.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 8, 2013

வடிவேலு - வாழ்க்கை வரலாறு!

தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். ‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘மாயி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘கிரி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘போக்கிரி’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’, ‘வைபரேஷன் வடிவேலு’, ‘செட்டப் செல்லப்பா’, ‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘கந்துவட்டி கருப்பு’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’, ‘ஸ்டையில் பாண்டி’ போன்ற பல கதாபாத்திரங்களின் மூலம், எத்தனையோ படங்களில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர்.


தமது  நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். ஒரு சில படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவர் நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைகைப்புயல் வடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 10, 1960

பிறப்பிடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர்

நாட்டுரிமை: இந்தியன்




பிறப்பு 

வைகைப் புயல் வடிவேலு அவர்கள், 1960  ஆம் ஆண்டு அக்டோபர் 10  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில், தந்தையார் நடராச பிள்ளைக்கும், தாயார் வைத்தீஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை


பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. ஆனால், நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன நாடகங்களை அவ்வப்பொழுது மேடையில் அரங்கேற்றுவது வழக்கம். அத்தகைய நாடகக் கதைகளிலும் சரி, மேடையிலும் சரி இவர்தான் நகைச்சுவை கதாநாயகன். ஒரு காலகட்டத்தில் இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. அந்த தருணத்தில் ராஜ்கிரண் அவர்கள், ஒருமுறை அவருடைய ஊருக்கு சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வைகைப் புயல் அவர்கள், ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார்.

தமிழ் சினிமாவில் வைகைப் புயலின் ஆரம்பம்
1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

வெற்றிப் பயணம்

‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடிக்கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து  2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.

கதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மலையில் நனையவைத்தார்.

கதாநாயகனாக

1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்று பின்னணியை கதையாக கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.

வைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவை பற்றி


கலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை! ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாகி கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியது. குறிப்பாக கதாநாயகர்கள் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்வையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றது எனலாம். மேலும், சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘என் ராசாவின் மனசிலே’, ‘சின்னகவுண்டர்’, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம்’, ‘காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘பவித்ரா’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘பசும்பொன்’, ‘செல்லக்கண்ணு’, ‘சின்னமணி’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப்புருஷன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘அட்ராசக்க அட்ராசக்க’, ‘மாயா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘ரட்சகன்’, ‘இனியவளே’, ‘ஜாலி’, ‘காதலா காதலா’, ‘நிலவே முகம் காட்டு’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘மனைவிக்கு மரியாதை’, ‘வல்லரசு’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, ‘மகளிருக்காக’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பிரண்ட்ஸ்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘மாயி’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘லூட்டி’, ‘தவசி’, ‘காமராசு’, ‘அரசு’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘பகவதி’, ‘நைனா’, ‘வசீகரா’, ‘வின்னர்’, ‘ஏய்’, ‘கிரி’, ‘தாஸ்’, ‘குண்டக்க மண்டக்க’, ‘சந்திரமுகி’, ‘சச்சின்’, ‘சாணக்கியா’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘லண்டன்’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘திமிரு’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘தலை நகரம்’, ‘ரெண்டு’, ‘ஆர்யா’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘சீனா தானா 001’, ‘மருதமலை’, ‘போக்கிரி’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘குசேலன்’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வில்லு’, ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘அழகர் மழை’, ‘ஆதவன்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தில்லாலங்கடி’, ‘நகரம்’, ‘காவலன்’, ‘மம்முட்டியன்’, ‘மறுபடியும் ஒரு காதல்’.

அவர் பாடிய சில பாடல்கள்


‘எட்டணா இருந்தா’ (எல்லாமே என் ராசாதான்), ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’ (வெற்றி கொடுக் கட்டு), ‘ஊனம் ஊனம்’ (பொற்காலம்), ‘போடா போடா புண்ணாக்கு’ (என் ராசாவின் மனசிலே), ‘வாடி பொட்ட புள்ள வெளியே’ (காலம் மாறிபோச்சு), ‘ஆடிவா பாடி வா’ (இம்சை அரசன் 23ஆம் புலிகேசி), ‘கட்டுனா அவளை கட்டுனும்டா’ (ஜெயசூர்யா), ‘விக்கலு விக்கலு’ (பகவதி), ‘ஏக் தோ தீனுடா’ (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை), ‘மதுரக்கார விவேக்கு’ (லூட்டி), ‘நாலு அடி ஆறு’ (என் புருஷன் குழந்தை மாதிரி).

விருதுகள்:


•‘காலம் மாறிப்போச்சு’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘தவசி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘காத்தவராயன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.
•‘சந்திரமுகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்பேர்’ விருது.
•‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.

அரசியல்

சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.

மீண்டும் சினிமாவில்

அவர் திரையுலகை விட்டு நீங்கி இருந்த இரண்டு ஆண்டு காலம், தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது எனலாம். குறிப்பாக, தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். வைகைப்புயல் வடிவேலு அவர்கள், மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் நகைச்சுவை வசனங்கள்

‘ஐயா! நா ஒரு காமெடி பீசுங்க’, ‘இப்பவே கண்ண கட்டுதே’, ‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’, ‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’, ‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’, ‘இது தெரியாம போச்சே’, ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு’, ‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’, ‘போவோம்! என்ன பண்ணிடுவாங்க’, ‘முடியல’, ‘என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலையே?’, ‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!’, ‘ஆஹா ஒரு குருப்பா தான்யா அலையறாங்க’, ‘க க க போ…’, ‘ஆணியே புடுங்க வேண்டாம்’, ‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, ‘என்னா வில்லத்தனம்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கா பேஷ்மட்டம் வீக்கு’, ‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’, ‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே’, ‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி’, ‘ஒரு சிறிய புறாவுக்கு போறா! பெரிய அக்கபோராகவா இருக்கு’, ‘நா ரௌடி நா ரௌடி! நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’, ‘சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு’, ‘வட போச்சே’, ‘தம்பி டீ இன்னும் வரல’, ‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே’, ‘அவ்வ்வ்வ்வ்’, ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா’, ‘ரொம்ப நல்லவன்டா’, ‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்’, ‘பேச்சு பேச்சாதான் இருக்கணும்’, ‘ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க’, ‘ஒரு ஆணையும் புடுங்க வேணாம்’, ‘ரைட்டு விடு’, ‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’, எனப் பல நகைச்சுவை வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

என்.எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன், டி.எஸ் பாலையா, வி. கே. ராமசாமி,  நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம் எனப் பல நகைச்சுவை நடிகர்களைத் தமிழ் திரைப்படக் களம் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.

சுற்றினால் .........கவிதை!


புவி சுற்றினால்
காலத்தின் ஓட்டம்!
-
சூரியன் சுற்றினால்
பகலிரவு மாற்றம்!
-
காற்று சுற்றினால்
சூறாவளித் தோற்றம்!
-
தலை சுற்றினால்
மனிதருக்கு மயக்கம்!
-
பூக்களைச் சுற்றினால்
மணத்தின் ஈர்ப்பு!
-
பேட்டையைச் சுற்றினால்
பயங்கரப் பேர்வழி!
-
நாட்டைசு சுற்றினால்
நாளைய தலைவன்!
-
எண்களைச் சுற்றினால்
பேசலாம் தொலைபேசி!
-
வீணாகச் சுற்றினால்
உயர்வேது நீ யோசி!

சமூக வலைப்பின்னல் தளங்களின் வரலாறு!

பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இளம் தலைமுறையிடம் பிரபலமாக இருப்பதோடு சமூக ஊடகங்களாக உருவெடுத்துள்ளன. பேஸ்புக் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலரும் இந்த சேவைக்கு அடிமையாகி இருக்கின்றனர். பேஸ்புக் பதிவுகள் இன்று ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை கூட நிரனயிக்கின்றன. செய்தி சார்ந்த விவாதத்தை உருவாக்குகின்றன. பேஸ்புக்கிற்கு நிகராக கூகுலின் ஜிபிளஸ் சேவையும் பிரபலமாகி இருக்கிறது. சமீபத்தில் ஜிபிளஸ் தினசரி நூறு கோடி லாக் இன் எனும் மைல் கல்லை தொட்டிருக்கிறது.

இந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதும் நடந்து வந்தாலும் இவை தகவல் பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. சாமான்யர்களின் கைகளில் ஊடகத்தை இந்த வலைப்பின்னல் தளங்கள் கொண்டு வந்திருக்கின்றன. இவை எதிர்காலத்தில் எந்த வகையான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்று வியப்புடனும் கவலையுடனும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக் போன்ற தளங்கள் நவீன வாழ்க்கையில் செலுத்தும் ஆதிக்கம் ஒரு புறம் இருக்கட்டும், இந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் எப்படி உருவாயின என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

இணையத்தை தொடர்ந்து பின்பற்றி வருபவர்களுக்கு கூட இந்த தளங்கள் திடிரென எங்கிருந்து முளைத்தன என்பது போல நினைக்கத்தோன்றலாம். ஆனால் சமூக வலைப்பின்னல் தளங்கள் திடிரென தோன்றிவிடவில்லை. அவற்றுகென ஒரு வரலாறு இருக்கிறது.

ஆறுகோணங்களில் ஆரம்பம்.

ஆறுமுகம் தெரியும்.ஆறு கோணங்கள் தெரியுமா? இந்த ஆறு கோணங்களில் (SixDegrees.com  )  இருந்து தான் வலைப்பின்னல் யுகம் ஆரம்பமாகிறது . 1997ல் இந்த தளம் அமைகப்பட்டது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த தளம் மூடப்பட்டுவிட்டது என்றாலும் இது துவக்கி வைத்த சமூக வலைப்பின்னல் யுகத்திற்கான அடித்தளமாக இது அமைந்திருக்கிறது.

ஆறு கோண வேறுபாடு என்று மிகவும் பிரபலமான சமூக கோட்பாடு ஒன்று உண்டு. உலகில் உள்ள எவருமே இன்னொருவரிடம் இருந்து ஆறு மட்டங்களில் தான் வேறுபட்டவர் என்னும் கருத்து தான் இதன் அடிப்படை. அதாவது உலகில் உள்ள எந்த மனிதரும் வேறு எந்த மனிதருடனும் ஆறு அடிகளில் தொடர்பு கொண்டு விடலாம்.  எங்கோ அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள அறிமுகம் இல்லாவதர் கூட உங்களுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம்.  அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவருக்கும் உங்களுக்குமான ஆறு தொடர்புகளை கண்டுபிடிப்பது தான் என்று இந்த கோட்பாடு சொல்கிறது.

இந்த கருத்து முதலில் குழப்பத்தை தரலாம். ஆனால் இதன் பின்னே இருக்கும் உறவு சங்கிலி தொடர்பு முறையை தெரிந்து கொண்டால் எளிதாக புரிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஒருவரை தெரிந்திருக்கலாம். அவருக்கு தெரிந்திருக்கும் ஒருவர் உங்களுக்கும் தெரிந்தவர் தானே. அவருக்கு தெரிந்த இன்னொருவரையும் அவர் மூலமாக நீங்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம் தானே. இப்படி ஒவ்வொரு தொடர்பாக கண்டுபடித்தால் ஆறே அடியில் யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு விடலாம்.

இந்த கோட்பாட்டை வைத்து பலவிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நாடகம் திரைப்படம் போன்றவையும் எடுக்கப்பட்டன.

 இணைய யுகத்தில் இந்த கோட்பாட்டிற்கு உயிர் கொடுப்பதற்காக 1997ல் சிக்ஸ் டிகிரிஸ் .காம் இணையதளம் அமைக்கப்பட்டது. இந்த தளம் உறுப்பினர்கள் தங்கள் உறவிவர்கள் ,நண்பர்களை எல்லாம் பட்டியலிட வைத்து ஒவ்வொருவரும் ஒருவரிடம் இருந்த எத்தனை கட்டங்களில் வேறுப்பட்டிருக்கின்றனர் என்று பார்க்க வைத்தது.
பிறந்தது பிரண்ட்ஸ்டர்.

சிக்ஸ்டிகிரிஸ் தளம் 2001ல் மூடப்பட்டு விட ,2002 ல் இதே கருத்தாக்கத்தின் அடிப்படையில் பிர்ண்ட்ஸ்டர் தளம் உருவாக்கப்பட்டது. கண்டா நாட்டை சேர்ந்த ஜோனாதன் ஆபிரகாம் எனும் வாலிபர் இந்த தளத்தை அமைத்தார். ஆறு கோணங்கள் கோட்பாட்டை நட்பின் அடிப்படையில் இந்த தளம் முன் வைத்தது. அதாவது உங்கள் நண்பரின் நண்பர் உங்களுக்கும் நண்பர் தானே. இப்படி நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று நட்பு வட்டத்தை விரிவாக்கி கொள்ள இந்த சேவை வழி செய்தது.

நண்பர்கள் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொள்ள வழி செய்யும் இந்த கருத்தாக்கம் புதுமையாக இருந்ததால் இணையவாசிகளை கவர்ந்து மிகவும் பிரபலமானது. அப்போதே பத்து லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் ஈர்த்து பரபர்ப்ப ஏற்படுத்தியது.

வந்தது பேஸ்புக்.

பிரண்ட்ஸ்டர் கருத்தாக்கம் சுவாரஸ்யமானதாக இருந்ததே தவிர அதனால் என்ன பயன் என்று தெரியாமல் இருந்தது. நண்பரகள் மூலம் மேலு புதிய நண்பர்களை பெற்று நட்பு வலையை பெரிதாக்கி கொண்டே செல்வதால் என்ன பயன் என்னும் கேள்விக்கு இந்த தளத்தில் பதில் இல்லை.

இந்த பதிலோடு வந்து சேர்ந்த தளம் தான் பேஸ்புக். முதலில் அமெரிக்க கல்லூரி மாணவர்களுக்கான சேவையாக அறிமுகமான பேஸ்புக், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் மூலமாக ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தி கொண்டு சகல விதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என வழிகாட்டி வலைப்பின்னல் யுகத்திற்கு வித்திட்டது. 2004 ம் ஆண்டு அமெரிக்காவின் ஹாவர்டு பலகலை மாணவர்களுக்காக என்று உருவாக்கப்பட்ட இந்த சேவையை மார்க் ஜக்கர்பர்க் உருவாக்கினார். பின்னர் மற்ற கல்லூரிகளுக்கும் விரிவாகி அமெரிக்காவுக்கு வெளியேவும் அறிமுகமாயிற்று.

இன்று ஸ்டேடஸ் அப்டேட் மூலம் நண்பர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்வதும், அவர்கள் மூலமாகவே புதியவர்களின் அறிமுகத்தை பெறுவதும் சர்வ சக்ஜமாக இருக்கிறது. நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் அல்லாமல் ,திரைப்பட விமர்சனம், சமூக கண்ணோட்டம் , செய்திகள் விளையாட்டு தகவல்கள் பரிந்துரைகள் என் எல்லா வகையான தகவல்களுக் பேஸ்புக் மூலம் சாத்தியமாகிறது. இளைஞர்கள் மட்டும் அல்லாமல் திரைபப்ட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் ,எழுத்தாளர்கள் என பலரும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.

மைஸ்பேஸ் முதலில்.

பேஸ்புக்கிற்கு பிறகு மேலும் பல சமூக வலைப்பின்னல் தளங்கள் அறிமுகமாகி உள்ளன. கூகுல் ஜிபிளஸ் சேவையை அறிமுகம் செய்தூள்ளது. ஆனால் பேஸ்புக்கிற்கு முன்னரே மைஸ்பேஸ் வலைப்பின்னல் சேவையாக அறிமுகமாகி பிரபலமானது பலருக்கு தெரியாது. 2003 ம் ஆண்டு துவக்கப்பட்ட மைஸ்பேஸ் அமெரிக்கர்கள் மட்தியில் பிரபலமாக இருந்தது. பிரதானமாக இசை சார்த பகிர்வுக்கு பயன்பட்ட இந்த சேவை இசை கலைஞர்கள் ரசிகர்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும் வழி செயதது. ஆனால் பேஸ்புக் அலையில் மைஸ்பேஸ் பிந்தங்கிவிட்டது. ஏறக்குறைய இதே காலத்தில் கூகுலின் ஆர்குட் வலைப்பின்னல் சேவையும் பிரபலமாக இருந்தது.

மைஸ்பேசுக்கு முன்பாகவே லின்க்ட் இன் வலைப்பின்னல் சேவை அறிமுகமானது. 2001 ல் அறிமுகமான இந்த சேவை முற்றிலும் தொழில் முறையிலானது. வேலையில் இருப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் தங்கள் துறையில் உள்ளவர்களோடு தொழில் முறையில் தொடர்பு கொள்ள இந்த தளம் கைகொடுத்தது. இன்றளவும் தொழில் முறையிலான உறவை வளர்த்து கொள்ள லின்க்ட் இன் சேவையே பிரபலமாக இருக்கிறது.

என்றாலும் இவை எல்லாவற்றின் அடிப்படை ஆறு கோணங்கள் கோபாடு தான். இந்த கோட்பாட்டில் இருந்து உருவான நண்பர்களின் நண்பர்கள் கருத்தாக்கமே இன்றைய சமூக வலைப்பின்னல் யுகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது.

வாழ்வை மாற்றும் 10 வாக்கியங்கள்

அடுத்து வரும் வாக்கியங்கள் வாசிக்க மட்டுமல்ல. யோசிப்பதற்காகவும் கூட. அவற்றைப் புரிந்து கொண்டால் பார்வை விரியும். பார்வை விரிந்தால் பாதை தெரியும்.


1.பணிவு

பணிவு எப்போதும் தோற்றதில்லை; பயம் ஒருபோதும் வென்றதில்லை


2.கல்வி

தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்; வெற்றியின் போது அதை நினைவில் வைத்துக் கொள்


3.படைப்பு

காற்றால் நிரம்பிய வானத்திலும் கல்லாய் இறுகிய பாறையிலும் எதுவும் விளைவதில்லை


4.படிப்பு

யோசிக்க வைக்காத புத்தகம் உபயோகமில்லாத காகிதம்


5.தேடல்:

பேணி வளர்க்க வேண்டிய உறவுகள் மூன்று

உங்களுக்கும் மனதிற்குமான உறவு;

உங்களுக்கும் உலகிற்குமான உறவு;

உங்களுக்கும் கடவுளுக்குமான உறவு


6..இலக்கு

நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் நிலவை ரசிக்கத் தவறிவிடுகிறார்கள்


7.முயற்சி

பனி பெய்து குடம் நிரம்பாது. கோஷங்கள் மட்டுமே லட்சியங்களை வென்றெடுக்காது


8.சாதனை

மைல் கற்கள் பயணிப்பதில்லை சாதனைகளைக் கடப்பதுவே சாதனை


9. எதிர்காலம்

எதிர்காலத்தை நம்புங்கள்; எறும்புகள் கூட சேமிக்கின்றன


10.நாளை

நாளை என்பது இன்று துவங்குகிறது.

செல்பேசிக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்துவது எப்படி?

நீங்கள் தொலைத்தொடர்பு  (BSNL / AIRTEL / AIRCEL and Etc) வாடிக்கையாளரா? உங்கள் செல்பேசிக்கு வரும் வேண்டாத குறுஞ்செய்திகளையும், அழைப்புகளையும் நிறுத்த வேண்டுமா? அப்படியெனில் இது உங்களுக்கான தகவல்தான்.


எந்த வேண்டாத அழைப்புகளையும் அல்லது குறுஞ்செய்திகளையும் செல்பேசிக்கு வராமல் தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு 1909 என்ற இலவசத் தொடர்பு எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ செய்தால் போதும்.


வேண்டாத அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் என்பது என்ன?

நீங்கள் விரும்பாமலே உங்களுக்கு இடம் வாங்க விரும்புகிறீர்களா என்ற ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், லோன் வேண்டுமா என்ற தனியார் வங்கி விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற தொந்தரவுகள் தரும் அனைத்து துறை சார்ந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள்.


நிறுத்துவதற்கான வழிமுறைகள்:

உங்களுக்கு வரும் விளம்பரத் தொடர்புகளை நிறுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.


1.முற்றிலுமாக நிறுத்துவது: எந்த விளம்பரங்களையும் அழைப்புகளாகவோ, குறுஞ்செய்திகளாகவோ ஏற்க விருப்பமில்லை அல்லது நிறுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முற்றிலுமாக நிறுத்தும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.


2.பகுதி மட்டும் நிறுத்துவது: பகுதியாக நிறுத்துவதெனில் கீழ்க்கண்டவற்றில் எவை தேவைப்படுகிறதோ அவற்றின் எண்ணை மட்டுமோ அல்லது ஒன்றை மட்டுமோ அல்லது இரண்டு, மூன்று பிரிவுகளையுமோ கூட தேர்ந்தெடுக்கவும்.


START 1 &  வங்கி / காப்பீடு / நிதி தொடர்பானவை

START 2 &   ரியல் எஸ்டேட் தொடர்பானவை

START 3 &   கல்வி தொடர்பானவை

START 4 &   உடல்நலம் தொடர்பானவை

START  5 &  நுகர்பொருட்கள் / ஆட்டோமொபைல் தொடர்பானவை

START 6 &  தொலைத்தொடர்பு / ஒளிபரப்பு / பொழுதுபோக்கு / ஐ.டி. தொடர்பானவை

START 7 &   சுற்றுலா தொடர்பானவை


எப்படி பதிவு செய்வது?

1909 என்ற எண்ணுக்கு அழைபேசியில் தெரிவிக்கவும் அல்லது குறுஞ்செய்தி அனுப்ப விரும்பினால் முழுமையாக நிறுத்துவதற்கு START 0 என்றும் ஒரு சில வகைகளை மட்டும் நிறுத்துவதற்கு அந்த வரிசை எண்ணைத் தவிர மற்றவற்றைக் குறிப்பிட்டு உதாரணமாக START  2,3 (ரியல் எஸ்டேட், கல்வி) டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.


இப்படி பதிவு செய்ததும் உங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தனிப்பட்ட எண் (Unique Number ) ஒன்று குறுஞ்செய்தியில் வரும்.


எத்தனை நாட்களில் நிறுத்தப்படும்?

தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் (‡National Customer Preference Register) பதிந்த ஒரு வாரத்திற்குள் உங்களது வேண்டுகோள் ஏற்கப்பட்டு வேண்டாத விளம்பர அழைப்புகள் நிறுத்தப்படும்.


ஏற்கெனவே (‡National Do Not Call Registry) NDN ‡இல் பதிவு செய்திருந்தால் மீண்டும் நீங்கள் குறுஞ்செய்தியோ, அழைப்போ செய்தால் அது முழுமையாக நிறுத்தப்படும் பிரிவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும் (‡NDNC  தான் தற்போது ‡NCPR  ஆக பெயர் மாற்றப்பட்டுள்ளது).


தொந்தரவுகள் தொடர்ந்தால்...

‡NCPR இல் பதிந்து ஏழு நாட்களுக்குப் பிறகும் ஏதேனும் வேண்டாத விளம்பர அழைப்புகள் வந்தால் அந்த எண்ணைக் குறிப்பிட்டு அதைப் புகாராகப் பதிவு செய்யலாம். மூன்று நாட்களுக்குள் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும். வணிக நோக்கமில்லாத தகவல் ஏதேனும் வந்தால் அந்த நிறுவனத்தின் பெயர், தொலைபேசி எண், அழைப்பு வந்த தேதி, நேரம் (ரயில்வே நேரத்தைக் குறிப்பிட வேண்டும். மதியம் 4 மணி எனில் 16 என்று குறிப்பிடவேண்டும்) மற்றும் பேசிய விஷயத்தின் நோக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் புகாரளிக்கவும். புகாரளிப்பதற்கும் 1909 என்ற எண்ணையே இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். புகாரைப் பெற்றதற்கான எண்ணையும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இது சம்பந்தமான புகார்கள் ஏழு நாட்களில் தீர்க்கப்பட்டுவிடும்.


மீண்டும் விருப்பத் தேர்வுகளை மாற்ற இயலுமா?

நீங்கள் முன்னர் தேர்ந்தெடுத்த பிரிவினை மாற்ற வேண்டுமெனில் அதாவது இரண்டாவது பிரிவான கல்வி சம்பந்தப்பட்ட விளம்பரங்களை வேண்டாம் எனப் பதிவு செய்திருந்து மீண்டும் வேண்டும் என விரும்பினால் அதற்கும் வழி இருக்கிறது. முன்னர் பதிவு செய்து மூன்று மாதங்கள் முடிந்த பின்னர் மீண்டும் உங்களது குறுஞ்செய்தியை உறுதி செய்வார்கள். அதை மீண்டும் உறுதி செய்யலாம் அல்லது அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தும் அனுப்பலாம். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் புதிதாக பதிவு செய்ய அறிவுறுத்தப்படும்.


உங்கள் வேண்டுகோளை திரும்பப் பெற விரும்பினால் பதிவு செய்து மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி ‡NCPR லிருந்து வரும். அதாவது உங்கள் வேண்டுகோள் 24 மணி நேரத்திற்குப் பின் திரும்பப் பெறப்பட்டுவிடும் என்று வரும். அதை உறுதி செய்யாமல் விட்டால் மீண்டும் வழங்குநர் வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் உங்கள் எண் சேர்க்கப்பட்டுவிடும் அல்லது STOP  என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு தேவைப்படுகிற வரிசை எண்ணைக் கொடுத்தால் அதுகுறித்த அழைப்புகள் வரத் துவங்கும்.


கட்டணம்:

இந்த சேவையைப் பெறுவதற்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது.


மற்ற சேவைகள் பாதிக்கப்படுமா?

உதாரணமாக ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்ததும் தானியங்கி இயந்திரம் மூலம் செல்பேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் இதன் மூலம் தடுக்கப்படாது. அதேபோல ஆன்லைனில் பொருள் வாங்கும்போதோ, ஏதேனும் தளத்தில் பதிந்து கடவுச்சொல் சரிபார்த்தலுக்கோ, பேருந்து, ரயில் முன்பதிவுக்கான குறுந்தகவலோ வருவது இதன் மூலம் பாதிக்கப்படாது.


எப்படி இது சாத்தியம்?

எல்லா விளம்பரத் தொடர்புகளும் டிராயில் பதிவு செய்யப்பட்டிருக்கும். டிராயிடம் அனுமதி பெறாமல் விளம்பரங்கள் அழைப்பாகவோ, குறுஞ்செய்தியாகவோ வராது. இப்படி விளம்பரதாரர்கள் பதிவு செய்யும்போது டிராய்க்கு பணம் செலுத்தவேண்டும். அதனால் நீங்கள் வேண்டாம் என்றால் அதை நிறுத்தவும், வேண்டும் என்றால் தொடரவும் டிராய்க்கு சாத்தியமாகிறது.


எந்தெந்த விளம்பர நிறுவனங்கள் டிராயிடம் பதிவு செய்திருக்கின்றன என்பதை

http://www.nccptrai.gov.in/nccpregistrylistoftmstateanddistrict.misc?method=loadStates  என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


மேலும் தகவலுக்கு:

பதிவு செய்வதற்கு, அழைப்புகளைத் தடுப்பதற்கு, விருப்பத்தைத் திரும்பப் பெறுவதற்கு, புகாரைப் பதிவு செய்வதற்கு அனைத்துக்கும் 1909 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். பதிவு செய்யப்பட்ட குரலின் வழிகாட்டுதலின்படியோ  Interactive Voice Response System  (IVRS) அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பலாம்.


எப்படி புகாரைப் பதிவு செய்வது என்பதை கீழ்க்கண்ட தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளவும்.

http://www.nccptrai.gov.in/nccpregistry/How%20to%Register%20complaint.pdf?reqtrack=UcGCjkQNUmAwhxyUdaWZlieLC

மேலும் தகவலுக்கு http://www.nccptrai.gov.in/nccpregistry/  என்ற தளத்தைப் பார்க்கவும் அல்லது helplene@nccptrai.gov.in  என்ற மின்னஞ்சலிலோ 011-24305726, 011-23212032 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு  கொள்ளவும்.

கண்ணீரை வரவழைக்காத வெங்காயம் கண்டுபிடிப்பு!

கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


இது குறித்து இந்த வெங்காயத்தை உருவாக்கியுள்ள விஞ்ஞானி, கோலின் இயாடி கூறியதாவது:


சமையலில் பெரும் பங்கு வகிக்கும் வெங்காயம், அதை உரிப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. வெங்காயத்தில் உள்ள கந்தக அமிலம் தான் கண்ணீரை வரவழைக்கிறது. எனவே, கந்தக அமில தன்மையில் மாற்றம் செய்து, புதுவகை வெங்காயத்தை உருவாக்கியுள்ளோம்.


இந்த புது வெங்காயம், கண்ணீரை வரவழைக்காது. பூண்டில் உள்ள அனைத்து குணங்களும், புது வெங்காயத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.


ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை, பூண்டுக்கு உண்டு. அந்த குணங்கள், புது வெங்காயத்தில் உருவாக்கியுள்ளோம்.


இதன் மூலம் இதய சம்பந்தமான நோய்கள் தவிர்க்கப்படும். உடல் எடையும் குறையும் என கோலின் மேலும் தெரிவித்தார்.


இந்த வெங்காயம் எப்போது சந்தைக்கு வரும் என்பதை, அவர் குறிப்பிடவில்லை.

தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.!

மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படையே, தெரியாத உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் முனைப்புதான். ஆதிமனிதர்கள் இயற்கையின் ரகசியங்களைக் கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கினார்கள். நமது முன்னோர்களது கண்டுபிடிப்புகளின் பலன்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நமது கண்டுபிடிப்புகளின் பலன்களைத் தருவது நமது கடமை. இந்தத் தொடர்ச்சி அறுந்துவிடக்கூடாது. நமது நாட்டில் மதங்களும் சாதிகளும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளும் மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அவ்வப்போது அந்தத் தொடர்ச்சியை அறுத்துவிட்டுள்ளன.


nov 8 edit isro


நாட்டில் வறுமையும் பிணியும் கல்லாமையும் தொடர்கிற நிலையில், 450 கோடி ரூபாயில் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சி தேவைதானா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம் நாட்டில் எல்லாத் துறைகளிலும் இருக்கின்றன. விளையாட்டுத் துறையை எடுத்துக்கொண்டால் கிரிக்கெட்டுக்குத் தரப்படுகிற முக்கியத்துவம் நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்குக் கூட அளிக்கப்படுவதில்லை. அந்த விளையாட்டுகளுக்கு சமமான முக்கியத்துவம் அளியுங்கள் என்றுதான் வலியுறுத்த வேண்டுமே தவிர, நம் மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட கிரிக்கெட்டை நிராகரித்துவிட முடியாது. அதுபோல் வறுமை ஒழிப்பு, பொதுக் கல்வி, பொது மருத்துவம் ஆகியவற்றுக்கு முழுமையான முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்திப் போராட வேண்டுமேயன்றி அறிவியல் ஆராய்ச்சி தேவையில்லை என்ற முடிவுக்குப் போய்விடக் கூடாது.

சொல்லப்போனால் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக மிகவும் குறைவாகச் செலவிடும் நாடு இந்தியா. ‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) அமைப்பில் உள்ள நாடுகளில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகச் செலவிடுவதில் கடைசி இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீத நிதிதான் அறிவியலுக்காக ஒதுக்கப்படுகிறது. 2 சதவீதமாகவாவது அதை உயர்த்த வேண்டும் என்ற அறிவியலாளர்கள் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற நியாயமான ஆலோசனை புறக்கணிக்கப்படுவது போலத்தான்.

இந்தியாவின் பல வல்லுநர்கள் அமெரிக்காவின் ‘நாசா’ போன்ற நிறுவனங்களுக்குச் சென்றிருப்பது வேலைவாய்ப்பு, நல்ல ஊதியம் என்பதற்காக மட்டுமல்ல. தாங்கள் கற்றறிந்த அறிவியலை இங்கே ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தாலும்தான்.

மக்களின் வறுமைக்குக் காரணம் அறிவியல் ஆராய்ச்சிக்காக இத்தனை கோடி ஒதுக்குவதல்ல. விவசாய வளர்ச்சி, உள்நாட்டுத் தொழில் வளர்ச்சி, கல்வி மேம்பாடு போன்றவற்றிற்கு வழிவகுக்காத அரசின் பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளே காரணம். அந்தக் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன. அந்தப் போராட்டங்களில் பெருந்திரளாகப் பங்கேற்று அவற்றை வெற்றிபெறச் செய்வதே மாற்றுக் கொள்கைகள் காலூன்றுவதற்குக் களம் அமைக்கும்.

‘மங்கள்யான்’ திட்டத்தால் நாட்டிற்கு எவ்வளவு வருமானம் கிடைத்துவிடப்போகிறது என்றும் கேட்கிறார்கள். இவ்வளவு முதலீடு செய்தேன், இவ்வளவு லாபம் கிடைத்தது என்று பார்க்கிற வியாபார விசயம் அல்ல இது. மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களைக் கட்டண அடிப்படையில் விண்ணில் செலுத்துகிற ஒரு வர்த்தகத் திட்டமும் அல்ல. இப்படிப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகளால் நேரடி பலன் என்று உடனடியாகக் கிடைத்துவிடாதுதான். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்படும் பல புதிய தொழில்நுட்பங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு வருகிறபோது மக்களுக்குப் பெரிதும் பலனளிக்கின்றன.

செவ்வாய்ப் பயணம் தேவையா என்ற விவாதங்களையே கூட மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே, அது விண்வெளி ஆராய்ச்சியால் கிடைத்த தொழில்நுட்பம் அல்லவா? செல்போன், பெர்சனல் கம்ப்யூட்டர் இரண்டும் இல்லாத உலகத்தை இன்று கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா? இவை விண்வெளி ஆராய்ச்சி வாகனங்களில் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களிலிருந்து கிடைத்தவைதான். எளிதில் கணக்குப் போடுவதற்கான கால்குலேட்டர், காலணிகளுக்குக் கூட பயன்படும் வெல்க்ரோ, வலியற்ற அறுவைக்குப் பயன்படும் லேசர் சர்ஜரி, சர்வசாதாரணமாகப் புழக்கத்துக்கு வந்துவிட்ட டிஜிட்டல் கடிகாரம், உடலின் உட்பகுதிகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்திடும் இன்ஃப்ரா ரெட் கேமரா, இதய சிகிச்சையில் முக்கிய வளர்ச்சியாக வந்துள்ள பேஸ் மேக்கர் பேட்டரி, கதிர் வீச்சுத் தடுப்புக் கண்ணாடிகள், அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை முறைகள், நோய்க்கிருமிகளற்ற தண்ணீர் தயாரிப்பதற்கான சுத்திகரிப்புக் கருவிகள், கார்களை இயக்குவதற்கான நேவிகேசன் அமைப்பு, எங்கே இருக்கிறோம் என்று அறிய உதவும் செல்போன் வழிகாட்டி என்று பல நன்மைகள் கிடைத்திருக்கின்றன. நாட்டிற்கு இன்று முக்கியமாகத் தேவைப்படுகிற மின்சாரத்தை சூரிய சக்தியிலிருந்து பெறுவது குறித்து இன்று பெரிதும் பேசப்படுகிறது. அந்த சூரிய மின்சாரத் தொழில்நுட்பமும் செயற்கைக்கோள்களுக்கான மின்சார ஏற்பாட்டிலிருந்து வந்ததுதான். இத்தகைய எண்ணற்ற பலன்கள் பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிகளால் உலக மக்களுக்குக் கிடைத்துள்ளன.

செவ்வாய் ஆராய்ச்சியும் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளை எதிர்காலத்தில் வழங்கக்கூடும். புயல்கள் உருவாவதைக் கண்டறிவதில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இந்த ஆராய்ச்சி வழிவகுக்கும் என்று இத்திட்டத்தில் பங்கெடுத்துள்ள வல்லுநர்கள் சொல்கிறார்கள். அப்படிச் செல்கிறபோது மோசமான புயல்தாக்குதல்களிலிருந்து மக்களைப் பெருமளவுக்குக் காக்க முடியும். இதற்கான உலகளாவிய ஆய்வுகளில் இந்தியாவின் பங்களிப்பாக அது அமையும். உலகத்தின் ஒரு அங்கம்தான் நாம். உலகத்திலிருந்து நாம் பெறுகிறோம், நாமும் உலகத்திற்கு வழங்குவோம்.

இன்னொரு முக்கியமான பயன் இருக்கிறது: செவ்வாய் என்பது பூமியைப் போல கல்லும் மண்ணும் உள்ள ஒரு செந்நிறக் கோள்தான், அதற்கென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிமை எதுவும் கிடையாது என்ற உண்மை உறுதிப்படும் அல்லவா? செவ்வாய் தோஷம் என்பதன் பெயரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்கெல்லாம் முடிவுகட்ட இந்த ஆராய்ச்சியும் தன் பங்கிற்கு உதவுமே! நட்சத்திரங்களும் கோள்களும் மனித வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்ற உண்மை பரவுமானால் அது சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை!

அறிவியல் என்பது வெறும் பிப்பெட், பியூரட் மட்டுமல்ல. இந்தியாவின் அரசமைப்பு சாசனத்தில், மக்களிடையே அறிவியல் மனப்போக்கை வளர்த்தல் ஒரு லட்சியமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்பு சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை நிறைவேற்றுவது அரசின் கடமை. பள்ளிகள், கல்லூரிகளில் இயற்பியல், வேதியல் உள்ளிட்ட அடிப்படை அறிவியல் கல்வியை ஊக்குவிப்பது, அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் தங்களது சொந்த முயற்சியில் செய்கிற அறிவியல் விழிப்புணர்வுத் திட்டங்களை அரசாங்கமே மேற்கொள்வது, அறிவியல் திட்டங்களை முறைகேடுகள் இல்லாமல் செயல்படுத்துவது, ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவாக உருவாக்குவது என்று பல முனை நடவடிக்கைகள் தேவை. அதேவேளையில் அருமையான அறிவியல் திட்டங்களைத் தொடங்குகிறபோது, ஏதோவொரு கோவிலுக்குச் சென்று கடவுள் சிலையின் பாதத்தில் திட்டத்தின் சிறு வடிவத்தை வைத்துப் பூசை செய்கிற அபத்தங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

ஸ்ரீஹரிகோட்டா போல தமிழகத்தின் குலசேகரபட்டினம் ஒரு பயனுள்ள தளமாக உருவாக முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். கோள்களுக்கு செலுத்து வாகனத்தை ஏவுகிற எரிபொருள் செலவு அதனால் குறையும் என்கிறார்கள். தளத்திற்குத் தேவையான நிலம் அரசாங்கத்திற்கே சொந்தமானதாக இருந்தும் இந்த ஆலோசனையை ஏனோ மத்திய அரசு ஏற்காமலிருக்கிறது. இதை ஏற்றுச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்புத் திறன் எப்போது வளரும்? தாய்மொழி வழியாகக் கல்வி வழங்கப்படும்போதுதான் வளரும். அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருக்கும் நாடுகளிலெல்லாம் தாய்மொழியில்தான் கல்வி வழங்கப்படுகிறது. இங்கே ஆங்கிலத்தின் வழியாகப் படித்துவிட்டு மொழிபெயர்த்து மொழிபெயர்த்தே மூளையின் கண்டுபிடிப்பு ஆற்றல் பின்னுக்குத் தள்ளப்பட்டு காப்பியடிக்கிற வேலைதான் நடக்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் புறப்படுகிறார்களே தவிர, கண்டுபிடிப்பு அறிவியலாளர்கள் மிகக்குறைவாகவே உருவாகிறார்கள். தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான். ஆங்கில வழிக் கல்வியைத் திணிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு தாய்மொழியே பயிற்றுமொழி என்பதை மத்திய – மாநில அரசுகள் எல்லா மாநிலங்களிலும் உறுதிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.

அறிவியல் திட்டங்களை நிராகரிப்பதற்கு மாறாக, இப்படிப்பட்ட மாற்று அணுகுமுறைகளுக்கான குரல்கள் வலுவாக ஒலிப்பதன் மூலமே மக்களுக்கான அறிவியல் ஓங்கிடும்.

சீன வானில்மூன்று ஆதவன்கள்!!

சீபெங் நகரில் நடந்த விண்வெளி அற்புதத்தில் காணப்பட்ட மூன்று சூரியன்கள் 
 
சீனாவின் வடக்குபகுதியில் உள்ள உள்மங்கோலியா சுயாட்சி பகுதி மக்கள் ஒரு அற்புதமான வானியல் நிகழ்வை காண்பதற்காக வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்தனர். வானில் ஒரே நேரத்தில் தெரிந்த மூன்று சூரியன்கள்தான் அவர்களது வியப்புக்கு காரணாமாகும். 


காலை ஒன்பது மணியளவில் வானில் சூரியனும் அதன் இரட்டை உடன்பிறப்புகளான சிறிய சூரியன்களும் திடீரென்று முளைத்தன.


 இவை மூன்றும் வானவில் போன்ற ஒளிவட்டத்தால் சூழப்பட்டது போல் காணப்பட்டன. சீபெங் நகரில் தோன்றிய இந்த அற்புத நிகழ்ச்சி வானில் இரண்டு மணி நேரம் நீடித்தது.


இந்த அற்புத விண்வெளி நிகழ்வை ஏராளமானவர்கள் தங்கள் புகைப்படக்கருவி அல்லது வீடியோ கருவிகளில் பதிவு செய்து கொண்டனர். நகரின் சில பகுதிகளில் ஐந்து சூரியன்கள் தோன்றியதாக சிலர் கூறினர். 


இது ஒரு அறிவியல் விண்வெளி நிகழ்வு என்று சீபெங் வானிலை ஆய்வு மையம் கூறியது. இதற்கு பேண்டம் சன் என்றும் ஐஸ்ஹேலோ என்றும் பெயர்கள் உண்டு என்று அது கூறியது.


 வானில் 6000 மீட்டர் உயரத்துக்கு மேல் பனிக்கட்டிகள் உருவாகும் போது அதில்ஊருடுவும் ஒளிச்சிதறல்கள், வானவில் உருவாவது போல் சூரியன்களை உருவாக்குகிறது என்று வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் சாங் சிங் கூறினார்.

பேஸ் புக் செய்திகள் பற்றிய ஓர் ஆய்வு!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் பயன்படுத்துவது என்பது இளைஞர்களின் லேட்டஸ்ட் பேஷனாகவே மாறி விட்டது பஸ் புக்கை ஒரு நாள் அதை பயன்படுத்தாவிட்டாலும் அவர்கள் நிலை தடுமாறிதான் போய் விடுகிறார்கள் அந்த அளவுக்க மக்களை இந்த பேஸ்புக் தனக்கு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இதற்கிடையில் பேஸ்புக் அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (Facebook for every phone) என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டு இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


சென்ற ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் பேர் கூடுதலாக பேஸ்புக் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாதந்தோறும் மொபைல் போன்கள் வழியாக இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்க்ள் எண்ணிக்கை 75 கோடியே 10 லட்சம் பேர். உலக அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 110 கோடி என்கிறார்கள்.

nov 8 - online media


இந்த நிலையில் பேஸ்புக் வலைத்தளத்துக்கு வரும் எவரும் சுடச் சுட செய்திகளை தெரிந்து கொள்வதற்காக வருவதில்லை. என்றாம், செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பேஸ்புக்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.அதே சமயம் பிச்புக்கில் பல தகவல்கள் பொய்யாக பரப்பப் படுகிறது என்றும் ஆய்வில் தெரிய வருகிறது
சமீபத்தில் தி பியூ ஆரய்ச்சி மையம் (The Pew Research Center) ஆய்வின்படி, பேஸ்புக் பயனாளர்களில் 47% பேர், செய்திகளை பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தங்கள் நண்பர்கள் ஸ்டேடஸ் வாயிலாகவோ அல்லது தாங்கள் பின்பற்றும் வேறு சில செய்தி நிறுவனங்கள் வாயிலாகவோ அறிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.


ஆனால் இவர்களில் 4% பேர் மட்டுமே பேஸ்புக் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முக்கிய வழியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், பேஸ்புக் பயன்படுத்தும் 73% பேர் பொழுதுபோக்கு செய்திகள்தான் மிகவும் பிரபலமடைவதாக தெரிவித்துள்ளனர்.மேலும் சில தகவல்கள் பொய்யாக பரப்பப்படுவதாக குறிப்பிட்டனர்.


அதிலும் செய்திக்காக பேஸ்புக்கை நாடும் நபர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் அவர்களில் மூன்றில் ஒரு சதவீதத்தினர் வழக்கமான செய்திகள் பக்கம் தலை காட்டுவதில்லை என்கிறது அந்த ஆய்வு.இது குறித்து பியூ ஆரய்ச்சி மையத்தின் இயக்குனர் ஏமி மிட்செல் கூறுகையில், “செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஃபேஸ்புக் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான அனுகுமுறையை முன்னிலைப்படுத்துகிறது.



இந்த ஆராய்ச்சிக்காக 5,173 பேரிடம் கருத்துக்களைப் பெற்றபோது, நாம் செய்தியை மெனக்கிட்டு தேடாதபோதும் நாம் செய்தியை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் சிறந்தத் தளம் என ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.
பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து கணிசமான அளவில் செய்திகளை பகிரும் செய்தி நிறுவனங்களின் இணையதளத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு வாசகர்கள் வட்டம் அதிகரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


எந்த மாதிரியான செய்திகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் வர வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், மேலோட்டமாக செய்திகள் தங்களது பேஸ்புக் முகப்புப் பக்கத்தில் வந்து சேர்வதை அனைவரும் விரும்புவதாகவே ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது..

காணாமற்போன அடையாளங்கள்!

காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை கிராமங்களின் அடையாளங்கள் மாறிவருவதைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். கிராமங்களின் தனித்துவமான அடையாளங்களாக விளங்கிய இடங்கள், பொருட்கள், பழக்கவழக்கங்கள் என அனைத்தும் இன்று மாறியும், காணாமலும் போய்விட்டன. இதனால் பலவகையான அடையாளங்களைக் கிராமங்கள் இழந்தாலும் சில பழக்கவழக்கங்களால் தனக்கான அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.

 கிராமங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த பொருட்கள், இடங்கள்கூட கால ஓட்டத்தில் காணாமற்போய்விட்டன. ஒருகாலத்தில் புழக்கத்தில் மக்களோடு ஒன்றியிருந்த பொருட்கள்கூட இன்று நினைவுப் பொருட்களாக மாறிவிட்டன. வீட்டின் முன்பு கால்நடைகள், தெருக்களில் விளையாடும் குழந்தைகள், வீட்டுத் திண்ணையில் முதியவர்கள், தாவணி போட்ட கன்னிப் பெண்கள் அன்றாட நிகழ்வுகளை அலசி ஆராயும் குடும்பப் பெண்கள் என்றிருந்த கிராமம்தான் இன்று எப்படியெல்லாமோ மாறிவிட்டது.

 தெருவெங்கும் தார் சாலைகள், கான்கிரீட் வீடுகள், சுடிதார் போட்ட சிறுமிகள், வீட்டின் முன்பு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என்றெல்லாம் நகரத்துக்கு இணையாக கிராமங்களும் மாறிவிட்டன. கால ஓட்டத்தில் காணாமற்போன கிராமத்து அடையாளங்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

 ஊர் கிணறு (பொது கிணறு): குடிநீருக்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் ஏரிகளே பிரதானமாக இருந்தன. ஆனால் நாளடைவில் சரியான பராமரிப்பு இல்லாமற்போனதால் கால்நடைகளுக்கும், மற்ற பயன்பாடுகளுக்கும் மட்டுமே ஏரிகளின் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் ஊர் கிணறு (பொது கிணறு) எனப்படும் கிணறுதான் மக்களின் தாகம் தீர்த்தது.

 ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி பயன்பட்டு வந்த ஊர் கிணறு காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் பரபரப்பாக இருக்கும். மற்ற நேரங்களில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக இருக்கும். ஊர் கிணறு பெரும்பாலும் குடியிருப்புகளை ஒட்டினாற்போன்று ஒதுக்குப் புறத்திலும் ஏரியின் மையப்பகுதியிலும்தான் அமைந்திருக்கும்.

 ஆழ்துளை குழாய்களின் உபயம், குடிநீர் திட்டத்தினால் தெருக்களில் தண்ணீர் விநியோகம் போன்றவற்றால் காலப்போக்கில் ஊர் கிணறு காணாமற்போய்விட்டது. அன்று குடிநீர் விநியோகத்தில் பிரதானமாக விளங்கிய ஊர் கிணறு இன்று குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டது. ஊர் கிணறு காணாமற்போக காரணமாக விளங்கிய கைப்பம்புகளை காண்பதும் இன்று அரிதாக உள்ளது.

 சுமைதாங்கி: உள்ளார்ந்த அர்த்தத்தோடும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் உண்மை என்றே எண்ணத் தோன்றும் பழக்கவழக்கங்களை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பதற்கு "சுமைதாங்கி' ஓர் உதாரணமாகும். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் இறந்துவிட்டால் அவர்களின் நினைவாக அமைக்கப்படுவதுதான் "சுமைதாங்கி'. கர்ப்பிணி பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும் முன்பே சுமையுடன் இறந்துவிட்டதாகவும், இந்நிலை இனி எவருக்கும் வரக்கூடாது என்பதற்காகவும் சுமைதாங்கி அமைக்கப்படுகிறது.

 சுமைதாங்கி பெரும்பாலும் ஊருக்கு வெளியே வனப்பகுதியிலும் சாலையோரங்களிலும்தான் அமைக்கப்படும். செங்குத்து வடிவில் இரண்டு கற்களும் கிடைமட்டமாக ஒரு கல்லும் கொண்டு அமைக்கப்பட்ட சுமைதாங்கியில் எவ்வளவு கனமான சுமையையும் எவரது உதவியும் இல்லாமல் இறக்கிவைக்கவும், மீண்டும் சுமந்து செல்லவும் முடியும்.

கர்ப்ப கால மரணங்கள் இன்று வெகுவாகக் குறைந்துவிட்டாலும் மக்களின் பழக்கவழக்கங்கள் இன்று மாறிவிட்டதால், சுமைதாங்கி அமைப்பது இல்லாமற் போய்விட்டது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட சுமைதாங்கிகளும் பயனற்றுப் போய்விட்டன. அவையும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன.
 திண்ணை: முதியவர்களின் கடைசிகால இருப்பிடமாக விளங்கும் திண்ணை கொண்ட வீடுகளை இன்று காணமுடிவதில்லை. இருக்கின்ற வீடுகளிலும் திண்ணைப் பகுதி பயன்பாடில்லாத இடமாகவே உள்ளது. வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்களை வரவேற்கும்போது திண்ணையைக் காட்டி, "உட்காருங்கள்' என்று சொல்வதே மிகப் பெரிய மரியாதையாகக் கருப்பட்டது.

 வயதான காலத்தில் தரையில் உட்காரவோ, எழுந்திருக்கவோ முடியாதபோது இந்த திண்ணைதான் உற்ற தோழனாக விளங்கியது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்து தெருக்களில் நடந்து செல்லும் போது வீட்டின் முன்புள்ள திண்ணையில் முதியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் காணமுடியும்.

 அதனால் முதியவர்கள் வசதிக்காக திண்ணையில் உட்கார்ந்து சுவறில் சாய்ந்து கொள்ளும் பொருட்டு சாய்வு தள அமைப்பும், அதற்கு மேல் சிறிய மாடமும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மாடம் விசேஷ காலங்களில் விளக்கேற்றி வைக்கும் இடமாகவும், மற்ற நாட்களில் முதியோருக்குத் தேவையான தண்ணீர் சொம்பு, வெற்றிலைப் பாக்கு பொட்டலம் வைக்கும் இடமாகவும் விளங்கும்.

 இன்று வீட்டில் திண்ணை என்பது இடத்தை ஆக்கிரமிக்கும் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அதனால் திண்ணை வைத்த வீடுகளை எவரும் கட்டுவதுமில்லை, இருக்கின்ற திண்ணைகள் பராமரிக்கப்படுவதும் இல்லை.

 டூரிங் டாக்கீஸ்: "கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை' என்ற பக்திப் பாடல் எங்காவது ஒலிக்கக் கேட்டால் இன்றளவும் நம் நினைவுக்கு வருவது டூரிங் டாக்கீஸ்தான்.

 சிறு நகரங்களுக்குச் சென்று படம் பார்க்க நேரமில்லாத, அதிகக் கட்டணத்தில் படம் பார்க்க மனமில்லாத மக்களுக்கு டூரிங் டாக்கீஸ்தான் சிறந்த பொழுதுபோக்குக் கூடமாகும். தரை, பெஞ்சு, சேர் என மூவகைகள் மட்டுமே திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும். டூரிங் டாக்கீஸில் சேர் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பது அந்த காலகட்டத்தில் கெüரவமாகக் கருதப்பட்டது.

 மணற்பாங்கான தரையில் உட்கார்ந்து படம் பார்க்கும் சுகமே அலாதியானது. அப்போதெல்லாம் அறியாமை காரணமாக திரைக்கு அருகே அமர்ந்து படம் பார்ப்பதை சிலர் விரும்புவர். அதற்காக முன்னதாகவே டிக்கெட் வாங்கிச் சென்று திரைக்கு அருகில் மணலைத் திரட்டி மேடாக்கி அமர்ந்து படம் பார்ப்பதுண்டு.

 நடந்தும், சைக்கிளிலும் வந்து படம் பார்த்துச் செல்லும் மக்களுக்கு மத்தியில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் படம் பார்க்க வருவது அப்போது அந்தஸ்து மிக்கதாக எண்ணப்பட்டது. பட இடைவேளையின் போது மட்டுமின்றி எப்போதும் பார்வையாளர்கள் மத்தியில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படும். எத்தனை உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் எல்லோரும் விரும்பி வாங்குவது "கல்கோனா' எனப்படும் உருண்டை மிட்டாய்தான்.

 டூரிங் டாக்கீஸ்களில் மட்டுமே கிடைக்கும் இந்த மிட்டாயை படம் தொடங்கும் போது வாங்கி வாயில் போட்டால் முடியும் வரையில் அதன் சுவை இருந்து கொண்டே இருக்கும். டூரிங் டாக்கீஸ் என்று இல்லாமற் போனதோ அன்றே இந்த கல்கோனாவும் காணாமற்போய்விட்டது. ஆனால் இன்று வரையில் டூரிங் டாக்கீஸ் என்றால் கல்கோனாவும் கல்கோனா என்றால் டூரிங் டாக்கீசும் நம் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.


 கிராம விளையாட்டுகள்: கிராமத்து தெருக்களில் சிறார், சிறுமியர் விளையாடுவதைக் காண்பதற்கில்லை. முன்பு பள்ளி நாட்களில் மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களில் பகல் வேளையிலும் விளையாடிக் கொண்டிருப்பர். நொண்டி ஆட்டம், கண்ணாமூச்சி ஆட்டம், சில்லாட்டம், தாயம் போன்றவை சிறுமியர் விளையாட்டாகவும், கிட்டிப்புல், கோலி, கபடி போன்றவை சிறார் விளையாட்டாகவும் இருந்தது.

 ஆனால் காலப்போக்கில் நகரத்து சாயல், தகவல் தொடர்பு சாதனங்களால் இத்தகைய விளையாட்டுகள் இல்லாமற்போய்விட்டன. பண்டிகை நாட்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமே இவ்வகையான விளையாட்டுகளைக் காணமுடிகிறது.

 பத்தாயம்: அறுவடைக்குப் பின்னர் விவசாய விளைபொருட்களை ஆண்டுக்கணக்கில் சேமித்து வைக்க பயன்படுத்துவதுதான் பத்தாயம். அதிக அளவில் சாகுபடி செய்வோரும், வசதி படைத்தவர்களும்தான் பத்தாயம் வைத்திருப்பர். செவ்வக வடிவில் வசதிக்கேற்ப உயர்ரக அல்லது சாதாரண மரப்பலகைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பத்தாயத்தில் பொருட்களைக் கொட்டுவதற்கு அதன் மேற்புரத்திலும் வேண்டும்போது எடுத்துக் கொள்ள கீழ்புறத்திலும் வழிவகை உண்டு.
 உள்ளூரில் கிடைக்கும் களிமண், வைக்கோல் துகள் போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான குதிர் வட்ட வடிவில் விலைக்கேற்ற அளவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வசதி குறைவானவர்கள் வீட்டில் குதிர்தான் இடம்பெற்றிருக்கும்.

 நகை, பணம் போன்றவற்றையும் இதனுள்தான் வைத்திருப்பர். விளைபொருட்களையே உணவுப் பொருட்களாகவும் அப்போது பயன்படுத்தியதால் பத்தாயம், குதிர் ஆகியவற்றின் தேவை அவசியமாக இருந்தது.

 கிராமங்கள் என்றாலே இவையெல்லாம் இருக்கும் என்று உறுதியாகக் கூறப்பட்ட அடையாளங்கள் யாவும் இன்றைக்குக் குக்கிராமங்களில் கூட இல்லாமற்போய்விட்டன. அடையாளமாக விளங்கிய பொருட்கள், பழக்கவழக்கங்கள் யாவும் இன்று அடையாளத்தை இழந்துவிட்டன. பழக்கவழக்கங்கள் மட்டுமே இன்று பழக்கத்தில் இருந்தாலும் அதுவும் விசேஷ காலங்களில் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு நாட்டினருடன் எப்படிப் பேசுவது?

இங்கிலாந்து- நாட்டினருடன் பேசும்போது நெருக்கமாக நிற்காதீர்கள். எவரையும் திருவாளர், திருமதி, டாக்டர் என்று உரிய மரியாதையுடன் அழைக்க வேண்டும். முறையாக உடை அணிய வேண்டும். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேட்காதீர்கள். குடும்ப விஷயத்திலிருந்து பேச்சைத் தொடங்காதீர்கள். அதை அவர்கள் விரும்புவதில்லை.

சீன- நாட்டினருடன் எடுத்த எடுப்பில் வியாபார சமாச்சாரங்களைப் பேச வேண்டாம். உடலோடு ஒட்டி நிற்காதீர்கள். தொட்டுப் பேசாதீர்கள். தேநீரை ரசித்துக் குடியுங்கள். வியாபாரப் பேச்சு வார்த்தைகளின்போது அடிக்கடி தேநீர் தரப்படும். மரபு வழியிலான உடையை அணியுங்கள். வெள்ளை உடை அணிந்து பொது விழாக்களுக்குச் செல்லாதீர்கள். அங்கே வெள்ளை துக்கத்திற்கு அடையாளம்.

அரபு- நாட்டினருடன் உரையாடும்பொழுது உங்களுக்கு மிக அருகில் நெருக்கமாக நிற்பார்கள். அது அவர்கள் பழக்கம். அதைத் தவிர்க்க நீங்கள் பின்னே தள்ளி நிற்க முயற்சி செய்யாதீர்கள். அது அங்கே மரியாதைக் குறைவாகக் கருதப்படும். அராபியர்களிடம் அவர்களது குடும்பம் பற்றிக் கேள்வி கேட்காதீர்கள். அவர்கள் அதை விரும்புவதில்லை.

பிரான்ஸில் விருந்தினர் உள்ளே நுழையும்போதும் விடை பெற்று வெளியே செல்லும்போதும் கை குலுக்குங்கள். பேச்சு வார்த்தைக்கு

பிரெஞ்சு மொழியில் முன்னதாகவே கடிதம் எழுதுங்கள்.

சில பழைய வார்த்தைகளும், அதற்கான புதிய அர்த்தங்களும்!

பொதுவாக சொல் அகராதி எனப்படும் டிக்ஸ்னரியில், வார்த்தைகளும், அதற்கு ஏற்ற அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இங்கும் அதுபோன்ற ஒரு அகராதிதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பழைய வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களை கொடுத்துள்ளது.

என்னவென்று பார்ப்போம்.

சமரசம் – ஒவ்வொருவரும், தனக்குத்தான் மிகப்பெரிய கேக் துண்டு வந்ததாக எண்ணும் வகையில் ஒரு கேக்கை வெட்டும் கலை.

கருத்தரங்கு – ஒருவருக்கு வந்துள்ள குழப்பத்தை, பலர் சேர்ந்து அதிகமாக்குவது.

கருத்தருங்கு அறை – இங்கு அனைவருமே பேசுவார்கள், ஒருவரும் கேட்கமாட்டார்கள், சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என்று அனைவருமே நிராகரிக்கும் இடம்.

மருத்துவர் – எவர் ஒருவர் மாத்திரையால் உங்களது நோயைக் கொன்று, மருத்துவக் கட்டணத்தால் உங்களைக் கொல்பவரோ அவரே.

புன்னகை – பல சொல்ல முடியாத வார்த்தைகளின் மறைமுக சமிக்ஞை.

கண்ணீர் – ஆண்களின் சக்தியை வெல்லும் பெண்களின் சக்தி.

மேலதிகாரி – நீ தாமதமாக அலுவலகம் வரும் போது, சீக்கிரம் வந்து, நீ சீக்கிரம் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது காலம் தாழ்த்தி கிளம்புபவர்.

சம்பளம் – இது காற்று போன்றது. வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. உணர மட்டுமே முடியும்.

அலுவல விடுப்பு – வீட்டில் இருந்தே பணியாற்றுவது

விரிவுரை – மாணவர்களுக்கு எந்த வகையில் சொன்னாலும் புரியாமலேயே இருப்பது

சற்று ஓய்வு – கோடைக் காலங்களில் இலையை உதிர்த்துவிட்டு இருக்கும் மரங்கள்.

வழுக்கை – மனிதனால் மாற்ற முடியாத கடவுள் செய்யும் ஹேர் ஸ்டைல்.

ரகசியம் – யாரிடமும் கூற வேண்டாம் என்று எல்லோரிடமும் சொல்லும் ஒரு விஷயம்.

படிப்பது – புத்தகத்தை திறந்து மடியில் வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்ப்பது.

பெற்றோர் – உங்களது சிறு வயது சுட்டித் தனங்களை நினைத்துக் கொண்டே வாழ்பவர்கள்.

விவாகரத்து – திருமணத்தின் எதிர்காலம்

ஆங்கில அகராதி – இதில்தான் முதலில் விவகாரத்தும், பிறகு திருமணமும் வரும்.

கொட்டாவி – திருமணமான ஆண்கள் வாயைத் திறக்க உள்ள ஒரே வழி

அனுபவம் – மனிதன் செய்யும் தவறுகளுக்கு அவன் வைக்கும் பெயர்

அணு குண்டு – புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் அழிக்க மனிதன் கண்டுபிடித்தது.

வாய்ப்பு – நதியில் தவறி விழுந்தவன் குளித்துக் கொள்வது.

வேட்பாளர் – வாக்குறுதிகளை விற்றுவிட்டு வாக்குகளை வாங்குபவர்.

இன்னும் இதுபோல ஏராளமாக உள்ளன.. இவை வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.

16 அடி உயரம் வளர்ந்த கத்திரிக்காய் மரங்கள்!


கர்நாடகாவில் கத்திரிக்காய் மரத்தில் காய்க்கும் அதிசயம் நடக்கிறது.கத்திரிக்காய் செடிகள் 2 அடி முதல் 3 அடி வரை செடியாக வளர்ந்து காய்கள் காய்க்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் கத்திரிக்காய் பறிக்கப்பட்டு பின்னர், செடிகளை வேரோடு அகற்றிவிடுவதுதான் வழக்கம். ஆனால், வடகர்நாடகா மாவட்டம், சிரசி தாலுகாவில் வழக்கத்துக்கு மாறான அதிசயம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள முண்டகூடா கிராமத்தை சேர்ந்தவர் சசி. இவர் தனது நண்பரின் நிலத்தில் விதைத்திருந்த கத்திரிக்காய் செடிகளை 8 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து தனது வீட்டு தோட்டத்தில் பயிரிட்டார்.

வழக்கமான உயரம் வளர்ந்த இந்த செடிகளில் எப்போதும் போல் கத்திரிக்காய் காய்த்தது. பின்னர், இந்த செடிகள் மரம் போல் வளர்ந்தன. தற்போது, இந்த செடிகள் 16 அடிக்குமேல் வளர்ந்து மரமாக காட்சி அளிக்கின்றன. செடியாக இருந்து காய்க்க வேண்டிய கத்திரி செடிகள், மரமாக மாறியிருப்பது முண்டகூடா கிராமத்தில் உள்ள மக்களை மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதுமையை தடுக்கும் செம்பருத்தியின் மருத்துவ பலன்கள்!

செம்பருத்தி மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகிய பூச்செடி வகையைச் சேர்ந்ததாகும்.
பல்வேறு வகைகளில் வளரும் இந்த செடியில் தனித்தன்மை வாய்ந்த அழகிய பூக்கள் பூக்கும்.

செம்பருத்தி அபரிமிதமான மருத்துவ குணங்கள் உள்ள செடியாகும்.

செம்பருத்தி இலைகள் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வழிமுறைகளிலும் கையாளப்பட்டு வருகிறது.

செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் புகழ் பெற்று விளங்குகிறது.

ஆயுர்வேதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி உயர்ந்த மருத்துவ குணம் கொண்டவைகளாவும், இருமல், முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

முடி உதிர்தலை தடுத்தல்

செம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது.

அது முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும் உதவுகிறது.

தேநீர்

செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பல்வேறு நாடுகளிலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுநீரகத்தின் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய சர்க்கரை இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும் மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கும் வேளைகளில் நம்மை சாந்தப்படுத்தவும் இந்த தேநீர் உதவுகிறது.

சரும பாதுகாப்பு

அழகு சாதன பொருட்களில், சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்களை செம்பருத்தி கொண்டிருக்கிறது.

சீன மருத்துவத்தில், செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு சூரிய-கதிருக்கு எதிரான புறஊதாக் கதிர்வீச்சினை ஈர்க்கவும் மற்றும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இரத்த அழுத்தத்தை குறைத்தல்

செம்பருத்தி இலை தேநீரை பருகுவது தொடர்பான ஆய்வுகளின் முடிவில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்ப்பட்டிருந்து பல நபர்களின் இரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலை உள்ளது.

காயங்களை குணப்படுத்துதல்

திறந்த காயங்கள் மற்றும் புற்றுநோயினால் உருவான காயங்களின் மேல் போடுவதற்காக செம்பருத்தியில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணைய் பயன்படுகிறது.

புற்றுநோயின் ஆரம்ப காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. திறந்த காயங்களை வேகமாக குணப்படுத்த செம்பருத்தி சாறு உதவுகிறது.

கொழுப்பை குறைத்தல்

செம்பருத்தி இலை தேநீர் LDL கொழுப்பின் அளவை குறைப்பதில் மிகவும் திறன் வாய்ந்த மருந்தாக உள்ளது. தமனிகளின் உள்ளே உள்ள அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவை குறைக்கின்றன.

இருமல் மற்றும் ஜலதோஷம்

செம்பருத்தி இலைகளில் பெருமளவு குவிந்து கிடக்கும் வைட்டமின் சி-யை தேநீராகவும், சாறாகவும் பிழிந்து குடிக்கும் போது அது சாதாரண ஜலதோஷம் மற்றும் இருமலுக்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

உங்களுடைய ஜலதோஷத்தை வெகு சீக்கிரத்தில் வெளியே அனுப்ப செம்பருத்தி உதவுகிறது.

எடையை குறைத்தல் மற்றும் ஜீரணம்

இயற்கையாகவே பசியை குறைக்கும் குணத்தை கொண்டிருக்கும் செம்பருத்தியை உணவில் சேர்த்துக் கொள்வதால் எடையை குறைக்க முடியும்.

செம்பருத்தி இலை தேநீரை குடிப்பதன் மூலம் நீங்கள் மிகவும் குறைவாக உணவு உண்ணவும் மற்றும் உண்ட உணவை வேகமாக ஜீரணம் செய்ய வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கவும் முடியும்.

மாதவிடாயை முறைப்படுத்துதல்

குறைந்த அளவே ஈஸ்ட்ரோஜன் உள்ள பெண்கள் செம்பருத்தி இலை தேநீரை தொடர்ந்து பருகி வந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இதன் மூலம் உடலின் ஹார்மோன் அளவு சமச்சீராகவும், மாதவிடாய் சீராகவும் இருக்க உதவுகிறது.

மூப்பினை தள்ளிப் போடுதல்

செம்பருத்தி இலைகளில் ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்கள் மிகவும் அதிக அளவில் உள்ளன.

இந்த பொருட்கள் உங்கள் உடலிலுள்ள கிருமிகளை எதிர்த்து நாசம் செய்யும் வல்லமை படைத்தவையாக இருப்பதால், உங்களுக்கு வயதாவது தள்ளி வைக்கப்பட்டு, நீங்கள் நீண்ட இளமையுடன் இருக்க வைக்க உதவுகிறது.

காப்பி அருந்துவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா?

நோய் நொடிகளற்ற மனித வாழ்வை நோக்கி செல்ல இன்று பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஒரு அங்கமாக உடலுக்கு உற்சாகத்தை வழங்கும் காப்பி குடிப்பதற்கு சிறந்த நேரம் காலை 9.30 இருந்து காலை 11.30 வரையான காலப்பகுதி என நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரத்திலேயே காப்பியில் காணப்படும் காபைன் (caffeine) எனும் பதார்த்தம் உடல் இயக்கத்தினை ஒழுங்குபடுத்தும் கோட்டிசோல் (cortisol) ஓமோனுடன் சிறந்த முறையில் செயற்படக்கூடியதாக இருக்கும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கோட்டிசோல் ஆனது தூக்கத்திலிருந்து எழும்பும்போது மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றது எனவும், 8 மணி தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியில் மேலும் மந்தமான நிலையை அடைகின்றது எனவும் ஸ்டீபன் மில்லர் எனும் நரம்பியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும்.
அதேப் போல் குழந்தைப் பிறந்த பிறகு ஒருசில உணவுகளின் மீது ஆசை அதிகம் எழும்.

அதிலும் அத்தகைய உணவுப் பொருட்கள் அனைத்தும் கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக்கூடாதவையாக இருக்கும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகப்படியாக இருப்பதால், அவற்றை தவிர்க்க வேண்டுமென்று சொல்வார்கள்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை பிரசவத்திற்கு பின் பெண்கள் எந்த ஒரு பயமின்றியும் சாப்பிடலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பாஸ்தா

இத்தாலியன் உணவுப் பொருட்களில் ஒன்றான பாஸ்தாவை பிரசவத்திற்கு பின் சாப்பிட பெண்கள் பயப்படுவார்கள்.

ஆனால் அப்படி பயப்படத் தேவையில்லை. இதில் கலோரிகள் அதிகம் இருப்பதோடு, நீண்ட நேரம் எனர்ஜியுடன் இருக்க உதவியாக இருக்கும். இருப்பினும் அளவாக சாப்பிடுவதே நல்லது.

சீஸ்

பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று தான் சீஸ்.

ஏனெனில் பிரசவத்தின் போது பெண்கள் அதிகப்படியான கால்சியம் சத்தை இழக்க நேரிடும். ஆகவே கால்சியம் அதிகம் நிறைந்த பால் பொருட்களில் ஒன்றான சீஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களைக் கூட பிரசவத்திற்கு பெண்கள் சாப்பிடலாம்.

இருப்பினும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை போன்றவற்றை அளவாக உட்கொள்வது நல்லது. ஏனெனில் அதிகமாக சாப்பிட்டால், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும்.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. இந்த சத்து பிரசவம் ஆன பெண்களுக்கு மிகவும் இன்றியமையாதது.

அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டியது. எனவே குழந்தைக்கு பால் கொடுக்கும் முன், ஒரு கையளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட வேண்டும். இதனால் அது தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்கும்.

காபி

கர்ப்பமாக இருக்கும் போது காப்ஃபைன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது.

ஏனெனில் அது கருவின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் பிரசவத்திற்கு பின் காபி குடித்தால், அது உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சிக் கொடுக்கும்.

பால்

ஒவ்வொரு புதிய தாய்மார்களும் பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் பால்.

ஏனெனில் பாலில் அவர்களுக்கு தேவையான கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பாலானது தாயப்பாலின் சக்தியை அதிகரிக்கும்.

ஆகவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் 1 மணிநேரத்திற்கு முன், ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் கே அதிகம் நிறைந்துள்ளது.

இத்தகைய வைட்டமின் கே நிறைந்துள்ள உணவுப் பொருட்களை பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பின் சாப்பிட்டால், தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளின் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.

மீன்

மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டி நிறைந்துள்ளது. அதிலும் சால்மன், டூனா போன்ற மீன்களில் இச்சத்து மிகுந்த அளவில் உள்ளது.

ஆகவே இதனை பெண்கள் சாப்பிட்டால், குழந்தைகளின் மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அதிலும் வாரத்திற்கு 2 முறைக்கு மேல் மீனை சாப்பிடக்கூடாது.

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்

பிரசவத்தின் போது இழக்கப்பட்ட உடலின் எனர்ஜியை அதிகரிப்பதற்கு, கார்போஹைட்ரேட் மிகவும் அவசியமானதாக உள்ளது.

ஆகவே பிரசவத்திற்கு பின் பெண்கள், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களான கைக்குத்தல் அரிசி அல்லது பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் வழிகள்!

கம்ப்யூட்டர்களுக்கு மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்பும் ஹேக்கர்கள் எனப்படுவோர் அதிகம் குறி வைப்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத்தான் என்பது ஏறத்தாழ அனைவரும் ஏற்றுக் கொண்ட தகவலாகும். மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை அறிந்து, அதற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் கண்டறியப்பட்ட zero day exploit என்பதனை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அவசரமான ஒரு பேட்ச் பைலை வெளியிட்டு சரி செய்தது.


இருப்பினும் அடுத்த ஹேக்கர் தாக்குதல் எப்போதும் நிகழலாம் என்ற நிலையிலேயே நாம் இருக்கிறோம். எனவே தான், எப்போதும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை உடனுடக்குடன் இன்ஸ்டால் செய்வதுடன், தொடர்ந்து இன்னல்களை வரவழைக்கும் வழிகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். எனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தாக்கும் வழிகளாக எவை இருந்தன என்பதனையும், எதிர்காலத்தில் எப்படி இவற்றை எதிர்கொள்ளலாம் என்பதனையும் இங்கு பார்க்கலாம்.


இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு என்ன ஏற்பட்டது?


சென்ற செப்டம்பர் 17ல், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அனைத்து பதிப்புகளிலும் சரி செய்யப்படாத தவறு ஒன்று உள்ளது என்றும், அதனை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கெடுக்கும் வேலையினை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்தது. இதற்கான சரியான பாதுகாப்பினையும் தீர்வையும் தரும் பேட்ச் பைலை மைக்ரோசாப்ட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில், தற்காலிகமாகவும் அதனைத் தீர்க்கும் வகையிலான டூல் ஒன்றை வெளியிட்டது. இதனைத் தாங்களாகவே பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது. இந்த அறிவிப்பு பரபரப்பின ஏற்படுத்தியது. அதே வேளையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்திய அனைவரையும் இது தாக்கியது.


மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இதற்கான தீர்வு தரும் புரோகிராமினைத் தயாரித்து வழங்க மூன்று வார காலம் ஆனது. அக்டோபர் 8ல், வழக்கமான Patch Tuesdayல் இந்த பாதுகாப்பு குறியீடு வழங்கப்பட்டது. இது உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டு சிஸ்டம் அப்டேட் ஆகி இருந்தால், நீங்கள் தற்போதைக்குத் தப்பித்துக் கொண்டீர்கள் என நிம்மதியாக இருக்கலாம். இதற்கிடையே நாம் வேறு என்ன வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று பார்க்கலாம்.


1.தானாக விண்டோஸ் அப்டேட் அமைக்கவும்: கம்ப்யூட்டரில், விண்டோஸ் தானாக அப்டேட் செய்து கொள்ளும் வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம் குறிப்பிட்ட கால அவகாசத்தில், தானாகவே அப்டேட் செய்வதற்குத் தேவையான பைல்களை வெளியிடுகிறது. தானாக அப்டேட் செய்திடும் வழி அமைக்கப்பட்டால், நாம் இணைய இணைப்பில் இருக்கையில், விண்டோஸ் தானாகவே, இந்த அப்டேட் பைல்களை தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ளும்.


2. அண்மைக் கால பதிப்பிற்கு மேம்படுத்துதல்: எப்போதும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் புதிய பதிப்பு வெளியாகும் போது, அதற்கு நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அண்மையில் ஏற்பட்ட பாதிப்பு, அனைத்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பதிப்புகளையும் பாதித்தாலும், பழைய அப்டேட் செய்யப்படாத பதிப்புகள் அதிகம் தாக்குதலுக்குள்ளாயின. பொதுவாக, பழைய பதிப்புகள் குறித்து மைக்ரோசாப்ட் அக்கறை கொள்வதில்லை.

தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பிரவுசராக உள்ளது. விண்டோஸ் 8 பயனாளர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பதிப்பு 11 ஐப் பயன்படுத்த வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பதிப்பு 10, பழைய பிரவுசர்களைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதலான வேகத்தில் இயங்கியது. அடுத்த பதிப்பு 11, புதிய, தொடு உணர் செயல்பாடு கொண்ட பிரவுசராக அமைந்துள்ளது. மேலும், இந்த பதிப்பு, விண்டோஸ் 8 போன் சிஸ்டத்துடன் எளிதில் இணைந்து செயல்படுகிறது.


3. பிரவுசரை பாதுகாப்பான நிலையில் இயக்கவும்: அண்மையில் ஏற்பட்ட பிரச்னைக்குத் தீர்வினை, மைக்ரோசாப்ட் வழங்க, வெகுநாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்காலிகமாக வழங்கிய டூலினை இயக்க பயனாளர் முயற்சி தேவைப்பட்டது. இது போன்ற பிரச்னை ஏற்படும் காலம் மட்டுமின்றி, எப்போதும், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை, Protected Mode என்னும் பாதுகாப்பான வழியில் இயக்கலாம். அதனுடைய security level நிலையையும் மிக அதிகமாக வைக்கலாம்.


இதற்கு, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, தேடல் கட்டத்தில் Internet Options என டைப் செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், Settings charm திறந்து, Settings என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், கண்ட்ரோல் பேனல் திறந்து, அதில் Internet Options என்பதனைத் தேடி அறியவும். அடுத்து Security tab இயக்கி, Enable Protected Mode என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப் பட்டுள்ளதனை உறுதி செய்து கொள்ளவும். அடுத்து, Internet and Local intranet ஆகியவற்றுக்கு பாதுகாப்பு நிலை மிக அதிகமாக (high) அமைக்கப்பட்டுள்ளதனையும் உறுதி செய்திடவும். நீங்கள் அடிக்கடி செல்லும் இணைய தளங்கள் நம்பிக்கையானவை என்றால், செக்யூரிட்டி நிலை குறைவாக இருப்பதனையே விரும்புவீர்கள். இவற்றின் இணைய முகவரிகளை Trusted sites என்பதில் இணைத்து, இவற்றுக்கு மட்டும் security levelஐ மத்திமமான நிலையில் வைத்துக் கொள்ளலாம்.


4. நம்பிக்கையான தளங்களுக்கு வேறு பிரவுசர்: உலக அளவில் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசராக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உள்ளது. இதனால் தான், ஹேக்கர்கள், இதனையே குறி வைத்துத் தங்கள் தீய வேலையை மேற்கொள்கின்றனர். மேலும், பல நிறுவனங்கள் தங்கள் இணைய பயன்பாட்டிற்கு இதனையே தரப்படுத்தப்பட்ட பிரவுசராக அமைத்துக் கொண்டு, தங்கள் நிறுவனத்திற்கான இணைய தளங்களை அமைக்கின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தொடர்ந்து அப்டேட் செய்தாலும், பாதிக்கப்படும் அபாயம் இருந்து கொண்டே தான் உள்ளது. எனவே, நம்பிக்கையான இணைய தளங்களை அணுகுவதற்கு நாம் வேறு பிரவுசர்களைப் பயன் படுத்தலாம். இது அதிகம் பயன்படுத்தப்படாத பிரவுசராக இருந்தால், பாதுகாப்பு இன்னும் அதிகமாகும். அத்தகைய பிரவுசர்கள் இணையத்தில் இலவசமாக அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன.


5.ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்துக: நம் கம்ப்யூட்டரை மொத்தமாகப் பாதுகாக்க, ஏதேனும் ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தியே ஆக வேண்டும். இதனையும் அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒன்றின் வழியாகத்தான், அனைத்து மால்வேர் புரோகிராம்களும் வரும் என்பதில்லை. வேறு எந்த புரோகிராம் வழியாகவும், துணை சாதனங்கள் வழியாகவும், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் பரவ அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்துவது ஓர் அடிப்படைத் தேவையாக உள்ளது.
 
back to top