.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, May 22, 2013

தரம் நிறைந்த குறைந்த விலையில்( ரூ.10,000 ) - " 3D ஸ்மார்ட் போன் " வந்தாச்சு!




3 m - Tec - phone
             


                         பொதுவாக சாம்சங், ஆப்பிள்,  எச்.டி.சி.  போன்ற பல்வேறு மிகப் பெரிய நிறுவனங்கள் எக்கச்சக்க விலையில் ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருவது தெரிந்த விஷ்யம்தான்.   அதே சமயம் சில சின்ன நிறுவனங்கள் இது போன்ற படாபடா பிராண்டிங்களின் ஸ்மார்ட் போனுக்கு இணையான சாதனங்களை குறைந்த விலையில் தயாரித்து வருவது தெரியுமா?.


அந்த லிஸ்டில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக மைக்ரோமெக்சை சொல்லலாம். 



                         குறிப்பாக இந்த மைக்ரோமெக்சின் கென்வாஸ் வரிசை ஸ்மார்ட் போன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்கள் வழங்கக் கூடிய அத்தனை வசதியையும் இவையும் வழங்குகின்றன. மேலும் இவற்றின் விலையும் ரொம்ப குறைவானதாகும்.


                        
                            அத்துடன் ஆங்காங்கே சர்வீஸ் செண்டர் வைத்திருப்பதால் இந்த பிராண்டை நம்பி வாங்குபவர்கள் அதிகமாம். பெரும்பாலும் மைக்ரோமெக்ஸ் இந்த ‘விலை குறைவு – தரம் அதிகம்’ (Less Pay – Get More) உத்தியைக் கையாண்டு சந்தையில் குறிப்பிடக்க அளவு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றே சொல்லல்லாம். அப்பேர் பட்ட கம்பெனி தற்போது வழக்கம் போல் குறைந்த விலையில் முப்பரிமாண ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.




                      இதற்கு   Micromax A115 Canvas 3D  என பெயரிடப்பட்டுள்ளது.









                     இதில் முப்பரிமாண திரை மட்டுமன்றி 1 GHz டுவல் கோர் புரசசர், 512 எம்.பி. ரெம் மற்றும் 5 மெகாபிக்ஸல் காமராவினையும் இது கொண்டுள்ளது. இது மட்டுமன்றி அண்ட்ரோய்ட் 4.1.2 ஜெலி பீன் மூலம் இது இயங்குவதுடன் டுவல் சிம் வசதியையும் கொண்டுள்ளது. 




இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனின் விலை இந்திய நாணயப்படி ஜஸ்ட் 10 ஆயிரம் ரூபாயாதான்!.

Tuesday, May 21, 2013

அவன திருப்பிக் கடி -1


பச்சபுள்ள ஜோக்ஸ்







" ஏன்டா சட்டை போடாம வாக்கிங் போற?"






" டாக்டர்தான் என்னை டெய்லி வெறும் வயித்தோட நடக்கணும்னு சொன்னாரு! "





இனிமேல் Windows 8 இல்லை, Windows Blue -தான்





                         விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகையில், உலகில் 67 கோடி கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 பயன்படுத்தப்படுவதாகவும், இவை யாவும், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிவிடுவார்கள்' என்று நம்பிக்கையுடன் கூறினார், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாகி பால்மெர்



                       ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. பல மூலைகளிலிருந்து விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பல்வேறு கூறுகளுக்கு எதிர்ப்பு வந்தது. குறிப்பாக, ஸ்டார்ட் மெனு இல்லாதது குறையாகச் சொல்லப்பட்டது. 



                       பொது ஜன தொடர்பு நிறுவனங்கள் மூலம், மைக்ரோசாப்ட் மக்களிடம் தன் புதிய சிஸ்டத்தினைக் கொண்டு செல்லப் பார்த்தது. எந்த முயற்சியும் பலனளிக்காததால், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டு, புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை  விண்டோஸ் புளு ( Windows Blue )  என்ற பெயரில் வெளியிட இருப்பதாகச் செய்திகள் வந்தன. 

 


தற்போது  விண்டோஸ் 8.1( Windows 8.1) என அது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 




                   ஸ்டார்ட் பட்டனை நீக்கியது, அதற்குப் பதிலாகச்துர கட்டங்கள் வழி அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தந்தது, கம்ப்யூட்டர் இயக்கம் தெரிந்தவர்கள் கூட புதிய விஷயங்களைச் சிரமம் எடுத்து கற்க வேண்டிய நிலை ஆகியவற்றால், விண்டோஸ் 8 எதிர்பார்த்தபடி மக்களை அடையவில்லை. 






                       துரதிருஷ்டவசமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை உணர்ந்து கொள்ள ஆறு மாதம் பிடித்தது. மேலும், பல நிறுவனங்கள் தங்கள் பழைய விண்டோஸ் சிஸ்டத்திலேயே இயங்க முடிவெடுத்தன. இன்னும் பல பிரிட்டன் நிறுவனங்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்கிக் கொண்டுள்ளனர்.

நாங்களும் பேசுவோம்! - 1







பாகிஸ்தானிடம் வீரம்,,,  


                    சீனாவிடம் பணிவு…!




15 கி.மீ இந்திய எல்லையைக் கடந்த சீனாவை ஒன்றும் செய்ய முடியாத நாம் வல்லரசாக ஆகபோகிறோமா…




பாகிஸ்தானிடம் வீரம்,,, சீனாவிடம் பணிவு...! 15 கி.மீ இந்திய எல்லையை கடந்த சீனாவை ஒன்றும் செய்ய முடியாத நாம் வல்லரசாக ஆகபோகிறோமா... !!


 
back to top