.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, December 6, 2013

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்??



கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி. பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.


தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதை தாங்காத முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும். பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.


ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும்.


கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.

அன்றுபோல் இன்று இல்லையே!

 

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ உண்மை
 மட்டுமே
 பேசிக் கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ நல்லதை
 மட்டுமே
 எண்ணிக் கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ சொந்தங்களோடு
 சேர்ந்து
 வாழ்ந்து கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ உள்ளூரிலே
 உல்லாசமாய்
 உலா வந்து கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
எதிலும் நீ
 போட்டிகளின்றி எளிதில்
 வெற்றிகள் பெற்று கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ கல்வியறிவின்றி
 கலைகள் பல
 கற்றுக் கொண்டிருக்க!
அன்று போல்
 இன்று இல்லையே…
எதையும் நீ
 முழுமையாக நம்பி
 ஏற்றுக் கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ நல்லவனாக
 மட்டுமேயிருந்து
 வழிகாட்டி கொண்டிருக்க!

அன்று போல்
 இன்று இல்லையே…
நீ வல்லவனாகவும்
 இருந்தாக வேண்டும்
 உன் வாழ்வதனை
 தக்கவைத்துக் கொண்டிருக்க!

குளிர்கால ஆலோசனைகள்!

* காய்கறிகளை சூப்பாகத் தயார் செய்து அருந்துவது
 குளிர் காலத்திற்கு பொருத்தமானது.


* வெங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவற்றை
 உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் குளிர்கால
 நோய்கள் ஏற்படாது.


* ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட் போன்றவற்றில்
 ஏதாவது ஒன்றை தினசரி பச்சையாகச் சாப்பிட்டு வர
 குளிரால் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகள் மாறும்.


 * குளிர்காலத்தில் சளியைக் கூட்டும் மற்றும் உடம்பில்
 குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கிவிட
 வேண்டும். அதிக இனிப்புகளைத் தவிர்த்துவிட வேண்டும்.
சற்று காரமான உணவு வகைகளை உண்ணலாம்.
கிரீம் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.


* குளிர்காலத்தில் சிலருக்கு மூக்கில் நீர் ஒழுகிக் கொண்டே
 இருக்கும். இதற்கு ஓமத்தை சிறிதளவு எடுத்து ஒரு
 வெள்ளைத் துணியில் முடிந்துகொண்டு உறிஞ்சி வர
 மூக்கு நீர் நிற்கும். தலைபாரம், ஜலதோஷம் மாறும்.


* குளிர்பானங்கள், தயிர், மோர் போன்றவற்றை அருந்த
 வேண்டியதற்கு மாறாக இளஞ்சூடான பானங்கள்,
தேயிலை போன்றவற்றை அருந்துதல் நல்லது.


* இரவில் தூங்கப் போகும் முன் கோல்டு கிரீமை
 தடவலாம். உதடு வெடிப்பைத் தவிர்க்க வெண்ணெய்
 அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசலாம்.


 * காபி, டீ, பால் இவற்றில் இஞ்சி சேர்த்தல் நல்லது.
இது தொண்டை சம்பந்தமான பிரச்னையைத் தீர்க்கும்.


* மழைக்காலத்தில் தோல் செருப்பு, கவர் ஷுக்களைப்
 பயன்படுத்தாமல் ரப்பர் செருப்புகளையே அணியவும்.


 * அதிக சூடான நீரில் குளித்தால் சருமத்தின் இயற்கையான
 எண்ணெய் பசை மாறிவிடும். எனவே இளஞ்சூடான நீரில்
 குளித்தலே நல்லது.


* குளிர்காலத்தில் இரவு கால்களில் சாக்ஸ் மாட்டிக்
 கொண்டால் நல்லது. வயதானவர்களுக்கு அதிக குளிர்
 தாக்காது.

"சார்லி சாப்ளின்" ஹைக்கூ பார்வையில்!

யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது, உயவர்வானது...! தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு, தன் கணவனை விட, பிள்ளைகளின் மீது உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.

 ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார். முழுப்பெயர் 'சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்'. லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா. இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி. ஒரு நாள் மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்னை; பாட முடியவில்லை! ஒரே கூச்சல்! அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள், ஹென்னா. ஆறு வயது சிறுவன் சார்லி என்ன நினைத்தானோ மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது! தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான். விசில், கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது! சில்லறைகள் சீறிப் பறந்தன. சில்லறைகளை பொறுக்கினான், சார்லி. பாடச் சொல்லி கூச்சலிட்டது கூட்டம்!

'சில்லறைகளை பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்; ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!' மீண்டும் கொல்லென்று எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது! தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி... மேடைப்பாடல், துணி தைத்து கொடுப்பது என்று வந்த வருமானம் போதுமானதாக இல்லை! பசிக்கு முன்னால் மூவரும் தோற்றுப்போனார்கள். வேறு வழியில்லாமல் ஹென்னா சார்லியின் அப்பா மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாள், தீர்ப்பு இழுத்தது. தன் பிள்ளைகள் இங்காவது வசதியாகப் படிக்கட்டும் என்று மூவரையும் அநாதை விடுதி ஒன்றில் சேர்த்தாள். தனித் தனியாக பிரிக்கப்பட்டார்கள். காலக்கொடுமை! அதனால்தானோ என்னவோ ஹென்னாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

சார்லி, ஸிட்னியையும் சார்லியின் அப்பா தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பா தன் இன்னொரு மனைவி லூஸி வீட்டுக்கு கூட்டிப்போனார். அங்கேயும் பசி சார்லி, சிட்னியையும் வீதிக்குத் துரத்தி சிரித்தது. 'அம்மா, அம்மா' என்று கதறி அழுதான் சார்லி. அங்கே அவனுக்கு அழுகையைத் தவிர ஆறுதல் சொல்ல யாரும் இல்லை! ஒரு நாள் வீட்டு வாசலில் அந்த அதிசயம் நடந்தது! அம்மா ஹென்னா வந்திருந்தாள்!! சார்லி, சிட்னி ஓடிப்போய் ஒட்டிக்கொண்டார்கள்! மீண்டும் மூன்று உயிர்களும் ஓர் உயிரானது.

சாப்ளின் அப்பாவிடம் இருந்து கொஞ்சம் பணம் வந்தது. பள்ளிப் படிப்பு தடையில்லாமல் தொடர்ந்தது. பள்ளிகளில் நடக்கும் நாடகம், நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரை சார்லி சம்பாதிக்கத் தவறவில்லை! அவன் சார்ந்த நடன, நாடகக்குழு அமெரிக்காவிற்குப் போகும் சந்தர்ப்பம் வந்தது. அங்கு போன சாப்ளின் அமெரிக்க சுதந்திரதேவி சிலை நோக்கி தன்னை மறந்து கத்தினான் 'ஏய்! அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான் வந்து கொண்டிருக்கிறான்!' என்று. அடுத்த அய்ந்தாண்டுகளில் அதுதான் நடந்தது. உலகத்தையே கொள்ளையடித்தான், சாப்ளின்.

தன் முதல் காதலி ஹெட்டியை சார்லியின் ஏழ்மையைக் காட்டி பிரித்தான், அவளின் அண்ணன். அந்தத் தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்தது! பிற்பாடு அவர் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணற்ற திருப்தியற்ற திருமண வாழ்க்கைகளுக்கும் அதுவே காரணமாக அமைந்தது. தன்னை துன்புறுத்தும் ஹெட்டியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க, பொய்யாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு... தீவிர வாசிப்பை மேற்கொண்டார். தனக்கான சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட கால கட்டம் அது! முதல் படம் newspaper reporter. ஒரு நாள் ஏதாவது நடித்துக்காட்டு என்று நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்துச் சொன்னார் சென்னட் என்னும் தயாரிப்பாளர். அவர் சைசுக்கு உடைகள் இல்லை என்பதால், பெரிய சைஸ் தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை, ஷு, தொப்பி, கைத்தடி. இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளினின் உருவ முத்திரை!

இந்த உருவ முத்திரை பதித்த பொருட்கள் இன்றும் கூட விற்று தீர்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது! அப்படியே மேடையேறி நடித்துக் காட்ட சிரிப்பால் மேடை அதிர்ந்து அடங்கியது! என்னிடம் கதை ஒன்று இருக்கிறது, நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன் என்றார் சென்னடிடம் சார்லி. முதலில் ஒத்துக்கொள்ளாத சென்னட், மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை மனதில் கொண்டு ஒரு நிபந்தனை விதித்தார். "அந்த படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பு செலவு அனைத்தையும் வட்டியும் முதலுமாக நீங்கள் திருப்பித் தரவேண்டும் சம்மதமா?" என்று கேட்டார். அதற்கு சாப்ளின் சொன்னார் "முழுப்பணத்தையும் திருப்பித் தருவேன். அந்தப் படம் தோல்வியடைந்தால், நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்" என்று அப்படி இயக்கி வெளிவந்த முதல் வெற்றிப்படம் caught in the rain.

ஒரு முறை சாப்ளின் படப்பிடிப்பு முடிந்து நியூயார்க் நோக்கிப் போன தகவல் எப்படியோ தெரிய வர... மலர்கொத்துக்கள், பேண்டு வாத்தியங்கள், உயரமான கம்பம், மரங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம்! பசியும், அவமானங்களும் இதற்கு தானா? நம் வாழ்க்கை மனிதகுலம் பயனுறும் காவியமாக வேண்டாமா? யோசிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவிற்கு குடியேற வரும் மனிதர்களிடம் அரசு நடத்தும் கெடுபிடிகளை கடுமையாகச் சாடி the immigrant படம் வெளியானது. அமெரிக்க பிணந்தின்னும் கண் சார்லியை கண்காணிக்க உத்தரவு போட்டது, இப்படித்தான்! சார்லி ஏழைகளைப் பற்றியே படம் எடுத்ததால், பணக்காரர்கள் எதிரிகளானர்கள். வேறு வழியில்லாமல் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டியதாயிற்று!

இக்கால கட்டத்தில்தான் தன் காதலி ஹெட்டியைப் போலவே இருக்கிறாள் என்று மில்ட்ரெட் ஹாரிஸ் என்பவளை திருமணம் செய்து கொண்டார். ஆண் குழந்தை பிறந்து இறந்தது, அவன் நினைவாக தயாரான படந்தான் the kid. லிட்டா கிரே, பவுலட் கோடர்ட், ஊநா ஓ நீல் போன்றவர்கள் மேல் காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும் துன்பியல் வரலாறு! அவர்கள் அனைவரும் தோற்றத்தில் ஹெட்டியைப் போலவே இருந்தார்கள் என்பது இன்னொரு அதிசய தகவல்! புகழின் உச்சியில் இருந்த நேரம்.. "என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ஹெட்டி! நான் ஒரு முட்டாள், அபாக்கியசாலி. நீங்கள் எவ்வளவு உயரமானவர் என்பதை உங்கள் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். கடைசியாக உங்களின் கைகளைப் பிடித்து கதறி அழு வேண்டும். என் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்!" என்ற கடிதம் படித்து தான் பார்த்த எல்லா வேலைகளையும் ரத்து செய்தை விட்டு லண்டனுக்குப் பயணமானர் சாப்ளின்.

பஞ்சையாய், பராரியாய், பிச்சைக்காரனாய் துரத்தியடித்த அதே லண்டன் தெருக்கள் வெட்கமே இல்லாமல் விழாக்கோலம் பூண்டது சார்லியை வரவேற்க; வெறி பிடித்த மக்கள் வெள்ளம்! இந்த தடவையும் ஹெட்டி ஏமாற்றித் தான் போயிருந்தாள்! அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது! அவளின் நினைவாக கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சார்லி இந்த இடி செய்தி கேட்டு இன்னும் ஒரு முறை செத்துப் போனார்! கடவுளைப் போலவே காதலும் சரியாக புரிபடாமலேயே இந்த பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது! ஓவென கதறி அழக்கூட முடியவில்லை. அவ்வளவு மக்கள் வெள்ளம்! நடு இரவில் முகத்தை மப்ளர் கொண்டு மூடி, பசியால் கதறி அழுது சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறைப் போய் மவுனமாக அழுது விட்டு வந்தான், அந்த மகா கலைஞன்! கூடவே தன் தாயின் மரணமும் சுனாமியாக வந்து தாக்கியது, "இந்த தோற்கும் அன்பு அவளுடையது! அவளது தியாகம், திறமைகள், அவள் பட்ட வேதனைகளுக்கு முன்னால் நானும் என் படங்களும் அவளின் கால் தூசுக்குச் சமம்!" என்று சாப்ளின் நெஞ்சு வெடிக்க கதறி அழதார்!

சினிமா பேச தொடங்கிய போதும் கூட பேசாத படங்களையே எடுத்தார்! தான் எடுக்கும் பேசாத படம் மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு எடுக்கப்பட்ட படந்தான் city lights. எதிரிகள் சதி செய்ததால் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்த படம்! இந்தியாவிலிருந்து வரும் காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்! உலகம் இயந்திரமாகி வருவதையும், மனித பண்புகள் நசுக்கப்படுவது பற்றியும் சாடி வந்த modern times வெளி வந்த பிறகு மனித குலத்தை மேம்படுத்த வந்தவனை சரியாகத் தான் அடையாளப்படுத்தியது அல்ப புத்தி அமெரிக்க அரசு "கம்யூனிஸ்ட்!" என்று. அமெரிக்க அரசு லண்டனுக்குப் புறப்பட்ட சார்லியிடம் தெரிவித்து, "உங்கள் சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்!" ஸ்விட்சர்லாந்து குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார். 1972 ஆம் வருடம் கலையுலகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது! 1977இல் ஒரு கிறிஸ்துமஸ் நாளில்.... எல்லோரையும் கண்ணீர் வர சிரிக்க வைத்த அந்த மகா கலைஞனின் மரணம் முதன்முறையாக அழவைத்தது!

குழந்தை!



* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.


* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.


* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.


* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.


* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.


* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.


* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.


* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.


* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.


* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.


** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.

ரிமோட் கண்ட்ரோல் எப்படிச் செயல்படுகிறது!


   
நீங்கள் தினசரி சாதாரணமாகத் தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்துகிaர்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று தெரியுமா?

ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு, ஒரு தொடர்பு ஆகும். அதில் மூன்று விஷயங்கள் முக்கியமாக அடங்கி இருக்கின்றன.

1. டிரான்ஸ் மிட்டர்

2. சிக்னல்

3. ரிசீவர்

தொலைக்காட்சிக்கான ரிமோட் கண்ட்ரோல் அமைப்பை பொறுத்த வரை, நீங்கள் டிரான்ஸ் மிட்டர் என்று சிறு உபகரணத்தைக் கொண்டு டிவியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்கிறீர்கள். டிரான்ஸ்மிட்டரின் ஒவ்வொரு பட்டனையும் நீங்கள் அழுத்தும் போது அதிலிருந்து ஒரு சிக்னல் டிவியை நோக்கிச் செலுத்தப்படுகிறது. அந்த சிக்னல் டி.வி. பெட்டியில் பெறப்படுகிறது. பின்னர் உங்களின் உத்தரவுக்கு ஏற்ப மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

சிக்னல் என்றால் என்னவென்று அறிவோம். பல்வேறு வகையான ரிமோட் கண்ட்ரோல் அமைப்புகளுக்கு ஏற்ப சிக்னல் வேறுபடுகிறது. டிவியை பொறுத்த வரை அகச்சிவப்புக் கதிரானது சிக்கலாகப் பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் கண்ட்ரோல் பொம்மைகள் போன்றவற்றில் சிக்கலானது சோனிக் அல்லது அல்ட்ரோசோனிக் அலைகளாக இருக்கும்.

ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு செயல்படும் தூரம் அதிகமாக இருக்க வேண்டிவரும் போது சக்தி வாய்ந்த ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா தொலைக்கட்டுப்பாட்டு விமானங்கள், விண்கலன்கள் ஆகியவற்றில் அந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

டிவி ரிமோட் கண்ட்ரோல் அமைப்பில் ஒவ்வொரு பொத்தானுக்கும் வெவ்வேறு பணி இருக்கிறது. ஒரு பொத்தான் பிரகாசத்தைக் கூட்டும் என்றால் மற்றொரு பொத்தான், பிரகாசத்தைக் குறைக்கும். ஒரு பொத்தான், ஒலியைக் கூட்டினால், மற்றொரு பொத்தான் அதைக் குறைக்கும்.

இவற்றைப் போல வண்ணம், சேனல்களுக்கு என்று பல்வேறு பொத்தான்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒவ்வொரு பொத்தானும் அழுத்தப்படும் போது அது குறிப்பிட்ட அலைநீளத்தில் ஒரு அலையையோ சிக்னலையோ அனுப்புகிறது. ஒவ்வொரு சிக்னலும் டிவியில் உள்ள ரிசீவரால் வெவ்வேறு விதமாகப் பெறப்படுகின்றன. ரிசீவரானது குறிப்பிட்ட கட்டளையை அதைக் கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட பகுதிக்குப் பிரித்து அனுப்புகிறது.

ஆக கண்ணுக்குத் தெரியாத சிக்னல்கள் மூலம் உங்களால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே டிவியை இயக்க முடிகிறது.

ஆபிரகாம் லிங்கன் - ஜான் எப். கென்னடி!

ஆபிரகாம் லிங்கன் - ஜான் எப். கென்னடி ஒற்றுமைகள்

அமெரிக்காவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஆச்சரியப்படும் வகையில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன.

லிங்கனின் மகன்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு, எட்வர்டு மூன்று வயதில் இறந்து போனார், ராபர்ட் உயிரோடு வாழ்ந்தார்.

ஜான் எப், கென்னடியின் சகோதர்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு ராபர்ட் கொல்லப்பட்டார், எட்வர்டு உயிரோடு வாழ்ந்தார்.

இரண்டு ஜனாதிபதிகளுமே தங்கள் மனைவியருடன் இருக்கும் போதுதான் கொல்லப்பட்டார்கள். இருவருக்கும் பின் தலையில்தான் குண்டடிபட்டது. இருவருமே வெள்ளிக்கிழமையன்றுதான் சுடப்பட்டார்கள்.

லிங்கனைக் கொன்ற ஜான் வில்கிஸ் பூத், கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருமே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், இருபது முதல் முப்பது வயதிற்குள் இருந்தவர்கள்.

லிங்கன் தியேட்டரில் உட்கார்ந்திருக்கும் போது அவரைச் சுட்ட பூத் பண்டக சாலை (வேர் ஹவுஸ்) யில் பதுங்கியிருக்கையில் பிடிபட்டான். கென்னடி பண்டக சாலையில் இருக்கும்போது அவரைச் சுட்ட ஆஸ்வால்ட் தியேட்டரில் பதுங்கியிருக்கும்போது பிடிபட்டான்.

லிங்கன் 1860-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். கென்னடி 1960ல் பதவியேற்றார்.

லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி, கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.

மேரி லிங்கனும், ஜாக்கி கென்னடியும் வெள்ளை மாளிகையில் வாழ்ந்த காலத்தில் தான் தங்கள் மகன்களை மரணத்திற்கு பரிசளித்தார்கள்.

லிங்கனை அடுத்து பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் 1808-ல் பிறந்தவர். கென்னடியை அடுத்துப் பதவியேற்ற லிண்டன் ஜான்சன் 1908-ல் பிறந்தவர். இவர்கள் இருவருமே அமெரிக்க செனட்டில் பதவி வகித்தவர்கள்.

கென்னடி-லிங்கன்- பெயரில் ஏழு எழுத்துக்கள். அவர்களை அடுத்துப் பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் - லிண்டன் ஜான்சன் இருவரின் பெயரில் 13 எழுத்துக்கள் இருக்கும்.

கென்னடி - லிங்கனை கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத் - லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருக்கும் பெயரில் 15 எழுத்துக்கள்.

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு! ! ! !



தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்....

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங்கள் பெட்ரோல் போட்டுக்கொள்கிறீர்களா...?

உங்களுக்கான எச்சரிக்கை இது...

நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்...

இது போன்ற இடங்களில் மீட்டர் பெட்ரோல் நிரப்பும் நாசில் மீது இருக்கும்...

பெட்ரோல் நிரப்பும் நபர் உங்களிடம் எவ்வளவு என்று கேட்பார்...

நீங்கள் 100.00 ரூபாய் அல்லது 200.00 ரூபாய் என்று கூறுவீர்கள்...

மீட்டரில் இரண்டு வரிசைகளில் எண்கள் ஓடும்...

முதலில் உள்ளது லிட்டர் அளவு...

அதற்குக் கீழே உள்ளது தொகை...

பெட்ரோல் நிரப்பத் தொடங்குகையில் 0.0000 என்று இரண்டு வரிசைகளிலும் இருக்கும்...

நீங்கள் நூறு ரூபாய் என்று கூறினால்
பெட்ரோல் நிரப்பத் தொடங்கியதும்
லிட்டர் அளவு வருமிடத்தில் 1.0000 என்று வந்ததும் பெட்ரோல் நிரப்பும் நபர் நிறுத்தி விடுவார்...

நமக்கு அது ஒரு லிட்டர் என்பது தெரியாமல் நகர்ந்துவிடுவோம்...

அவ்வளவுதான் 100.00 ரூபாய்க்கு 30.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்பட்டுவிட்டது...

200.00 ரூபாய்க்கு 60.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்படும்...

நீங்கள் கூறும் 100.00-இன் மடங்குகளுக்கு ஏற்ப நீங்கள் ஏமாறும் தொகை 30.00-இன் மடங்குகளில் அதிகரிக்கும்...

ஏற்கனவே பெட்ரோல் விலை சுமை போதாதென்று இது வேறு...

சென்னையில் உள்ள நண்பர்கள் (குறிப்பாக பத்திரிகை நண்பர்கள்)யாரேனும் டெமோ பார்க்க ஆசைப்பட்டால்...

சென்னை, ஈக்காடுதாங்கல்,ஐ சி ஐ சிஐ வங்கிக்கு (ICICI BANK ) அருகில்,
VIRTUSA TOWER -க்கு எதிரில் (காசி தியேட்டர் பாலம் அருகில்) உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுங்கள்...

இன்று நண்பரும் நானும் அனுபவப்பூர்வமாகஇதனை உணர்ந்தோம்...

உரிமையுடன் கேட்டு மீதத்தொகைக்கு பெட்ரோல் வாங்கினோம் ...

மேலும் யாரும் ஏமாறாமல் இருப்பதற்கு...

என் சவ அடக்கத்தில் ... - மார்ட்டின் லூதர்!

தன் சவ அடக்கத்தின்போது என்ன பேச வேண்டும் என்பதை மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு கூறியுள்ளார்.


“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? இன்று காலை அதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.


உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.


பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.


அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.


அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.


மனித குலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவன் நானென்று அந்த நாளில் என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும். நீதிக்காகத் தமுக்கடித்தவன் நானென்று தாராளமாகச் சொல்லுங்கள். உலக அமைதிக்காக தமுக்கடித்தவன் நானென்று சொல்லுங்கள்.”

காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.....



* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.



* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்



* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்



* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.



* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.



* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்



* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்



* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.



* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.



* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.



* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.



* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.



* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.



* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.



* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

காதலர்களுக்கு, நோ ஐஸ்கிரீம்!



அண்மையில், என் நண்பரோடு கோவையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன். இரண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி திரும்பும் போது, அக்கடையில், "இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை...' என, பெரிய போர்டு இருந்தது. ஆச்சரியமடைந்து, அந்த போர்டு பற்றி கடைக்காரரிடம் கேட்டேன். "அதை ஏன் சார் கேட்கறீங்க... முளைச்சு மூணு இலை விடாத, ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கற பசங்க, இங்கே ஜோடி ஜோடியா வர்றாங்க. ஒரு சின்ன கப் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, இங்கேயே இரண்டு மணி நேரம், டேரா போட்டு அரட்டை அடிக்கிறாங்க. அரட்டை அடிச்சாலும் பரவாயில்லை. ஒருத்தர் தொடையில் ஒருத்தர் கை போடறதும், முத்தம் கொடுக்கறதும், ஊட்டி விடறதும்... பார்க்க சகிக்கலே.


"ஆம்பளை பசங்க அடங்கி போனாலும், இந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும், தாராளமா இடம் கொடுக்கறாங்க. இவங்களை பார்த்து, மற்ற பெண்களும், குடும்பத்தோடு வருவோரும் கடைக்கு உள்ளே வர தயங்கறாங்க. இவ்வளவு, வெட்ட வெளிச்சத்திலும், இந்த இளசுகள் யாரையும் மதிக்காம, கொஞ்சம் கூட பயப்படாம, ரொம்ப மோசமா நடந்துக்கறாங்க. அதனால தான், "காதலர்களுக்கு அனுமதி இல்லை'ன்னு போர்டு வச்சுட்டேன். ஆளுங்களை பார்த்த உடனே, கண்டுபிடிச்சு, திருப்பி அனுப்பி விடுவேன். அவுங்களால வர்ற வியாபாரமும், பணமும் எனக்கு முக்கியமில்லை. ஒழுக்கம் தான் முக்கியம்...' என்றாரே பார்க்கலாம்.


பள்ளி, கல்லூரி காதல் ஜோடிகளே... என்னதான் வயதுக் கோளாறு இருந்தாலும், பொது இடங்களில் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கலாமா? உங்கள் வாழ்வில் அதற்கு என்று ஒரு நேரம், காலம் உண்டு. அப்போது காட்டுங்க உங்க வித்தைகளை. அதுவரை, எல்லாவற்றையும் கொஞ்சம் அடக்கி வாசிக்க கற்றுக் கொள்ளுங்களேன்.

மண்டேலா என்ற மாணிக்கம் - சிறப்புக்கட்டுரை!



நெல்சன் மண்டேலா... ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் 'நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.

ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.

ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற மண்டேலா, படிப்பில் சுட்டியாக இருந்தார்.

ஜோன்கின்தபா இவருக்கும் இவரின் தம்பிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதை விரும்பாத நெல்சன் மண்டேலா, வீட்டைவிட்டு ஓடிப்போய் சுரங்கத்தில் காவலாளியாகவும் தோட்டக்காரராகவும் வேலைபார்த்தார்.

நெல்சன் மண்டேலா, கல்லூரிக் காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணுவப் பிரிவை உருவாக்கினார். கல்லூரியில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, ஆயுதக் கலகம் விளைவிக்க முயன்றார். அதனால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார்.

  ஒரு வழியாக சட்டம் பயின்று முடித்தார். அப்போது கறுப்பின மக்களை அடக்கி ஆளும் தேசியக் கட்சி, தேர்தலில் வென்றதால், பல்வேறு போராட்டங்களில் கல்லூரித் தோழர்களுடன் ஈடுபட்டார்.  இலவசமாக சட்ட மையம் ஒன்றை ஆரம்பித்து, ஏழை மற்றும் அப்பாவிக் கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவி செய்தார்.

முதலில் அமைதி வழியில் செயல்பட்ட மண்டேலா, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில்  சுற்றினார். இங்கிலாந்து மக்களைப் ஃபிரான்ஸில் இருந்து காப்பாற்றிய நாயகன் பிம்பெர்னல் போல மாறுவேடம் பூண்டபோது, மக்கள் கறுப்பு பிம்பெர்னல் என அழைத்தனர்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.

இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது,  'மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. 'எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

அரசாங்கத்துடன் நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அனைத்து மக்களும் இணைந்து ஓட்டு அளிக்கும் முறைக்கு ஒப்புக்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆனார்.  இவருக்கு 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ''நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே சமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்'' என்றார் மண்டேலா.

கார் டிரைவர்கள் விவரங்களை போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்ய உத்தரவு!



ஜனவரி 15ஆம் தேதிக்குள் சென்னையில் இயங்கும் வாடகை கார் டிரைவர்கள், புகைப்படம் மற்றும் விவரங்களை போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


வாடகை கார் மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும், அதற்காக வாடகை கார் மற்றும் கால் டாக்சி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கமிஷனர் ஜார்ஜ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதன்பேரில், நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.


இந்த கூட்டத்தில், ''வாடகைகார் மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் போலீஸ் நிலையங்களில் தங்களது புகைப்படம் மற்றும் விவரங்களை தாக்கல் செய்து போலீஸ் நன்னடத்தை சான்றிதழை பெற வேண்டும். புதிதாக வேலைக்கு சேரும் டிரைவர்கள் போலீஸ் சான்றிதழ் கொடுத்தால்தான் வேலைக்கு சேர்க்க வேண்டும். வெளி மாநில டிரைவர்களாக இருந்தாலும் அவர்களது மாநில போலீசில் பெற்ற உரிய சான்றிதழுடன் வந்தால்தான், வேலை கொடுக்க வேண்டும்'' என போலீஸ் தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டன.


இதுகுறித்து வாடகை கார் உரிமையாளர்கள் தரப்பில், ''இந்த திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், சான்றிதழ்களை போலீஸ் நிலையங்களில் காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். வாடகை கார் டிரைவர் மட்டும் அல்லாது, சொந்தமாக கார் வைத்திருப்பவர்களிடம்  டிரைவர்களாக இருப்பவர்களும், போலீஸ் சான்றிதழ் பெறும் திட்டத்தையும் கொண்டு வரவேண்டும்'' என கோரிக்கை விடுக்கப்பட்டது.

உலகின் கவர்ச்சியான ஆசியப் பெண் நடிகை கத்ரினா கைஃப்: 4–வது முறையாக தேர்வு!



பிரபல இந்தி நடிகை கத்ரினா கைஃப். இவரை உலகிலேயே கவர்ச்சியான ஆசிய பெண் என லண்டனில் இருந்து வெளிவரும் வார பத்திரிகை ஒன்று தேர்வு செய்துள்ளது.


நடிகை பிரியங்கா சோப்ரா, டி.வி. நடிகை திரஷ்டிதாமி, தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகள் மாடல் அழகிகள் என 50 பேர் பெயர் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவர்களில் கத்ரினா கைஃப் அதிக வாசகர்கள் ஆதரவுடன் முதல் இடம் பிடித்தார். அவர் இந்தப் பட்டத்தை தொடர்ந்து 4–வது முறையாக தட்டிச் சென்றுள்ளார். கத்ரினா கைஃப் கடந்த ஒரு ஆண்டாக எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. விளம்பர படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.


சமீப காலமாக பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூருடன் கத்ரினா கைஃப் இணைத்து பேசப்பட்டு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் மும்பை சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


கவர்ச்சியான ஆசிய பெண்கள் வரிசையில் நடிகை பிரியங்கா சோப்ரா 2–வது இடத்தையும், டி.வி. நடிகை தாமி 3–வது இடத்தையும் பிடித்தனர். நடிகை தீபிகா படுகோனேக்கு 4–வது இடம்தான் கிடைத்தது.


மற்ற வரிசையில் உள்ள நடிகைகள் விவரம்:– சோனம்கபூர் (5), பரிநீதி சோப்ரா (14), ஷோபிசவுத்ரி (21), மெக்ரன் சயத் (22), சுனிதி சவுகான் (28), அங்கிதா லோகன்டே (29), ஹீனாகான்(31), ஸ்ரேயா கோசல் (43).

மரணத்துக்கு முன் வெளியான மண்டேலா சினிமா படம் வசூலை வாரி குவித்தது!




தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கருப்பர்களின் உரிமைக்காக நிறவெறி போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இயக்குனர் ஆனந்த்சிங் சினிமா படமாக தயாரித்துள்ளார். இதற்காக அவர் நெல்சன் மண்டேலாவுடன் 20 ஆண்டுகள் கழித்துள்ளார்.


சுதந்திரத்துக்காக மண்டேலாவின் நீண்ட பயணம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மண்டேலா மரணம் அடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் ரிலீஸ் ஆனது. இது ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில் வசூலை வாரி குவித்தது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முதல் வாரத்தில் மட்டும் ரூ.2 கோடியே 60 லட்சம் (4 லட்சத்து 23 ஆயிரம் டாலர்) வசூல் ஈட்டியுள்ளது. இந்த படம் பல நாடுகளில் தலைவர்களுக்கு விசேஷமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.


அமெரிக்க அதிபர் பராக் ஓபாமாவுக்கு வெள்ளை மாளிகையில் திரையிடப்பட்டது. லண்டனில் நடந்த சிறப்பு காட்சியில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேத்மிடில்டன், மண்டேலாவின் மகள், ஷிண்ட்ஷி மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர். மண்டேலா மரணம் குறித்து அவரது வாழ்க் கையை சினிமா படமாக எடுத்த ஆனந்த்சிங் கூறும்போது ‘‘நாங்கள் எங்களது தந்தையை இழந்து விட்டோம்’ அவர் உலகின் ‘ஹீரோ’ ஆக திகழ்ந்தார்’’ என தெரிவித்துள்ளார்.

பூமி எப்போது தோன்றியது?

 

வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் "கேலக்ஸி" (Galaxy). இந்த "கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி.

அறிவியலாளர்கள் பல மூலங்களைப் பயன்படுத்தி பூமி தோன்றிய காலத்தை பல வகையாக கணித்திருக்கின்றனர். பெரிய பாறைகள், பூமியில் விழுந்த விண்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு பல ஆய்வுகளை நடத்தி, பூமி இப்பொழுதுதான் தோன்றிய காலைத்தைப் பற்றிய சில முடிவுகளை நமக்குக் கொடுத் திருக்கின்றனர்.

பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானி களின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமை யான பாறையைக் கொண்டு அறிவியலாளர் கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை (Radioactive Decay of Elemets) ஆராய்ந்து, பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணிக்கிட்டிருக்கிறார்கள்.

ஆனால், பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலக் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்த போது, மீண்டும் சூரியக் குடும் பத்தில் பூமியின் வயது 4.6 மில்லியன் என்று கணித் திருக்கின்றனர். விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடைந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான யுகத்திலே, வானியல் நிபுணர்கள் பிரபஞ்சத்தின் வயதைக்கூட கணக்கிட பல்வேறு முறைகளையும் ஆய்வுகளையும் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இருப்பினும் பிரபஞ்சத்தின் உண்மையான வயதை தெரிந்து கொள்ள இன்றும் முடியவில்லை.

பூமிக்கடியில் புதைந்திருக்கும் புராதனப் பாறைகளில் உள்ள மூலங்களின் கதிரியக்கத் தேய்வை கணக்கிட்டு பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டது.

வான்மண்டலத்தில் ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டு பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. இதைத் தவிர, சூரியன் தோற்றுவித்த காலத்தையும் சில ஆய்வுகளின் மூலம் தெளிவு செய்துள்ளனர். சூரிய பரிதியின் பிளாஸ்மா (Plasma) எனப்படும் ஒளிப்பிழம்பின் வெப்பத்தையும், அதன் வாயுக்களையும் கொண்டு செய்த ஓர் ஆய்வில் சூரியன் 10 பில்லியன் வயது கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

பூமி தோன்றிய காலத்தைப் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், குத்துமதிப்பாக பூமி மேற்குறிப்பிட்ட காலத்தில் தோன்றியிருக்கும் என்றுதான் கூறுகின்றன. ஆனால் மனிதன் எப்போது தோன்றினான், அவனின் மொழி எப்படி தோன்றியது என்பதனைப் பற்றிய ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்வதை விடவில்லை. இதற்கும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இறுதியில் இதற்கான பதிலையும் அறிவியலாளர்கள் கணித்தனர். மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தனது இனத்தோடு தொடர்பு கொள்ள தற்போது இருக்கும் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம், கிரேக்கம், அரபு மொழிகள் அல்லது இதர மொழிகளைப் பயன்படுத்தவில்லை. இவைகளெல்லாம் மனிதன் தோற்றுவித்து பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டவை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் சேர்ந்த ஒரு இனமே. ஆறாவது அறிவு எனக்கூறப்படும் பகுத்தறிவு கொண் டவன் என்பதே அவனை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு காட்டுகிறது. விலங்குகள் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை.


ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் அவைகளுக்கு உண்டு. பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களின் ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.


வாய் வழி ஒலி எழுப்பி மற்றவர்களோடு தொடர்பு கொண்ட மனிதன், காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் மனிதன் முதலில் சைகைகளையும், உடல் அசைவுகளையும் மூலமாகக் கொண்டு செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றனர் நம் அறிவியலாளர்கள்.


மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக அங்க அசைவுகள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியது. பிறகு பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்த பின், பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


மேலும் மனிதன் சைகைகளுக்கு வலது கைகளையே அதிகம் பயன்படுத்துகிறான். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்க மூளையில்தான் என்பதன் மூலம் மனித இனத்தின் மொழி சைகைகளில் உருவாகியது என்பதில் சந்தேகமில்லை.

பிரபுதேவாவின் சம்பளம்?

 


பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயனுக்கு மிகவும் முக்கியமான ரோலாம். சிம்பு-நயன் இணைவதால் படத்தின் வியாபாரம் 30 கோடியாம்.போகப் போக இன்னும் பல கோடி எகிறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பாண்டிராஜ்.


ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ஜோத்பூரில் இந்தி 'துப்பாக்கி’ படத்தை இயக்கிவருகிறார்.அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் 90% முடிந்துவிட்டது. ஜனவரியில் விஜய்யுடன் இணைந்து படம்  பண்ண வர்றாராம்.


பிரபுதேவா 2015 வரை பாலிவுட்டில் பிஸி. சாருக்கு சம்பளம் 20 கோடி.


மும்பை பாந்த்ரா பகுதியில் சொந்த வீடு வாங்கி இருக்கிறார் தேவா. சல்மான்கான், அக்ஷய்குமார், சாகித் கபூர், அஜய்தேவ்கன் என எல்லோரும் பிரபுதேவாவின் ரசிகர்கள்.


இங்கேயே இருந்துவிடுங்கள் என்று சொல்வதால், மும்பையிலேயே செட்டில் ஆகிவிடலாம் என்று நினைக்கிறாராம் தேவா

சூரியனைப்பற்றிய அறிய தகவல்!

 

சூரிய நமஸ்காரம்: 

தினமும் காலையில் நீராடிய பின் கிழக்கு திசைநோக்கி சூரியநமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி, அதனைத் தொடர்ந்து காயத்ரீ மந்திரம் ஜபித்தல் ஆகியவை, சூரியனின் ஆற்றலை அதன் கிரணங்களின் மூலம் பெறும் முறைகளாகும். காலை, மாலை வேளைகளில் சூரியனை நோக்கி இருகைகளாலும் நீரை எடுத்து அர்க்யம் விடுவதும் சூரிய தோஷத்திற்கு தகுந்த பரிகாரமாகும். ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய துதிகளைச் சொல்வதால் நம் உடலும், மனமும் சூரிய சக்தியைக் கிரகித்துக் கொள்கின்றன. கிரகணம் பற்றிசுவாமி சிவானந்தர்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதிலிருந்து அமிர்தம் வெளிப் பட்டது.

பகவான் விஷ்ணு ஓர் அழகான மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை மயக்கி, அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்கினார். ஆனால் சுவர்பானு என்ற அசுரன் மட்டும் தேவர்களைப் போல உருவம் தாங்கி வந்தான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் அதை மோகினியிடம் தெரிவித்தனர். உடனே மோகினியாக இருந்த விஷ்ணு அசுரனின் தலையை கொய்து விட்டார். ஆனால், அதற்குள் அமிர்தம் கழுத்துவரை சென்று விட்டதால் அவன் சாகவில்லை. அவனது தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் அழைக்கப்பட்டன. தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரரைப் பழிவாங்கும் விதத்தில் அவ்வப்போது ராகுவும் கேதுவும் சூரியனையும் சந்திரனையும் விழுங்குகின்றனர். வானசாஸ்திரப்படி சூரியன், சந்திரன், பூமி ஒரே கோட்டில் வரும்போது, நடுவில் சந்திரனோ, பூமியோ வரும்போது சூரியசந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. கிரகண காலத்தில் மக்கள் புனிதநதிகளில் நீராடி, பசுக்கள், பணம் மற்றும் தங்கத்தை தானமாக அளிக்க வேண்டும். கிரகணத்திற்கு மறுநாள் ஏழைகள் மற்றும் சாதுக்களுக்கு உணவளிக்க வேண்டும். கிரகணம் முடிந்தபின் வீடுகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கிரகண காலத்தில் ஒருவன் சாப்பிடக்கூடாது. தொடங்கும் நேரத்தில் முன் உண்ட உணவு முழுவதும் ஜீரணமாயிருக்க வேண்டும். கிரகணம் விட்ட பிறகு சூரியனைப் பார்த்தபின்னரே உணவு உட்கொள்ள வேண்டும்.

கிரகணத்தின் போது சூரியனை கர்ப்பமான பெண்கள் பார்க்கவே கூடாது. அவர்கள் பார்த்தால் பிறக்கப்போகும் குழந்தைகள் செவிடு, ஊமை அல்லது குருடாகப் பிறக்கும். இதே காரணத்திற்காகவே கிரகணநேரத்தில் தாம்பத்ய உறவும் கொள்ளுதல் கூடாது. இந்தநேரத்தில் ஒருவர் தேள்கடிக்காமலோ மற்றும் காயத்திலிருந்து ரத்தம் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். இவற்றால் பயங்கரவிளைவு ஏற்படும். கிரகணநேரத்தில் ஒரு மண்புழுகடித்தால் கூட விஷம் இருக்கும். கிரகண நேரத்தில் ஜபம், தியானம் செய்பவர்கள் பெரும் நன்மை அடைவார்கள். இவ்வேளையில் செய்யும் ஜபம், சங்கீர்த்தனம் (இறைவனைக் குறித்த பாடல்கள்) அல்லல்களையும், பீடைகளையும் அகற்றும். தேவர்களின் ஆசி கிடைக்கும். நமது சிற்றறிவினால் பிரபஞ்சத்தில் நிகழும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியாது. எனவே, முனிவர்களின் வார்த்தைகளை நம்புங்கள். உலக வாழ்வு நிலையற்றது என்ற ஆன்மஞானமாகிய நிஜத்தை, அறியாமை மறைக்கிறது. எனினும், இந்தத்திரையாகிய கிரகணம் நிச்சயம் ஒருநாள் அகலும். நீங்கள் உங்கள் இயற்கையான புகழுடன் ஒளிர்வீர்கள். இதுதான் கிரகணத்தின் ஆன்மிகத் தத்துவமாகும்.

யார் இந்த சூரியன்?:


 சூரியனின் பிறப்பு குறித்து இருவேறு கதைகளைப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு தமது உந்திக்கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார். திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள்மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க "ஓம்' என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு. அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை. பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுபடுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு13 மனைவிகள் .அவர்களில் மூத்தமனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதைகள் சொல்லப்படுகின்றன. சூரியன் நவக்கிரகமண்டலத்தின் தலைவனாகத் திகழ்கிறார். இவர் ஏழுகுதிரைகள் பூட்டப்பட்ட, ஒற்றைச் சக்கர ரதத்தில் மேருமலையை வலம் வருகிறார். இவருக்குச் சாரதியாக அருணன் விளங்குகிறார். வைவஸ்தமனு, யமன், அசுவினிதேவர்கள், பிரதவன், ரைவவஸ்தன் என்ற மகன்களும், யமுனை என்ற மகளும் சூரியனுக்கு உள்ளனர். சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார். பிருகுமுனிவர், வால்மீகி, அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் ஆகியோர் சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்கள் என்று ராமாயணமும், மகாபாரதமும் கூறுகின்றன.

சூரியனுக்கு கோயில் : 

ஒரிசாவிலுள்ள கோனார்க்கிலும், தமிழகத்தில் தஞ்சாவூர் அருகிலுள்ள சூரியனார்கோயிலிலும்சூரியனுக்கு கோயில்கள் உள்ளன. முன்னொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவமுனிவர் என்பவர் தவம் செய்து வந்தார். இவர் தம் தவசக்தியால் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களைச் சொல்வார். ஒருநாள், தனக்கே தொழுநோய் வரவிருப்பதை அறிந்தார். நவக்கிரகங்களை நோக்கி வழிபாடு செய்தார். தொழுநோய் ஏற்படாமல் இருக்க கிரகங்கள் வரம் தந்து, அந்த நோயைத் தாங்களே ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். அந்த நோய்நீங்க பூலோகம் சென்று அர்க்கவனம் என்னும் இடத்தில் பிராணேசுவரரைப் பூஜித்தால் விமோசனம் பெறலாம் என்று பிரம்மா அருளினார். அதன்படியே அர்க்கவனமாகிய சூரியனார்கோயிலுக்கு வந்து விரதமிருந்து நவக்கிரகங்கள் நன்னிலை பெற்றனர். தனக்காக நோயை ஏற்றதியாக உள்ளம் படைத்த கிரகங்களுக்கு காலவமுனிவர் கோயில் அமைத்து நன்றிக்கடனைச் செலுத்தினார். இத்தலமே சூரியனார்கோயில் என்று பெயர் பெற்றது.

புதன்கிழமை பிறந்தவரா?:

 கிரகணத்துக்கு முன்னதாக சாப்பிடக்கூடாது என மகான்கள் சொல்கிறார்கள். நாளை அதிகாலையே கிரகணம் நிகழ இருப்பதால், இன்று மாலை 6.40 மணிக்குள் இரவு உணவை முடித்து விடுவது நல்லது. நாளை காலையில் கிரகண நேரத்தில் ஆறு, குளம், கடல்களில் நீராடி முன்னோருக்காக தர்ப்பணம் செய்யலாம். வீட்டில் இருப்பவர்கள் இறைவணக்கப் பாடல்களை கிரகண நேரத்தில் பாடுவதன் மூலம் எவ்வித தோஷமும் இல்லாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். எந்தக்கிழமையில் கிரகணம் நிகழ்கிறதோ, அந்த கிரகணநாளில் பிறந்தவர்கள், கிரகணம் முடிந்த பிறகு நீராடிவிட்டு, கோயில்களுக்குச் சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்வது நல்லது. இதுதவிர புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.


ஆணும் பெண்ணுமான சூரியனின் தேரோட்டி: சூரியனின் தேரோட்டியான அருணன், காஷ்யபருக்கும், விநதைக்கும் பிறந்தவர். காஷ்யபரின் மற்றொரு மனைவியான கத்துரு என்பவளுக்கு முதலில் குழந்தைகள் பிறந்தனர். இதனால், பொறாமை கொண்ட விநதை, ஆத்திரத்தில் தான் அடைகாத்த முட்டையை பருவம் வரும்முன் உடைக்கவே, ஒருகி கால் இல்லாதவனாக அருணன் பிறந்தான். இதனால் ஆத்திரமடைந்த அவன், ""என்னை கால் இல்லாமல் செய்த நீ, கத்ருவுக்கு அடிமையாகி, அதன்பிறகு என் சகோதரன் கருடன் மூலமாக சாபம் நீங்கப்பெறுவாயாக!'' என்று தன் தாய்க்கே சாபம் விடுத்தான். இவன் மீது இரக்கம் கொண்ட சூரியன், தனது சாரதியாக நியமித்துக் கொண்டான். ஒருசமயம் அருணன் இந்திரலோகத்தில் நடந்த கொலுவை வேடிக்கை பார்க்க, பெண் வடிவில் சென்றான். இந்தப் பெண்ணின் பேரழகைக் கண்ட இந்திரன், அவளோடு இணைந்ததால் வாலி பிறந்தான். இதன் காரணமாக இவன் சூரியலோகத்திற்கு தேரோட்ட தாமதமாகச் சென்றான். அருணன் இந்திரலோகத்தில் நடந்ததைச் சொல்லவே, அந்தப் பெண் உருவைப் பார்க்க வேண்டுமென சூரியன் கூறினார். அருணன் மீண்டும் பெண் வடிவம் எடுக்கவே, அவள் மீது ஆசைப்பட்ட சூரியன் அவளுடன் இணைந்ததால் சுக்ரீவன் பிறந்தான். ராமாயணத்தின் இரு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இந்த அருணனே காரணமாகிறான். இவனது மனைவிஸ்யேனி. இவளுக்கு சம்பாதி, ஜடாயு ஆகிய கருட குழந்தைகள் பிறந்தனர்.

விஷப்பூச்சி அருகே செல்லாதீர் : சூரிய கிரகண நேரத்தில் பூச்சிகளுக்கு சக்தி அதிகரிக்கும். இந்நேரத்தில் வீட்டில் திரியும் பூச்சிகள், பல்லிகள், கரப்பான் களை அடிக்கப்போகிறேன் என்று கட்டையுடன் திரியக்கூடாது. கிரகண நேரத்தில் இவை கடித்தாலோ, உடலில் ஊர்ந்தாலோ ஏற்படும் விளைவு கடுமையாக இருக்கும். குறிப்பாக, குழந்தைகளை இந்நேரத்தில் சுவர்களில் இருக்கும் துவாரங்கள் அருகே செல்லவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சூரிய வணக்கப்பாடல் :


ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி!
தவிக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
சூரிய போற்றி சீலமாய் வாழ சீர்அருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி! சுதந்திரா போற்றி!
வீரியா போற்றி! வினைகள் களைவாய்.
சூரிய ஸ்துதி: சூர்யம் சுந்தர லோக நாதம்
அம்ருதம் வேதாந்த சாரம் சிவம்
சுரேஷம், அமலம் லோகைக சித்தஸ்வயம்
இந்திராதித்ய நரதீபம் சுரகுரும்
த்ரைலோக்ய சூடாமணிம்
ப்ரம்ம விஷ்ணு சிவ ஸ்வரூப
ஹ்ருதயம் வந்தே சதா பாஸ்கரம்

சூரியன் உதித்ததும் இந்த ஸ்லோகத்தை
24 தடவை சொல்பவர்களுக்கு நோய்கள் நீங்குவதுடன் செல்வவளம் பெருகும்.

இரவும் பகலும் ஒரே நேரத்தில் அறிய புகைப்படம்!



இந்த புகைப்படம் கொலம்பிய விண்வெளி ஓடத்தின் கடைசி பயணத்தின் போது மேகமூட்டம் இல்லாத ஒரு நாளில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.


சூரியன் மறையும் நேரத்தில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் மேல் இருந்து எடுக்கப் பட்டது.பாதி இரவையும் பாதி பகலையும் மிகத் தெளிவாக இப்படம் பிரதிபலிக்கிறது. ஒரு பாதியில் சூரிய வெளிச்சத்தையும் மறுபாதியில் இரவு விளக்குகளின் ஒளியில் நகரங்கள் மின்னுவதையும் காணலாம்.



இதில் சூரிய ஒளி படும் ஆப்பிரிக்காவின் மேல் பகுதி சஹாரா பாலைவனமாகும். லண்டன்,லிஸ்பன்,மேட்ரிட் போன்ற பகுதிகள் பகலாக இருக்கும் அதே நேரத்தில் ஹொலண்ட், பாரிஸ், பார்சிலோனா போன்ற பகுதிகளில் இரவு விளக்குகள் மின்ன தொடங்கி விட்டன.


அதற்கு மேலே இடது பக்கம் உறைந்து போன க்ரீன்லாந்து தீவையும் காணலாம்.

வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!

 

1. மிகமோசமான தலைவலி:

தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜலதோஷத்தாலும் தலைவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்குகளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான வலிக்கு உடனே மருத்துவப் பசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

2. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி அல்லது சுகவீனம்:


பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான் நினைவுக்கு வரும்.ஆனால் பல வேளைகளில் வலி வருவதில்லை ஒரு மாதியான நெஞ்சடைப்பு போலத்தான் ஹார்ட் அட்டாக் வரும்.இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது போல் உணர்வார்கள்.நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப் பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக கூறுவார்கள். நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள் அல்லது கை வயிறு ஆகியவற்றில் வலி ஏற்பட்டு அதோடு மயக்கம் போல் வந்தால் அது இதயநோயாக இருக்கலாம். அநேக மக்கள் இதை சாதாரண நெஞ்செரிச்சல் என் அலட்சியப்படுத்தி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள். தாமதிக்காமல் மருத்துவ உதவி தேடவும்.

மேற்கண்ட வலியையும் அது உண்டான சூழலையும் பார்க்க வேண்டும். இத்தகைய வலி அதிக உற்சாகம் அல்லது அதிக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படலாம். உதாரணமாக தோட்ட வேலை செய்யும் போது அத்தகைய வலி ஏற்பட்டு, சற்று ரெஸ்ட் எடுத்தவுடன் வலி குறைந்தால் அது ஆஞ்ஜைனாவாக (Angina) இருக்கலாம். சாதாரணமாக குளிர் காலங்களில் இது மோசமாகும்.

3. கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கிடையே வலி.

4. கடுமையான வயிற்று வலி:

வயிற்றிலுள்ள குடல் வால் (appendix) பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பாக்டீயாக்கள் பெருகியிருக்கும்.அந்நிலையில் அதில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இது தான் appendicieis எனப்படுகிறது. மருத்துவரிடம் சென்றால் அதை உடனே சத்திரசிகிச்சை செய்து எடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் இந்த குடல் வால் உடைந்து பக்டீரியாக்கள் மற்ற உள் உறுப்புகளுக்கு பரவி விடும். Gallbladder மற்றும் Cancer பாதிப்புகள் குடல் புண்,குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங் களாலும் வயிற்று வலி வரலாம்.

5. கெண்டைக்கால் வலி:

கெண்டைக்காற் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்.சில வேளை இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பபடுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த இரத்தத் துணுக்குகள் நுரையீரலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

6. கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி:

கால் அல்லது பாதங்களில் நரம்புகள் பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலிஏற்படும். இது நீழிவு நோயின் அடையாளமாக இருக்கலாம்.

7. என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி:

சிலருக்கு மனச்சோர்வு(dippression) காரணமாக உடலின் பல இடங்களில் இன்னதென்று சொல்ல முடியாத கடுமையான வலி உணர்வார்கள். டாக்டர் “ கழுத்து வலிக்கிறது ,கை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது “என்று போவார்கள் ஆனால் மருத்துவர் சோதனை செய்து பார்த்தால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று சொல்வார்கள். கடும் மன உளைச்சலும் மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக இருக்கலாம்.
உரிய நேரத்தில் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளா விட்டால் வாழ்க்கை கசந்து விடும்,அதோடு முளையும் பாதித்து விடும்.

சின்ன வேதனை பெரிய வேதனை என்று பார்க்காமல் எந்த வலி ஏற்பட்டாலும் உடனே அதன் காரணத்தை தெந்து கொள்வது எப்போதும் நல்லது. வலி என்பது உடல் நமக்கு தரும் எச்சரிக்கை மணி. அதை அலட்சியப்படுத்தாமல் விழித்துக் கொண்டால் உயிருக்கு பாதுகாப்பு. வாழ்க நலமுடன்.

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள்!

* காற்றை நீங்கள் கண்ணால் காண முடியவில்லை என்பதால் காற்றே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இறைவனை நேரில் காண முடியாவிட்டால் இறைவனே இல்லை என்றாகிவிடுமா?


* சூரிய ஒளியின் சக்தியை ஒரு பூதக்கண்ணாடி வழியே ஒளிக்கிரணத்தை செலுத்துவதன் மூலம் அறியலாம். மனதை ஒருமுகப்படுத்தினால் தியானத்தில் இறைவனின் ஆற்றல் வெளிப்படும்.


* உங்களுடைய ஆத்மாவைக் காண விரும்பினால் வெளியே தேடக்கூடாது. உள்ளேதான் பார்வையைத் திருப்ப வேண்டும். இறைவனைத் தேடி எத்தனை தூரம் போவீர்கள், அவன் உங்களுக்குள் ஒளிவிடுவதைக் கண்டு கொள்ளாமல்.


* மூன்றாவது மாடியிலுள்ள அலுவலகத்தை அடைவது உங்கள் நோக்கம். அதற்கு லிப்டை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறீர்கள்.


அதுபோல, அரூபமான இறைவனை அடைய உருவங்களையும், பெயரில்லாதவனை அடைய பெயர்களையும் பயன்படுத்துகிறோம்.


* ஒருவர் சரசரவென்று நேரடியாக மரத்தில் ஏறி மாங்காய் பறித்து விடுகிறார். இன்னொருவருக்கு துறட்டு தேவைப்படுகிறது. வேறொருவருக்கு ஏணி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று, ஞானிகள் இறைவனுடன் நேரடித் தொடர்புடையவர்கள்; நாமோ இறைவனை படிப்படியாய் முயன்று அடைகிறவர்கள். அவரவர் பக்குவத்துக்கேற்ப சாதனம் தேவைப்படும்.


* நம் உறவினரின் புகைப்படத்தைப் பார்க்கும் போது, அவரையே நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. ”படத்தை ரொம்ப அருமையா எடுத்திருக்கிறார் போட்டோகிராபர்,” என்போம். அதற்குமேல் போட்டோகிராபரோ, கேமரா நுணுக்கமோ நம் நினைவுக்கு வராது. அதுபோல் தான் இறைவனின் நற்குணங்கள் தெரியும். அவனை ஆராய வேண்டுமென்றால் முடியாது.

நடுவே நதி!

காகிதப் பூவில்
வாசனை…
காதல் கடிதங்கள்!


மழைக்குத்தான் ஒதுங்கினேன்…
ஆனாலும்
மழையைத் தான் ரசித்தேன்!


பூக்கள்
சிரிக்கின்றன…
மலர்வளையத்திலும்!


கூரையில் கரைகிறது
காகம்…
அடுபபில் உறங்குகிறது பூனை!
கூரையில் கரைகிறது
காகம்…
அடுபபில் உறங்குகிறது பூனை!

அக்கரையில் நான்
இக்கரையில் நீ
நடுவே நதி காதலாய்…


கரையில் கால்களை
கழுவச் சொன்னது யார்?
அலைகளே…


நிலாவையே குழந்தைக்கு
சோறாய் ஊட்டினாள்….
வாழ்க்கை அமாவாசை?


ஒருவேளை
சம்மதித்திருப்பாயோ?
சொல்லியிருந்தால்…


எனக்கு விசிறியதில்
உனக்கு வியர்க்கும்
அம்மா…

விஜய் படத்தில் சம்பளம் வாங்காத மோகன்லால்!




நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் ‘ஜில்லா’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். விஜய்யுடன் காஜல் அகர்வால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் , சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது பிற வேலைகள் நடைபெற்று வருகின்றன.


'ஜில்லா' படத்தில் நடித்தற்காக நடிகர் மோகன்லாலுக்கு சம்பளமே கொடுக்கவில்லையாம். ஆனால்,  இப்படத்தின் கேரளா விநியோக உரிமையை மோகன்லால் வாங்கிக் கொண்டாராம்.கேரளா விநியோக உரிமை ரூ.4 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


அப்படிப் பார்த்தால் 'ஜில்லா' படத்திற்காக மோகன்லால் வாங்குகிற சம்பளம் ரூ.4 கோடி என தெரிகிறது. கேரளாவில் விஜய்க்கு தனி மவுசு இருக்கிறது. மோகன்லாலும் படத்தில் இருப்பதால் பல கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!


1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!

தந்தை பெரியார் - பொன்மொழிகள்!

                                           தந்தை பெரியார் - பொன்மொழிகள்


 மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.


பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி


 மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்


 விதியை நம்பி மதியை இழக்காதே.


மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.



மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.


பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.


பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.


பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
 
back to top