.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, May 15, 2013

உசேன் போல்டின் வேகத்தை மிஞ்சியது அமெரிக்க ரோபோட்







      உலகின் அதி வேகமாக செல்லக் கூடிய ரோபோட்டை அமெரிக்க விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இது லிம்பிக் பதக்க வீரர் உசேன் போல்டை விட வேகமாக செல்லுமாம் இந்த ரோபோட்.

 
      ஆம்!  உசேன் போல்டின் வேகம் மணிக்கு 27கிமீ, இந்த ரோபோட்டின் வேகம் மணிக்கு 29கிமீ ஆகும். இது சிறுத்தை வடிவில் காணப்படும் ரோபோட் ஆகும், இதற்காக விஞ்ஞானிகள் குழு 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு இதை கண்டுபிடித்துள்ளனர்.


    அமெரிக்க இராணுவத்தில் விரைவில் இது சேர்க்கப்பட உள்ளது,  ஏற்கனவே மிக வலுவாக உள்ள அமெரிக்க இராணுவம் இந்த ரோபோட்டை சேர்த்தால் மிகவும் வலுப்படும்.


இதோ இந்த ரோபோட்டின் படங்கள்






ஆப்பிள் ஐபோன் 6-க்காக தயாராகும் ஐஓஎஸ் 7!






      ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 மற்றும் ஐஓஎஸ் 6 ஆகியவை பழைய கதையாகிவிட்டது. இந்த 2013ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் ஆப்பிள் ஐபோனின் அடுத்த பதிப்பானது வெளியிடப்படுமெனத்தெரிகிறது.


     ஆப்பிளின் அடுத்த பதிப்பு "ஐபோன் 6" என பெரும்பாலானோர்களால் சொல்லப்படுகிறது. இதற்காக ஐஓஎஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான  ஐஓஎஸ் 7 தயாராகி வருவதாகவும் அதற்கான சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   
நெக்ஸ்ட் வெப் என்ற இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐபோன் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளமான ஐஓஎஸ் -7க்கான சோதனைகள் நடைபெறுகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளது.


    இந்த இயங்குதளத்தை வடிவமைக்கும் குழுவிலுள்ள ஒரு பணியாளரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்ஐபோன் 6க்காக இந்த புதிய இயங்குதளம் உருவாக்கப்படுவதாகவும் அந்த பணியாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த புதிய போன் இன்னும் சில மாதங்களில் வெளியாகுமென்றும் தெரிவித்துள்ளார்.




வதந்திகளின் அடிப்படையில் ஐபோன் 6க்கான நுட்பக்கூறுகள்:
  • சூப்பர் HD தரமுள்ள கேமரா,

  • சிறப்பான பேட்டரி,

  • IGZO ரெட்டினா திரை,

  • 128 ஜிபி நினைவகம்,

  • 6 முதல் 8 வண்ணங்கள்,

  • A7 குவாட்-கோர் ப்ராசெசர்

எதிர்கால தொழில் நுட்பம்( 2020) -Future Technology Watch your day in 2020



Future Technology Watch your day in 2020






         குரங்கில் இருந்து மனிதன் பிறந்ததாக மூர்ப்பின் கோட்பாடு தெளிவுபடுத்துகின்றது. அந்த வகையில் அன்று தோன்றிய மனிதன் படிப்படியாக பல பரிமாணங்கள் பெற்று இன்று இயற்கையுடன் விஞ்ஞான ரீதியாக மோதும் அளவுக்கு மாற்றமடைந்துள்ளான்.

   
     இன்றைய உலகில் தொழில்நுட்பம் வளர்ந்தவிட்ட நிலையில் 2020ல் தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றம் கண்டிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா?


    இந்த வீடியோவை பாருங்கள் 2020ல் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?


ஆப்பிள் ஐபோன் 5S & ஐபோன் 6 - புதிய வசதிகளுடன் விரைவில் அறிமுகம்



ஆப்பிள் ஐபோன் 5S & ஐபோன் 6 - புதிய வசதிகளுடன் விரைவில் அறிமுகம்


         



      ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பற்றிய கிசுகிசுக்கள் தினந்தோறும் வெளியான வண்ணமே உள்ளன. இன்று மற்றுமொரு ஐபோன் பற்றிய வதந்தி புதிதாய் தலைகாட்டியுள்ளது.


     அதாவது ஐபோன் 5S மற்றும் ஐபோன் 6 ஆகிய இரண்டு ஆப்பிள் போன்களும் இவ்வருடமே வெளியாகப்போகிதாம்.  இந்த வதந்தியை சீனாவைச்சேர்ந்த லாவ்யோபா.காம் என்ற இணையதளம் தான் வெளியிட்டுள்ளது.


     அதன்படி, ஆப்பிள் நிறுவனம் இவ்வருடமே 2 புதிய போன்களை வெளியிடப்போவதாகவும், அதில் ஒன்று மே மாதத்திற்குள்ளும், மற்றொன்றை டிசம்பர் மாதத்திற்குள்ளும் வெளியிடுமென கூறப்பட்டுள்ளது.





     இவ்விரு ஐபோன்களும் நல்ல தொழில்நுட்பத்துடனும், அதிசிறந்த நுட்பக்கூறுகளுடனும் வெளியாகுமாம்.

    இதுவாவது உண்மையாகுமா அல்லது வதந்தியாகவே போகுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 
back to top