.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, August 22, 2013

தமிழ் கவிதை! ஹைக்கூ கவிதை!

ஹைக்கூ கவிதை

மையின் வேலை
விரலில் கருமை
வாழ்வில் வறுமை
தேர்தல் மை ...

 வர்க்கம்
களத்து நெல் மாடிவீட்டில்
விதை நெல் உலைச்சட்டியில்
பசுமைப் புரட்சி

வயிற்றுப் பசி
மரக்கிளையில் தொட்டில்
களையெடுக்கும் தாய்
தொட்டில் குழந்தை

ஈர நினைவு
மேகத்திலிருந்து மழைத்துளி
துவட்டப்படாத அவள்
கூந்தல்!
 
தொழிற்கல்வி
மூட்டை தூக்கிக் கொள்ள
முன்பயிற்சி
நர்சரிப் பள்ளிகள் ...
 
விண்மீன்
வான ஆடையின்
சலவைக் குறிகளோ
நட்சத்திரங்கள் ...

சந்தோசம்
சரவெடிச் சிரிப்பு
மனைவி முகத்தில்
தீபாவளிப் பட்டு

முதியோர் இல்லம்
ஓயாமல் உழைத்த தந்தை
ஓய்வெடுக்கிறார்
முதியோர் இல்லத்தில்

இரவல் முகங்கள்
சுயத்தைப் புதைத்த
இரவல் முகங்கள்
விரிசல் விழுந்த கண்ணாடி!

விடாது மழையிலும்
புயலுக்குப் பிறகு, சிறுவன்
ஆகாயத்தைத் துடைக்கிறான்.
மேசைகளின் மீதிருந்து!

இன எதிரி
கோடாரியின் கைப்பிடியிலும்
மரம்
இன எதிரி ...

தலைகீழ்
மிதப்பதாக நினைத்து
மூழ்கினான்
குடிகாரன் ...

புலம்பெயர் பொன்மொழிகள்:

புலம்பெயர் பொன்மொழிகள்:

வாங்கியதை வாங்கிய நேரத்தில் வாங்கிவிட்டுகொடுப்பதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுப்பது தான் – கைமாத்து.

வாங்கியதை வாங்கி வேண்டிய நேரத்தில் வாங்கிவிட்டுகொடுப்பதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுக்காமல் விட்டால் அது – ஏமாத்து.

வாங்கியதை வாங்கிவிட்டு, கொடுத்தவன் கேட்டபோது எடுத்ததைஇல்லை என்றால் அது – சுத்துமாத்து.

கையில் பணம் குறைவாக இருப்பவன் விலையை பார்ப்பான்கையில் பணம் அதிகம் இருப்பவன் தரத்தை பார்பான்கையில் பணமே இல்லாதவன் முகட்டை முகட்டை பார்ப்பான்.

நேற்றய நண்பர்கள் இன்றய எதிரிகள்இன்றய நண்பர்கள் நாளைய எதிரிகள்எனவே எமது வாழ்வில் நண்பர்களை விட எதிரிகள் அதிகம்.

நல்ல நட்பை தேடிக்கொள்ள பல வருடம் போதாது.நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நிமிடமே போதும்

பென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்!



பென் ட்ரைவ் என்பது இப்பொழுது கணினி   உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருள் இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணினியில் பதியவோ உபயோகபடுத்த படுகிறது. இந்த பென்ட்ரைவ்கள் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணினிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. இதிலிருந்து நம் பென்ட்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்களை கீழே கொடுத்துள்ளேன்.
 
1. USB WRITE PROTECTOR :

 
இந்த மென்பொருள் உங்களுடைய பென்ட்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால் உங்கள் பென்ட்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ட்ரைவ்களை கண்டறிய முடியவில்லை. இந்த மென்பொருள் மிக சிறிய அளவே(190KB) உடையது.

2. USB FIREWALL :

 
பென்ட்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். USBயில் இருந்து கணினிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன் படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணினியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும். ஏதேனும்  வைரஸ் உங்கள் கணினியில் புக முயற்சிக்கும் போது இந்த இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. நன்றாக வேலை செய்கிறது.

3. PANDA USB VACCINATION TOOL :

 
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf பைலை முற்றிலுமாக தடைசெய்கிறது. உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கபடுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சார்ட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

 
4. USB GUARDIAN :

 
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான பைலை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.


மேலே கூறிய நான்கு மென்பொருட்களும் உங்கள் பென்ட்ரைவை பாதுகாக்க உதவுகின்றன. தரவிறக்கி கொள்ளுங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

படித்ததில் பிடித்தது!

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.

துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை. தீமையையும் விரட்டுகிறது.

அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம். இரண்டாமவள் ஒரு புதையல்.

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.

பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும், மதிப்பு இல்லாதவை!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே.

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை.

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
 
back to top