.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

Friday, November 7, 2014

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடும் பழங்கள்..!

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த...

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்..!

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான...

Thursday, November 6, 2014

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.! கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள். பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ...‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும்,...

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..! நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும். ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம். எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக...

சிறுநீரக நோய், அல்சரை குணப்படுத்தும் துளசி...!

திருமாலின் திருக்கோவிலில் தரப்படும் பிரசாத தீர்த்தம் துளசிக்கு முதல் இடத்தை தருவதாக உள்ளது. அந்த தீர்த்தத்தில் துளசியோடு லவங்கம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து நீரிலிட்டுக் கலந்து பக்தர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இவை அனைத்தும் சேர்ந்த கலவை ஓர் அருமையான மருந்தாக அங்கம் முழுவதற்கும் பயன்படுகிறது. துளசி, நற்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி,செந்துளசி, கருந்துளசி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பொதுவாக துளசியில் ராமதுளசி, கிருஷ்ண துளசி என்ற இருவகை துளசியைத் தான் உபயோகப்படுத்துவது வழக்கம். ராம துளசி சாதாரண பசுமை நிறத்தையும் பசுமையான காம்புகளையும் உடையது. கிருஷ்ண துளசியோ கரும்பச்சை நிறத்தையும் செம்மையும் சற்று நீலமும் கலந்த...

Wednesday, November 5, 2014

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...?

சரும புற்றுநோயைத் தடுக்கும்: சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாம். ஆஸ்துமா, அலர்ஜிக்கு: தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறதாம்! இளமையாக இருக்க: தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை விட நீண்ட ஆண்டுகளுக்கு இளமையான தோற்றத்துடனே இருக்கலாமாம். தாடி ஒரு வயோதிகத் தோற்றத்தை வேண்டுமானால் கொடுக்கலாம்; ஆனால்,...

உடல் எடையில் நல்ல மாற்றம் தரும் ஜுஸ்கள்

உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினைகளிலேயே மிகவும் தொல்லை தரும் பிரச்சினை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலை யையும் சரியாகவும், நிம்ம தியாகவும் செய்ய முடியாது. எதை செய்தாலும் சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்கி, உடல் சோர்ந்துவிடும். எனவே பலர் இந்த உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல்வது, டயட் மேற்கொள்வது என்று இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜுஸ்கள் மூலம் எடையைக் குறைப்பது. அது எப்படி ஜுஸ் குடிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று கேட்பீர்கள். உண்மையிலேயே ஜுஸ்களை குடித்தால், ஜுஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து,...

உடல் எடையை குறைக்கும் இந்திய உணவு பொருட்கள்

உலகில் பெரும்பாலானோர் கஷ்டப்படும் பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனானது ஏற்படுவதற்கு அதிகப்படியான கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால், கொழுப்புக்களானது உடலில் ஆங்காங்கே தங்கி, உடல் எடையை அதிகரித்து விடுகிறது. மேலும் தற்போதைய வாழ்க்கை முறையில் உண்ணும் உணவுகள் அனைத்திலுமே கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறது. கடைகளில் விற்கப்படும் எந்த ஒரு உணவையும் ஆரோக்கியம் என்று கருதி சாப்பிட முடியாது. அதுமட்டு மல்லாமல், கடைகளில் கொழுப்பில்லாத உணவுகள் என்று குறிப்பிட்டு விற்கப்படும் உணவுகளில் தான் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர், உண வுகளில் கவனமாக இருப்ப வராக இருந்தால், இந்திய உணவுப்பொருட்கள் என்று...

சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை...

தலைமுடி வளர பயனுள்ள குறிப்புகள்..!

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். * வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். * கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். * ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். * காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில்...

Tuesday, October 28, 2014

தண்ணீர் குடித்தால், விலகிஓடும் பி.பி., சுகர்..!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி..! சுகர்..! காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது' என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம்தானே! இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல்பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம். காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகுதான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும். உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம்...

உணவுப் பழக்கம் தனிமனித உரிமை..!

 நீலாங்கரையிலுள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்து, அந்தக் கோயிலின் பக்தர் என்று ஒருவர் கூறிக்கொண்டு தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து அரசுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. வழக்கைத் தொடர்ந்தவர் கூறிய காரணம்: கோயில் நிலத்தில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் உள்ளத்தைப் புண்படுத்துமாம். மீனவர்கள் குடியிருப்பு அதிகம் உள்ள அந்தக் கிராமத்தின் உபதேவதைக் கோயில் ஒன்றில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் மனதை எப்படிப் புண்படுத்தும் என்று தெரியவில்லை. வழக்கின் அடிப்படையான வாதம் ‘அம்மனும் சைவமா?’ என்பதுதான். கண்ணப்ப நாயனாரின் பன்றிக்கறி சைவ மதத்தின் பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனாருக்கும்...

கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா..? தவறா..?

பல கல்லூரி மாணவிகள், மற்றும் இளைஞிகள் “காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் அணிய விரும்புகிறார்கள்.அந்த காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ்களில் சில பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மலர்கள், அல்லது விருப்பமான நிறங்களில் எல்லாம் கிடைக்கின்றன.” கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா? தவறா? என்றும் கேட்கிறார்கள்.கண்ணாடி அணிவதை தவிர்க்க விரும்புகிறவர்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் ஒரு வரப் பிரசாதம். அதே நேரம் எச்சரிக்கை, ஒரு தகுதி வாய்ந்த கான்டாக்ட் லென்ஸ் நிபுணரிடம், மையத்திற்கு சென்று அணிவதே சிறந்தது. ஆன் லைனில் வாங்கி அணிவது கண்ணை இழப்பதற்க்கான முன்னுரை. மேலும் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அதை உங்களுக்கு வழங்கிய நிபுணர் சொன்ன அறிவுரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கான்டாக்ட்...

Sunday, July 6, 2014

ஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி...!

  உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டிகிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும்...

Friday, July 4, 2014

வயிற்றைச் சுத்தமாக்கும் உணவுகள் - இதோ உங்களுக்காக...!

அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும். எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும். அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு...

சர்க்கரை நோய்க்கு மருந்து கறிவேப்பிலை - உங்களுக்கு தெரியுமா..?

ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு அருமருந்து. கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் தேவை குறையும். உணவாக உட்கொள்ளும் மாவுப் பொருள்களை குளுகோசாக மாற்றி உடலுக்குத் தரும். சுண்ணாம்புச்சத்து இதில் அதிகம் இருக்கிறது. கறிவேப்பிலை துவையல் செய்முறை:- ஆய்ந்த கறிவேப்பிலை 2 கப் எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு, 4 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு (விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்) சேர்த்து நன்றாக வறுக்கவும். சில நிமிடங்கள் ஆற வைத்து, இதில் உப்பு, நெல்லிக்காய் அளவு புளி, பெருங்காயத்தூள் சேர்த்து...

Thursday, July 3, 2014

கடுகு எண்ணெயும் உடல் எடையை குறைக்குமாம்...!

சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும். அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம்....

Saturday, February 1, 2014

ராமனின் விளைவை பயன்படுத்தி மனித மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்த முயற்சி..!

மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு...

Tuesday, January 21, 2014

அதிக சாக்லேட் சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்காது..!

  அதிக சாக்லேட் சாப்பிட்டாலும், சிவப்பு ஒயின் குடித்தாலும் நீரிழிவு நோய் தாக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்னடர்.சுமார் 2 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சிவப்பு ஒயின் அருந்துபவர்களுக்கு 2–வது ரக நீரிழிவு தாக்குதல் குறைவாக இருந்தது.அவற்றில் உள்ள ஆந்தோ சியானின்ஸ் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இன்சுலினை போதிய அளவு சுரக்க செய்து ரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைக்க உதவுகிறது. அதனால்தான் நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது தெரிய வந்தது.ஆந்தோசியோனின்ஸ் மூலக்கூறுகள்...

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க...

காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம். ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை. மேலும்...
 
back to top