.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, May 22, 2013

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் குவாட்ரோ( Samsung Galaxy Grand Quattro ) - சந்தைக்குப் புதுசு





               சாம்சங் நிறுவனத்தின்  புதிய ஸ்மார்ட் ஃபோன் மாடலான கேலக்ஸி கிராண்ட் குவாட்ரோவை (Samsung Galaxy Grand Quattro) நிறுவனம் மும்பையில் அறிமுகம் செய்தது



               4.7 அங்குலம் திரையுடன் கூடிய இது 1.2 ஜிகாஹேர்ட்ஸ் , குவாட்கோர் புராஸஸர் கொண்டு செயல்படுகிறது.  5 எம்.பி. கேமரா, 8 ஜிபி உள் நினைவுத்திறன், 4.1.2 ஜெல்லி பீன் ஆன்டிராய்டு ஆபரேடிங் சிஸ்டம் கொண்டது.







         ரூ. 16,900 விலையுள்ள இந்த மாடலின் சிறப்பு அம்சங்கள் உங்களுக்காக இதோ!


 Table View


Network/Bearer and Wireless Connectivity
2G
850/900/1,800/1,900MHz
3G
900/2,100MHz
Wi-Fi
802.11b/g/n 2.4GHz
Wi-Fi Direct
Yes
Bluetooth Profiles
A2DP, AVRCP, HFP, HSP, OPP, HID, PAN, MAP PBAP
PC Sync.
KIES, KIES Air (Samsung Apps)


OS
Android, 4.1


Display
technology
TFT
Size
11.9cm
Resolution
480 x 800 (WVGA)

Camera
Camera Resolution(Front)
VGA, CMOS
Camera Resolution(Rear)
5.0MP, CMOS
Flash
Flash-LED
Auto Focus
Support

Sensors
Accelerometer, Geo-magnetic, Light Sensor, Proximity Sensor

Physical Specification
Dimension(HxWxD)
133.30 x 70.70 x 9.65mm
Weight
143.9g


Connectors
Earjack
3.5 pixels
External Memory Slot
MicroSD (up to 32GB)
SIM Support
Dual SIM


Battery
Standard Battery
2,000mAh
USB Chargeable
Yes
Talk Time(W-CDMA)
Up to 11 hours
Standby Time(W-CDMA)
Up to 210 hours
 
Location
A-GPS

Services and Applications
ActiveSync
Yes

Audio and Video
Video Format
3GP, AVI, mp4 wmv flv mkv WebM
Audio Format
AAC, AAC+, AMR-NB, AMR-WB, MIDI, MP3, OGG, WAV, WMA


Note:-


http://www.infibeam.com/  Rs. 16,199 ( Use coupon Code " MOBTAB5")

கர்ப்பிணி பெண்கள் நினைத்தால் ஸ்டெம்செல்( STEM CELL ) மூலம் புற்றுநோயாளிகளைக் காப்பாற்றலாம்!







                           ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்தி, தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொது ரத்த வங்கியான ஜீவன் ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு 9 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.



ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன?



                     தொப்புள் கொடியை வெட்டியவுடன் அதிலிருந்து வரும் ரத்தம், பிரத்யேகமான தனித்தன்மையான செல்களால் ஆனது. இதுதவிர தொப்புள் கொடியில் உள்ள திசுக்களிலும் சக்தி வாய்ந்த மெசன்கைமல் (mesenchymal) எனப்படும் செல்கள் உள்ளன. இவையே ஸ்டெம் செல்கள் எனப்படும் மூல செல்கள். 



                     இந்த மூல செல்களில் இருந்துதான், நம் உடல் உருவாகியுள்ளது. உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் உருவாக அடிப்படையானது இந்த மூல செல்கள். தொப்புள் கொடி ரத்த திசுக்களில் உள்ள சக்தி வாய்ந்த செல்களைப் பாதுகாத்து வைத்தால், பின்னாளில், உறுப்புகள் நோய்வாய்ப்படும்போது  இவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.




              இந்தியா முழுவதும் 3 லட்சம் ரத்தப் புற்று நோயாளிகள் உள்ளார்கள் (ஆண்டுதோறும் புதிதாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்). ரத்த சிவப்பணுக்கள் பாதிப்பால் ஏற்படுவது தலஸ்சீமியா. இந்த 2 பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு ஸ்டெம் செல் சிகிச்சை மட்டுமே.




       ஆனால், தற்போது ஸ்டெம் செல்லை இறக்குமதி செய்து, சிகிச்சை செய்துகொள்ள 25 லட்ச ரூபாய் ஆகிறது. இதனால், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், சிகிச்சை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால், இந்த ஏழைகளுக்கு உதவ தமிழக அரசு ஒரு முற்போக்கான நடவடிக்கையை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வரும் ரத்த வங்கியான ஜீவன் வங்கிக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.




           ஒரு தொப்புள் கொடியைப் பெற்று, அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுத்து 24 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். இப்போதைக்கு எங்களிடம் 750 ஸ்டெம் செல்கள்தான் பாதுகாக்க பொருளாதார வசதி உள்ளது. தமிழக அரசின் இந்த நிதி உதவியினால் 2014 ஜூன் மாதத்திற்குள் 7,500 ஸ்டெம் செல்கள் சேமிக்க திட்டமிட்டு உள்ளோம்.



       சேமிக்கப்படும் ஸ்டெம் செல்லில் 75 சதவிகிதத்தை அரசு பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு, ஜீவன் ரத்த வங்கி அளிக்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் மற்றும் தலஸ்சீமியா நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்கள் இலவசமாக வழங்கப்படும்



          மீதி  25 சதவிகிதம் நோயாளியின் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப 5 முதல் 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு,  50 ஆயிரம் ரூபாய் என்கிற கட்டண அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம், ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும்".



  
       ஸ்டெம் செல் கிசிச்சை இலவசமாக மக்களுக்குக் கிடைக்க, ஒரு மாநில அரசு நிதியுதவி செய்வது இந்தியாவில் இதுதான் முதல்முறை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள அரசுகள், இதுபோல நிதியுதவி செய்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் தமிழ்நாடுதான் முதல்.




      ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான  குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் வேஸ்ட் என்று தூக்கிப் போடும் தொப்புள் கொடியை எங்களிடம் கொடுத்தால், இன்னொரு உயிரைக் காப்பாற்ற அதிலுள்ள ஸ்டெம் செல்கள் பயன்படலாம்.



 நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கர்ப்பம் தரித்த 28-ஆவது வாரத்தில் எங்களை தொடர்புகொண்டு பதிவு செய்தால் போதும். மற்ற நடைமுறைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்கிறார், டாக்டர். சீனிவாசன்.


விவரங்களுக்கு : 044 - 28351200, 044 - 28150300 அல்லது http://www.bethecure.in/ (or) srinivasanjeevan.org.





கூடுதல் தகவல்களுக்கு,







Note:- 

உங்களால் முடிந்தவரை அனைவருக்கும் பகிரவும்


தரம் நிறைந்த குறைந்த விலையில்( ரூ.10,000 ) - " 3D ஸ்மார்ட் போன் " வந்தாச்சு!




3 m - Tec - phone
             


                         பொதுவாக சாம்சங், ஆப்பிள்,  எச்.டி.சி.  போன்ற பல்வேறு மிகப் பெரிய நிறுவனங்கள் எக்கச்சக்க விலையில் ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருவது தெரிந்த விஷ்யம்தான்.   அதே சமயம் சில சின்ன நிறுவனங்கள் இது போன்ற படாபடா பிராண்டிங்களின் ஸ்மார்ட் போனுக்கு இணையான சாதனங்களை குறைந்த விலையில் தயாரித்து வருவது தெரியுமா?.


அந்த லிஸ்டில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக மைக்ரோமெக்சை சொல்லலாம். 



                         குறிப்பாக இந்த மைக்ரோமெக்சின் கென்வாஸ் வரிசை ஸ்மார்ட் போன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்கள் வழங்கக் கூடிய அத்தனை வசதியையும் இவையும் வழங்குகின்றன. மேலும் இவற்றின் விலையும் ரொம்ப குறைவானதாகும்.


                        
                            அத்துடன் ஆங்காங்கே சர்வீஸ் செண்டர் வைத்திருப்பதால் இந்த பிராண்டை நம்பி வாங்குபவர்கள் அதிகமாம். பெரும்பாலும் மைக்ரோமெக்ஸ் இந்த ‘விலை குறைவு – தரம் அதிகம்’ (Less Pay – Get More) உத்தியைக் கையாண்டு சந்தையில் குறிப்பிடக்க அளவு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றே சொல்லல்லாம். அப்பேர் பட்ட கம்பெனி தற்போது வழக்கம் போல் குறைந்த விலையில் முப்பரிமாண ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.




                      இதற்கு   Micromax A115 Canvas 3D  என பெயரிடப்பட்டுள்ளது.









                     இதில் முப்பரிமாண திரை மட்டுமன்றி 1 GHz டுவல் கோர் புரசசர், 512 எம்.பி. ரெம் மற்றும் 5 மெகாபிக்ஸல் காமராவினையும் இது கொண்டுள்ளது. இது மட்டுமன்றி அண்ட்ரோய்ட் 4.1.2 ஜெலி பீன் மூலம் இது இயங்குவதுடன் டுவல் சிம் வசதியையும் கொண்டுள்ளது. 




இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனின் விலை இந்திய நாணயப்படி ஜஸ்ட் 10 ஆயிரம் ரூபாயாதான்!.
 
back to top