.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, November 9, 2014

ஜெய்ஹிந்த் 2 (2014) - திரைவிமர்சனம்

சென்னையில் சிறுவர்களை வைத்து கராத்தே பள்ளி நடத்தி வருகிறார் அர்ஜூன். இவரது கராத்தே பள்ளியில் படிக்கும் மாணவனின் சகோதரியுடன் அர்ஜூனை சந்திக்க வருகிறார் நாயகி சுர்வீன் சாவ்லா. இவர் அர்ஜூனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒருநாள் சுர்வீன் சாவ்லா தான் குடியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் மாடியில் துணிகளை காயவைக்கும் போது மேலிருந்து கீழே விழும் நிலையில் இருக்கிறார். அப்போது அந்த வழியாக வரும் அர்ஜூன் இவரை பார்த்ததும் வீட்டிற்குச் சென்று காப்பாற்றுகிறார்.

இதை பார்க்கும் சுர்வின் சாவ்லாவின் அப்பாவான மனோபாலாவும் அவரது மனைவியும், இவர்கள் இருவரும் காதலர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி வீட்டின் சம்மதத்துடன் அர்ஜூனை காதலில் விழவைக்கிறார் சுர்வின் சாவ்லா.

இவர்கள் வசிக்கும் பகுதியில் ஏழ்மையான குடும்பதைச் சேர்ந்தவர் தனது குழந்தையை நல்ல பள்ளியில் படிக்க வைக்க முயற்சி செய்கிறார். அந்தக் குழந்தையுடன் அர்ஜூன் மற்றும் சுர்வின் இருவரும் நன்றாக பேசி பழகுகிறார்கள். அந்தக் குழந்தை பெரிய பள்ளியில் இடம் கிடைத்தும் அதிக பணத்தை செலுத்த முடியாத காரணத்தால் பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறாள். இதனால் மனவேதனை அடையும் அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையை கொன்று விட்டு அவர்களும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதைக் கண்டு வேதனை அடையும் அர்ஜூன் நமது நாட்டின் கல்வி நிலைமையையும் ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்காமல் இருப்பதையும் மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார். மக்கள் அனைவருக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டும் எனபதற்காக முயற்சி எடுக்கிறார்.

அதில் முதல் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் முன்னால் பேட்டியளிக்கிறார். இதை மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளி உரிமையாளர்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அர்ஜூனை அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.

இதிலிருந்து அர்ஜூன் தப்பித்தாரா? நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வழி செய்தாரா? என்பதே மீதிக்கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெய்ஹிந்த் 2-ம் பாகத்தை எடுத்திருக்கும் அர்ஜூன், முதல் பாகத்தில் இருந்த அர்ஜூன் போல் இன்றும் சுறுசுறுப்புடனும் இளமையுடனும் இருக்கிறார். தேசப்பற்று என்பது நாட்டுக்கு வெளியே ஆயுதம் ஏந்தி போராடுவது மட்டுமல்லாமல் நாட்டுக்குள் வாழ்பவர்களுக்கு கிடைக்க கூடிய கல்வி மற்றும் பிற பொது நலன்கள் கிடைக்க போராடுவதும் தேசப்பற்றுதான் என்பதை இப்படத்தின் மூலம் காண்பித்திருக்கிறார். நாட்டிற்கு தேவையான முக்கியமான கருத்தை அழுத்தமாக சொல்லவந்த அர்ஜூனின் முயற்சி வரவேற்கக் கூடியது. ஆக்‌ஷன் காட்சிகளில் அர்ஜூனின் ஆக்‌ஷன் சற்றும் குறையாமல்  மிரட்டியிருக்கிறார். முற்பாதியில் ஒரு சில காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகின்றன.

நாயகி சுர்வின் சாவ்லா பார்க்க அழகாக இருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மயில்சாமி மற்றும் பிரமானந்தத்தின் காமெடி எடுபடவில்லை.

அர்ஜுன்ஜெனியாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். வேணுகோபாலின் ஒளிப்பதிவை ரசிக்கலாம்.

மொத்தத்தில் ‘ஜெய்ஹிந்த் 2’ ஆக்‌ஷன் விருந்து.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) - திரைவிமர்சனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி வருகிறார்கள் விமல் மற்றும் சூரி. இவர்கள் வேலை வெட்டி ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள மதுபானக் கடைகள் இவர்களால் மூடப்படுகிறது.

இதனால் அந்த ஊரில் உள்ள பெண்கள் இவர்களை வாழ்த்துகிறார்கள். அதில் ஒரு பெண் சூரி மீது காதல் கொள்கிறாள். சூரியும் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

காதலித்த முதல் நாளே வீட்டுக்கு தெரியாமல் சூரியும், அந்த பெண்ணும் ஊரை விட்டு சென்னைக்கு ஓடிச்செல்ல முடிவெடுக்கிறார்கள். இவர்களுக்கு விமல் உதவி செய்கிறார்.

அப்போது, தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் வைத்து, சூரி ஒரு 'அன்னாடங்காச்சி' என்பதை அந்த பெண்ணிடம் விமல் கூறிவிடுகிறார். இதனால் காதலி சூரியை விட்டு விலகி செல்கிறாள்.

மனமுடைந்த சூரி, விமலுடன் சென்னைக்கு செல்லலாம் என்று முடிவு செய்கிறான். ரெயிலில் நாயகி பிரியா ஆனந்தை பார்க்கிறார் விமல். டாக்டரான பிரியா ஆனந்தை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விமல்.

ரெயில் சென்று கொண்டிருக்கும் போது பிரியா ஆனந்தை ஒரு மர்ம கும்பல் கொலை செய்ய பார்க்கிறது. அவர்களிடம் இருந்து விமலும் சூரியும் பிரியா ஆனந்தை காப்பாற்றுகிறார்கள். அதன் பிறகு இவர்கள் யார்? எதற்காக உங்களை கொல்ல வருகிறார்கள்? என்று பிரியா ஆனந்திடம் கேட்கிறார்கள் விமலும் சூரியும்.

அதற்கு பிரியா ஆனந்த், தான் தூத்துக்குடியில் மருத்துவ முகாமிற்கு சென்றிருந்தபோது, தன் தோழி பணிபுரியும் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொண்டேன்.

இதற்கு தொழிற்சாலையை சரியாக பராமரிக்காததால் தான், தொழிலாளர்களை நோய் தாக்கியதாக அதன் முதலாளியான நாசரிடம் கூறினேன். அதற்கு அவர் என்னை அவமானப்படுத்திவிட்டார். இதனால் கோர்ட்டுக்கு சென்றேன். தீர்ப்பு நெருங்குவதால் என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று கூறுகிறார் பிரியா ஆனந்த்.

இதை கேட்ட விமலும் சூரியும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். இறுதியில் பிரியா ஆனந்த் கோர்ட்டில் வெற்றி பெற்றாரா? விமல் தன் காதலை பிரியா ஆனந்திடம் சொன்னாரா? என்பதே மீதிக்கதை.

படத்திற்கு ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்று தலைப்பு வைத்து கதை சொல்ல வந்த இயக்குனர் கண்ணன், சுவாரஸ்யமான கதையை சொல்ல தவறிவிட்டார். படத்தை பார்க்கும் ரசிகர்கள் கடைசி வரை சுவாரஸ்யம் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள்.

சூரி, தம்பி ராமையா, சிங்க முத்து என்று காமெடி நடிகர்களை வைத்து நகைச்சுவை படமாக எடுக்க முயற்சி செய்ததும் பெரிதாக எடுபடவில்லை. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு வரும் இன்னல்களும் முதலாளிகளின் அலட்சியத்தையும் சொல்ல நினைத்த இயக்குனரை பாராட்டலாம். ஆனால் அதை சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் ரசித்திருக்கலாம்.

படத்தில் விமல் தனது முந்தைய படங்களைப்போல வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னை விட சூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள கதையில் நடித்ததற்காக இவரை பாராட்டலாம்.

படம் முழுக்க நாயகனைவிட சூரியின் கையே மேலோங்கி இருக்கிறது. நடனம், சென்டிமென்ட், நகைச்சுவை என்று சிறப்பாக நடித்திருக்கிறார். நாசர் இதுவரை தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இப்படத்தில் மாறுபட்டு தெரிகிறார்.

பிரியா ஆனந்திற்கு ஒரு ஹீரோவுக்கு உண்டான அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்கள். தன் கதாபாத்திரத்தின் பொறுப்பை உணர்ந்து அதை சிறப்பாக செய்திருக்கிறார் என்றால் அது கேள்விக்குறிதான். பாடல்களில் கவர்ச்சியாக வந்து ரசிகர்களை மகிழ வைத்திருக்கிறார்.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். லட்சுமி மேனன் பாடிய பாடல் ரசிக்கும் படியாக உள்ளது. ஒளிப்பதிவு சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ கோமாளி

தட்டுங்கள் கைகளை..! விரட்டுங்கள் நோய்களை..!


1) நுனி விரல்களில் அழுத்தம் கொடுக்கும்போது, தலைமுதல் கழுத்துவரையிலுள்ள இரத்த ஓட்டம் சீராகும்!

2) உள்ளங்கைகளில் அழுத்தம் கொடுக்கும்போது, கழுத்து முதல் இடுப்புவரையிலுள்ள இரத்த ஓட்டம் சீராகும்!

3) மணிக்கட்டில் அழுத்தம் கொடுக்கும்போது, இடுப்பு முதல் பாதம் வரையிலுள்ள இரத்த ஓட்டம் சீராகும்!

4) சுண்டுவிரல்களில் அழுத்தம் கொடுக்கும்போது, இதயத்திற்குப் போகும் இரத்த ஓட்டம் சீராகும்!

5) கட்டை விரல்களில் அழுத்தம் கொடுக்கும்போது மூளைக்குப்
போகும் இரத்த ஓட்டம் சீராகும்!

6) ஆக, முழுக்கைக்கும் அழுத்தம் கொடுக்கும்போது உச்சந்தலை முதல் பாதம் வரைக்குமான இரத்த ஓட்டம் சீராகும்!

எனவே, கைகளைத்தட்டும்போது, எதிராளியை உற்சாகப் படுத்துவதோடு, நமது இரத்த ஓட்டமும் சீராகும்

சுவாசம் நின்றுவிட்டால் என்ன செய்ய வேண்டும்..?

சுவாசம் நின்று போவதற்கான பொதுவான காரணங்கள்:

>>தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொள்ளுதல்

>>நினைவிழந்த ஒருவரின் தொண்டையில் அவருடைய நாக்கு அல்லது கெட்டியான கோழை அடைத்துக் கொள்ளுதல்

>>நீரில் மூழ்குதல், புகையினால் மூச்சு மூட்டுதல் அல்லது உடம்பில் விஷம் கலத்தல்.

>>தலையில் அல்லது மார்பில் பலமாக அடிபடுதல்

மாரடைப்பு :

ஒருவர் சுவாசிக்கவில்லை என்றால் 3 நிமிடங்களுக்குள் அவர் இறந்து விடுவார்.

வாய் சுவாச முறை :

பின்வரும் முறையில் எவ்வளவு விரைவாகச் செயல்படமுடியுமோ அந்தளவிற்கு விரைவாகச் செயல்படுங்கள்.

முதலாவதாக, வாயில் அல்லது தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொண்டிருந்தால் அதை உடனடியாக அகற்றவும்.

நாக்கை வெளியே இழுக்கவும். தொண்டையில் கோழை இருந்தால் விரைவாக அதை அகற்றவும்.

இரண்டாவதாக, அவரை மல்லாந்து படுக்க வைக்கவும், தலையை நன்றாகப் பின்னனுக்கு வளைத்து, தாடையை முன்னுக்கு இழுக்கவும்.

மூன்றாவதாக, அவருடைய நாசித் துவாரங்களை உங்கள் விரல்களால் மூடிக் கொண்டு அவரது வாயைத் திறக்கவும்.

அவருடைய வாயை உங்கள் வாயால் மூடிக் கொண்டு அவருடைய மார்பு உயரும்படியாக, வலுவாக ஊதவும், பிறந்த குழந்தைகளுக்கு நிமிடத்திற்கு 25 முறை மிகவும் மென்மையாக வாயிலிருந்து மட்டும் ஊதவும்; ஆழ்ந்த மூச்சு எடுத்து ஊதக் கூடாது.

அவர் தானாகவே சுவாசிக்க ஆரம்பிக்கும் வரை அல்லது அவர் இறந்து விட்டார் என்பது நிச்சயமாகும் வரை வாய்க்குள் - வாய் சுவாச முறையைத் தொடரவும். சில சமயங்களில தொடர்ந்து ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக இவ்வாறு செய்ய வேண்டி இருக்கலாம்.

இதயத்தைப் பிடித்து விடுவதிலுள்ள பிரச்சனைகள்:

இரு கையை வைத்து அழுத்தும்போது அதிகமாக அழுத்தக்கூடாது. அதிகம் அழுத்தினால் மார்பு எலும்பு முறியும், முறியும் விலா எலும்பு ஈரலைக் குத்தி விடலாம். அவர் அதிர்ச்சியில் இருக்கிறாராப (முகம் வேர்த்து,தோல் வெளுத்து, பலமில்லாமல், நாடிதுடிப்பு அதிகரித்து) என்பதைக் கவனிக்கவும்.

இது வெப்ப அயர்ச்சியாக இருக்கலாமா?

(வியர்வையில்லாமல், அதிக காய்ச்சல், சிவந்த தோல்) அப்படி இருந்தால் அவரைத் தலையை உயரத்தில் வைத்து, நிழலில் படுக்க வைக்கவும், கழுத்தை வளைக்க வேண்டாம்.

இதயத்தை பிடித்துவிடும் முறை:

>>மூச்சு நின்று போன வரை மல்லாக்கப்படுக்க வைக்க வேண்டும்.
>>அவர் பக்கத்தில் மண்டியிட்டு, அவர் தாடையைப் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும்.

>>வலது கையில் கீழ் பாகத்தை மார்பின் நடுவில் வைத்து அதன்மேல் இடது கையை வைக்கவும்.

>>முட்டியை நேராக வைத்து நெஞ்செலும்பு நடுவில் 1 முதல் 2 அங் குலம் வரை கீழ் அழுத்தவும்.

>> பின் கையை எடுக்காமல் அழுத்தத்தை நிறுத்தவும். ஒரு நிமிடத்திற்கு 60 – 80 தடவை இந்த முறையைக் கையாளவும்.

>>சிறு பிள்ளைகளுக்கு இரு விரல்களை மட்டும் வைத்து அழுத்தவும், மூச்சும், இதயத்துடிப்பும் நின்றுவிட்டால் மார்பை அழுத்துவதையும் வாய்க்குள் – வாய் சுவாச முறையையும் செய்யவும். இருவர் இருந்தால் ஒருவர் அழுத்தி விட மற்றவர் வாய்க்குள் – வாய் சுவாச முறை செய்யவும்.

>>ஒருவர் தானே மூச்சுவிடும் வரை அல்லது அவர் இறந்தார் என்ற நிலை அறியும் வரை இந்த முறைகளைக் கையாளவும். அரைமணி நேரம் செய்தும் ஒரு முன்னேற்றமும் இல்லாவிட்டால் நிறுத்தவும்.

 
back to top