.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, August 20, 2013

ஆசிய இளைஞர் விளையாட்டு: ஸ்குவாஸ் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்!



          இரண்டாவது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் யாதவ் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். முதல் நாள் நடந்த போட்டிகளில் இந்தியாவின் எம். கவிதா தேவி சிறுமிகளுக்கான ஜூடோவிலும், டி. லால்சன்ஹிமா சிறுவர்களுக்கான பளுதூக்குதல் போட்டியிலும் தலா ஒரு வெண்கலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் இதுவரை இந்தியாவிற்கு மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்து நிலையில் சென்னை இளைஞர் குஷ் குமார் முதல் தங்கத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

         நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒறையர் ஸ்குவாஷ் போட்டியில் சென்னையை சேர்ந்த இளைஞர் குஷ் குமார் 17, மலேசியாவின் முகமது ஸ்யபிக் மோத் கமலுடன் மோதினார்.

        இதில் குஷ் குமார் 11-9 5-11 11-9 11-7 என்ற செட்டுகளில் மலேசியாவின் கமலை வீழ்த்தி தங்கத்தை வென்றார். நடைபெற்றும் வரும் ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் சென்னை இளைஞர் குஷ் குமார் முதல் தங்கத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Squash: Kush Kumar bags first gold for India at Asian Youth Games 2013 


******************************************************************************

17-year-old Kush Kumar, a trainee at the Indian Squash Academy, Chennai, becomes the first Indian to win a gold medal at the second Asian Youth Games 2013 being held in Nanjing, China.[1] Kush Kumar (AOI) beat [2] Syafiq Kamal (Mas) 11/9, 5/11, 11/9, 11/7 in the final- a match that lasted three minutes short of an hour.Kush started off well with an aggressive pace, but was being caught time and again by Shafeeq’s delicate drops and some awesome deceptive play.

Monday, August 19, 2013

அதிகம் அறியப்படாத பிரவுசர்கள்!



        இணையத்தை நம்முடன் இணைக்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் (சபாரி மற்றும் ஆப்பரா ஆகியவற்றையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.) ஆகிய பிரவுசர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ஏறத்தாழ இவை தரும் வசதிகளுடனும், திறனுடனும் இன்னும் சில பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடன் செயல்படும் வகையில் வடிவைக்கப்படவில்லை என்றாலும், இவற்றையும் விரும்பினால் பயன்படுத்திப் பார்க்கலாம்.

1. ஸீ மங்கி (SeaMonkey):

இங்கு தரப்படும் மற்ற பிரவுசர்களைப் போல் இல்லாமல், இது சற்று எளிதில் புரிந்து கொண்டு பயன்படுத்தக் கூடிய பிரவுசரே. இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை சற்று கணிசமானதாகும். இது பிரவுசர் மட்டுமல்ல. இமெயில் பெற்றுத் தரும் கிளையண்ட், பீட் ரீடர், எச்.டி. எம்.எல். எடிட்டர், ஐ.ஆர்.சி. சேட் என இன்னும் பல செயல்பாடுகளை மேற்கொள்ள வழி வகுத்திடும் புரோகிராம் ஆகும். பயர்பாக்ஸ் மற்றும் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் ஆகியவற்றில் காணப்படும் பல வசதிகளை இதில் காணலாம். Sync, session restore, themes, feed detection, smart location bar, popup blocker, safe mode, find as you type என இன்னும் பல வசதிகள் இதில் உள்ளன. இந்த பிரவுசரின் பதிப்பினைப் பார்க்கையில், இது மிக முந்தையது போலத் தெரியும். இருப்பினும் பல்வேறு வகைப்பட்ட இணைய வசதிகளை ஒரே புரோகிராமில் பெற வேண்டும் என விருப்பப்பட்டால், இந்த பிரவுசரைப் பயன்படுத்தலாம். ஸீ மங்கி பிரவுசர், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் வண்ணம் கிடைக்கிறது.

2. கே மெலான் (KMeleon):

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் முறையில் கிடைக்கும் பிரவுசராகும். இந்த பிரவுசரும் Session save, mouse gestures, context menu, keyboard shortcut customization, popup blocker, fast load times, popup search bar, themes, macros என இன்னும் பலவகையான சிறப்பு வசதிகளைத் தருகிறது. இதனுடைய இன்டர்பேஸ், விண்டோஸ் சிஸ்டம் டூல் கிட் அடிப்படையில் இயங்குவதால், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் திறனையும் பயன்படுத்திக் கொள்கிறது. எங்கும் எடுத்துச் செல்லும் வகையில், இந்த பிரவுசரின் போர்ட்டபிள் பதிப்பும் கிடைக்கிறது. ஒரு யு.எஸ்.பியில் எடுத்துச் சென்று, எந்த விண்டோஸ் கம்ப்யூட்டரிலும் இணைத்துப் பயன்படுத்தலாம். இது விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டுமே செயல்படும்.
 
3. பேல் மூன் (Pale Moon):

 விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் வகையில்,
பயர்பாக்ஸ் பிரவுசரினைப் போல இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டது. இது தனிப்பட்ட கட்டமைப்பினைக் கொண்டிராமல், நமக்கு அதிகம் பயன்தரும் வசதிகள் கொண்ட பிரவுசர் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. வேகம், திறன் ஆகிய இரண்டுமே இதன் முக்கிய அம்சங்களாகும். புதிய ப்ராசசரில் சிறப்பாகச் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. SVG graphics, HTML5/CSS/Advanced DOM supportஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. பயர்பாக்ஸ் பிரவுசர் எடுத்துக் கொள்ளும் மெமரி இடத்தைக் காட்டிலும் சற்றுக் குறைவாகவே இடம் எடுத்துக் கொள்கிறது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வசதிகளைத் தரும் வகையில், பயர்பாக்ஸ் அடிப்படையில், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பிரவுசர் வேண்டும் எனில், பேல் மூன் பிரவுசரை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

4. லூனாஸ்கேப் (Lunascape):

விண்டோஸ் இயக்கத்தில் மட்டுமே செயல்படும் பிரவுசர். Geko, WebKit, and Trident என மூன்று பிரவுசர் இஞ்சின்களிலும் செயல்படும். இதனால், நமக்கென்ன பிரயோஜனம் என்று எண்ணுகிறீர்களா? பிரவுசர் புரோகிராம் எழுதுபவர்கள், இணைய தளம் வடிவமைப்பவர்கள், இந்த மூன்று இஞ்சின் உள்ள பிரவுசர்களை ஒவ்வொன்றாகச் சோதனை செய்து பார்க்காமல், இதில் மட்டுமே இயக்கிச் சோதித்துப் பார்க்கலாம். நாம் பார்க்க விரும்பும் சில இணைய தளங்களில் சில, பக்கங்களைக் காட்ட இயலாமல் தடுமாறும். இதற்குக் காரணம், இந்த பிரவுசர் இயக்க இஞ்சின்களில், ஒரு சிலவற்றை அந்தப் பக்கங்கள் தங்களின் கட்டமைப்பினில் சேர்த்திருக்காது. அப்படிப்பட்ட நிலைகளில், இந்த பிரவுசர் தானாகவே மாறிக் கொண்டு இயங்கி, பக்கங்களை அழகாகக் காட்டும். Highlight search, engine autoswitch, cascade view, tab lock எனப் பல சிறப்பு வசதிகளையும் இந்த பிரவுசர் தருகிறது.

5. நெட் சர்ப் (NetSurf):

மிகச் சிறியதாக இருந்தாலும், பல்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் திறன் கொண்டது. வேகத்தில் மிகச் சிறப்பானது. சிறியதாக இருப்பதால், அதிக வசதிகளைத் தராது என எண்ண வேண்டாம். நாம் அடிக்கடி பயன்படுத்தும், எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. Web page thumbnailing, local history trees, global history, hotlist manager, URL completion, scale view, searchasyoutype, cookie manager என இன்னும் பல வசதிகளைக் கொண்டுள்ளது. இது இணைய இயக்கத்திற்கான அனைத்து ஸ்டாண்டர்ட்களையும் கொண்டுள்ளது. இதன் போர்ட்டபிள் பார்மட் ஒன்றும் கிடைக்கிறது. Haiku, BeOS, AmigaOS, Atari, Linux, UNIX, RISC OS என இன்னும் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் தன்மை கொண்டது
.
இணையத்தில் கிடைக்கும் அனைத்து இணைய பிரவுசர்களும், சமமான திறனுடனும் வசதிகளுடன் வடிவமைக்கப்படவில்லை. மேலே காட்டப்பட்டுள்ளவற்றுள் சில, பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசர் போன்று சிறப்பான சில வசதிகளைத் தராமல் இருக்கலாம். ஆனால், இவை ஒவ்வொன்றும், தனக்கென ஒரு சில தனிச் சிறப்புகளைக் கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன. அதனால், இவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்களை நிச்சயம் கவரும். ஆர்வத்தினைத் தூண்டும். எனவே, ஒருமுறை இன்ஸ்டால் செய்து இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்திப் பார்க்கவும். இதனால், நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிரவுசரின் அதி சிறப்புத் தன்மையையும் உறுதிப் படுத்திக் கொள்ளலாமே!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்



ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

 
 
நாங்கள் பரிட்சை எழுத 
நீங்கள் அல்லவா படித்தீர்கள் 
நாங்கள் வெற்றிப் பெற 
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள் 

 
 
கல்லும் உடையாமல் 
சிலையும் சிதறாமல் 
எங்களை செதுக்கிய 
சிற்பி அல்லவா நீங்கள் 

 
 
மழையின் அருமை தெரியாமல் 
மழையை கண்டு ஓடுபவர்போல 
உங்களைக் கண்டு ஓடினோம் 
மழையின் அருமை 
கோடையில் தெரியும் 
உங்களின் அருமை, பெருமை 
இப்போது உணர்கிறேன் !

என்ஜினில் இருந்து வெண்ணிற புகை வெளியேறியதால் ஜி.எஸ்.எல்.வி. டி -5 ராக்கெட் கவுன்ட் டவுன் திடீர் நிறுத்தம்!

ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் தளத்தில் இருந்து இன்று மாலை 4.50 மணிக்கு விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.


114 டன் எடையும், 160 அடி உயரம் கொண்ட இந்த ராக்கெட்டை, இன்று விண்ணில் செலுத்துவதற்கு ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் இருந்தபோது திடீரென கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது.என்ஜினில் இருந்து வெண்ணிற புகை வெளியேறியதால் கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டதால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.


 இந்த ராக்கெட் மூலம் ஜிசாட் –14 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளும், இந்தியாவில் தகவல் சேவை வழங்குவதற்காக 6 கே.யூ.பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும், 6 விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும் செலுத்தப்படுத்த இருந்தது குறிப்பிடத்தக்கது.


       ISRO’s GSLV-D5 launch from Sriharikota put on hold
***************************************************************

 he much awaited launch of India’s geosynchronous satellite launch vehicle-D5 (GSLV-D5), with communication satellite GSAT-14 as payload, from Sriharikota rocket port in Andhra Pradesh was put on hold on Monday.GSLV-D5, one of the most crucial launches for the India Space Research Organisation (ISRO), was scheduled to blast-off at 4.50 pm but the space agency put it on hold at around 4 pm.Official announcement on the reasons behind move is awaited.


 
back to top