.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, August 25, 2013

குழந்தையின் உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம் (பரபரப்பு காணணொளி)!

 


உலகில் எத்தனையோ விசித்திரங்கள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் நமது பார்வைக்கும் கண்களுக்கும் புலப்படுவது ஒரு சிலதே.  உயிரினங்கள் அனைத்துங்கும் இதயம் உள்ளேதான் அமைந்திருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று. உள்ளுக்குள் துடிக்கும் உங்கள் இதயத்தினை நீங்கள் தொட்டுப்பார்த்திருப்பீர்கள்: ஆனால் உங்கள் கண்களால் உங்கள் இதயம் துடிப்பதை நேரடியாக காணமுடியுமா? அல்லது துடிக்கும் உங்கள் இதயத்தை தொட்டுத்தான் பார்க்க முடியுமா? ஆம் ஒரு குழந்தைக்கு இது எல்லாம் சாத்தியம். எப்படி என்று சொல்லித்தான் புரியவேண்டுமா  என்ன.


இந்தியாவில் பிறந்துள்ள ஒரு குழந்தைக்கு இதயதம் உடலுக்கு வெளியே அமைந்துள்ளது அனைவரையும் கடந்த காலங்களில் மட்டுமன்றி இன்றும்  மருத்துவ அதிசமாக நோக்கப்படுகிறது. உடலுக்கு வெளியில் துடிக்கும் அந்த பச்சிளம் குழந்தையில் இதயத்தினை பார்க்கும் ஒவ்வொருவரது இதயங்களும் கணத்துப்போகும் என்பதே உண்மை. மெடிகல் மிராகல் என்று ஆங்கிலத்தில் அழைப்பது இது போன்ற சில  வழமைக்கு மாறான மருத்துவ அதிசயங்களைத்தான். துடிக்கும் இதயத்தை காணளொயில் காணலாம்.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=64UpzlPkDP4




ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு!


 Night of a thousand years of ancient parrots discovery

100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திரேலிய காடுகளில் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன. அவ்வகையில் 100 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அழிந்து விட்டதாகவே கூறப்பட்டது. இந்நிலையில், அவுஸ்திரேலிய காடுகளில் வன விலங்குகள் மற்றும் பறவை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜோன் யங், இந்த கிளிகள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள யங், 15 ஆண்டுகளாக இரவுக் கிளிகள் பற்றிய தேடலில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக 2007ஆம் ஆண்டு இரவுக் கிளிகளின் குரல்கள் காடுகளில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவு கருவிகளில் பதிவாகியிருந்தன. இதையடுத்து, புதிய நம்பிக்கையுடன் கிளிகளைப் படம் பிடிக்கும் முயற்சியில் யங் ஈடுபட்டார். அவரின் அயராத உழைப்பின் பயனாக, அவுஸ்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவிகளில் அரிய வகை கிளிகளின் படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.


புதைத்து 2 வாரங்களுக்குப் பின் உயிருடன் திரும்பிய பெண்!




 Returning girl buried alive after 2 weeks



அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி போலீசில் புகார் அளித்தார். புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகில் உள்ள ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்திருந்த போலீசார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர். விளம்பரத்தைப் பார்த்த கேர்ரி மின்னி அந்த பிணம் தனது மகள் ஷரோலின் ஜாக்சன்தான் என்று கூறி பிணத்தை பெற்றுக் கொண்டார்.


உரிய மரியாதைகளுடன் பிணமும் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒருவாரத்திற்கு முன்னர் ஷரோலின் ஜாக்சன், திடீரென வீட்டு வாசலில் வந்து நின்றார். மகளின் கால்கள் தரையில் பதிந்திருக்கிறதா ? என்று உற்றுப் பார்த்த கேர்ரி மின்னி தனது கையையும் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். உங்கொப்பரான்னே… சத்தியமா வந்திருப்பது ஷரோலின் ஜாக்சன்தான் என்பதை உறுதி செய்து கொண்ட அவர், நாம் அழுது புலம்பி அடக்கம் செய்தது யாருடைய பிணத்தை ? என்று சிந்திக்கத் தொடங்கினார். இவ்விவகாரம் மீண்டும் போலீசாரின் காதுகளுக்கு எட்டியது. உயிருடன் வந்த பெண்ணின் கை ரேகையை ஷரோலினின் பழைய கை ரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த போலீசார், இது ஷரோலின்தான் என்பதை உறுதி செய்தனர். புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அது யாருடைய பிரேதம் ? என்பதை கண்டறியும் முயற்சியில் தற்போது பிலடெல்பியா போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.



பால்வெளியில் பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள்!


குறைந்தது பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள் பால் வெளியில் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு பூமியியைப் போன்ற ஒரு கிரகம் கண்டறியப்படுவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆய்வு மையமான நாஸாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினூடே வானியலாளர்கள் இதனை கண்டறிந் துள்ளனர். 

இதில் எமது பால்வெளியிலுள்ள 17 வீதமான நட்சத்திரங்களில் பூமியின் அளவான, குறைவான சுற்றுப் பாதை கொண்ட கிரகங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

பால்வெளியில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆறில் ஒரு நட்சத்திரத்தில் பூமியின் அளவான கிரகம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

எனினும் இதன் மூலம் எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியில் பூமியை ஒத்த கிரகம் இருப்பதை உறுதி செய்ய முடியாது எனவும் வானியலாளர்கள் கூறியுள்ளனர்.

உயிர் வாழத் தகுதியாக இருப்பதற்கு குறித்த கிரகத்தில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான சூழல் தேவை என்பதோடு தற்ப வெப்பநிலை அதிக சூடாகவும் அதிக குளிராகவும் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையில் இருக்கும் கிரகங்களை நட்சத்திர ஒளி பட்டுத் தெறிப்பதன் ஊடே கண்டறிந்து வருகின்றது. கெப்லர் தொலைநோக்கியின் முதல் 16 மாத அவதானிப்பில் சுமார் 2,400 கிரகங்களை கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமெரிக்க வானியலாளர் சமூகத்தின் மாநாட்டில் மேற்படி ஆய்வு முடிவு சமர்ப்பிக்கப்பட்டது. 

இதில் பால் வெளியில் இருக்கும் 17 வீதமான நட்சத்திரங்களில் பூமியை விட 0.8 முதல் 1.25 வரை அளவு பெரிதான கிரகங்கள் 85 நாட்கள் அல்லது அதனைவிட குறைவான சுற்றுப்பாதையைக் கொண்டதாக அமைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

மறுபுறத்தில் நாஸா செய்மதி தொலைநோக்கி அவதானிப்பு பிரிவு தாம் 461 கிரகங்களை இது வரை அவதானித்திருப்பதாக அறிவித்துள்ளது.
 
back to top