.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, January 15, 2014

துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்..!



சலவை என்று சொல்லும் போது ஒற்றை எளிய வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் துணியை நீங்களே துவைத்து சலவை செய்யும் போது தான் அந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கஷ்டம் உங்களுக்கு தெரியும். துணியை ஊற வைத்தல், துவைத்தல், உலர்த்துதல், மீண்டும் அதனை பயன்படுத்துவதற்கு தயார் படுத்துதல் என இவை அனைத்துமே சலவையின் அங்கமாகும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், சலவை செய்யும் வேலை பளு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான கரைகளுக்கும் துணிகள் ஆளாகும்.

உங்கள் துணிகளை தொழில் ரீதியான சலவைகாரர்களிடம் கொடுத்தும் கூட சலவை செய்யலாம். ஆனால் அதற்கு அதிக அளவில் செலவாகும். ஏன் நீங்களே எளிய முறைகளை பின்பற்றி சலவை செய்து, சலவை செலவுகளை குறைக்க கூடாது? கண்டிப்பாக இதற்கு சற்று நேரத்தை நீங்கள் செலவு செய்து தான் ஆக வேண்டும். ஆனால் வேலை முடிந்து விட்டால் உங்களை நினைத்து நீங்களே பெருமை அடைவீர்கள். மேலும் உங்கள் துணிகளும் கூட தூய்மையாகவும் நற்பதமாகவும் விளங்கும்.

 துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்..!!!

இந்த மிகப்பெரிய வேலையை செய்து முடிக்க பல வழிகள் இருக்கிறது. உங்கள் தேவைக்கு எது வசதியாக உள்ளதோ அந்த வழிமுறையை நீங்கள் உங்கள் அனுபவத்தில் தேர்ந்தெடுத்து விடலாம். நாங்கள் இங்கே உங்களுக்கு சொல்லப்போவது ஒன்றும் ராக்கெட் செய்யும் வித்தையல்ல. சொல்லப்போனால், எளிய முறையில் சிறப்பாக சலவை செய்ய சில அடிப்படை வழிகளே இவைகள். சிறப்பாக செயல்படாவிட்டால் எளிய முறையை பின்பற்றி பயந்தான் என்ன?

 வாஷிங் மெஷின் (சலவை இயந்திரம்)

சலவை செய்ய சிறந்த வழிகளில் ஒன்றாக விளங்குகிறது வாஷிங் மெஷின். இது உங்கள் நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற டென்ஷன் மற்றும் மன உளைச்சலை நீக்கும். சந்தையில் பல வகையான வாஷிங் மெஷின் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், டாப் லோட், ஃப்ரண்ட் லோட், ஆட்டோமாட்டிக் (தானியங்கி), செமி ஆட்டோமாட்டிக் (பகுதித் தானியங்கி), சிங்கிள் டப் மற்றும் ட்வின் டப்.

 லேபிலை படியுங்கள்

ஆடையை பராமரிக்க அதனுடன் சேர்ந்து வரும் பராமரிப்பு லேபிலை படிக்க தவற விடாதீர்கள். பொக்கிஷமான உங்கள் ஆடைகளை பற்றிய முக்கிய தகவல்களை அது வைத்திருக்கும். உங்கள் ஆடை நல்ல தரத்துடன் நீண்ட நாட்களுக்கு நீடிக்க வேண்டுமானால், அதில் துவைப்பதற்கு கொடுத்திருக்கும் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்றுங்கள். இல்லையென்றால் தவறான தண்ணீர் வெப்ப நிலை அல்லது தவறான சோப்பு தூளால் உங்கள் ஆடைகள் பாழாகி விடும்.

வகைப்படுத்துங்கள்

ஒரு முறை துவைக்கப் போகும் போது அதில் நிறம், துணி வகை மற்றும் பயன்பாட்டு வகை என பல வகையான ஆடைகள் கலந்திருக்கும். உங்கள் சலவையை சுலபமாக்க வேண்டுமானால் உங்கள் ஆடைகளை கண்டிப்பாக வகைப்படுத்த வேண்டும். வெண்ணிற ஆடைகளை பிற நிற ஆடைகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். முக்கியமாகவும் முதன்மையாகவும் கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இது. அதே போல் மென்மையான ஆடைகளை எல்லாம் தனியாக துவைக்க வேண்டும்.

 கறைகள்

 சில நேரங்களில், முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீட்டில், கையாளுவதற்கு கடினமாக இருக்கும் கறைகள் உண்டாகும். உங்கள் சலவையை சுலபமாக்க, கரையை நீக்கும் பொருட்களின் பட்டியலை எப்போதும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பட்டியலில் அடிப்படியான பொருட்களாக வினீகர், பேக்கிங் சோடா அல்லது கறைகளை அகற்ற சந்தையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சுத்தப்படுத்துவதற்கு தேவையான பிற பொருட்கள் கருதப்படுகிறது. கறைகளை நீக்க பல வலைத்தளங்கள் பல விதமான டிப்ஸ்களையும் அளித்து வருகிறது.

 டிடர்ஜெண்ட்

 திரவ வடிவில் இருக்கும் டிடர்ஜெண்டை பயன்படுத்துவது உங்கள் ஆடைகளுக்கு நல்லது. இதனால் ஆடைகளில் சோப்பு தூளின் எச்சம் தேங்குவதில்லை. சலவையை சிறந்த முறையில் செய்ய வேண்டுமானால், நீங்கள் எவ்வளவு ஆடைகளை துவைக்க போகிறீர்களோ அதற்கேற்ப அளவில் டிடர்ஜெண்டை பயன்படுத்துங்கள். டிடர்ஜெண்டை அதிகமாக பயன்படுத்தினால் கூடுதல் சுத்தம் கிடைக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல.

 உலர்த்தி இஸ்திரியிடுதல்

ஆடைகளை வரிசையாக தொங்கப்போட்டு காய வைப்பதே சலவையில் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் ஆற்றலை திறனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஆடைகளையும் நற்பதமாக வைக்கும். இதை செய்த பின்னரும் உங்கள் ஆடைகள் சுருக்கமாக இருந்தால், அவைகளுக்கு இஸ்திரி போடுங்கள். இந்த கட்டத்தில் நீராவி பயன்படுத்த தேவையில்லை என்பதால், இஸ்திரி போடுவதும் சுலமபாக இருக்கும்.

சிறிதளவு உழைப்பு மற்றும் மேற்கூறிய அடிப்படை வழிகளை பின்பற்றினால் துவைப்பதனால் ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சலை தவிர்க்கலாம். சலவையை சுலபமாக்க உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அந்த வழிமுறைகளை பின்பற்றி பயனை அடையுங்கள்.

’அஜித்தின் பெருந்தன்மை’ - வியக்கும் வீரம் படக்குழு..!




            ஸ்டண்ட் சில்வாவிடம் வீரம் திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கியது குறித்து கேட்டபோது “வீரம் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியின் போது ரயிலில் தொங்கியபடியே செய்யவேண்டிய ஆக்‌ஷன் காட்சி ஒன்று இருந்தது.

 அந்த காட்சி ரொம்பவும் ரிஸ்கான காட்சி என்பதால் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படமாக்கலாம் என்று முடிவெடுத்தோம். இதுகுறித்து அஜித் சாரிடம் சொன்னபோது அவர்,

‘எதுக்கு டூப் போட்டு ஷூட் பண்ணனும். டூப் போட்றவரும் மனிதர் தான் நானும் மனிதன் தான். தவறாக ஏதாவது நடந்தால் அவருக்கு உண்டாகும் காயம் தான் எனக்கும் ஏற்படும். அவருக்கு அடிபடலாம் எனக்கு அடிபடக் கூடாதா? இந்த படத்தில் நடிப்பது மூலம் பெயர் கிடைக்கப்போவது எனக்கு தானே தவிர அவருக்கு இல்லை.

 இந்த காட்சியில் நானே நடிக்கிறேன்’ என்று கூறினார். இதைக்கேட்டு யூனிட் முழுவதும் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், ஒரு விதமான பயம் இருந்தது. ஆனால் அந்தக் காட்சி அற்புதமாக வந்திருக்கிறது. அனைவரையும் ஒரே சமமாக மதிக்கும் அஜித் சாரின் பெருந்தன்மையை யூனிட்டே புகழ்ந்தது” என்று கூறினார்.


ஆண்கள் அவசரக் குடுக்கையர்களாம் – பெண்களே எதையும் நன்கு திட்டமிடுவார்களாம்..!




பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் போது அதனை ஆண்களை விட பெண்களே மிகவும் வேகமாக செய்து முடிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது பல வேலைகளை ஒன்றாக கொடுத்து இவற்றை முடியுங்கள் என்று கூறினால், அவற்றை திட்டமிட்டு, எதனை முதல் செய்வது எதனை பின்னர் செய்வது என்று ஒழுங்கு படுத்திச் செய்வதில் ஆண்கள் மிகவும் தாமதமாக இருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த விடயத்தில் இப்போது இரு கேள்விகள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். முதலாவது கேள்வி இது ஏன் என்பதாகும். அடுத்தது எந்த வேலையை கொடுத்தாலும் இந்த நிலைமைதானா அல்லது சில வேலைகளில் மாத்திரந்தான் இந்த நிலைமையா என்பதாகும்.

இதற்கான விடைகளை கண்டுபிடிக்கும் போதுதான் வேலைத்தளங்களை எப்படி ஏற்பாடு செய்வது என்பதில் சரியான திட்டங்களைத் தீட்ட முடியும். பல வேலைகளை ஒன்றாக அடுத்தடுத்து முடிப்பது என்பது வேலைத்தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், அதுதான் எமது வேலை தொடர்ச்சியாக நடப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

முன்னைய ஆய்வுகள்


முன்னர் இந்த விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெவ்வேறான முடிவுகளைத் தந்துள்ளன. சீனாவில் நடந்த ஒரு ஆய்வில் பெண்கள், ஆண்களை விட பல வேலைகளை ஒன்றாக முடிப்பதில் மிகவும் வேகமனவர்கள் என்ற பதில் வந்திருக்கிறது. ஆனால் சுவீடனில் நடந்த ஆய்வில் ஆண்கள்தான் வேகமானவர்கள் என்ற முடிவு வந்திருக்கிறது.

இதற்காக இன்னுமொரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சில அலுவலக வேலைகளை, அதாவது மின்னஞ்சல்களை படிப்பது, அதற்கு பதிலளிப்பது, தொலைபேசிகளுக்கு பதிலளிப்பது, அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்துகொள்வது என பல வேலைகள் இருதரப்பாருக்கும் கொடுக்கப்பட்டது. அதேபோல வீட்டுவேலைகள், அதாவது, சமைப்பது, குழந்தைகளை பார்த்துக்கொள்ளவது, வீட்டு தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் சொல்வது என்று பல வேலைகள் ஒன்றாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஒற்றை வேலையைச் செய்வதில் இருவரும் சமம் இதில் ஒவ்வொரு வேலையாகச் செய்யச் சொன்னால், இரு தரப்பாரும் ஒரே வேகத்திலேயே செய்தார்கள். ஆனால் எல்லா வேலைகளை ஒன்றாகக் கொடுத்த போது, அவற்றை ஒவ்வொன்றாக செய்து முடிப்பதற்கும் ஒரு வேலையில் இருந்து அடுத்த வேலைக்கு மாறும் போதும் இருதரப்பாரும் சிரமப்பட்டார்கள், ஆனாலும் பெண்கள், ஆண்களை விட அவற்றை வேகமாக முடித்தார்கள். இந்த வேறுபாடு மிகவும் சிறியதுதான் என்றாலும், தொடர்ச்சியாக வாரக்கணக்கில் இவற்றைச் செய்யும்போது அது மிகவும் அதிகமாகிவிடும்.

நன்கு திட்டமிடும் பெண்களும் அவசரக்குடுக்கையான ஆண்களும்

அதன் பின்னர் 8 நிமிடத்துக்குள் சில வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டும் என்று இரு தரப்பாருக்கும் கொடுக்கப்பட்டது. உண்மையில் அந்த அனைத்து வேலைகளையும் 8 நிமிடத்தில் முடிக்க முடியாது. இப்போது, வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவற்றை திட்டமிடுவதற்கு நீண்ட நேரத்தை பெண்கள் எடுத்துக்கொண்டார்கள், ஆனால் ஆண்கள் அவசரக் குடுக்கையாக, நிறைய யோசிக்காமல் வேலையில் குதித்துவிட்டார்கள்.

ஆனால் இங்கும் பெண்கள்தான்முன்னணியில் இருந்தார்கள். இதில் இருந்து எந்த அழுத்தமான நிலைமைகளிலும் நின்று நிதானமாகச் சிந்தித்து, திட்டமிட்டு, செயற்படும் திறன் பெண்களுக்கே அதிகம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தார்கள்.

அதுமாத்திரமன்றி ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள், பல வேலைகளை ஒன்றாகக் கையாள்வதில் தாம் உண்மையில் எவ்வளவு திறமையானவர்களோ, அதனைவிட அதிகமாகவே தம்மிடம் திறமை இருப்பதாக அவர்கள் தம்மைப் பற்றி நினைத்துகொள்வதாகவும், ஆனால் பெண்களோ மறுபுறமாக, தமக்கு இந்த விடயங்களில் இருக்கும் உண்மையான திறமையின் அளவை விட குறைவாகவே தமக்கு திறமை இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தம்மிடம் அதிக திறமை இருப்பதாக அளவுக்கு அதிகமாக ஆண்கள் நினைப்பதால்தான் அவர்கள் சிந்திக்காமலேயே வேலையைத் தொடங்கிவிட்டு முடிக்க முடியாமல் தடுமாறுகிறார்களாம்.

என் ’முதல்வன்’ மாதிரி டெல்லி அரசியல் - ஷங்கர்..!

என் ’முதல்வன்’ மாதிரி டெல்லி அரசியல் - ஷங்கர்!



பிரம்மாண்டமான தமிழ்ப்படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் இயக்கிய இந்தியன், முதல்வன், அந்நியன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மக்களின் மத்தியில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

தற்போது பிரம்மாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் ஐ படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ஷங்கர்  நீண்ட நாட்கள் கழித்து தனது ஃபேஸ்புக் சமூகவலைதள அக்கவுண்டில் ப்திவு ஒன்றை போட்டிருக்கிறார்.

 இந்த பதிவில் ஷங்கர் “நான் இங்கு வந்து அதிக நாட்கள் ஆனதற்கு காரணம் வேலைப் பளு தான். 2013-ஆம் வருடம் எனக்கு நல்ல வருடமாக முடிந்திருக்கிறது.

எனது முதல்வன் திரைப்படத்தில் வருவது மாதிரியே டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். விக்ரம், உபன் படேல் நடிக்கும் க்ளைமேக்ஸ் காட்சியை ஒரிசா, விசாகப்பட்டினம் அகிய பகுதிகளில் படமாக்கிவருகிறோம்.

 ஐ படப்பிடிப்பின் கடைசி நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
 

ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறைகின்றது..!



அதிக ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறையக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக ஆண் குழந்தைகளை பெறுவதால் தாய்மார்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

 அந்த ஆய்வில் அதிக ஆண் குழந்தைகள் பெறுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் தாய்மார்கள் விரைவில் வயதானவர்கள் ஆகின்றனராம்.

ஆண் குழந்தைகள் பெறுவதால் தாய்மார்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டீரான் அளவை அதிகரிக்கிறதாம். அதனால் தாய்மார்களின் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களின் உடல் வீக்காகிவிடுகிறதாம்.

இதனால் அதிக ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறையக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் அதிக பெண் குழந்தைகள் பெறுவதால் தாய்மார்களின் ஆயுள் குறைவதில்லையாம்.

பின்லாந்தைச் சேர்ந்த தாய்மார்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கும் எனக்கும் போட்டி..! விஜய் பேச்சு

அஜித்துக்கும் எனக்கும் ஆரோக்கியமான போட்டி உள்ளது...! விஜய் பேச்சு
 
 
 
'ஜில்லா' படம் விஜய் ரசிகர்களை திருத்திபடுத்தியுள்ளது என்றும் விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபத்தையும் கொடுத்து உள்ளது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 இந்த நிகழ்வில் கலந்துகொண்ட விஜய் ஜில்லா படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்றும் ரசிகர்களால் தான் என் படங்களின் வெற்றி சாத்தியமாகிறது என்றும் தெரிவித்தார்.

சமீபகாலமாக பண்டிகை நாளில் ஒரு படம் தான் ரிலீஸ் செய்யவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், இந்த பொங்கலுக்கு வீரம், ஜில்லா என்று இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது. வீரம் வெற்றியடைந்ததாக கேள்விப்பட்டேன். அஜீத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

இதை எங்களுக்குள் இருக்கிற ஆரோக்கியமான போட்டியாகவே நினைக்கிறேன். இதை ஆரோக்கியமான போட்டியாகவே ரசிகர்களும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
 
 
 

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்..!

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்..!!!



ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துவதில் உதடுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய உதடானது ஒருசில பருவக் காலத்தில் அதிகம் வறட்சி அடையும். குறிப்பாக குளிர்காலத்தில் தான் அதிகம் ஏற்படும். இவ்வாறு வறட்சி ஏற்படும் போது உதடுகளைச் சுற்றி வெள்ளையாக இருப்பதோடு, உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, சில சமயங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.

ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை மட்டுமின்றி, உதடுகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், உதடுகள் அதன் இயற்கை அழகை இழந்து அசிங்கமாக காணப்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குளிர்காலத்தில் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் இருக்க எந்த பொருட்களைக் கொண்டு உதடுகளை பராமரித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைக் கொண்டு உதடுகளை பராமரித்து, அழகான உதடுகளைப் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்யாக் எணணெயை தினமும் பலமுறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமல் இருப்பதோடு, உதடுகளின் இயற்கை அழகும் பாதுகாக்கப்படும்.

கற்றாழை

கற்றாழை ஜெல் கூட உதடு வறட்சியைத் தடுக்கும் அருமையான பொருள். எனவே தினமும் உதடுகளுக்கு கற்றாழை ஜெல்லை தடவி வாருங்கள்.
உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

ரோஜாப்பூ

ரோஜாப்பூவில் சிறிது கிளிசரின் சேர்த்து அரைத்து, அதனை உதடுகளுக்கு தினமும் இரவில் தடவி வந்தால், உதடுகளின் நிறம் அதிகரிப்பதோடு, உதடுகளில் ஈரப்பதமும் தக்க வைக்கப்படும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தாலும், உதடுகளின் வறட்சி தடுக்கப்படும். உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகளில் ஈரப்பதை அதிகரிப்பதோடு, உதடுகளும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.

தேன்

தேன் ஒரு அருமையான மாய்ஸ்சுரைசர். எனவே தினமும் தேனைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தால், உதடுகளில் உள்ள வறட்சியுடன், வெடிப்புகள் விரைவில் குணமடைந்து, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயும் அருமையான ஒரு பொருள். ஆகவே இதனையும் உதடுகளுக்கு தடவலாம்.

கிளிசரின்

1 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டனை நீரில் நனைத்து உதடுகளை துடைத்து எடுக்க வேண்டும். இதுவும் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் போன்று இருக்கும்.

க்ரீம் மில்க்

க்ரீம் மில்க்கை உதடுகளுக்கு தடவி வந்தாலும், உதடுகளில் பிரச்சனை ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.


வேஸ்லின் மற்றும் தேன்

வேஸ்லின் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை உதடுகளுக்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுத்தாலும், நல்ல பலன் கிடைக்கும்.

கமலஹாசனுடன் இணையும் கே.பாலசந்தர்...!



கே.பாலசந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் சமீபத்தில் ‘ரெட்டை சுழி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். ‘பொய்’ என்ற படத்திலும் கவுரவ தோற்றத்தில் வந்தார். அடுத்து கமலுடன் நடிக்க இருக்கிறார்.

கமல் நடிக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் முடிவடைந்துள்ளது. இப்படம் ரிலீசானதும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு துவங்குகிறது. இது குறித்து கமலஹாசன் கூறும் போது:

‘நான் நடிக்க உள்ள அடுத்த படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இப்படத்தை இயக்குகிறார். இதில் கே.பாலசந்தரும் என்னுடன் இணைந்து நடிக்கிறார். இதற்காக அவர் தாடி வளர்த்து வருகிறார். ‘விஸ்வரூபம் 2’ படம் ரிலீசானதும் உத்தம வில்லன் படப்பிடிப்பு துவங்கும்’ என்றார்.

வீரம் வசூல் எவ்வளவு..?



அஜித்தின் வீரம் படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.31 கோடி வசூல் செய்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா ஜோடி சேர்ந்த வீரம் படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம் திகதி வெளியானது.

நகரத்து ஹீரோவாக வலம் வந்த அஜித் நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார். படத்திற்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வீரம் வெளியான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. வீரம் படத்திற்கு குட்டீஸ்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

 மேலும் இப்படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ.31 கோடி வசூலித்துள்ளது.

வார இறுதி நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடி வசூலித்துள்ளது.

என்னையும் கொஞ்சம் கவனிங்க... பாஸ்...! லேப்டாப்...!!




லேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..!

கணினி யுகத்தில் நாம் வாழ்கிறோம்.. ஒவ்வொருவரிடத்திலும் மொபைல், கணினி போன்றவைகள் அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும் கணினியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் லேப்டாப்..

லேப்டாப் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்தி வரும் அதே வேளையில் படிக்கும் மாணவர்களுக்காக அரசும் இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது. ஆக, லேப்டாப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது என்பதில் சந்தேகமில்லை..

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் மிக எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்த முடிவதால் மேசைக் கணினிகளில் பயன்பாடு வெகுவாக குறைந்துவருகிறது.. லேப்டாப் பயன்பாடு அதிகரிக்கும் அளவிற்கு அதை பராமரிப்பில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை..

நன்கு பராமரிக்கப்படும் லேப்டாப் விரைவில் பழுதடைவதில்லை.. பராமரிப்பில்லாமல் பயன்படுத்தும் லேப்டாப் விரைவில் பழுதடைந்துவிடும். அவ்வாறு விரைவாக லேப்டாப் பழுதடையாமல் இருக்கச் செய்வதற்கான பயனுள்ள வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.

மடிக்கணினி திரைப் பாதுகாப்பு:

கணினியில் மிக முக்கியமானதொரு பாகம் கணினித் திரைதான்.. அதில் பார்த்துதான் அனைத்தை வேலைகளையும் மேற்கொள்கிறோம். கணினித் திரையை சுத்தமாக வைத்திருக்க மெல்லிய 'சில்க்' துணிகளைப் பயன்படுத்தலாம்.. அல்லது அதற்கென இருக்கும் Screen Cleaning Liqued பயன்படுத்தி காட்டனால் துடைத்தெடுக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை:
கரடு முரடான துணிகளையோ, அல்லது வெறும் கைகளையோ பயனபடுத்தி துடைக்க கூடாது. இதனால் கணினித் திரையில் கீரல் விழும், கைத்தடங்கள் அதில் பதிந்துபோகும். மேலும் அழுத்தமாக துடைப்பதால் கணினித் திரைக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

தூசி மற்றும் ஈரப்பதம்:
பொதுவாகவே அனைத்து கணினிகளும் தூசி மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கபடுகின்றன. குறிப்பாக பயணங்களின்போது லேப்டாப்பை பயன்படுத்தக்கூடிய இடம் நல்ல காற்றோட்டமான சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. அதோடு அங்கு ஈரப்பதம் இல்லாம் சாதாரண சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. தொடர்ந்து ஈரப்பதம் மற்றும் காற்றோட்டமில்லாத இடங்களில் லேப்டாப் கணினியை பயன்படுத்தும்போது அதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஆண்டி வைரஸ் ரொம்ப முக்கியம்:

வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதும் நம் கடமை. பல ஆயிரம் மதிப்பு வாய்ந்த மடிக் கணினியை பாதுகாக்க ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் வாங்குவது தவறில்லை. அதனால் நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்வேர் ஒன்றை வாங்கி இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அவ்வாறு கட்டண வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்தும்பொழுது வைரஸ் தாக்குதல்களிலிருந்து உங்களுடைய லேப்டாப்பிற்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது.

உணவுப் பொருட்களை தவிருங்கள்:
மடிக் கணினியைப் பயன்படுத்திக்கொண்டே சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதோ, டீ, கூல்டிரிங்ப் போன்ற பான வகைகளை அருந்துவதோ கூடாது.. அவ்வாறு செய்வது உங்கள் லேப்டாப்பிற்கு நீங்களே உருவாக்கும் ஆபத்து..

லேப்டாப் பேக்:

வெளியில் பாதுகாப்பாக லேப்டாப்பை எடுத்து வைக்க தகுந்த லேப்டாப் பேக்கைப் பயன்படுத்துங்கள். லேப்டாப்பின் அளவிற்கு தகுந்த மாதிரியான போதுமான அளவில் லேப்டாப் பேக் இருக்க வேண்டும். முதுகில் மாட்டிச் செல்ல ஏதுவான லேப்டாப் பேக் லேப்டாப்பை பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவும்.

ஹபர்னேட் நிலை:

பணிக்கு இடையே சிறுது நேரம் அவசகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில், (உதாரணமாக உணவு எடுத்துக்கொள்ள செல்வதற்கு முன்பு, தொலைபேசியில் அதிக நேரம் பேசும் சூழல்) உங்கள் லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையில் வைப்பது சிறந்தது.. இதனால் அதிக மின்சாரம் சேமிக்கப்படுவதுடன் லேப்டாப்பும் பாதுகாக்கப்படும்.

தொடர்ச்சியான பயன்பாட்டை தவிருங்கள்:
தொடர்ச்சியாக மடிக்கணினியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிகபட்சமாக 8 மணி நேரம் வரைக்கும் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.. எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக இடைவிடாமல் கணினியை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் விரைவில் மடிக் கணினி வெப்பமடைந்துவிடும். இதனால் விரைவிலேயே கணினியின் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளது.

ஃபையர் வால் பாதுகாப்பு:

பொதுவாக எல்லா மடிக்கணினிகளிலும் ஃபையர்வால் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகிறது. ஃபையர்வால் பாதுகாப்பு மிக முக்கியம். கணினியின் தலைமைக் காவலனாக இது செயல்படுகிறது.. எந்த வகையிலும் உங்கள் கணனி சேதாரமாகாமல் இருக்க இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் பையர்வால் இல்லையெனில் தனியாக வாங்கியோ அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்தோ உங்கள் கணினியல் நிறுவிக்கொள்ளுங்கள்.

பரிசோதனை:

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களுடைய லேப்டாப்பை சர்வீஸ் செய்வது நல்லது.. அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் லேப்டாப்பை கொடுப்பது புத்திசாலித்தனம்.

லேப்டாப் மேடை:
வீடுகள், மற்றும் அலுவலகங்களில் லேப்டாப்பை பயன்படுத்தும்பொழுது, அதற்கென தயாரிப்பட்ட மேடைகளைப் பயன்படுத்துங்கள். தற்பொழுது லேப்டாப் ஸ்டேன்டுகள் பலவிதங்களில் கிடைக்கிறது. அதனால் லேப்டாப் சூடேறுவதை குறைப்பதோடு, பயன்படுத்தவும் எளிதாக இருக்கும்.

மீண்டும் இணைகிறதா விஜய் - நேசன் கூட்டணி ?



இளைய தளபதி விஜய் நடிப்பில் தற்பொழுது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஜில்லா திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.டி. நேசன் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டுவருகிறது.

இளையதளபதி விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்ககும் ஜில்லா திரைப்படம் தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் இயக்குனரான ஆர்.டி. நேசனிடம் விஜய் “ உங்கள் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அஷோக், ஸ்ருதி சர்மா நடிப்பில் வெளியான முருகா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நேசன். ஜில்லா அவரது இரண்டாவது படமாகும்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் ஜில்லா திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. விஜய் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப்
பெற்றிருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபீசில் இணையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

"ப்ரூஸ் லீ" - ன் மறுபக்கம்...?






தற்காப்பு கலையின் முடிசூடா மன்னன் என்று உலகம் முழுவதும் போற்றப்படும் "ப்ரூஸ் லீ" ஒரு சிறந்த நடன கலைஞரும் கூட என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

அவருடைய 14 வயதில் குங்ஃபூ படித்து கொண்டிருத்த கால கட்டத்தில், Cha Cha Cha நடனத்தின் மீது அவருக்கு பெரும் ஈடுபாடு வந்து, அதற்க்கேன நேரம் ஒதுக்கி மிக விருப்பத்துடன் கற்று கொண்டார் ப்ரூஸ் லீ. ஹாங்-காங்கில் 1958-ம் ஆண்டு நடைபெற்ற மிக பிரமாண்ட Cha Cha Cha நடன போட்டியிலும் பங்கெடுத்து சாம்பியன்ஷிப் பட்டதையும் வென்றார் ப்ரூஸ் லீ.

Martial Arts கற்றுகொள்வதர்க்கு காண்பித்த அதே ஆர்வத்தையும், உழைப்பையும் Cha Cha Cha நடனம் கற்று கொள்வதிலும் காட்டியிருக்கிறார் ப்ரூஸ்லி.

 தன்னுடைய நோட்டில் Cha Cha Cha-வின் 108 ஸ்டெப்களை குறித்து வைத்திருந்திருக்கிறார் அவர். அமெரிக்காவிற்கு சென்ற ப்ரூஸ் லீயின் முதல் வேலை "dancing instructor"-தான்.

என்ன மனுஷன் இவர்..! அஜீத் பற்றி நெகிழ்கிறார் பாலா..!



பொங்கல் படமாக வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'வீரம்'.இப்படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்துள்ள நடிகர் பாலாவுக்கு இத்தனை நாளாக நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த நெருடலை 'வீரம்' பட வெற்றி அறுவை சிகிச்சை இல்லாமேலேயே அகற்றியிருக்கிறது.

இந்த பாலா நம் மண்ணின் மைந்தன். தமிழில்தான் 'அன்பு' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 'காதல்கிசுகிசு' 'அம்மா அப்பா செல்லம்' போன்ற சில படங்களில் நடித்தார். இங்கே படங்கள் வெற்றி பெறாததால் மலையாளப் பக்கம் போனார்.

'பிக்'பி' என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் முதல் படத்திலேயே வெற்றியும் பாராட்டும் விருதும் கிடைத்தன.அதன் பிறகு மளமளவென படங்கள். மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி,ப்ருத்விராஜ் என பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். பிறகு தனி நாயகனாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றி பெற்றார். ஒரே ஆண்டில் 9 படங்கள் நடிக்கும் அளவுக்குப் பரபரப்பானார். மலையாளத்தில் தொடர்ச்சியாக 40 படங்கள் நடித்துள்ளார். 'வீரம்' இவரது 44 வது படம் என்றால் பாருங்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என்று நம்புகிறவர்கள் நம்மவர்கள். வேற்று மொழியினர் எவரையும் எளிதில் உள்ளே விடாதவர்கள் மலையாளத் திரையுலகினர். பாலாவுக்கு எப்படி அங்கு ஒரு இடம் கிடைத்தது?

"அதை என் விதி என்பதா தலையில் எழுதப்பட்ட வாய்ப்பு என்பதா அதிர்ஷ்டம் என்பதா பாக்யம் என்பதா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

நான் அறிமுகமாகி தமிழில் நடித்த படங்கள் ஓடவில்லை. அதனால் எனக்கு இங்கே வாய்ப்பு வரவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிப்பு, திறமை எல்லாம் இரண்டாம்பட்சம்தான். வெற்றி பெற்றால்தான் மறு பேச்சு. வெற்றி பெறவில்லை என்றால் அவ்வளவுதான். இதுதான் இங்கு உள்ள நிலைமை. ஆனால் மலையாளத்தில் நிலைமையே வேறு. அங்கு வெற்றியைப் பார்ப்பதில்லை. வேலையைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்குத்தான் அங்கு மரியாதை.நடிகரைவிட நடிப்புத் திறமையைத்தான் பார்ப்பார்கள். நிஜமான திறமைசாலியை அங்கீகரிப்பார்கள். ஆதரிப்பார்கள். அதனால்தான் என்னை ஏற்றுக் கொண்டார்கள். " என்கிற பாலா,"எனக்கு மொழி ஒரு தடையில்லை. இருந்தாலும் பிற மொழியிலிருந்து, என்னை மாதிரி பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு அவ்வளவு சுலபமாக மலையாளத்தில் வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்காது. இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.என்னை ஏற்றுக்கொண்டு தங்களில் ஒருவராக பார்க்கிற அவர்களின் அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்வது? என் ஒவ்வொரு படத்திற்கும் அவர்கள் கொடுத்த வரவேற்புக்கும் விமர்சனத்துக்கும் என்னால் நன்றி என்று மட்டும் கூறி விட முடியாது." என்று நெகிழ்கிறார்.

பாலாவின் தந்தை ஜெயக்குமார் 426 ஆவணப் படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் இயக்கியவர். தாத்தா ஏ. கே. வேலன் தயாரிப்பாளர். சகோதரர் சிவா இயக்குநர். இருந்தாலும் இவருக்குள் ஒரு சங்கடம் தொண்டைக்குள் பந்தாக இதுநாள் வரை உருண்டு கொண்டிருந்தது. அதை 'வீரம்' படம் அகற்றியுள்ளது. சங்கடத்தைத் துடைத்து இருக்கிறது.

"நான் தமிழில்தான் அறிமுகமானேன். இங்கு சரிவர படங்கள் அமையாததால்தான் மலையாளப் பக்கம் போனேன். அங்கு பலதரப்பட்ட படங்கள். வியாபாரரீதியில் வெற்றி பெற்ற 'பிக் பி', 'புதியமுகம்' 'ஸ்தலம்' 'திஹிட்லிஸ்ட்' 'அலெக்சாண்டர்' தி கிரேட் போன்ற படங்களாகட்டும்

'வேனல்மரம்' 'பத்தாம் அத்தியாயம்' யோன்ற ஆர்ட் பிலிம் களாகட்டும் ஒவ்வொருபடமும் ஒவ்வொரு அனுபவமாக என்னை செதுக்கியது உண்மை. அப்போதெல்லாம் நான் நினைப்பதுண்டு இங்கு நம்மைப் பாராட்டுகிறார்கள். வரவேற்கிறார்கள். திறமைக்கு இங்கு மரியாதைஉ.ள்ளது.ஆனால் தாய் மொழியில் நமக்கென்ன மரியாதை உ.ள்ளது என்று நினைப்பதுண்டு.அப்படிப்பட்ட நேரத்தில்தான் 'வீரம்' படவாய்ப்பு வந்தது.

இயக்குநர் சிவா என் அண்ணன்தான். நானும் மலையாளத்தில் ஒரு படம் இயக்கிவிட்டடேன். ஆனாலும் நான் அவரிடம் வாய்ப்பு கேட்டதில்லை. அவரும் என்னைப்பற்றி விசாரித்து பேசியதில்லை. அப்படிப்பட்ட சுதந்திர வெளியில் இருந்தோம்.

'வீரம்' படத்தில் நடிக்கக் கேட்ட போது அண்ணனின் படத்தில் நடிக்கும் தம்பி என்கிற வகையிலும் அஜீத் சாரின் தம்பியாக நடிக்கிறேன் என்கிற வகையிலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் இனிமையாகக் கழிந்தது. படமும் வெற்றி பெற்றது எனக்கு நீண்டநாள் நெஞ்சுக்குள் கிடந்த ஏக்கம், சங்கடம், உறுத்தல், விலகிய உணர்வில் இருக்கிறேன். "என்கிறார்

வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றிக் கேட்ட போது ' நிறைய சொல்லலாம் சொல்வது அவ்வளவையும் எழுத முடியாதே' என்ற படி தொடங்கினார்.

"அஜீத் சார் பற்றி நிறைய சொல்லலாம். நானும் 44 படங்கள் முடித்து விட்டேன். அஜீத்சார் மாதிரி அற்புதமான மனிதரைப் பார்த்ததில்லை. அப்படி இயல்பாகப் பேசிப் பழகுவார். 'வீரம்' படம் தொடங்க 4 நாட்கள் இருக்கும் போது எங்களை எல்லாம் படப்பிடிப்புக்கு முன்பே ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு அழைத்தார்.

அழைத்தவர் எல்லாருடனும் அன்பாக மனம் விட்டு அன்னியோன்யமாகப் பேசிப் பழகினார். 'நாம் அண்ணன் தம்பியாக நடிக்கப் போகிறோம். நமக்குள் நல்ல ஹெமிஸ்ட்ரி வரவேண்டும் என்றால் நாம் சகஜமாகப் பேசிப் பழகவேண்டும். இடைவெளி இருக்கக் கூடாது'. என்றார்.

நாள் முழுக்க நாங்கள் அவருடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். காலையில் எழுவது சாப்பிடுவது ஒர்க் அவுட் செய்வது ஸ்விம்மிங் என்று எல்லாவற்றிலும் கூடவே இருக்கவைத்தார். சில நாட்களில் நிஜ அண்ணன் தம்பிகள் போலாகி விட்டோம். 110 நாட்கள் இப்படியே போனது. அது ஜாலியான சந்தோஷமான அனுபவம்.

அஜீத் சார் நல்ல குக். பிரமாதமாக சமைப்பார்.சிக்கன் பிரியாணி அருமையாக சமைத்துப் போட்டார். 'ஆரம்பம்' படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.அதுபற்றி எந்த சலனமும் இல்லாமல் எங்களுக்கு மீன் வறுவல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன மனுஷன் இவர் என்று வியப்பாக இருந்தது. அவர் பலருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் வெளியில் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். நான் இது பற்றிக் கேட்ட போது மனிதர் செய்வது மனிதருக்குத் தெரியக் கூடாது என்பார். கடவுளுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்பார். 'இது எனக்கும் கடவுளுக்கும் உள்ள கணக்கு' என்பார்.'இப்போது அவரை மிஸ் பண்ணுவதாக உணர்கிறேன்.''இப்படி அஜீத் பற்றிக் கேட்டால் மூச்சு விடாமல் பேசுகிறார் பாலா.

'வீரம்' படத்தின் மூலம் அஜீத் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ள கூடுதல் பூரிப்பு பாலாவுக்கு.

பாலா தான் இயக்கிய 'தி ஹிட் லிஸ்ட்' பட அனுபவம் பற்றிக் கூறும் போது, "இது எனக்கு 30 வயதில் கிடைத்த வாய்ப்பு. நானே தயாரித்தேன். 40 நடிகர்கள் என் மீதுள்ள அன்புக்காக நடித்தார்கள். ஒரு பத்தாண்டுகால அனுபவம் ஒரு படத் தயாரிப்பில் கிடைத்தது. எல்லா நடிகர்களும் ஒரு படம் தயாரித்தால் நல்ல மனிதராக மாறிவிடுவார்கள். "என்கிற பாலாவின் மனைவி அம்ருதா, பாடகியாக வந்து காதலியானவர். இவர் நினைக்கிற ஸ்வரத்தில் தாம்பத்யசங்கீதம் பாடுகிற பாடகி. ஒரே மகள் அவந்திகா.இதுதான் பாலா.

30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை...!

30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை - படிப்பதில் மாணவர்களுக்கு...!


 இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள்.

அப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? கிட்டத்தட்ட அப்படித்தான். இணையத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் வாசிப்பு நம் மனதில் சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நீண்ட கட்டுரைகள், புத்தகங்கள் போன்ற வற்றைப் படித்து அவற்றிலுள்ள தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பாதிக்கப் படுகிறது.

ஒரு கட்டுரையைப் படிக்கும்போதே அடுத்த கட்டுரைக்குத் தாவும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் முழுமையாக ஒரு கட்டுரையையும் படிப்பதில்லை. அதைவிட அவ்வப்போது நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதன் காரணமாகவும் தடை ஏற்படுகிறது. இது தவிர ‘ட்விட்ட'ரும் ‘ஃபேஸ்புக்'கும் இத்தகைய தடைக்குத் தம்மாலானவற்றைச் செய்கின்றன.

தாவும் மனம்

இணையம் மூலம் பலதரப்பட்ட குட்டிக் குட்டிச்செய்திகளை, தகவல்களைத் தொகுக்கும் வசதியைப் பெற்றுள்ளோம். ஆனால், பொறுமையாக அமர்ந்து அவற்றைப் பற்றி யோசிப்பதையும் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்திப் பார்ப்பதையும் மறந்துகொண்டிருக்கிறோம். எப்போது பார்த் தாலும் நமது மனம் இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இன்னோரிடம் என்று நிலை கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இந்தக் கட்டுரையை இன்னும் வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் சிறுபான்மையினராக ஆகிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நீங்கள்.

பெரும் புரட்சி

அண்மையில் இலக்கிய வாசிப்பு தொடர்பான‌ பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பு நிதான உணவு என்றொரு புரட்சி, பின்னர் நிதானப்பயணம் என்றொரு புரட்சி. அவற்றோடு இப்போது நிதான வாசிப்புக்கான இயக்கம். வெவ்வேறு வகையான கல்வியாளர்களும் அறிவுஜீவிகளுமான இவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வாசித்ததைத் திரும்பத்திரும்ப வாசிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர்.

 இவர்களின் வேண்டுகோள்: “அவ்வப்போது கணினியை அணைத்துவிட்டு, அச்சிட்ட பிரதிகளுடன் உறவுகொள்வதன் சந்தோஷத்தையும் அவற்றை முழுமையாக‌ உள்வாங்கிக்கொள்ளும் திறனையும் நாம் மறுகண்டுபிடிக்க வேன்டும்.”

‘‘ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்யவேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்’' என்கிறார் ‘ஸ்லோ ரீடிங்’ புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா.

ஆனால் நிதான வாசிப்பு என்ற பதத்தைப் பிரபலப்படுத்திய லான்ஸ்லாட் ஆர். ப்ளெட்சர் இக்கருத்தை ஏற்கவில்லை. ‘‘நிதான வாசிப்பு என்பது வாசகனின் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக அல்ல, மாறாக ஆசிரியரின் படைப்பாற்றலை, கற்பனையைக் கண்டறிவதற்கானது; ஒரு நூலின் ஆசிரியர் எழுதியதை முற்றிலும் கண்டுணரும் நிலையை ஊக்குவிப்பது’’ என்கிறார்.

நிதான வாசிப்பு புதிய கருத்தாக்கமா?

நிதான வாசிப்பு என்பது ஒரு புதிய கருத்தாக்கம் அல்ல. 1623-ல் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் ஃபோலியோ பதிப்பு அவருடைய நாடகங்களை திரும்பத்திரும்பப் படிக்குமாறு நம்மை வலியுறுத்துகிறது. 1887-ல் ஃப்ரெடரிக் நீட்ஷே தன்னை ‘நிதான வாசிப்பைப் போதிப்பவன்' என்று கூறிக்கொண்டார். 1920-களிலும் 1930-களிலும் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றோர் கல்வியாளர் மத்தியில் நூலை ஆழ்ந்து படிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார்.

ஒன்று மட்டும் தெளிவு. இன்றைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய வெறுப்பு நிதான வாசிப்பாளர்கள் பலரையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஆரம்பித்துவிட்டது. ஆக்ஸ்போர்டு வரலாற்றுப் பேராசிரியரான கீத் தாமஸ் என்பவர் அத்தகையோரில் ஒருவர். “ஒரு செய்தியில் உள்ள சில முக்கியமான சொற்களைக் கண்டறிய தேடுபொறியைப் பயன்படுத்துதல் என்பது அதை ஒழுங்காகப் படிப்பதற்கு ஈடாகாது.

 அப்போது பணியில் ஓர் ஒழுங்கு காணப்படுவதில்லை. அதன் உள்ளடக்கத்தை யும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த நிலை யில் நிதான வாசிப்பில் நிகழ்வது போன்ற‌ தற்செயலான‌ கண்டுபிடிப்புகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் இடமே இல்லை. என் ஆய்வின் பாதிக்கு மேற்பட்டவை நான் எதிர்பாராத நிலையில் அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே” என்கிறார் அவர்.

முப்பது நொடிகள்தான்

தன்னுடைய சில மாணவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்ட டிரேசி சீலி என்ற ஆசிரியர், பெரும்பாலான மாணவர்கள் ஒரு பிரதியை ஒரேசமயத்தில் 30 நொடிகளுக்கு மேலோ ஒரு நிமிடமோ தொடர்ந்து ஈடுபட்டுப் படிப்பதில்லை என்கிறார்.

பெரும்பாலான நிதான வாசிப்பாளர்கள் முற்றிலுமாக இணையத்தை ஒதுக்குவது நடைமுறைக்குப் பொருந்தாதது என்றும், அதற்குத் தீர்வு தொழில்நுட்பத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்வதே என்றும்கூறுகிறார். உதாரணமாக டிரேசி சீலியின் மாணவர்கள் வாரம் ஒரு நாள் கணினியின் முன் அமர்வதில்லை.

அதே சமயம் நாம் வாழும் சூழலை எடுத்துக்கொண்டால் நமக்கு முதலில் நேரம் உள்ளதா என்ற வினாவை முன்வைக்கிறார். கர்ரார்ட் என்பவரின் சிந்தனை வேறுவிதமானது. அவர் தற்போதுதான் ஐபோனில் இருந்ததாகவும், தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார். வாரத்தின் நடுவில், நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இணையத்துடனான தொடர்பை அறுத்துக்கொண்டு, படிப்பதற்கான விடுமுறை நாள்களை ஒதுக்கிக்கொள்வதாக அவர் கூறுகிறார்.

நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு

நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு. இது கருத்துகளையும் மக்களையும் ஒன்றிணைக் கிறது. படிப்பதன் மூலமாகக் காணப்படும் உறவின் தொடர்ச்சி நண்பர்களிடமிருந்து நாம் நூலைக் கடனாகப் பெறும்போதும், நீண்ட கதைகளை நம் குழந்தைக்கு அது தூங்கும்வரை படித்துக்காட்டும்போதும் உணர முடியும்

ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள்..!


ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது..!


குழந்தைகளின் பிரியா பிஸ்கெட் ஆகிவிட்டது ஓரியோ.

கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!



இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு.

யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.

 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.

ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.

ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது.

ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள்இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.

நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.

இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

டேப் டான்ஸ் பயின்ற கார்த்திகா..!



புறம்போக்கு படத்திற்காக கார்த்திகா டேப் டான்ஸ் பயின்றுள்ளார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் நடிக்கும் படம், புறம்போக்கு. இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறார். படத்திற்காக டேப் டான்ஸை பயின்றுள்ளார் கார்த்திகாக. அவருக்கு இந்தப் பயிற்சி ஐந்து நாட்கள் அளிக்கப்பட்டதாம். தமிழ் சினிமாவுக்கு இந்த நடனம் புதுமையாக இருக்கும் என்கிறது படக்குழு.

யுடிவி நிறுவனத்துடன் ஐனநாதன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு வர்ஷன் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று குலுமணாலியில் துவங்கியது.

படத்தில் கார்த்திகா போல்டான கேரக்டரில் வருகிறாராம். இதற்காக அவர் பைக் ஓட்டி பழக போகிறாராம்.இதற்கும் மேலாக படத்தில் அவருக்கு சண்டைக் காட்சிகளும் உண்டாம்.

‘இசை’ - புது அவதாரம்.?




‘தமிழில் நான் படம் இயக்கி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஏன் இந்த இடைவெளி என்பதற்கான காரணம் என்னிடம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. என் படத்தை, என் மீது கொண்ட நம்பிக்கையை கொண்டாடிய ரசிகர்களை மீண்டும் சந்தோஷப்படுத்த வேண்டும். பனி படர்ந்திருக்கும் இந்த அழகான குளிர் காலத்தைப்போல என் மீது படிந்திருக்கும் கவனத்திற்கு ‘இசை’ திரைப்படத்தின் வழியே கொஞ்சமும் குறைவில்லாமல் திருப்தியை கொடுப்பேன்!’’ என்று உறுதியாகச் சொல்கிறார் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.

மே முதல் தேதி தன் ‘இசை’ படத்தை வெளியிட பம்பரமாய் உழைத்துக் கொண்டிருந்த  அவரை,  சந்தித்து பேசியதிலிருந்து…

இசையமைப்பாளர் ஆனதால்தான் ‘இசை’ படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறதா?

கதை தயாராக இருந்தது. இதை தற்போது கையில் எடுக்கவேண்டுமா என்ற முடிவுக்காக 6 மாதங்கள் எடுத்துக்கொண்டேன். படத்தின் சில முக்கியமான காட்சிகளை கொடைக்கானலில் சர்ஜ் செட் போட்டு படம் பிடித்திருக்கோம். அங்கே என் கதைக்கு வேண்டிய குளுமைக்காக 6 மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த குளுமைக்காகவும், மலையின் அழகியலுக்காகவும் வேண்டி கொஞ்சம் காலத்தை செலவழித்தேன். மொத்தமாக ஒன்றரை ஆண்டுகள் படப்பிடிப்புக்காக மட்டுமே எடுத்துக்கொண்டேன்.

இசையை கற்றுக்கொள்வதற்காக 8 மாதங்கள். இப்போது எடிட்டிங் 4 மாதங்கள். எடிட்டர் ரியாஸுடன் அமர்ந்து தினம்தினம் செதுக்கிக்கொண்டிருக்கிறேன். அற்புதமான எடிட்டர், இவர். ஆண்டனியின் உதவியாளர். படம் வந்தால் உங்களுக்கு நிச்சயம் பிடித்தவராக இருப்பார். இப்படித்தான் கடந்த 4 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு என்னுடைய ‘இசை’ தயாராகி வருகிறது. எதிலும் என்னை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளாமல் வேலையை தொடர்ந்தேன். அதற்கான பலன், படத்தில் தெரியும்.

எஸ்.ஜே.சூர்யாவை ஒர் இயக்குநராகவே பார்க்க விரும்புவதாக வரும் விமர்சனத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு தொடர்கிறோம். இன்னொரு இடத்தை ஆண்டவன் வேற ஒரு மாதிரி கொடுக்கிறான். ‘நியூ’ படத்தில் ஒரு நல்ல நடிகனாகத்தான் என்னை நிரூபித்திருக்கிறேன். வெளியில் நமக்கு கிடைக்கும் வெற்றியை எல்லோரோடும் சேர்ந்து ஷேர் பண்ணிக்க வேண்டும். தோல்வியை நாம் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நல்ல நடிகனாக நிரூபிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்தப்படத்தில் அதற்கான போராட்டம் நிறைய இருக்கும். இயக்குநர் ஒரு பயிற்சியாளர் மாதிரி. வீரர் நடிகர்தான். என் விளையாட்டு ‘இசை’ யில் புதிதாக இருக்கும். அதன்பின் இப்படியான விமர்சனங்களுக்கு அவசியம் இருக்காது.

படத்தில் இளையராஜாவாக சத்யராஜும், ஏ.ஆர்.ரஹ்மானாக நீங்களும் நடித்திருப்பது உண்மை தானா?

வாழ்வில் ஒவ்வொரு பகுதியும் நம்மை ஏதாவது ஒன்று ஆட்சிசெய்யும். அது அரசியல், விளையாட்டு ஏன்.. அது ஒரு பள்ளிக்கூடமாகக்கூட இருக்கும். அந்த துறையில் ஒருவர் சீனியர், ஜீனியர் என்றும் இருப்பார்கள். அந்த சூழலில் ஒரு பயணம். அதில் சில அனுபவங்கள் உண்டு. அப்படியான காலகட்டத்தில் அந்த சீனியர், ஜூனியருக்குள் ஒரு பொறாமை உணர்வு உண்டாகும். அந்த உணர்வால் நிகழும் மாற்றங்கள்தான் என் கதை. எனக்கு இசை பிடிக்கும். பார்த்து பழகிய அனுபவம் இருப்பதால் இதை கதையின் களமாக ஆக்கிக்கொண்டேன். இதில் இவர்கள் இருவரையும்தான் குறிப்பிட்டுள்ளேன் என்பதெல்லாம் முற்றிலுமான வதந்தி.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ராஜா சார் இசைப்பயணத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். என் படத்தில் சித்தரிப்பதால்தான் அவரது வெற்றி இருக்கிறதா என்ன? நான் இங்கே யார் மனதையும் புண்படுத்த வரவில்லை. எனக்கு படம் செய்ய ஒரு களம் தேவைப்பட்டது. அவ்வளவுதான். இந்தப்படத்துக்கும், என் கதைக்கும் அப்பார்ப்பட்ட ஜீனியஸ் ராஜா சார். மற்றவை எல்லாம் நான் முன் சொன்னதைப்போல வதந்தி.

ஹிந்தியில் சல்மான்கானிடம் வைக்கும் கேள்வியை உங்களிடமும் வைக்கிறோம். கல்யாணம் எப்போது?

இத்தனை ஆண்டுகளாக ஏன் செய்துகொள்ளவில்லை என்பதற்கான பதில் என்னிடம் இல்லை. நம் அலைவரிசைக்கு ஏற்றவரை தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மனதுக்கு பிடித்த வேலையை இத்தனை ஆண்டுகளாக தொடர்கிறேன். இப்போது கூட 8 மாதங்கள் மாணவனாக மாறி இசையையும் புதிதாக எடுத்திருக்கேன். அதேபோல மனதிற்கு பிடித்த பெண்ணை இதுவரைக்கும் தேட முயற்சி எடுக்கவில்லை. அது இயல்பாக அமையும்போது பார்த்துக்கொள்ளலாம்.

சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன் வரைக்கும் சினிமாவில் வளர்ந்து வருகிறார்களே. இவர்களை வைத்து எப்போது படம் கொடுக்கப் போகிறீர்கள்?
ஒவ்வொரு காலத்திலும் யாராவது ரெண்டு பேர் ரூல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் வரைக்கும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஒரு கதை யாரைத்தேடுகிறதோ அவர்களுடன் சேர்ந்து அதை சரியாக செய்ய வேண்டியதுதான். இப்போ அந்த வேலையை நானே செய்வதால் அதற்குள் போக விருப்பமில்லை. என்னோட இடத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான தேடலில் என் வேலைகளை கவனித்து வருகிறேன். சினிமா எப்பவுமே நன்றாக இருக்கிறது. அதில் நாம இருக்கிறோமா? இல்லையா என்பதை செக் பண்ணி பார்த்துக்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல், மியூசிக்கில் அட்வான்ஸ் என்று வளர்ந்துகொண்டே போகிறது. அதை அப்டேட் பண்ணிக்கொள்ளும் வேலையே இங்கு அதிகம் இருக்கே. அதை நோக்கி என் பயணமும் இருக்கு. வெளிநாட்டோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நாம் இன்னும் 10 ஆண்டுகள் பின்னுக்குத்தான் இருக்கிறோம். இங்கே, இப்போ பேசப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்கள், மாடர்ன் டி.டி.எச். சினிமா வெளியிடும் நுட்பங்கள் எல்லாம் அங்கு வந்தாச்சு. ஒரு படத்தை வீட்டிலும் பார்க்கிறார்கள், தியேட்டர்களிலும் பார்க்கிறார்கள். காலத்துக்கு தகுந்த விஷயங்கள் அவ்வபோது மாறிக்கொண்டேதான் இருக்கும். சினிமாவும் அதில் ஒன்றுதானே.

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சாவித்ரி என்று அறிமுக நாயகியை சொல்லியிருக்கிறீர்களே?
நாயகிக்காக 124 பேரை ஆடிஷன் எடுத்து அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவங்க இந்த சாவித்ரி. மும்பை பெண். தமிழ்நாட்டில் சாவித்ரியாகவே வலம் வரட்டும் என்று அவங்களோட நிஜ பெயரைக்கூட யார்கிட்டயும் சொல்லவில்லை. யூத்ஸ் பலர் நோகப்போறாங்க. முதல் பாகத்தோட காதல், ரெண்டாவது பகுதியின் கதை எல்லாவற்றிலும் அழகா அசத்தியிருக்காங்க… அந்தப்பொண்ணு.

இசையை அடுத்து?

அடுத்த படம் கதை ரெடி. முக்கால்வாசி இசையில் பயணித்த அதே டீமாகக்கூட இருக்கலாம். அது இயல்பாகவே அமைந்தால் சந்தோஷப்படுவேன். இனி தாமதம் இருக்காது. இசை வெளியான ஆறாவது மாதத்தில் அடுத்த காதல் பயணமும் திரைக்கு வந்துவிடும்.

பெண் நோயாளிகளிடம் வரம்பு மீறும் ஆண் டாக்டர்கள் - புகார் கொடுக்க...




 இந்தியாவில் மருத்துவ சிகிச்சை முறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ கம் மருத்துவத்துறையில் முதல் இடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. மிகவும் அரிதானதாக சொல்லப்படும் இதயம், கல்லீரல், நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் சர்வ சாதாரணமாக குறைந்த செலவில் சென்னையில் செய்யப்படுகிறது.

ஆனால் தனியார் மருத்துவ மனை மற்றும் தனியார் கிளினிக்கு களுக்கு சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளிகளிடம் ஒரு சில டாக்டர் கள் வரம்பு மீறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை பெரும் பாலான பெண் நோயாளிகள் வெளியே சொல்ல தயங்குகின்ற னர். இதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும் சிலர், தங் களது அத்துமீறல்களைத் தொடர் கின்றனர்.

ஒரு சில பெண் நோயாளிகள் வெளியே சொல்லும் போது, சம்பந் தப்பட்ட டாக்டர் கைது செய்யப் படுகிறார். கடந்த மாதம் 31-ம் தேதி திருவேற்காடு அடுத்துள்ள வேலப்பன்சாவடி பள்ளிக்குப்பம் பகுதியில் தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண் நோயாளியிடம், அங்கு பணியில் இருந்த டாக்டர் சித்தார்த்தசீலன் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அந்த பெண் திருவேற்காடு போலீஸில் புகார் அளித்ததின் பேரில், டாக்டர் சித்தார்த்தசீலனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத் தனர். இதுபோல ஒரு சில டாக் டர்கள் செய்யும் தவறால், ஒட்டு மொத்த டாக்டர்களுக்கு மட்டு மின்றி தமிழக மருத்துவத் துறைக்கே அவப்பெயர் ஏற்படு கிறது. இதுதொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் கீதாலட்சுமி, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவ மனை ஆர்.எம்.ஓ. டாக்டர் கலை வாணி ஆகியோர் கூறியதாவது:

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது,  -கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.

பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனை களை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண் கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச் சினையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத் தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித் தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்; இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புகார் கொடுக்கலாம்
சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

செபி தீவிர நடவடிக்கை -முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய....




 பிபிஓ எனப்படும் வெளிப்பணி ஒப்படைப்பு மையங்கள் மூலம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) திட்டமிட்டுள்ளது. இதற்காக பிபிஓ-க்களிடம் இதற்கு ஆகும் செலவு குறித்து அழைப்பு டெண்டரை கோரியுள்ளது.

200 ஏஜென்டுகளையும் ஒருங்கிணைத்து உதவி மையத்தை இத்தகைய பிபிஓ-க்கள் செயல்படுத்த வேண்டும். இதற்கான அழைப்பு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் எனப்படும் தொலைபேசி வழி குறைகேட்பு மையத்தை குறைவான பணியாளர்களின் உதவியோடு அதாவது 50 பணியாளர்களுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இதற்கான அனுமதி அளிக்கப்படும். இப்போது 50 ஏஜென்டுகளை ஒருங்கிணைக்கும் வகையிலான இந்த ஹெல்ப்லைன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 பணியாளர்களாக விரிவுபடுத்தப்படும் என்றும் செபி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு 14 பிராந்தித மொழிகளில் உதவிகளை அளிக்கும் வகையில் இந்த தொலைபேசி வழி குறைகேட்பு மையங்கள் இருக்க வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், வங்காளம், மலையாளம், தெலுங்கு, உருது, கன்னடம், ஒரியா, பஞ்சாபி, காஷ்மீரி ஆகிய பிராந்திய மொழிகள் இதில் அடங்கும். ஏற்கெனவே கட்டணமில்லா தொலைபேசி சேவையை வாடிக்கையாளர்களுக்கு செபி ஏற்படுத்தித்தந்துள்ளது. இத்தகைய சேவை 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சேவையை விரிவுபடுத்தும் வகையில் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் வசதியை ஏற்படுத்தித் தர முன்வரும் நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவலை 21 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று செபி அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய நிறுவனங்கள், வாடிக்கையாளரிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஏற்ப பதில் அளிக்க வேண்டும். யாரிடம் புகார் தெரிவிப்பது மற்றும் வர்த்தக கணக்கு தொடங்குவது உள்ளிட்ட தகவலை அளிக்க வேண்டும்.

இது தவிர, ஏஜென்டுகள் தங்களது வாடிக்கையாளர் பற்றிய முழு தகவலை அதாவது பங்கு பரிவர்த்தனை குறித்த அளிப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் இது அமைய வேண்டும். இந்த ஹெல்ப்லைன் வசதியில் வாடிக்கையாளர்கள் கோரினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பற்றிய தகவலும் அளிக்கப்படும். குறிப்பிட்ட நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதா இல்லையா என்ற தகவலை அளிக்கும். அத்துடன் நிறுவனம் செயல்படுகிறதா அல்லது நொடித்து போய் மூடப்பட்டுள்ளதா, நிறுவனமே இல்லையா அல்லது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லையா என்ற தகவலும் அளிக்கப்படும்.

செபி-யின் வரம்புக்குள் வராத அதேசமயம் பிற புலனாய்வு அமைப்புகள் மூலம் திரட்டப்பட்ட தகவலும் இதில் அளிக்கப்படும். இந்த ஹெல்ப்லைனில் முதலீடு தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட மாட்டாது. இந்த ஹெல்ப்லைனில் பதிவாகும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு அது 24 மணி நேரத்துக்குள் செபி-க்கு அனுப்பப்பட வேண்டும். இத்தகைய சேவை அளிக்க முன்வரும் நிறுவனங்கள் பற்றிய மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் சிறந்த நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இத்தகைய சேவை அளிக்க அனுமதி அளிக்கப்படும்.

விருப்பத்தின் பேரில் இது 5 ஆண்டுகளாகவும் நீட்டிக்கப்படக்கூடும். இத்தகைய சேவை அளிக்க விரும்பும் நிறுவனங்கள் நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு பெற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் எத்தகைய புகாரிலும் சிக்காத நிறுவனமாக இருத்தல் அவசியமாகும். கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் இந்நிறுவன வருமானம் ரூ. 50 கோடிக்கும் குறைவாக இருக்கக் கூடாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனமாக இருக்கக் கூடாது என்று செபி தெரிவித்துள்ளது.

ஹெல்ப்லைன் மையத்தில் இரண்டு செபி அதிகாரிகள் நிரந்தரமாக நியமிக்கப்படுவர். குறிப்பிட்ட நிறுவனம் நாஸ்காமில் பதிவு பெற்ற சாப்ட்வேர் நிறுவனமாக இருக்க வேண்டும். ஹெல்ப்லைன் சேவை அளிக்க முன்வரும் நிறுவனங்களிடம் தடையற்ற பேச்சுத் திறன் கொண்ட பணியாளர்கள் இருக்க வேண்டும். நிறுவனத்தின் செயல்பாடு மாதந்தோறும் செபி-யால் ஆய்வுக்குட்படுத்தப்படும். ஹெல்ப்லைன் சேவை அளிக்க முன்வரும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தபட்சம் பட்டதாரிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன் எந்த குற்ற பின்னணி கொண்டவராக இருத்தல் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

குரு – சிஷ்யன் ...!


துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் குறுக்கிட்டு “ ஐயா நான் தங்களின் சிஷ்யனாக சேர விரும்புகிறேன்” என்றான்.ஆற்றிலிருந்து எழுந்தவர், ”ஏன்?” என்றார் துறவி. ”நான் கடவுளை அறிய விரும்புகிறேன்” என்றான்.

சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன் தலையை ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான்.

 கடைசியாக துறவி அவனைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு மூச்செறிந்தான். துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது உனக்கு என்ன தேவைப் பட்டது?” என்றார்.

”காற்று” என்றான் இளைஞன்.

”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா” என்று சொல்லி விட்டார்.

நீதி :முதலில் தகுதியாக்கிக் கொள். பின்னர் ஆசைப்படு (First Deserve & then Desire)

'அனேகன்' ஷூட்டிங்கில் தனுஷ் பிசி - பொங்கல் கொண்டாட்டம் மிஸ்



அனேகன் படப்பிடிப்பில் இருப்பதால் தனுஷ் பொங்கல் கொண்டாட்டத்தை மிஸ் பண்ணுகிறார்.

கே.வி. ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழகமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். என்னதான் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தனுஷ் படப்பிடிப்பில் ஆர்வமுடன் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பாலிவுட் படமான இஷாக் மூலம் அறிமுகமான அமீரா நடிக்கிறார். அனேகன் படத்தில் தனுஷ் நான்கு வித்தியாசமான லுக்கில் வருவார் என்று கே.வி. ஆனந்த் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

காதல், ஆக்ஷன் கலந்த அனேகன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைப் பணியை கவனக்கிறார்.
 
back to top