப்பறை வசதிகள் உள்ளன. புல்வெளிகள், மைதானங்கள் அருமை யாக உள்ளன. ஆனால், சுமைதூக்கி யைப் போல பாடப்புத்தகங்களைச் சுமந்து செல்வது மட்டும் இன்னும் மாறவில்லை. ஒழுங்காக வகுப்பில் உட் கார்ந்து அனைத்துப் பாடங்களுக்கும் குறிப்பெடுப்பது, அவற்றை மனப்பாடம் செய்வது, தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெறுவது. அதிக மதிப்பெண் பெறும் மாணவ- மாணவியருக்கு காலை பிரார்த்தனைக் கூட்டத்தின்போது அதிக பாராட்டுகள். சென்ற மாதம் முதல் வகுப்பில் தேறிய மாணவி இந்த மாதம் இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வரும் அளவிற்கு கடுமையான போட்டி கள் உள்ளன. முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்வது மிகவும் கடினமான காரியமாகும். ஆனால் போட்டியிலே சாதிக்கத் தவறிய முன்னாள் சாம்பியன் கள் இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வரும் நிலையில், அம்மாணவ- மாணவியர் கூனிக்குறுகும்படியாக உள்ளது.

பாரம்பரியமாகக் கல்வி கற்கும் முறையும் கற்பிக்கும் முறைகளும் மாறி வருகின்றன. ‘நிலா நிலா ஓடி வா’, ‘அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா’ பாட்டைக் கேட்கவே முடியவில் லை. அழகான சீருடையில் பூத்த நிலாக்களைப் போல மாணவர்கள். புழுதியில் புரண்டு எண்ணெய் பார்க் காத தலை, கிழிந்த சட்டை கிழிந்த டவுசர் எதையும் பார்க்க முடியாது.

காலையில் வாய்ப்பாட்டு(இசை) வகுப்பு, சனி, ஞாயிறுகளில் பரதம், வெஸ்டர்ன் ஏதோ ஒரு நடனப் பயிற்சி, அபாகஸ் வகுப்பு, இந்தி டியூசன், யோகா, கராத்தே, செஸ் விளையாட்டு வழக்கமான பாடங்களுக்கு டியூசன் குழந்தை கண் விழித்ததிலிருந்து தூங்கப் போகும் வரை ஒரே பிஸி. பிஸியோ 
 பிஸி. ஓய்வில் லாத நிலை
யில் குழந்தைகள் எளிதாக மனச்சோர்வு அடைகிறார்கள். தோல்வி யைத் தாங்குவதற்கு அவர்களால் இய லாமல் போகிறது. பெற்றோர்களையோ, ஆசிரியர்களையோ, நண்பர்களையோ நேருக்கு நேர் சந்திக்கக் கூச்சப்படு கிறார்கள். அக்கம்பக்கத்தார் குழந்தைக ளின் கல்வி குறித்து ஏதாவது கேள்வி கேட்டு விட்டால் இரு தரப்பினரும் ஜென்ம விரோதிகளாகி விடுகிறார்கள். இருதரப்புப் பிள்ளைகளும் ஒரே பள்ளி யில், அதற்கும் மேலாக ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தால் கேட்கவே வேண்டாம்.

குழந்தைகளின் மூளை ஓய்வில்லா மல் வேலை செய்கிறது. ஆனால் 
உடல ளவில் அவ்வளவாக ஆரோக்கியம் இல்லை. பெற்றோர்களும் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டும், பிள் ளைகளையும் வருத்துகிறார்கள்.

அங்கிளுக்கு சாமஜ வர கமனா பாட் டுப்பாடிக் காட்டு, ஆடிக்காட்டு, அவ னோடு செஸ் பிராக்டிஸ் செய்தால் என்ன? ஏன் சும்மாவே நின்று கொண்டி ருக்கிறாய். கம்ப்யூட்டர் பாடம் படித்து விட்டாயா? ஹோம் ஒர்க் முடித்து விட் டாயா? என கேள்விகள் பதில்கள் கடி காரத்தின் இரண்டு முட்களைப் போல. ஓடிக்கொண்டேயிருக்கிறது குழந்தை.

வகுப்பிற்கு பத்து குழந்தைகளோ பதினைந்து குழந்தைகளோ அவ்வளவு தான்.குறைந்த அளவு குழந்தைகள் இருந்தால் அனைத்துக் குழந்தைகளை யும் நன்றாகக் கவனிக்க முடியும் என்று நிர்வாகம் கதை விடுகிறது. நிற்பதற்கு நடப்பதற்கு அனைத்திற்கும் பீஸ். ஒரு மார்க் அரை மார்க் வித்தியாசத்தில் 
அத் தனை ரேங்குகளும். பள்ளிப்படிப்பில் சுட்டிகளாக கெட்டிகளாக விளங்கும் பிள்ளைகள் வாழ்க்கையில் 100 ரூபாய் நோட்டிற்கும் 500 ரூபாய் நோட்டிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களாகவும், யதார்த்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாமல் எளிதில் ஏமாந்து விடு கிறார்கள். பள்ளிப்படிப்பை முடித்து வெளியே வருபவர்கள் தமிழும் தெரி யாமல் ஆங்கிலமும் சரியாகத் தெரியா மல் அரைகுறையாக வெளியில் வரு கின்றனர். குரூப் டிஸ்கஷன், ப்ரிசே ரைட்டிங் (யீசநஉளைந றசவைiபே) போன்றவைகள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை என் பதை மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்வதே இல்லை.

ஆனால் கல்லூரிக்குப் போகும் போது நன்கொடை கொடுக்காவிட்டால் இடம் கிடைக்காது. தகுந்த வேலை கிடைக்குமா? வேலை கிடைத்தாலும் செலவழித்த முதலுக்கு சம்பளம் கிடைக்குமா? எத்தனையோ பட்டதாரிகள் இரண்டாயிரத்துக்கும் மூன்றாயிரத் துக்கும் வேலை பார்க்கிறார்கள். இத்த னைக்கும் ஆண்களுக்கு பரவாயில் லை. பெண்கள் நிலைமை படுமோசம். வரைமுறையற்ற வேலைகள், காலவரம் பில்லாத உழைப்பு, குறைந்த சம்பளம். அதிக செலவில் வாங்கப்படும் டிகிரி சர்டிபிகேட், கல்யாணப் பத்திரிகை யில் போடுவதற்காக, அதிக வரதட்சணை வாங்குவதற்காக, பெருமைக்காக மட்டுமே உதவுகிறது. தாராளமய மாக்கல், தனியார்மயமாக்கல், அவுட் சோர்சிங் போன்ற இடையூறுகளுக் கிடையே கல்லூரிப்படிப்பை முடித்த பின்னர் அரசு வேலைவாய்ப்புகள் ஏதா வது கிடைத்தால் பிற்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். தனியார் சந்தை யில் வேகமாக ஓடும் குதிரைகளுக்குத் தான் அதிக வாய்ப்பு. முன்னேறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஈடாக வளர வேண் டிய கட்டாயம். இல்லையென்றால் ‘நாம் நண்பர்களாகவே பிரிவோம்’ என்று பிரிவுபசாரப் பார்ட்டி நடத்தி விடுவார்கள்.

குழந்தைகளின் நிலைமை குறித்து பிரபல மனநல மருத்துவர் சியாமளா வத்சா கூறுவது,’குழந்தையின் ஆரோக்கியம், கற்பனை, திறமை போன்றவைகள் இயற்கையான ஆர்வத்தாலும் உந்து சக்தியாலும் வரவேண்டும். வகுப்பறை கள் குழந்தைகளின் கற்பனையை முடக்கி வைக்கிறது.’ எல்லாம் முடிந்த பிறகு பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டி ருக்க வேண்டியது தான்.

ஒரு நல்ல ரெஸ்யூமை தயாரிப்பதற்கான சிறந்த ஆலோசனைகள்!



               ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்களத்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றியடைவார்.

அது தொடர்பான விரிவான ஆலோசனைகளை இக்கட்டுரை அலசுகிறது.

எது முக்கியம்

ஒருவர், முதல் தடவை தனது ரெஸ்யூமை தயார் செய்ய தொடங்கும்போது, அவர் செய்த சில முக்கிய சாதனைகள், அவரின் சிறப்பான திறமைகள் மற்றும் ஆற்றல்கள் குறித்து குறிப்பிட மறந்துவிடுவார். மாறாக, வாங்கிய பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பிற்கான சான்றிதழ்களின் விபரங்கள், படித்து முடித்த வருடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய விஷயங்களை மட்டுமே பிரதானமாக குறிப்பிடுவார். இந்த தவறை பலரும் செய்கிறார்கள்.

மாறாக, ரெஸ்யூம் எழுதுபவர்கள், இரைச்சலும், தொந்தரவும் இல்லாத ஒரு தனியிடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். தாங்கள் எந்தப் பணிக்கு விண்ணப்பிக்க போகிறோமோ, அதுதொடர்பாக செய்த சில முக்கிய சாதனைகள், பெற்ற சிறப்பு பயிற்சிகள், தனக்கு இருக்கும் தனித் திறன்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்பிட வேண்டும்.

 உங்களின் ஆலோசனைகள்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம். இணையதளத்தில் விபரங்களைத் தேடினால், குறிப்பிட்ட அளவு தகவல்களே கிடைக்கும். எனவே, அந்த குறிப்பிட்ட நிறுவத்தில் பணிபுரியும் யாரேனும் சில ஊழியர்களை சந்தித்துப் பேசி, தேவையான விபரங்களை தெரிந்துகொண்டு, அங்கே என்னவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும் தெரிய முயற்சிக்க வேண்டும்.

உங்களின் விண்ணப்பத்தில், பிரச்சினை என்னவென்று குறிப்பிடாமல், அதேசமயம், அதற்கான தீர்வுகளை உங்களின் ஆலோசனை வடிவில் எழுதியனுப்ப வேண்டும். உயர் நிர்வாக கமிட்டியில் இருப்பவர்கள், இதுபோன்ற ஆலோசனைகளால் கவரப்படுவார்கள். எனவே, உங்களுக்கான நேர்முகத் தேர்வு அழைப்புக் கடிதம் இதன்மூலம் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

படிப்பதற்கு எளிதாக...

உங்களின் ரெஸ்யூம் தெளிவாகவும், தரமாகவும் இருக்கும் அதே நேரத்தில், படிப்பவருக்கு எளிதாக இருப்பதும், மிக முக்கியமான அம்சம்.
 
ரெஸ்யூம் எத்தனை பக்கம்

ரெஸ்யூம் தயாரிப்பை பொறுத்தவரை, சில கட்டுப்பெட்டியான விதிகள் வலியுறுத்தி சொல்லப்படுகின்றன. அதாவது, ரெஸ்யூம், பொதுவாக, ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது. ஆனால், இந்த விதி பெரும்பாலும் புதிதாக படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு பொருந்தினாலும், அதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய முக்கிய விஷயங்கள் இருந்தால், 2 பக்க ரெஸ்யூம் தயார் செய்யலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், 2 பக்கங்களுக்கு மிகாமல் ரெஸ்யூம் தயார் செய்யப்பட வேண்டும்.

தகவல் பரிமாற்றம்

உங்களின் ரெஸ்யூமில், உங்களின் பலவித தொடர்புகொள்ளும் விபரங்களைத் தெரிவிப்பது மிக்க நன்று. உங்களின் வீட்டு விலாசம், மொபைல் எண், வீட்டு தொலைபேசி எண், ஈ-மெயில் முகவரி உள்ளிட்ட விஷயங்களை தெரிவிக்கவும். ஏனெனில், உங்களை எந்த நேரத்திலும் எளிதாக தொடர்பு கொள்ளும் வசதியை, வேலை வழங்குநருக்கு, இவற்றின் மூலமாக நீங்கள் வழங்க வேண்டும்.

இவற்றை தவிருங்கள்

நீங்கள் ரெஸ்யூம் தயாரிக்கும்போது, I, My, Me, Mine ஆகிய தனிப்பட்ட pronoun -களை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக,

I was incharge of the entire purchase function in the ---------- company என்று எழுதுவதற்கு பதில், Incharge of the entire purchase function of the ------- company என்று எழுதலாம்.

முன்அனுபவ விபரம்

உங்களின் முன்அனுபவ விபரங்களைப் பற்றி குறிப்பிடும்போது, சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உதாரணமாக, எந்த நிறுவனம், உங்களின் பணி நிலை, காலகட்ட விபரம், நிறுவனத்தின் பெயர் மற்றும் விலாசம் ஆகிய விபரங்களைத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மேலும், அவற்றின் காலவரிசையை சரியாக குறிப்பிட வேண்டும். உதாரணமாக, தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் நிறுவன விபரத்தை முதலிலும், இதற்கு முன்னர் இருந்ததை அடுத்ததாகவும், பின்னர் மற்றதை, அடுத்தடுத்த வரிசையிலும் குறிப்பிடலாம்.

தொழில்நுட்ப சவால்

பல நிறுவனங்களில், ரெஸ்யூம்களின் ஆரம்ப ஸ்கிரீனிங் பணியை, கணினிகளே மேற்கொள்கின்றன. நீங்கள், ரெஸ்யூமை பிரின்ட் வடிவில்(hard copy) அனுப்பினால், கீழ்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்ளவும். அவை,
* பிரின்ட் எடுத்த அசல் ரெஸ்யூமை அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அதன் நகலை(xerox) அனுப்பக்கூடாது. Times New Roman அல்லது Courier ஆகிய டைப் எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், எழுத்தின் அளவு 11 அல்லது 12 என்ற அளவில் இருக்க வேண்டும். அதேசமயம் bold facing -ஐ தவிர்க்க வேண்டும்.

* உங்கள் படிப்பு உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்கும் வகையில், அட்டவணை எதையும் பயன்படுத்த வேண்டாம்.

* ரெஸ்யூமின் மேல் பகுதியில் உங்களின் பெயரை குறிப்பிட வேண்டும்.

* அதேசமயம், உங்கள் ரெஸ்யூமை soft copy முறையில் வழங்கினால், குறிப்பிட்ட key word -களை ரெஸ்யூம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், விண்ணப்பிக்கப்படும்  பதவிக்காக, வேலை வழங்குநர்கள் அவற்றை எதிர்பார்க்கிறார்கள். அந்த key words, உங்கள் ஸ்பெஷலைசேஷன் துறையுடன் தொடர்புடையவை.

* கணினிகள் உங்கள் ரெஸ்யூமை ஸ்கிரீனிங் செய்கையில், அந்த வார்த்தைகளின் எண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட key words -களை தேடும். எனவே, அவை இல்லையெனில், உங்களின் ரெஸ்யூம் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட்டுவிடும்.
 
சில நொடிகள்தான்...

பொதுவாக, உங்களின் ரெஸ்யூமை படிக்க, நேர்முகத் தேர்வாளர், அதிகபட்சமாக 10 முதல் 20 நிமிடங்களே எடுத்துக்கொள்வார். அந்த நேரத்திற்குள், அவரை ஈர்க்கும் விதமாக, நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு பொருத்தமாக, உங்களிடம் இருக்கும் தகுதிகளை highlight செய்து குறிப்பிட வேண்டும்.

ஒரே மாதிரி ரெஸ்யூமை, வேறுபட்ட நிறுவனங்களில், வேறுபட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கையில் வழங்கக்கூடாது. பல விஷயங்கள் ஒரே மாதிரியே இருந்தாலும், objective statement என்பது மாறும். குறிப்பிட்ட பணிக்கு தேவையான தகுதி நிலைகள் அதற்குள்தான் தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே, பல மாதிரிகளில் ரெஸ்யூம்களை வடிவமைத்து, அவற்றை pen drive மூலமாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தனித்தன்மை

வேலைதேடும் பல இளைஞர்கள், Microsoft Word -ன் ரெஸ்யூம் templates மற்றும் wizards பயன்படுத்துகிறார்கள். இது தவறில்லை என்றாலும், உங்களின் சொந்த வடிவமைப்பை(design) பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில், இதன்மூலம், நீங்கள் தனித்து அடையாளம் காணப்படுவீர்கள்.

அனுபவத்தை தெரிவித்தல் முறை

உங்களின் பழைய பணி அனுபவங்களை தெரிவிக்கையில்,
I was responsible for ----------
My duties included ---------------
I was incharge of ---------

போன்ற நடைகளில் குறிப்பிடாதீர்கள். மாறாக,
My
contributions were -----------
My accomplishments were ---------
My interventions were -----------

போன்ற நடைகளில் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், வேலை வாய்ப்பு சந்தையில் உங்களுக்கான மதிப்பு உயரும்.

நேர்மறை அம்சங்கள்

உங்கள் ரெஸ்யூமில், நேர்மறை அம்சங்கள் இடம்பெறுவது முக்கியம். ஆனால், சிலருக்கு, தனது நேர்மறை விஷயமாக எதை குறிப்பிடுவது அல்லது எது இருக்கிறது என்ற சந்தேகமும், குழப்பமும் தோன்றும். அந்த நிலையில், உங்களுடன் முன்பு பணியாற்றிய நபர்களிடம், நீங்கள் கண்டுணர்ந்த குறைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

அந்தக் குறைகள் உங்களிடம் இல்லையெனில், அதுவே உங்களின் நேர்மறை அம்சங்கள். எனவே, அவற்றை குறிப்பிட தயங்க வேண்டாம். உதாரணமாக,

* Being punctual
* Creative
* Caring for minute details
* Reliable
* Following systems and procedure
* Efficiency minded
* Cost conscious
* Waste control
போன்றவற்றை சொல்லலாம்.

முதல் நிலை ஆய்வு

உங்கள் ரெஸ்யூம் ஒரு நிறுவனத்தை அடைந்ததும், முதலில், மனிதவளத் துறையினரால்தான்(HR) பகுப்பாய்வு செய்யப்படும். அவர்கள், நிர்வாகப் பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, உங்களின் தொழில்துறையைப் பற்றிய நுணுக்கமான விஷயங்கள் தெரிந்திருக்கும் என்பதை சொல்ல முடியாது. எனவே, முடிந்தளவு, உங்களின் Professional jargon -களை பயன்படுத்த வேண்டாம்.

அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய, உலகளவில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளையே பயன்படுத்தவும். இதன்மூலம், உங்களின் ரெஸ்யூம் reader friendly என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம், உங்களின் பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் அனுபவங்களை குறிப்பிட தவறவே கூடாது.

இதை செய்யாதீர்கள்

உங்கள் ரெஸ்யூமில், Reference பற்றி குறிப்பிடாதீர்கள். நீங்கள் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பை பெற்றவுடன், அவர்களை, எதிர்கால தகவல் தொடர்புக்கு வைத்துக்கொள்ள முடியும். அதேசமயம், தேவைப்பட்டால், ரெபரன்ஸ் விபரம் அனுப்பப்படும் என்பதை ரெஸ்யூமில் இடம் இருந்தால் குறிப்பிடலாம். மேலும், ரெபரன்ஸ் நபர்களை தயாராக வைத்திருப்பது அவசியம்.

இன்றைய நிலையில், பணி வழங்குநர்கள், நீங்கள் குறிப்பிட்ட ரெபரன்ஸ் நபர்களை மட்டுமே தொடர்பு கொள்வதில்லை. உங்களின் பழைய நிறுவனங்கள் மற்றும் நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனங்களைக்கூட தொடர்பு கொள்கிறார்கள்.

எழுத்துப் பிழை

ரெஸ்யூம் தயாரான பிறகு, அதை எழுத்துப் பிழை சரிபார்க்க, கணினியின் உதவியை நாடுவது பலரின் வழக்கமான உள்ளது. ஆனால், அதை மட்டுமே முழுமையாக நம்புவது தவறு. ஏனெனில், பல கணினி அமைப்புகளில், அமெரிக்க ஆங்கில நடைமுறைதான் உள்ளது. நமக்கு அதிகம் தெரிந்தது பிரிட்டன் ஆங்கிலம். நமக்கு வேலை தரும் இந்திய நிறுவன அதிகாரிகளுக்கும் அப்படித்தான். அதேநேரத்தில், கணினியும் சில காரணங்களால், சில தவறுகளை சுட்டிக் காட்டாமல் விட்டுவிட வாய்ப்புண்டு.

எனவே, உங்கள் ரெஸ்யூமை hard copy எடுத்து, அதை ஒரு எழுத்து விடாமல், ஒரு வரி விடாமல் நீங்களே கவனமாக படிக்கவும். இதன்மூலம், எந்தவொரு தவறையும் எளிதாக கண்டுபிடிக்கலாம். ஏனெனில், மனித மூளையைவிட, வலிமையான கணினி என்று இந்த உலகில் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் இருக்க முடியாது. எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு பிடிக்காத விஷயங்கள். உங்களின் ஒட்டுமொத்த மதிப்பையே அது குலைத்துவிடும்.
 
back to top