.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, September 12, 2013

கோபம் கொண்டால்? - குறுங்கதை!

 
 
 
       ஒரு சிறுவன் சரியான முன் கோபக்காரனாக இருந்தான். அவனை கண்டிக்க நினைத்த அவனது தந்தை அவனை அழைத்து மகனே, இதோ இந்த வெள்ளைச் சுவற்றைப் பார்! நீ ஒவ்வொரு தடவையும் கோபப்படும் போதும் இந்த சுவற்றில் ஒரு ஆணியை அடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதிலிருந்து அந்த சிறுவன் ஒவ்வொரு முறை கோபப்ப்படும் போதும் அந்த சுவற்றில் ஆணி அடித்தார் அந்த தந்தை. கொஞ்ச நாளில் அந்த சுவர் முழுசும் ஆணிகளால் நிரம்பியது. அதை பார்த்த சிறுவனுக்கு தனது குற்றம் என்ன என்று புரிந்தது. அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் குற்ற உணர்ச்சியால் கூனிக் குறுகி நின்றான்.
 
 
     அவனாக தந்தையிடம் அப்பா. நான் இனி கோபப்பட மாட்டேன், ஒழுங்காக இருக்கிறேன் என சொன்னான். அவனை பாசத்துடன் அனைத்து நீ கொபப்பட்டதால் நான் சுவற்றில் அறைந்த ஆணிகளை நீயே பிடுங்கி எடுத்து விடு என சொன்னார். அவனும் நாள் முழுசும் கஷ்டப்பட்டு அந்த ஆணிகளை எல்லாம் பிடுங்கினான். ஆனால் அந்த சுவர் முழுசும் அந்த ஆணிகள் அறைந்த தழும்புகள் அப்படியே இருந்தன. அந்த சிறுவன் சுவற்றின் தழும்புகளை தந்தையிடம் காட்டி அழுதான். ஆணிகளை பிடுங்கி விட்டேன். ஆனால் அதன் அடையாளம் இருகிறதே என வருத்தத்துடன் சொன்னான். அவனது தந்தை, கோபமும் இதைப் போல தான் மகனே, கோபத்தை நாம் நிறுத்தி விட்டாலும், அதன் விளைவுகளை நம்மால் அழிக்க முடியாது என்றார். 
 
 
நீதி: கோபத்தின் விளைவுகள் பயங்கரமானது. எனவே கோபம் கொள்ளுதல் கூடாது.

இளமை தோற்றத்தை தக்கவைக்கும் 14 உணவுகள்!


இளமை தோற்றத்தை தக்கவைக்கும் 14 உணவுகள்


உடலுக்கு போதாது. எல்லா வித சத்துக்களும் உடலுக்கு அவசியம். அதில் வைட்டமின் `சி' கண்ணிற்கு நல்லது, ஓமேகா3 இதயத்திற்கு நல்லது என ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு சக்தியை உடலுக்கு தந்து, மனதுக்கும், உடலுக்கும் தேவையான பலத்தை அளிக்கின்றது.

எனவே அளவான உணவை தேவையான சத்துக்களுடன் எடுத்துக் கொண்டாலே, ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வாழ முடியும். குறிப்பாக நோய் இல்லாமல் இருந்தாலே, இளமையுடன் காட்சியளிக்க முடியும். சரி, இப்போது உடலில் ஏற்படும் நோய்களைத் தடுத்து, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் சில உணவுகள் பற்றிப் பார்ப்போமா!

1.ஆப்பிள்/திராட்சை/செர்ரி/ஸ்ட்ராபெர்ரி :

மேற்கூறியவற்றில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. மேலும் இந்த பழங்களில் எலாஜிக் அமிலங்கள் உள்ளன. இவை புற்றுநோய் வருவதை தடுக்கின்றது.

2.முட்டைக்கோஸ் குடும்பம் :

முட்டைக்கோஸ் குடும்பம் என்று சொல்லப்படும் முட்டைக் கோஸ், காலிஃபிளவர், ப்ராக் கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகள் போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலும் இந்த காய்கறிகளில் பீட்டா கரோட்டின், மற்றும் ஐஸோதியோசயனைடுகள் (குறிப்பாக ப்ரோக்கோலியில் காணப்படும்) புற்றுநோயை தடுக்கின்றது.

3.மிளகாய்/மிளகுத்தூள் :

மிளகாய் வயிற்றை சேதப்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது நிபுணர்கள் மிளகாயில் இருக்கும் லேசான எரிச்சல் வயிற்றின் பாதுகாப்பிற்கு உதவுகின்றது என்று கூறுகின்றனர். இந்த காரம் புண் மற்றும் செல் பாதிப்பை தடுக்க உதவும்.

மேலும் இவற்றில் வைட்டமின் `சி' மற்றும் நோயெதிர்ப்பு எதிர்ப்பு சக்தி தரும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அதிலும் குடைமிளகாயின் உள் இருக்கும் ஒரு வித காரம் தரும் பொருளில் ஆக்ஸிஜனேற்றம் தரும் தன்மை உள்ளது என்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது.

4.சிட்ரஸ் பழங்கள் :

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் புற்றுநோயை தடுக்க உதவும். இவற்றில் இருக்கும் வைட்டமின் `சி', லிமொனின் போன்றவை புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை பாதித்து அந்நோய் தாக்காமல் காக்கின்றது. மேலும் சருமத்தை பொலிவோடு, இளமையுடன் வைத்துக்கொள்கிறது.

5.பூண்டு மற்றும் வெங்காயக் குடும்பம் :

பூண்டில் உள்ள அல்லிசின், மோசமான கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைத்து, ரத்தத்தின் நல்ல கொழுப்புத் தன்மையை அதிகப்படுத்தி, உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றது. இதனால் இவை ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இது ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ளது. வெங்காயம், வெங்காயத்தாள், சின்ன வெங்காயம் போன்றவற்றில் ஆலியம் என்ற தன்மை உள்ளது. இவை இதயம் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் நல்லது.

6.க்ரீன் டீ :

க்ரீன் டீயில் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உள்ளது. மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால்கள் புற்றுநோயை தீர்க்க உதவுகின்றது என்று கூறப்படுகின்றது. இது இதயத்திற்கும், கல்லீரலுக்கும் மிகவும் நல்லது.

7.கீரைகள் :

பசலைக் கீரை, வெந்தயக்கீரை, லெட்யூஸ், பார்ஸ்லி, செலரி போன்றவற்றில் உள்ள பீட்டா கரோட்டின் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

8.ஓட்ஸ் :

இதயத்திற்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. அதற்கு தினமும் ஒரு கப் ஓட்ஸ் எடுத்துக் கொண்டால், சக்கரை அளவை கட்டுப்படுத்தி, இதயத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

9.மீன் :

கானாங்கெளுத்தி, சால்மன், சூரை, மத்தி, கடல் மீன், ஏரி, ட்ரௌட் போன்ற மீன்களில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ரத்த உறைவைப் போக்கும். ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் கீல்வாதம், சரும அழற்சி மற்றும் அல்சரேட்டிவ் கொலிட்டஸ் போன்ற அழற்சி ஏற்படுத்தும் நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

10.ஆலிவ்/ரேப்சீடு எண்ணெய் :

அதிகமாக எண்ணெய் எடுத்து கொள்வது கெடுதல் தான். ஆனால் பதப்படுத்தப்பட்ட எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக மோனோ அன்சாச்சுரேட்டர் ரக எண்ணெய் மிகவும் நல்லது. இது ஆலிவ் மற்றும் ரேப்சீடு எண்ணெயில் அதிகமாக உள்ளது.

11.பப்பாளி/கேரட் :

மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் நிற காய்கறிகளான பூசணி, மாம்பழம், ஆப்ரிக்காட், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை விட, பப்பாளி மற்றம் கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது.

12.சோயா பொருட்கள் :

சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் மற்றும் டோஃபு உணவானது குறைந்த கொழுப்பு கொண்ட கால்சியம் நிறைந்த உணவாகும். ஜெனிஸ்டின் நிறைந்த சோயா தயாரிப்புகள் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை வாய்ந்தது.

13.தக்காளி :

புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது தக்காளி. லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டு போன்றவை புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதில் கவுமாரிக் மற்றும் கோல்ரோஜினிக் அமிலம் அதிகமாக இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கின்றது.

14.தயிர் :

ஆய்வு ஒன்றில் பாக்டீரியா அதிகம் உள்ள தயிரானது செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்று கூறுகின்றது. அதுமட்டுமின்றி, இதில் கால்சியம் அதிக உள்ளதால், இந்த உணவு ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எதிராக பயன்படுகின்றது. எனவே மேற்கூறிய அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் நோய்கள் தாக்காமல், சருமமும் நன்கு இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படும். 

கேரட்- பீட்ரூட் சூப்!

 கேரட்-  பீட்ரூட் சூப்


தேவையானவை:

பீட்ரூட்  –2
கேரட்  – 2
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கவும்),
வெங்காயம் – ஒன்று
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு,
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
வெண்ணெய் - தாளிக்க

செய்முறை:

• கேரட், பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

• வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

• காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.

• இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டவும்.

• அதில் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


காய்கறி, பழங்கள் வீடு தேடி வரும்: சுயஉதவி குழுக்கள் மூலம் விற்க அரசு ஏற்பாடு!

 காய்கறி, பழங்கள் வீடு தேடி வரும்: சுயஉதவி குழுக்கள் மூலம் விற்க அரசு ஏற்பாடு


சென்னை மாநகராட்சி மூலம் அம்மா உணவகம் 200 இடங்களில் தொடங்கப்பட்டு குறைந்த விலை யில் உணவு வழங்கி வரு கிறது. இதில் அந்தந்த பகுதி மகளிர் சுயஉதவி குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இதேபோல காய்கறிகள், பழங்கள் பூ விற்பனையிலும் மகளிர் குழுக்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், பழங்களை நேரிடையாக கொள்முதல் செய்து பொது மக்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டு சென்று விற்கலாம்.

தள்ளுவண்டியில் எப்படி தெருத்தெருவாக பழங்கள், காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறதோ அது போல சிறிய வேன், ஆட்டோ போன்றவற்றில் காய்கறிகள், பழங்களை கொண்டு வந்து முக்கிய வீதிகளில் சந்திப்புகளில் விற்க திட்டமிடப்படுகிறது.

இந்த பணியில் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்களை ஈடுபடுத்தினால் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று அரசு கருதுகிறது.

கோயம்பேட்டில் பொது மக்கள் நேரிடையாக சென்று காய்கறிகள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. மார்க்கெட்டிற்கு சென்று வாங்குவதற்கு பதிலாக ஒவ்வொரு பகுதியிலும் சுயஉதவி குழு பெண்கள் மூலமாக குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய அரசு பரிசீலனை செய்கிறது.

இதனால் பொது மக்கள் அலைந்து திரியாமல் வீட்டிற்கு அருகிலேயே மலிவான விலையில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பெற முடியும்.
கோயம்பேடு மார்க்கெட் அருகில் மெட்ரோ ரெயில் நிலையம், பராமரிப்பு மையம் போன்றவை கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. பொது மக்கள் காய்கறிகள் வாங்க வாகனங்களில் வர முடியாத நிலை உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் பொது மக்களுக்கும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு பகுதி ஏழை பெண்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதாக அமையும்.

நடப்பது யாவும் நல்லதற்கே..........குட்டிக்கதை



ஒரு கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறால்...கடலில் மூழ்கியது.அதிலிருந்த அனைவரும் மடிந்தனர்.கப்பல் கேப்டன் மட்டும் உயிர்பிழைத்து..நீந்தியபடியே ஆள் இல்லாதீவு ஒன்றிற்கு வந்தான்

தனியாக என்ன செய்வது எனத்தெரியாத அவன்..அந்தத்தீவில் கிடைத்த ஓலை..குச்சி எல்லாவற்றையும் சேகரித்து இருக்க ஒரு குடிசையை அமைத்துக்கொண்டான்.

பின் வயிற்றைக் கிள்ளியதால் ..உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா..என்று தீவைச் சுிற்றிவரக் கிளம்பினான்.திரும்பி வந்து பார்த்தபோது...அவன் அமைத்திருந்த குடிசை தீப்பற்றி எறிஞ்சிருந்தது...

அதைப் பார்த்த அவன் கண்களில் நீருடன் 'கடவுளே நான் என்ன தீங்கு செய்தேன்..என்னை யாருமில்லா தீவில் சேர்த்தாய்.உண்ண உணவில்லை.இருக்க கட்டிய குடிசையும் தீப்பற்றி எறிய வைத்துவிட்டாயே' எனக் கதறினான்.

அப்போது ..அந்தத் தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது..அதில் இருந்தவர்கள் இவனைக் காப்பாற்றி தங்கள் கப்பலில் ஏற்றினர்.

'நான் இங்கு மாட்டிக்கொண்டது உங்களுக்கு எப்படித் தெரிந்தது'என அவர்களிடம் இவன் கேட்டான்.

அவர்கள் சொன்னார்கள்..'யாருமில்லா தீவில் நெருப்பு பற்றி எறிந்ததைக் கண்டோம்...உடன் யாருக்கோ உதவி தேவை என்பதை உணர்ந்து வந்தோம்'. .என்றனர்.

கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்கே என்பதை உணர்ந்தான் அவன்.

மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினி!



ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பெருமளவில் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.அதாவது ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பட்டினி கிடக்கின்றனர்.அதாவது நாள் ஒன்றுக்கு 87 கோடி பேர் உணவு இன்றி பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது.


sep 12 Global-Food-Losses-

 


உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதன் மூலம் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மீன்கள் மற்றும் கடல் உணவு பொருட்கள் அடங்காது.உலகம் முழுவதும் 28 சதவீதம் நிலங்களில் விவசாயம் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை வளர்ந்த நாடுகளில் பெருமளவில் வாங்கப்பட்டு சாப்பிடாமல் குப்பையில் கொட்டப்படுகின்றன.
இவை தவிர அதிகமாக விளையும் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததும் ஒரு காரணமாகும்.ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற காரணங்களால் உணவு பொருள் வீணாகிறது. அதே வேளையில் சீனா மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.


One third of food wasted, costs world economy $750 bn: UN

************************************************** 


One third of the food produced worldwide is wasted, costing the global economy around $750 billion a year, a new report by the UN food agency said today.The Rome-based Food and Agriculture Organisation (FAO) said some 1.3 billion tonnes of food are wasted every year, with the Asia region including China seen as the worst culprit.The food agency’s director general, Jose Graziano da Silva, told a press conference that in total, “one third of the food produced today is lost or wasted… equivalent to the Gross Domestic Production (GDP) of Switzerland.”

இளவயசு மாதவிலக்கு – சில விளக்கங்கள்!



பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் மாதவிலக்கையும் அதன் இறுதிக்கட்டமான மெனோபாஸையும் சந்தித்தே தீர வேண்டும். மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம்.


“ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாம போகிறப்ப மாதவிலக்கு வராது. அதை தான் மெனோபாஸ்னு சொல்கிறோம்.


sep 12 - lady various

 


சிலருக்கு சராசரியை விட சீக்கிரமே, அதாவது 40 வயசுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபியோட விளைவுனு இளவயசு மெனோபாஸூக்கான காரணங்கள் பல இருக்கிறது. இவை தவிர ப்ரீ மெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் பிரச்சனையாலையும் சீக்கிரமே மெனோபாஸ் வரலாம். அதாவது சினைப்பைல சுரக்கிற ஹாமோனுக்கு மூளையிலேர்ந்து சிக்னல் கிடைக்காவிட்டால், 25 வயசுல கூட மெனோபாஸ் வரலாம். 


மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கிறவங்களுக்கு (20 முதல் 25 நாட்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும் 2, 3 மாதத்துக்கு ஒரு முறை வர்றவங்களுக்கு மாதவிலக்கு மூலமா இழக்கப்படற முட்டைகள் குறையறதால, மெனோபாஸூம் லேட் ஆகும். சீக்கிரமே வயசுக்கு வர்றவங்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவும், வயசு கடந்து வாற்வங்களுக்கு அது தாமதமாகவும் வரும். 50வயசுல மெனோபாஸ் வர்றவங்களுக்கு சரியான கவனிப்பு அவசியம். 


அப்படியிருக்கிறப்ப இளவயசு மாதவிலக்கு நிற்கும் போது கூடுதல் அக்கறை அவசியம். ஈஸ்ரோஜென் ஹார்மோன் இல்லாம, எலும்புகள் பாதிக்கப்படும். கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்க வேண்டியிருக்கும். பால், தயிர்னு உணவு மூலமா கிடைக்கிற கால்சியம் மட்டும் போதாது. வைட்டமின் கூட கால்சியமும் சேர்த்து எடுத்துக்கணும். இல்லாட்டி எலும்புகள் பஞ்சு மாதிரி மாறி ஆஸ்டியோபொரோசிஸ் வரும். மெனோபாஸ்ல இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுங்கிறதால அதுக்கான பரிசோதனையும் அவசியம். இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாம சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனையும் அவசியம்” என வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

ஆல் இன் ஆல் அழகு ராஜா – கொஞ்சம் முன்னோட்டம்!



ஒரு கல் ஒரு கண்ணாடி.சிவா மனசுல சக்தி, பாஸ்என்கிற பாஸ்கரன் ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா.இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 


கார்த்தி-காஜல் ஜோடி சேரும் இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு இருவரும் நான் மகான் அல்ல படத்தில் ஜோடி சேர்ந்திருந்தனர். தமன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படம் காமெடி கலந்த ஃபேமிலி சென்டிமென்ட்டாக உருவாகி வருகிறது.மேலும் படத்தில் கார்த்திக்கு அப்பாவாக பிரபு நடிக்கிறார். 


கதையில் பிரபுவுக்கு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறதாம். இதில் இளவயது பிரபுவாக கார்த்தி நடித்திருக்கிறார். வழக்கமாக ஃப்ளாஷ்பேக் காட்சியில் சம்பந்தப்பட்ட நடிகர் தான் நடிப்பார். ஆனால் ஒரு புதுமைக்காக ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சியில் பிரபுவுக்கு பதிலாக கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.முதலில் இளவயது பிரபுவாக அவரையே நடிக்க வைக்க முடிவு செய்து பின்பு ஒரு மாறுதலாக இருக்கட்டும் என்று கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்களாம்.


சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு!

இந்தியாவில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு நாட்டு அணியை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுக்கு அழைக்கப்படும் என்று தெரிகிறது.


sep 12 - criket

 


10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.முன்னதாக வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று போட்டிகள் மொகாலியில் நடக்கிறது. தகுதி சுற்றில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் (இந்தியா), ஒட்டகோ வோல்ட்ஸ் (நியூசிலாந்து), கந்துரதா மரூன்ஸ்(இலங்கை) ஆகிய அணிகளுடன் பைசலாபாத் வோல்வ்ஸ் (பாகிஸ்தான்) அணியும் களம் இறங்க இருந்தது. தகுதி சுற்று முடிவில் இரு அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறல் அதிகரித்து வருவதால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் சமீப காலமாக சுமுகமான நிலை இல்லை. இதையடுத்து கவனமாக பரிசீலித்து மிகுந்த முன் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பு கருதியும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மறுப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

India refuses visa to a Pak team for Champions League Twenty20

****************************************************


 India has refused visa to Pakistani team, Faisalabad Wolves, to participate in Champions League Twenty20 tournament scheduled to begin from September 17 in view of abundance precaution.The government’s decision not to give visas to the Pakistani team to participate in the limited over cricket tournament comes in the backdrop of recent ceasefire violations along the Line of Control (LOC) creating tension between the two countries.

ஐ.நா. சபையில் பேச போகும் பீகார் சிறுமிகள்!


ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டம் வருகிற 24–ந்தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடக்கிறது. அதில் உலக நாடுகளை சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்டு சமூக சீர்கேடுகள் மற்றும் பசி கொடுமையை நீக்குதல் குறித்து விவாதிக்கின்றனர்.அதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 11 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பூனம்குமாரி (14), நஷியா அப்ரீன் (19) ஆகியோரும் அடங்குவர்.

sep 12 united_nations_

 


பூனம்குமாரி நரிக்குஞ்சன் கிராமத்தில் 5–வது வகுப்பு படிக்கிறார். மகா தலித் இனத்தை சேர்ந்தவர். குழந்தையாக இருந்த போதே உறவினர் ஒருவர் இவரை திருமணம் செய்ய விரும்பினார். அதை எதிர்த்து போராடி கல்வி பயின்று வருகிறார்.

பெண்கள் கல்வி பயில வேண்டும். குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என விரும்புகிறார். தங்களது சமூக பெண் குழந்தைகள் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். கல்வி பயில பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதில்லை என வருத்தத்துடன் கூறினார். ஐ.நா.வில் தனது கருத்துக்களை பிரதிபலிக்கிறார்.



நஷியா அப்ரீன் குல்ஷார்பக் கிராமத்தை சேர்ந்தவர் ஐ.நா.வில் பேசும் போது ‘‘கிராமப்புறங்களில் வாழும் சிறுமிகளின் பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் கல்வி நிலை குறித்தும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விளக்குகிறார்.


2 Bihar girls to address UN assembly on September 24

*********************************************** 


Two teenage girls from Bihar would tell world leaders about problems facing a girl child in the state at United Nations (UN) general assembly on September 24. Poonam Kumari, 14, and Nazia Afreen, 17, are among the 11 children from India who will get an opportunity to put forth their views on inclusive education and its various aspects in front of the world.

'கெட்ட சகவாசம்'.........குட்டிக்கதை



அருண் நன்கு படிக்கும் மாணவன்.ஆனால் கடந்த சில மாதங்களாக தேர்வில் அவன் எதிபார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை.இது அவனது தந்தையை வேதனை அடையச் செய்தது.

அவனின் இந்த நிலைக்கு என்னக் காரணம் என்று அவன் தந்தை...சில ஆசிரியர்களை வினவ ..ஒரு ஆசிரியர்..'சமீபகாலமாக அவன் நண்பர்கள் சரியில்லை...அவர்கள் படிக்காமல் ஊர் சுற்றுபவர்கள் என்று சொன்னார்.

அது கேட்டு அவன் தந்தை அருணைக் கூப்பிட்டு நயமாக..கெட்ட சகவாசத்தை விடச் சொன்னார்...அருணோ அதற்கு இசையவில்லை....தன் நண்பர்களால் தன்னை மாற்ற முடியாது என்றான்.

அப்போது ..அவன் தந்தை ஒரு கூடையில் சில ஆப்பிள்களைக் கொண்டு வந்தார்...அருணிடம் ..ஒரு அழுகிய ஆப்பிளைக் கொடுத்து கூடையில் இருந்த மற்ற ஆப்பிள்களுடன் வைக்கச் சொன்னார்.

இரவு கழிந்தது..

மறுநாள்,,அந்த ஆப்பிள் கூடையை அருணைக் கொண்டு வரச்சொன்னார்...கூடையில் மேலும் சில ஆப்பிள்கள் அழுகியிருந்தன...

அருணின் அப்பா சொன்னார்...'அருண் பார்த்தாயா நேற்று கூடையில் நல்ல ஆப்பிள்கள் இருந்தன.அத்துடன் ஒரு அழுகிய ஆப்பிளை வைத்ததுமே மற்ற ஆப்பிள்களும் கெட்டுப்போகத் தொடங்கி விட்டன.அதுபோல நல்ல நண்பர்களுடன் ஒரு கெட்ட நண்பன் சேர்ந்தாலும்,நல்ல நண்பர்கள் அனைவரையும் கெடுத்துவிடுவான்.ஆனால் உனக்கோ கெட்ட நண்பர்கள் அதிகம்' என்றார்.

அது கேட்டு...அருண் ...தன் தவறை உணர்ந்து தன் கெட்ட நண்பர்கள் சகவாசத்தை விட்டான்.
 

ஆட்டின் புத்திசாலித்தனம்.........குட்டிக்கதை



ஒரு காட்டில் ஓநாய் ஒன்று இருந்தது..அது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து ..ஊரில் இருந்த ஆடு..மாடுகளை வீழ்த்தி உண்டு வந்தது..

அதே ஊரில் மாடசாமி என்பவன் ஒரு ஆட்டை வளர்த்து வந்தான்.அந்த ஆடு புத்திசாலியாக வளர்ந்தது...

ஒரு நாள் இரவு ஊருக்குள் வந்த ஓநாய் மாடசாமியின் ஆட்டைப் பார்த்துவிட்டது,அதன் மீது பாய தயாரானது...ஆடோ..உயரமான இடத்திற்கு ஓடியது.அங்கிருந்தபடியே புத்திசாலியான அந்த ஆடு..
கீழே இருந்த ஓநாயிடம் ..'உமக்கு உணவாக ஆக நான் தயார்...ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சிறு ஆசை...இவ்வளவு அழகாக உள்ள நீங்கள் பாட...நான் ஆட வேண்டும்' என்று கூறியது.

தன்னை அழகன் என்ற புகழ்ச்சியில் மகிழ்ந்த ஓநாய் பாட சம்மதித்து தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.

அந்த சத்தம் கேட்டு ..தூங்கிக்கொண்டிருந்த ஊர்மக்கள் விழித்தெழிந்து வந்து ஓநாயை அடித்துக் கொன்றனர்.

புகழ்ச்சியில் மயங்கிய ஓநாய் உயிரைவிட்டது.ஊரில் இருந்த ஆடு..மாடுகள் பயமின்றி வாழ்ந்தன...மாடசாமியின் ஆட்டின் புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டினர்.

தொழில்நுட்ப தேர்வு இன்று முடிவு வெளியீடு!



தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு:கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஓவியம், இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, 12ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ்கள், இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Click Here

ரஜினி பட தலைப்பில் கார்த்தி!! ரஞ்சித் இயக்குகிறார்!


 சகுனி, அலெக்ஸ்பாண்டியன் படங்களின் தொடர் தோல்விகளுக்கு பிறகு கார்த்தி ரொம்ப நிதானமாகவும், படத்தின் கதையை நன்றாக கேட்டும் அடுத்த படத்தை ஹிட் படமாக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் தற்போது வெங்கட்பிரபுவின் ‘பிரியாணி’ படத்திலும், ராஜேஷின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு அடுத்தபடியாக ஒரு படத்தில் கார்த்தி நடிக்கிறார். ‘அட்டகத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித் தான் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குகிறார். வழக்கம் போல் கார்த்தி, சூர்யாவின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனமான ஞானவேல் ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் ஹீரோயினாக மும்பையை சேர்ந்த மாடல் ஒருவர் அறிமுகமாகிறார். ரஜினி நடித்த படங்களின் தலைப்பு ஒன்று தான் இப்படத்தின் தலைப்பாக இருக்கிறது. ஆனால் அது என்ன தலைப்பு என்பதை வெளியிடவில்லை.

இதுகுறித்து படத்தின் டைரக்டர் ரஞ்சித் கூறுகையில், படத்திற்கு ரஜினி பட பெயரைத் தான் தேர்வு செய்துள்ளோம். ஆனால் அது என்னவென்று இப்போது கூற முடியாது. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பையும், படத்‌தின் தலைப்பையும் அறிவிக்கிறோம் என்று கூறினார்.

ஏற்கனவே மூன்று முகம் படத்தில், ரஜினி கேரக்டரின் ஒரு பெயரான அலெக்ஸ் பாண்டியன் என்ற பெயரில் தான் கார்த்தி நடித்த கடைசி படமான அலெக்ஸ் பாண்டியன் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

பரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் சீக்கிரம் வரும்!



"பரோட்டா அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு, நீரிழிவு நோய் வர அதிகம் வாய்ப்புள்ளது,'' என்று, கோவையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மைதா மாவினால் தயாரிக்கப்படும் "பரோட்டா' உணவு, நமது பாரம்பரிய உணவுகளைப் பின்னுக்குத்தள்ளி, தமிழக மக்களின் முக்கிய உணவாக மாறியுள்ளது; இதனால், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி சார்பில், கோவையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில், நேற்று காலை 11 மணியளவில், இந்த பேரணியை பாரதியார் பல்கலை பதிவாளர் ராதாகிருஷணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி, பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக, வ.உ.சி., மைதானம் வந்தடைந்தது. மாணவ, மாணவியர் புரோட்டா உணவால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தி கோஷமிட்ட படி நடந்து வந்தனர்.

இதுகுறித்து ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி முதன்மை செயலாளர் அஜீத்குமார் லால்மோகன் கூறியதாவது: சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் மட்டுமில்லை; சாப்பிட கூடாத உணவைச் சாப்பிடுவதாலும் பல்வேறு நோய்கள் உண்டாகி வருகின்றன. மக்களுக்கு தங்கள் சாப்பிடும் உணவு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. கடைகளில் புதிய பெயரில் எந்த உணவை விற்றாலும், அதை வாங்கிச் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. அதனால், உடலுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி அவர்கள் அறிவதில்லை. இன்றைக்கு பெரும்பாலான உணவு வகைகள், மைதா மாவில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் சிறிய மற்றும் நடுத்தர ஓட்டல்களில் மைதா மாவில் தயாரிக்கப்படும் "பரோட்டா'தான் அதிகளவில் விற்பனையாகிறது. மைதா மாவு, ரவையில் இருந்து தயாரிக்கப்படுகிறது; மைதா இயல்பாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்; அதை வெண்மையாக மாற்ற, "பென்சாயில் பெராக்ஸைடு' மற்றும் "அலாக்ஸான்' என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது; இதனால், மைதா வெள்ளை நிறமாகவும், மிருதுவான தன்மையுடனும் மாறுகிறது.இந்த "பென்சாயில் பெராக்ஸைடு' என்பது, அழகு நிலையங்களில் முகத்தை பொலிவு படுத்தவும், முகப்பருவை போக்கவும் பயன்படும் மருந்தாகும். "அலாக்ஸான்' என்பது படிகத்தன்மை கொண்ட வேதிக்கலவை. இது உணவில் கலந்தால், நீரிழிவு நோய் உண்டாகும் என, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், மைதாவில் "அலாக்ஸான்' கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இது கணையநீர் சுரப்பியை சோர்வடைய செய்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விடாமல் தடுக்கிறது.

இதனால் கணையத்தில் இன்சுலின் சுரப்பது தடை படுகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிவோருக்கும் நீரிழிவு நோய் வர அதிகமான வாய்ப்புள்ளது. மைதா "பரோட்டா' சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தற்போது பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நடத்திய ஆய்வில், "பரோட்டாவில் "கார்போஹைடிரேட்' அதிகம் இருப்பதும், நார் சத்து இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் விலை குறைவு என்பதால் "பரோட்டா' உள்ளிட்ட மைதாவில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் சாப்பிடுகின்றனர்; இதனால், பணக்காரர்களை மட்டுமே அதிகம் பாதித்து வந்த பல நோய்கள், ஏழைகளுக்கும் வர வாய்ப்புள்ளது; எனவே, "பரோட்டா' சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, அஜித்குமார் லால்மோகன் கூறினார்.

இது விலங்குகளுக்கான உணவு...!



மைதா மாவினால் தயாரிக்கப்படும் "பரோட்டா' குறித்த வேறு சில தகவல்கள்:
* மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நம் பாரம்பரிய உணவு இல்லை; பாரசீக நாட்டு உணவாகும். ஆரம்பத்தில், இது வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கான உணவாக இருந்தது.
* மைதா மாவை வேக வைத்து கவனமாக உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு உணவு கொடுத்தால் போதும், பிறகு இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்கத் தேவையில்லை. இதில், கொழுப்புச் சத்துஅதிகம் இருப்பதால், பன்றிகளுக்கும் உணவாக கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இதில் ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிடத் துவங்கினர்.
* இன்றைக்கு மைதாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிக அளவில் தயாரிக்கப்படுவது புரோட்டா மட்டுமே.

அக்., 21க்கு பின்னர் செவ்வாய்க்கு செயற்கை கோள் : இஸ்ரோ



ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக தயாரி்க்கப்பட்டுள்ள‌ ‌செயற்கை கோள் விண்ணில் ஏவ தாயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோவின் செவ்வாய் திட்ட இயக்குனர் அருணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
முதல் செயற்கைகோள்:


இந்தியாவில் இருந்து ஏற்கனவே பூமியின் சுற்றுவட்டப்பாதை மற்றும் சநதிரன் போன்றவற்றிற்கு செயற்கை கோள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நீண்ட தொலைவில் உள்ள வேறு கிரகம் ஒன்றிற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும் முதல் செயற்கை கோள் இதுவாகும்.
பி.எஸ்.எல்.வி., ராக்கெட் உத‌வியுடன் இதனை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 340 கிலோ ‌எடை கொண்ட செயற்கை கோளில் சுமார் 5 அறிவியல் ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கருவிகளின் மொத்த எடை1 5 கிலோ வாகும். இவை செவ்வாய் கிரகத்தி்ல் உள்ள மீத்தேன், கனிம வளம், கிரகத்தின் அமைப்பு , போன்றவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும்.

அக்.,21 முதல் நவ.,19க்குள்:


விண்ணில் செலுத்தப்படும் செயற்கை கோள் 21.8 கோடி கிலோ மீட்டர் தூரத்தை ஒன்பது மாதங்கள் தொடர்ந்து பயணம் செவ்வாயை அடையும். பின்னர் கிரகத்தின் 385 கி.மீ தூரம் நெருக்கமாகவும் 80 ஆயிரம் கி.மீ தூரத்திலும் சுற்றி வரும். கிரகத்தை ஒரு த‌டவை சுற்றிவர மூன்று நாட்களாகும். சுமார் ஆறு மாத காலம் வரை ஆராய்ச்சியில் ஈடுபடும்.
தற்போதைய நிலையில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக பிறநாடுகள் அனுப்பிய செயற்கை கோள்கள் அனைத்தும் பாதியளவே வெற்றியடைந்துள்ளது. தற்போது இந்தியா அனுப்ப உள்ள செயற்கை கோளில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அவற்றை தானாகவே சரி செய்து கொள்ளும் ‌தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வரும் 26-ம் ‌‌தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிஹோட்டா விண்வெளி ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அக்டோபர் மாதம் 21-ம் ‌தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி்க்குள் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்படஉள்ளது.

ஓராண்டிற்குள் தயார்:


இதுகுறித்து சந்திராயன்-2 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது: மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 21-ம் ‌தேதி இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. இந்தியாவின் தொழில் நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக குறுகிய காலத்திற்குள் செய‌ற்க‌ை‌‌கோள் வடிவமைக்கப்பட்டு விண்ணில் செலுத்த தயாராக உளளது என கூறினார். 

 
back to top