.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, August 24, 2013

'' அம்மா என்றால் அன்பு ''


மாதங்கள் பத்து சுமந்து
உன் கற்பனைகளால்
என்னை செதுக்கிய சிற்பியானாய்...

கருவில் என் பசி தீர்க்க

திகட்டும் பொழுதும்
உணவை உண்டு
என் உயிர் காத்தாய்...

பிறந்தவுடன்

மொழியில்லா என் ஆசைகளை
சிறு அசைவுதனில் புரிந்துகொண்டு
நிறைவேற்றி வைத்தாய்...

விரைவில் நான்

நடை பழக
உன் ஐவிரல் கொண்டு
என் ஒரு விரல் கோர்த்து
பல மைல்கள்
நீயும் நடந்திருப்பாய்...

தலை முடியில்
விரல் வருடி
வலக்கை நீட்டி
என் தலையணை ஆக்கி
வலிகள் தாங்கி
நான் தூங்க விழித்திருப்பாய்...

எனக்கு பசிக்கும் முன்னே

நீ அறிவதால்
பசியை நானோ அறிந்ததில்லை...

குளநீரை கல்லெறிந்து

கலைப்பது போல்
என் தோல்விகளில்
உன் குரல் எறிந்து
என் சோகங்கள்
கலைத்து நிற்ப்பாய்...

எடைதட்டில் உனை அமர்த்தி

உனக்கு சமம் பார்க்க
இவ்வுலகில் ஏதுமில்லை...

இங்கு

உன்னைப்போல்
எந்த தெய்வமும் இல்லை....

தமிழ் ஜோக்ஸ்_பகுதி 2

எனக்கு மொபைல்ல கிரெடிட் ரீசார்ஜ் பண்ணனும்...
மொபைல்ல பண்ண முடியாதுங்க சிம் கார்டுல தான் பண்ண முடியும்...

கழுதைக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்...
கழுதை பேப்பரை சாப்பிடுது...
மனுஷன் பேப்பர் ரோஸ்டை சாப்பிடுறான்.

அறிவாளிகள்  என்று யாரைச் சொல்லலாம்...
யாரெல்லாம் பொண்டாட்டி திட்டும் போது சிரிச்சுக்கிட்டே இருக்காங்களோ அவங்க எல்லோரும் தான்..

நான் இருமல் வந்தா உடனே டாக்டர்கிட்டே போய்டுவேன். நீங்க எப்படி?
நான் இருமல் வந்தால், முதல்ல இருமிட்டு அப்புறம் தான் போவேன்.

என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.

அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...

பிள்ளையாரும் முருகனும் கம்ப்யூட்டர் கிளாசுக்கு போனாங்க
பிள்ளையாருக்கும், முருகனுக்கும் மார்க்ஸ் குறைஞ்சு போச்சு
என்னாச்சு...
ஏனென்றால்,முருகனோட கம்ப்யூட்டர் மௌஸ் பிள்ளையாரோட மௌஸ் ரெண்டும் சேர்ந்து விளையாடப் போயிட்டுதுகள்...

அவன் எதுக்கு சுடுகாட்டுக்குப் போகும் போது சோப்பு எடுத்திட்டுப் போறான்..
ஹமாம் இருக்கப் பயமேன்..

நான் எப்போதுமே பணம் எதுவும் கையில் அதிகமாக வெச்சிருக்க மாட்டேன்...
அதெப்படி..வெச்சிருக்கணும் என்று ஆசைப்பட்டாலும் கூட வைஃப்கிட்டே கேட்டு வாங்கிக்கட்டிக்கிறதுக்கு உங்க உடம்புல தான் பலம் கிடையாதே...

போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிறதா சொல்றீங்க, வெயிலைப் பத்தி கவலையே இல்லைங்கறீங்களே, எப்படி?
நான் ஏ.ஸி. ஆச்சே!"

உங்களுக்கு அலர்ஜி நோய் வந்திருக்கு... ஒத்துக்காததை எல்லாம் ஒதுக்கி வைக்கணும்!
அப்படின்னா என் சம்சாரத்தைக் கூடவா டாக்டர்...?

என் மாமியாருக்கு சர்க்கரை வியாதி இருக்கற விஷயம் உனக்கு எப்படித் தெரியும்?
உங்க வீட்ல அடிக்கடி ஸ்வீட் செய்யறதை வச்சுத்தான் சொன்னேன்...!

ஆபீசுக்கு போகும் போது டென்ஷன் படுத்தாதே...
ஏங்க...?அதையே நெனச்சு நெனச்சு, தூக்கமே வர மாட்டேங்குது...!

ஏன் என்னோட கச்சேரிக்கு வராம விட்டுட்டீங்க...
ஸாரி சார்... அன்னைக்கு வீட்லயே தூங்கிட்டேன்!
 
 

~*~கவிதைகள்~*~

~*~கவிதைகள்~*~

ஈகை

 
உண்ணாமல் ஒளித்து வைத்து  
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை  

என்றைக்கும் இனிதே ஈவாய்!!!


கனியும் காலம்

 
சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை
கண்கவரும் சிலையாய் நிற்கும்!
பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான்

நகையாகிப் பொன்னாய் மின்னும்! 
பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில்
பொறுமையெனும் பெற்றி தன்னை!
கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட 

நீராகி கனியும் காலம்...

ஹைக்கூக்கள்

                                  நட்சத்திரம்

                             யார்சூட மலர்ந்திருக்கின்றன
                            விண்வெளித் தோட்டத்தில்
                             நட்சத்திரப் பூக்கள்

படைப்பு!

மேகக் கவிஞன்
மழையெனும் மையால்
எழுதிய கவிதைக்கு
இயற்கை இட்ட பெயர்....
பசுமை!'

அடடே!

தொகுதி
மறு சீரமைப்பு...
மருமகளுக்கு
மணி மகுடம்!
மாமியாருக்கு
முதியோர் இல்லம்.

இந்தியாவின் ஏழ்மை

சிக்னல்களில் நிற்கும்
வெளிநாட்டுக் கார்களின்
கண்ணாடிக் கதவு தட்டி
இந்திய ஏழைகள் விற்கிறார்கள்
காகித தேசியக் கொடி

நிலநடுக்கம்

விண்ணை நோக்கி
விதவிதமான
அடுக்குமாடி வீடுகள்!
சுமை தாங்காமல்
சுளுக்கு விழுந்தது
பூமிக்கு!

பட்டுப்புழு

பட்டுப்புடவையில்
வண்ணத்துப்பூச்சி
ஓவியமாக அழுதபடி...

அழையா விருந்தாளி

கையசைத்து
கூப்பிட
மரங்கள் இல்லாததால்
வராமல் போனது
மழை!

சூரியன்

அழகாய் பிறக்கிறான் அமைதியாக மடிகிறான்
நடுவில் அப்படியொரு ஆர்ப்பாட்டமா?
சூரியன்.

கலங்கரை விளக்கு

விடிய விடிய விழித்திருந்து
நிலவுலகிற்கு வழிகாட்டும் மௌனம்
கலங்கரை விளக்கம்

தென்றல்

உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்

அக அழகு

தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்

 நன்றி கடன்

அடுத்த பிறவியில்  
எனக்கு மகளாக 
என் தாய்...

வானவில்

                               பறவைகளைத்
                               தீண்டுவதில்லை
                               வான"வில்"
                               ஆயுதம்...
 
back to top