.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, August 27, 2013

My Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...

My Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...

உங்கள் கணினியில் My documents போல்டர் வழக்கம் போல "C" டிரைவில்
தான் அமைந்து இருக்கும். நண்பர்கள் எல்லோரும் தங்களது கோப்புகளையோ அல்லது வேறு ஏதேனும் பைல்களை சேமிக்கும் போது அவை எப்போதும்
My documents போல்டரில் தான் சேமிக்கப்படும். நண்பர்களும் ஏதேனும் அவசரத்தில் சேமித்து விடுவார்கள். அதுவும் நல்லது தான். ஏன் என்றால் நமது பர்சனல் கோப்புகள் ஓரிடத்தில் தான் சேமித்து வைக்க விரும்புவோம். இதனால் ஒன்றும் தீமையும் இல்லை.

ஆனால் எதாவது ஒரு நேரம் , உங்கள் கணினியை Format செய்யும் போது உங்கள் My documents இல் உள்ள கோப்புகள் மீட்டு எடுக்க முடியாமல் போய் விடலாம்.
அல்லது வைரஸ் ஏதேனும் உங்கள் கணினியை செயல் இழக்க செய்து விட்டால்
அந்த நேரத்தில் "C" டிரைவை மீட்பது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாக இருக்கும். அதனால் My documents போல்டரை அப்படியே உங்கள் கணினியில் வேறு டிரைவிற்கு மாற்றி விட்டால் இந்த பிரச்சனை வராது அல்லவா?

1. டெஸ்க் டாப்பில் உள்ள My documents போல்டரை வலது கிளிக் செய்து அதில்
properties என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. Target என்ற இடத்தில் தற்போதைய My documents இன் முகவரி இருக்கும். நீங்கள் கீழே உள்ள Move என்ற பட்டனை கிளிக் செய்து புதிய முகவரியை
கொடுக்கலாம்.

3. உதாரணமாக நீங்கள் "C" டிரைவில் இருந்து "D" டிரைவிற்கு மாற்றுவதாய் இருந்தால் Target பிரிவில் இப்படி அடிக்க வேண்டும்.

D:\My documents

4. பின்னர் Apply கொடுத்தால் உங்கள் My documents கோப்புகள் எல்லாம் நீங்கள் விரும்பிய டிரைவிற்கு மாறி விடும்.இதற்கு பிறகு Format செய்ய வேண்டி வந்தாலும் உங்கள் My documents கோப்புகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.நன்றி! 
 

அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்


இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த
முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல்
Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை.
வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த
மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.

R-Linux Recovery



இதன் தரவிறக்க சுட்டி : RLinux

இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி
கார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,
Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.

இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து
வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள்
கோப்புகளை மீட்கலாம்.

இது போல மற்ற இலவச மென்பொருள்கள் :

Pandora Recovery
Recover Files 2.1
PC Inspector File Recovery 4
Data Recovery 2.3.1
EASEUS Deleted File Recovery 2.1.1
Glary Undelete 1.3
 
 
 

கூகிள் கிளவுட் பிரிண்டர் ( Google Cloud Printer)!


 
 
 
நமக்கு வேண்டிய தகவல்களை அச்சிட்டுப் பயன்படுத்த கணிணியில் இணைத்திருக்கும் பிரிண்டரின் (Printer) மூலம் செய்துகொள்கிறோம். வெளியில் வேறு இடங்களில் இணைய மையங்களில் இணையத்தில் உலவும் போது எதாவது ஒரு முக்கியமான தகவலைப் பார்க்கும் போது அதனை அச்சிட்டு வைத்துக் கொள்ள நினைப்பீர்கள் . அந்த இடத்தில் பிரிண்டர் இருந்தால் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இந்த விசயத்தை அப்படியே மறந்து விடுவீர்கள்.

கூகிள் நிறுவனத்தின் சேவையான Google Cloud Print இதற்கு உதவக்கூடும். முதலில் கிளவுட் அல்லது மேகக்கணிணி என்பது எந்தவொரு கணிணிப் பயன்பாட்டையும் இணையத்திலும் செய்வதாகும்.உதாரணமாக நமது கோப்புகளை இணையத்தில் சேமித்துப் பயன்படுத்துவது ஒரு கிளவுட் பயன்பாடாகும்.

இந்த சேவையில் உங்களிடம் இருக்கும் பிரிண்டரை ஒருமுறை இணையத்தில் இணைத்து விட வேண்டும். பின்னர் உலகில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் பிரிண்டருக்கு தகவலை அச்சிடச் சொல்லி கட்டளையிடலாம். உடனடியாக உங்கள் வீட்டு பிரிண்டரில் அச்சிடப்படும். மின்சாரம் இல்லையெனில் மறுபடி மின்சாரம் வந்த பின்னர் தகவல்கள் அச்சிடப்படும். ஆண்ட்ராய்டு ஒஎஸ்க்கு தயாரிக்கப்பட்ட இந்த பயன்பாடு தற்போது கூகிள் நீட்சியின் மூலம் விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பேசியிலிருந்தும் அச்சிட தகவலை அனுப்பலாம். இதில் doc, pdf, txt போன்ற வகைகளில் முடியும் இணைய முகவரியில் இருக்கும் கோப்புகளை அச்சிடலாம்.
 
 
உங்கள் பிரிண்டரை எப்படி Google Cloud Print இல் இணைக்க:

1. கூகிள் கணக்கில் நுழைந்த பின்னர் குரோம் உலவியின் மூலம் கீழே உள்ள சுட்டியில் சென்று உங்களிடம் இருக்கும் பிரிண்டரைத் தேர்வு செய்து இணைக்கவும். http://www.google.com/landing/cloudprint/win-enable.html

2. கீழுள்ள இணைப்பில் சென்று குரோம் கிளவுட் பிரிண்ட் நீட்சியை Install என்பதைக் கிளிக் செய்து நிறுவிக் கொள்ளவும்.
https://chrome.google.com/extensions/detail/ffaifmgpcdjedlffbhenaloimajbdkfg?hl=en

3. பின்னர் இணையத்தில் நீங்கள் எதாவது ஆவணங்களைப் பார்க்கும் போது குரோம் உலவியின் மேல் வலது புறம் பிரிண்டர் ஐகான் காணப்படும். அதனைக் கிளிக் செய்தால் தகவல்கள் பிரிண்டருக்கு அனுப்பப்படும்.
 

 
இந்த சேவையில் எத்தனை பிரிண்டரை வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். பிரிண்டர்களை நிர்வகிக்கவும், அச்சுக்கு அனுப்பியதை கேன்சல் செய்யவும் குரோம் உலவியின் Settings -> Options -> Under the Hood -> Google cloud Print என்பதில் சென்று பார்த்துக் கொள்ளலாம். 
 

Youtube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற...


 
 
கூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ சாங்ஸ் அதிக அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம். ஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல் வரிகள் புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.

1. Lyrics for Firefox

யுடியூபில் பாடல்களை வீடியோவாகப் பார்க்கும் போதெ பக்கத்தில் பாடல் வரிகளும் தோன்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம். இதற்கு உதவக்கூடியதாக பயர்பாக்ஸ் நீட்சி ஒன்று இருக்கிறது. இதன் பெயர் Lyrics. இது பாடலுக்கு ஏற்ற பாடல்வரிகளை இணையத்தில் தேடி எடுத்து அருகிலேயே காண்பித்து விடும். இதனால் நாம் பாடல்வரிகளைத் தேடும் வேலை மிச்சமாகிறது. ஆனால் தற்போது ஆங்கிலப் பாடல்களுக்கு மட்டுமே அதிமாக பாடல் வரிகள் வருகின்றன. சில தமிழ்ப் பாடல்களுக்கும் ஆங்கில வரிகள் கிடைக்கின்றன. இதை கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து நிறுவிய பின் ஒருமுறை பயர்பாக்சை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும்.

 
பின்னர் யுடியூபில் வீடியோ பார்க்கும் போது அதன் அருகிலேயே சைட்பாரில் Lyrics என்ற இடத்தில் பாடல்வரிகளைக் காண்பிக்கும்.
மின்னலே வசிகரா பாடல்- http://www.youtube.com/watch?v=e_TZaqqnyJg

2.Chrome - Music video lyrics for Youtube

நீங்கள் குரோம் உலவி பயன்படுத்தினால் அதற்கு தனியாக ஒரு நீட்சி இருக்கிறது. ஆனால் இது மேற்குறிப்பிட்ட பயர்பாக்ஸ் நீட்சி அளவுக்கு அதிகான வீடியோக்களுக்கு பாடல்வரிகளைக் காண்பிக்க வில்லை. இருந்தாலும் பயன்படுத்தலாம்.குரோம் உலவியில் இந்த சுட்டியைக் கிளிக் செய்து நீட்சியை Add to Chrome கொடுத்தால் நிறுவப்படும். Download Music video lyrics for youtube

 
 
பிறகு குரோம் உலவியில் யுடியூபில் எதேனும் வீடியோ பார்க்கும் போது அதற்குப் பொருத்தமான பாடல் வரிகள் இருந்தால் உலவியின் மேல்பகுதியில் அட்ரஸ்பாரில் இருக்கும் ஐகான் Lyrics என்று காட்டும். அதைக் கிளிக் செய்தால் பாடல் வரிகள் காட்டப்படும்.

 
நிறுவிய பின்னர் உதாரணத்திற்கு இந்த வீடியோவை மாதிரிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். http://www.youtube.com/watch?v=weRHyjj34ZE&feature=relmfu
 
 
back to top