ஸ்டண்ட் சில்வாவிடம் வீரம் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியது குறித்து கேட்டபோது “வீரம் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியின் போது ரயிலில் தொங்கியபடியே செய்யவேண்டிய ஆக்ஷன் காட்சி ஒன்று இருந்தது.
அந்த காட்சி ரொம்பவும் ரிஸ்கான காட்சி என்பதால் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படமாக்கலாம் என்று முடிவெடுத்தோம். இதுகுறித்து அஜித் சாரிடம் சொன்னபோது அவர்,
‘எதுக்கு டூப் போட்டு ஷூட் பண்ணனும். டூப் போட்றவரும் மனிதர் தான் நானும் மனிதன் தான். தவறாக ஏதாவது நடந்தால் அவருக்கு உண்டாகும் காயம் தான் எனக்கும் ஏற்படும். அவருக்கு அடிபடலாம் எனக்கு அடிபடக் கூடாதா? இந்த படத்தில் நடிப்பது மூலம் பெயர் கிடைக்கப்போவது எனக்கு தானே தவிர அவருக்கு இல்லை.
இந்த காட்சியில் நானே நடிக்கிறேன்’ என்று கூறினார். இதைக்கேட்டு யூனிட் முழுவதும் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், ஒரு விதமான பயம் இருந்தது. ஆனால் அந்தக் காட்சி அற்புதமாக வந்திருக்கிறது. அனைவரையும் ஒரே சமமாக மதிக்கும் அஜித் சாரின் பெருந்தன்மையை யூனிட்டே புகழ்ந்தது” என்று கூறினார்.



10:55 PM
Unknown

Posted in:
0 comments:
Post a Comment