.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, September 12, 2013

அக்., 21க்கு பின்னர் செவ்வாய்க்கு செயற்கை கோள் : இஸ்ரோ



ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக தயாரி்க்கப்பட்டுள்ள‌ ‌செயற்கை கோள் விண்ணில் ஏவ தாயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோவின் செவ்வாய் திட்ட இயக்குனர் அருணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
முதல் செயற்கைகோள்:


இந்தியாவில் இருந்து ஏற்கனவே பூமியின் சுற்றுவட்டப்பாதை மற்றும் சநதிரன் போன்றவற்றிற்கு செயற்கை கோள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நீண்ட தொலைவில் உள்ள வேறு கிரகம் ஒன்றிற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும் முதல் செயற்கை கோள் இதுவாகும்.
பி.எஸ்.எல்.வி., ராக்கெட் உத‌வியுடன் இதனை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 340 கிலோ ‌எடை கொண்ட செயற்கை கோளில் சுமார் 5 அறிவியல் ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கருவிகளின் மொத்த எடை1 5 கிலோ வாகும். இவை செவ்வாய் கிரகத்தி்ல் உள்ள மீத்தேன், கனிம வளம், கிரகத்தின் அமைப்பு , போன்றவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும்.

அக்.,21 முதல் நவ.,19க்குள்:


விண்ணில் செலுத்தப்படும் செயற்கை கோள் 21.8 கோடி கிலோ மீட்டர் தூரத்தை ஒன்பது மாதங்கள் தொடர்ந்து பயணம் செவ்வாயை அடையும். பின்னர் கிரகத்தின் 385 கி.மீ தூரம் நெருக்கமாகவும் 80 ஆயிரம் கி.மீ தூரத்திலும் சுற்றி வரும். கிரகத்தை ஒரு த‌டவை சுற்றிவர மூன்று நாட்களாகும். சுமார் ஆறு மாத காலம் வரை ஆராய்ச்சியில் ஈடுபடும்.
தற்போதைய நிலையில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக பிறநாடுகள் அனுப்பிய செயற்கை கோள்கள் அனைத்தும் பாதியளவே வெற்றியடைந்துள்ளது. தற்போது இந்தியா அனுப்ப உள்ள செயற்கை கோளில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அவற்றை தானாகவே சரி செய்து கொள்ளும் ‌தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வரும் 26-ம் ‌‌தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிஹோட்டா விண்வெளி ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அக்டோபர் மாதம் 21-ம் ‌தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி்க்குள் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்படஉள்ளது.

ஓராண்டிற்குள் தயார்:


இதுகுறித்து சந்திராயன்-2 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது: மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 21-ம் ‌தேதி இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. இந்தியாவின் தொழில் நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக குறுகிய காலத்திற்குள் செய‌ற்க‌ை‌‌கோள் வடிவமைக்கப்பட்டு விண்ணில் செலுத்த தயாராக உளளது என கூறினார். 

0 comments:

 
back to top