.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, August 29, 2013

இணையத்தை எளிதாக கையாள பயன்மிக்க குறிப்புகள்..!

Internet tips and Tricks

மிகச்சிறந்த Internet tips and Tricks (கணினிக் குறிப்புகள்) என்ற இப்பதிவில் உண்மையிலேயே சிறந்த Internet tips and Tricksகளைப் பார்க்க இருக்கிறோம்.

internet tips and tricks
 
இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இன்று ஏராளம். கணினியில் மூலம் அதிகம் இணையத்தைப் பாவிக்கிறோம். வலைத்தளங்கள் அல்லது இணையப் பக்கத்தை எளிதாக கையாள குறுக்கு விசைகளைக் (Shortcuts of internet)கற்றுக்கொண்டோமானால் எளிதாக நாம் பிரௌசிங் செய்யலாம்.

இதனால் நேரம் மீதியாகும். குறிப்பாக Internet சென்டர் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறுக்குவிசைகள் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த நேரத்தில் இணையத்தில் உங்கள் பணிகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் இணையத்தில் உலவப் பயன்படும் உலவிகளைப் பற்றிய தகவல்களையும் (About Browsers)அறிந்துவைத்திருப்பது மேலும் இணையத்தில் சிறப்பாக உலவ பயன்படும்.

விரைவாக இணையத்தைப் பயன்படுத்த உதவும் Internet tips and Tricks களைப் பார்ப்போம்.

முதலில் உங்கள் பிரௌசரைத் திறந்தவுடன் என்ன செய்வீர்கள்? அட்ரஸ் பாரில் நீங்கள் விரும்பும் வலைத்தளத்தின் பெயரை உள்ளிட்டு Go அல்லது Enter அழுத்துவீர்கள் அல்லவா?

இதில் உள்ளப்படும் URL -ஐ முழுவதுமாக தட்டச்சிட்டு, உதாரணமாக http://goodluckanjana.blogspot.com/ என தட்டச்சிட்டு enter கொடுப்பீர்கள்.

இனி அவ்வாறு செய்ய வேண்டாம். goodluckanjana என அட்ரஸ் பாரில் தட்டச்சிட்டு Ctrl+Enter தட்டிப்பாருங்கள்.

வலைத்தளம் திறக்கிறதா? கண்டிப்பாக திறக்கும். Ctrl+Enter கொடுக்கும்போது தானாவே அட்ரஸ்பாரில் நாம் உள்ளிடும் பெயருக்கு முன்பாக htttp:// என்ற ஆரம்பமும், .com என்ற முடிவும் தானாகவே சேர்ந்துகொள்ளும்.

ஒவ்வொரு வலைத்தள முகவரியையும் இப்படி வலைத்தளத்தின் பெயரை மட்டும் உள்ளிட்டு கண்ட்ரோல்+என்டர் மட்டும் தட்டுவதால் எளிதாக வலைத்தளத்தைத் திறக்க முடியும்.

இணையப்பக்கங்களில் ஒரு தொடுப்பிலிருந்து மற்றொரு தொடுப்புக்கு எளிதாக மாற Tab அழுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.

Tab பட்டனை அழுத்துவதன் மூலம் ஒரு இணைப்பிலிருந்து அடுத்த இணைப்பிற்கு தானாகவே செல்ல முடியும்.

மீண்டும் முந்தைய இணைப்பிற்கு செல்ல Shift+Tab அழுத்துங்கள்.

ஒரு வலைத்தளத்தில் உள்ள படிவத்தை (Form) நிரப்ப அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல இந்த Tab key உங்களுக்கு உதவும். Email Form, வலைத்தளங்களின் கணக்குகளை உருவாக்க(Website account creation form) போன்ற விண்ணப்ப நிரப்புக் கட்டங்களை நிரப்பும்போது ஒவ்வொரு கட்டமாக கர்சரை வைத்துக் கிளிக் செய்யாமல் Tab விசையை அழுத்துவதன் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லலாம். முந்தை கட்டங்களுக்குச் செல்ல வேண்டுமெனில் Shift+Tab அழுத்துங்கள்.

ஒரு வலைத்தளத்தை, வலைப்பக்கத்தை மறுபடியும் தொடக்கம்(Refresh) செய்ய F5 விசையை அழுத்துங்கள்.

வலைத்தளம் அல்லது வலைப்பக்கத்திலுள்ள URL செலக்ட் செய்ய F6 விசையை அழுத்துங்கள்.
அல்லது Alt+D கொடுக்கலாம்.

வலைபக்கத்தை முழுவதுமாக Screen க்கு கொண்டுவர F11 விசையை அழுத்துங்கள்...

கூகிள் சர்ச் போன்ற சர்ச் பாக்சில் நீங்கள் வேண்டியதை எளிதாக தேடிப்பெற தேட வேண்டிய சொற்களுடன் "" குறிகளை இட்டு Search கிளிக் செய்யுங்கள். உதாரணமாக "goodluckanjana" என Google Search-ல் தேடினால் நீங்கள் தேடிய சொற்களுக்கான "goodluckanjana" -க்கான சரியான முடிவுகள் மட்டும் உங்களுக்கு காட்டும். இவ்வாறு நீங்கள் உங்களுக்கு வேண்டிய சொற்களை "" குறிகளுக்குள் இட்டுத் தேடுவது உங்கள் தேடுதலை எளிதாக்கும். நீங்கள் வேண்டிய செய்திகளடங்கிய வலைத்தளங்கள் முதன்மைப்படுத்தி காட்டும்.

தேடுபெட்டியில் தேடியதை தட்டச்சிட்டுவிட்டு அருகிலுள்ள Search பட்டனை கிளிக்செய்வதைக் காட்டிலும் Enter அழுத்திப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் தேடுபெட்டியில் தேடும்போது வேண்டியதை தட்டச்சிட்டு என்டர் கொடுத்தாலே போதும். உடனே தேடல் தொடங்கிவிடும். மௌஸ் கர்சரைக் கொண்டுபோய் சர்ச் பட்டனில் கிளிக் செய்துதான் சர்ச் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. (புதியவர்கள் இந்த Internet tips and Tricks ஐ கவனிக்கவும்.)

Tabbed Browsing

தற்காலத்தில் உள்ள அனைத்து பிரௌசர்களுமே Tabbed browsing அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. முக்கிய பிரௌசர்களான IE, Firefox, Google Chrome ஆகிய உலவிகளில் இப்போது Tabbed Browsing வசதி தரப்பட்டுள்ளது.

அதாவது வலைப்பக்கத்தில் உள்ள இணைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய விண்டோவில் திறக்கும் முறை மாறிவிட்டது.

ஒரே விண்டோவில் Tabbed முறையில் அடுத்து அடுத்து திறக்கும் செயல்பாட்டைக் கொண்ட புதிய வலைஉலவிகளே(Tabbed Browsing) இப்போது பெரிதும் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதையும் நவீன தொழில்நுட்ப்பதிற்கு(New Technology) ஒரு உதாரணமாக சொல்லலாம்.

இவ்வாறு டேப்(Tab) பயன்படுத்தி ஒவ்வொரு வலைப்பக்கத்தையும் ஒரே விண்டோவில் திறப்பதற்கு குறுக்கு விசைகள் உள்ளன. பொதுவாக எல்லா உலவிகளுக்கும் இது பொருந்தும்.

ஒரு வலைப்பக்கத்தை அல்லது ஒரு இணைப்பை புதிய டேபில் திறக்க இந்த இணைப்பில் கண்ட்ரோல் கிளிக் செய்தால் புதிய டேபிள் அந்த இணைப்பு திறக்கும். இதற்கு மற்றொரு வழியும் உள்ளது. உங்கள் Mouse-ல் Scroll Wheel இணைப்பின் மீது ஒரு சொடுக்கு சொடுக்குவதன் மூலமும் வலைப்பக்கத்திலுள்ள ஒரு இணைப்பை புதிய டேபில் திறக்கச் செய்யலாம். இவ்வாறான Internet tips and Tricks களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வர Internet Browsing உங்களுக்கு எளிதாகிவிடும்.

Browserகள் பலவகை:

நம் கணினியிலேயே அமைந்திருக்கும் Browser ஒன்று உண்டு. அதுதான் Internet Explorer என்ற வலைஉலவி. பெரும்பாலானவர்கள் இதையே தங்கள் உலவியாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். இணையத்தில் பல்வேறு வலைஉலவிகள் இலவசமாக கிடைக்கின்றன. அவைகள் கணினிலேயே இணைந்து இருக்கும் இன்டர்நெட் பிரௌசரைவிட மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறது.

அவற்றில் முதன்மையான மூன்று browserகள்.. (Top Three Browsers)

1. Google Chrome
2. Firefox Browser
3. Opera Browser

இவற்றை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட அனைத்து உலவியிலும் தற்போது நான் முன்னரே குறிப்பிட்டபடி Tabbed Browsing முறையில் இயங்குகிறது.

Add-Ons and Plugins:

இத்தகைய புதிய பிரௌசர்களுக்கு ஆயிரக்கணக்கில் பிளகின்களும், ஆட்ஆன் புரோகிராம்களும் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. வேண்டிய வசதிகளை இந்த வலைஉலவிகளில் இணைப்பதன் மூலம் கூடுதல் வசதிகளைப் பெற முடியும்.

உங்கள் பிரௌசர் அப்டேட்களை தவறாமல் செய்யுங்கள். இதனால் புதிய வசதிகளைப் பெற முடியும். உதாரணமாக Adobe Flash Player Update-ஐ கூறலாம். இந்த Adobe Flash Player ஆனது இணையத்தில் இருக்கும் வீடியோக்கள், படங்களை காண்பதற்கு பயன்படுகிறது.

இவ்வாறான update களைச் செய்யும்போது கணினியின் நிலைத்தன்மையும், பாதுகாப்பும் மேம்படுத்தப்படுகிறது. எனவே உங்கள் பிரௌசர் பிளகின்கள்(Browser Plugins), ஆட்ஆன் புரோகிராம்களை (Odd-On Programe)தவறாமல் அப்டேட் செய்வது முக்கியம்.

மேற்கண்ட Internet tips and Tricks  அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செய்ய பழகிக்கொண்டாலே இணையம் உங்கள் வசமாகும்.  உங்களாலும் மிகச் சிறந்த, வேகமான,பாதுகாப்பான உலவுதலை(Browsing) செய்ய முடியும்.
 

Wednesday, August 28, 2013

QR Code என்றால் என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது?


QR Code என்றால் என்ன? 


QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலக நாட்டினர் அனைவராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாகும்.

Bard code & QR code


Bar Code பற்றிய நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருப்போம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியே QR Code ஆகும்.


QR Code-ம் பயனும்: 


  1. QR Code Image ஆக மாற்றுவதன் மூலம் உங்களுடைய தகவல்கள் அல்லது இணைப்புகள் உங்களுடைய தகவல்கள் QR Code ஆக என்கோட் (Encode) செய்யப்பட்டு ஒரு  படமாக கிடைக்கும். 
  2. அப்படத்தை உங்களுக்கு வேண்டிய இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். 
  3. நண்பர்களுக்கு அனுப்பியும் அவற்றை Decode செய்து பயன்படுத்த முடியும். 
  4. அதாவது ஒரு தகவலை QR Code ஆக என்கோட் செய்யப்பட்டு கிடைக்கும் படத்தை மீண்டும் ஸ்கேன் செய்து (டீகோட் Decode)செய்து , அதில் மறைந்துள்ள தகவல்களைப் பெற முடியும்.
  5. உங்களுடைய தகவல்கள் தமிழ்மொழி உட்பட எம்மொழியில் இருந்தாலும், இந்த முறையில் தகவல்களை QR Code ஆக மாற்றி, மீண்டும் தேவையானபோது Decode  செய்து பெற முடியும்.


QR Code Image - ல் என்னென்ன தகவல்களைப் பயன்படுத்த முடியும்.?


QR Code -ல் இணையதளச்சுட்டிகளை (Websites links) வைக்கலாம். குறுஞ்செய்திகளை QR Code ஆக மாற்றலாம். மின்னஞ்சல் முகவரிகள், வலைத்தள முகவரிகள், SMS என்பன போன்ற ஐந்து வரிக்கு மிகாமல் இருக்கும் Data க்களை QR Code படமாக மாற்ற முடியும்.

QR Code Image - ஐ உருவாக்குவது எப்படி? 


QR Code Image -ஐ உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய இணையதளங்கள் (Online QR Code Websites) உள்ளன. அவற்றில் ஏதாவது ஒரு தளத்திற்கு சென்று நீங்கள் உருவாக்க விருக்கும் இணைப்பு அல்லது தகவல்களை அதில் உள்ளிட்டு, QR Code Image - இமேஜைப் பெற முடியும். இது முற்றிலும் இலவசமே..

QR Code Image உருவாக்க இலவச மென்பொருள்களும் உள்ளன. அம்மென்பொருளைப் பயன்படுத்தியும் QR Code Image ஐ உருவாக்கம், QR Code Image -ல் உள்ளதை Decode செய்து படிக்கவும் முடியும்.

QR Code உருவாக்கப் பயன்படும் மென்பொருள்: 


1. Download QR Code Generator Software
2. Download QR Code Generator Software
3. Download QR Code Generator Software

உடனடியாக Online-ல் QR Code உருவாக்கப் பயன்படும் இணையதளங்கள்:

1. http://createqrcode.appspot.com/
2. http://keremerkan.net/qr-code-and-2d-code-generator/
இதுபோன்று நிறைய இணையத்தளங்கள் உள்ளன.

உருவாக்கப்பட்ட QR Code - ஐ Decode  செய்து தகவலைப் படிப்பது எப்படி? 


இதற்கு QR Code Reader என்ற மென்பொருள் பயன்படுகிறது. இணையத்தில் QR Code Reader வலைத்தளங்களும் உள்ளன.

இந்த தளத்திற்குச் சென்று http://www.onbarcode.com/scanner/qrcode.html உங்களுடைய QR Code Image - உள்ளிட்டு, அதில் உள்ள தகவல்களைப் பெற முடியும்.

QR Code Reader மென்பொருள் (Software) மூலமும் QR Code Image உள்ளவற்றை படித்து அவற்றைப் பயன்படுத்த முடியும்.

இம்மென்பொருளைப் பயன்படுத்தி QR Code உருவாக்க முடியும். உருவாக்கிய QR Code Image - படிக்கவும் முடியும்.

விண்டோஸ் கணினிக்கான மென்பொருள் இது. மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய.. இங்கு செல்லவும்.


qr code generating software

Microprocessor-கணினியின் மூளை (சிறப்பு கட்டுரை)

 

சாதாரணமாகவே நாம் கணினியை மனிதனின் மூளைக்கு ஒப்பிட்டுச் சொல்வோம்.


AMD Microprocessor
 
மனிதனின் மூளைக்கு சரிசமமாக இல்லாவிடினும், மனிதனை விட அதிக கணக்குகள் மற்றும் மனிதனுக்கு தேவையானவைகளை , குறைந்த நேரத்தில் விரைவாக வேலைகளை செய்து தரும் ஒரு சாதனம்தான் கணினி.

கணினிக்கும் மூளை உண்டு. இதை  மைக்ரோ பிராசசர் (Microprocessor) என்கிறோம்.  தமிழில் சொல்வதெனில் நுண்செயலி.


நுண் செயலி என்றால் என்ன? இதன் பணி என்ன?
(What is a micro processor? What is the task?)

நுண் செயலி என்பது ஒரு கட்டுப்பாட்டு இயக்கு மையம் ஆகும். ஆங்கிலத்தில் CPU என்பார்கள். இது சில்லுக்குள் அடங்கியிருக்கும்.

இது கணினியில் உள்ள ஒவ்வொரு வன்பொருளும் (Hardware)கட்டளை சைகைகளை ஏற்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

கணினியில் கொடுக்கும் செயல்கள் பல்வேறு நுண்செயல்களாக மாற்றப்பட்டு இயக்கும் பணியை இது செய்வதாலேயே இதை நுண்செயலி என்கிறோம்.

நுண்செயலியைக் கண்டுபிடித்தவர் யார்? 
(Who is the inventor of microprocessor?)

கணினியை இயங்குவதற்கு மூலாதாரமான நுண்செயலியைக் கண்டுபிடித்தவர்  மெர்சியன் டெட் ஹாப் (1969). இவர் கால்குலேட்டருக்குத் தேவையுள்ள பல சர்க்யூட்களை ஒரே சில்லுக்குள் வடிவமைத்ததே உலகின் முதல் நுண்செயலியாகும்.

இந்த நுண்செயலியை busicom என்ற ஜாப்பன் நிறுவனம் Calculaterக்குத் தேவையான சர்க்யூட் உருவாக்கித் தர இன்டென் நிறுவனத்தை நாடும்பொழுது, அதற்கான முயற்சியில் இன்டெல் நிறுவனம் இறங்கியது.
அந்நிறுவனத்தில் அப்பொழுது பணிபுரிந்த Mercian E Ted haff அவற்றிற்கான முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார். அதுவே முதல் நுண்செயலி ஆயிற்று.

தற்காலத்தில் பல்வேறு வகையான நுண்செயலிகள் வந்துவிட்டன.

நுண்செயலிகளின் வகைகள்: 

1. RISC வகை நுண்செயலிகள்
2. x86 வகையான நுண்செயலிகள்
3. 64 பிட் வகையான நுண்செயலிகள்

இத்தகைய பயனுள்ள நுண்செயலிகள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன தெரியுமா?

கடந்த நூற்றாண்டின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் Miro Prossorம் ஒன்று. இதனால்  கணினி உலகத்தில் மாபெரும் புரட்சியே ஏற்பட்டுவிட்டது.

மின்னணு உலகத்தில் இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.

இம்மின்னணு நுண்செயலியை(Microprocessor) உருவாக்க க்வார்ட்ஸ்(Kvarts) என்னும் கண்ணாடி ஸ்படிகம் பயன்படுகிறது.

இக்கண்ணாடி ஸ்படிகத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு அது க்வார்ட்ஸ் சிலிக்கானாக (Kvarts sio2) மாற்றப்படுகிறது.

க்வார்ட்ஸ் சிலிக்கானாக மாற்றப்பட்ட தகட்டில் இணைப்புகள் வரையப்படுகிறது.

முதன்முறையாக வடிவமைக்கப்பட்ட (Microprocessor)நுண்செயலி 4004ல் 2300 டிரான்சிஸ்டர்கள் வரைக்கும் வரைந்தனர். தற்போது Pentium 4 போன்ற பிராச்சர்களில் கோடிக்கணக்கான டிரான்சிஸ்டர்கள் வரைந்துள்ளனர். இத்தனை டிரான்சிஸ்டர்கள் (Transistors) அடங்கியுள்ள நுண்செயலின் அகலம் எவ்வளவு தெரியுமா?

வெறும் கால் அங்குல சதுரப் பரப்பளவுதான்.

சிலிக்கனின் மேல் போட்டோ resist மூலம் மின்கடத்தும் பொருள், மின் கடத்தாப் பொருள் மற்றும் குறை கடத்தி ஆகியவற்றையும் சேர்த்தே இதில் வடிவமைக்கின்றனர். இது அவ்வளவு சுலபமானது அல்ல.

இந்த மொத்த அமைப்பும் ஒரு டிரான்சிஸ்டர் போல் வேலை செய்வதாலேயே இவற்றை டிரான்சிஸ்டர் என்றழைக்கிறோம்.

இவ்வாறான சிக்கலான இணைப்புகளை வரையும் முறைக்கு போட்டோ லித்தோகிராபி என்று பெயர்.

இவ்வாறு வரையப்பட்ட இணைப்புகளில் உள்ள மெல்லிய கண்ணுக்குத் தெரியாத கோடுகளின் அகலம் மைக்ரான் என்னும் அலகால் அளவிடப்படுகிறது.

இவற்றை வெறும் கண்களால் அளவிட முடியாது. ஒரு மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பாகம். குறிப்பாக நாம் உணர்ந்துகொள்ளும்படி சொல்ல வேண்டுமானால் நம் தலைமுடி இருக்கிறதல்லவா? அதில் ஒரு முடியை எழுபதாக பிரித்தால் என்ன அளவு வருமோ.. அந்தளவுதான் மைக்ரான்...

இந்த மைக்ரான் அளவை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது.
 

உலகையே அதிர வைக்கும் புதிய NFC தொழில்நுட்பம்!

முதலில் இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்...! 


http://www.youtube.com/watch?v=_64mAcOn444


என்ன நடக்கிறது? ஏதாவது புரிகிறதா? தொடர்ந்து இடுகையை வாசியுங்கள்..!!! முழுவதுமாக வாசியுங்கள்...!!! 

பிறகு மீண்டும் இந்த வீடியோவைப் பாருங்கள்...!! 

உங்கள் மனதில் என்ன எண்ணம் தோன்றுகிறது?

எண்ணங்களை எழுதுங்கள் கருத்துரையில்..! காத்திருக்கிறேன்.

சாதாரண பஸ்கண்டக்டர் முதல்... அணுவிஞ்ஞானி, ராக்கெட் விடும் வானவியல் அறிஞர்கள் வரை அனைவருக்கும் பயன்படுவது, பயன்படுத்தப்படுவது புதிய தொழில்நுட்பமும், தொழில்நுட்பக் கருவிகளுமே..!
இந்த தொழில்நுட்பங்கள் சும்மா இருக்கிறதா? எய்ட்ஸ் கிருமியைபைப் போல பல்கி பெருகி வளர்ந்துகொண்டே  இருக்கிறது. Technology-ன் பல்படியாக்கல் வளர்ச்சியாக தற்போது வெளிவந்த NFC தொழில்நுட்பத்தை சொல்லலாம். NFC தொழில்நுட்பமா? அது என்ன செய்யும்? எப்படி பயன்படுகிறது? எதிர்காலத்தில் NFC Technology -ன் நிலை என்ன? என்ற கேள்விகள் உங்களுக்கு எழும். தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே NFC தொழில்நுட்பத்தைப் பற்றி எளிதாக புரியும். 
uses of New NFC Technology

NFC என்றால் என்ன? 
NFC என்பது Near Field Communication என்பதின் விரிவு. 
NFC Technology எதற்கு பயன்படுகிறது? எதில் பயன்படுத்தப்படுகிறது? 
இது தகவல்களைப் பரிமாறக்கொள்ள பயன்படுகிறது. உங்களுடைய Smart Phone -ல் புதிய புகுத்தப்பட்டிருக்கிற தொழில்நுட்பம்.
NFC தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது? 
NFC தொழில்நுட்பம் செல்பேசியில் இருக்கிற Bluetooth முறையைப் போன்றது. NFC தொழில்நுட்பத்திற்கும், Blue tooth முறைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. Blue tooth தொழில்நுட்பத்தை செயற்படுத்த இரண்டு செல்பேசிகளிலும் அவற்றை இயக்க வேண்டும். பிறகுதான் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு Data-க்களை பறிமாறிக்கொள்ள முடியும். 
ஆனால் NFC Technology அப்படியல்ல.. தொட்டாலே போதும் ஒட்டிக்கொள்ளும்.

உங்கள் Smart Phoneகளை ஒன்றுடன் ஒன்று உரசும்படி அருகருகே கொண்டு சென்றாலே தகவல்கள் பரிமாறப்படும். 
Wi-Fi தொழில்நுட்பம்
Wi-Fi தொழில்நுட்பத்தின் வழித்தோன்றலே இந்த NFC தொழில்நுட்பமாகும். கம்பி இல்லா இணையத்தொடர்பை சாத்தியமாக்கிய Wi-fi தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்ததே இந்த தொழில்நுட்பமும். தற்போது நீங்கள் கணினி, Laptop, Tablet PC, Mobile, Reader போன்றவைகளில் கம்பி இல்லா இணையத்தைப் பயன்படுத்துகிறீர்கள் அல்லவா? இந்த இணைப்பிற்கு பயன்படும் தொழில்நுட்பமே இந்த Wi-Fi தொழில்நுட்பந்தான். 
இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான் நீங்கள் பயன்படுத்தும் செல்பேசி நெட்வொர்க் நிறுவனங்கள், Aircel, Airtel, Relience, tata tocoma, போன்ற நிறுவனங்கள் உங்கள் செல்பேசி இணைப்போடு, இணையத்தைப் பயன்படுத்தும் வசதியையும் கொடுக்கிறது. 
Wi-Fi Technology வழிவந்த தொழில்நுட்பம் NFC.  NFC தொழில்நுட்பம் செயல்பட காரணம் உங்கள் Smart Phone-ல்  இருக்கும் முக்கிய Transistor கள்தான். அவற்றில் முக்கியமானவையாக , Felica, ISO/IEC போன்ற டிரான்சிஸ்டர்களைச் சொல்லலாம். 
NFC TEchnology -யின் முக்கிய பயன்கள் என்ன? 
இவற்றின் பயன் ஒரு Smart Phone லிருந்து மற்ற Smart Phone -க்கு தகவல்களை பறிமாறிக்கொள்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை.. கூடுதலாக நிறைய பயன்களும் இருக்கிறது. 
Credit கார்ட்டாக பயன்படுத்தலாம்
நீங்கள் ஒரு கடையில் shopping செய்கிறீர்கள்.. வழக்கமாக பணமாகவோ அல்லது கிரடிட் கார்ட் கொடுத்தோ பணத்தை செலுத்துவீர்கள் அல்லவா?  கிரடிட் கார்ட்டை  கொடுக்கும்போ கடைக்கார்ர் என்ன செய்வார். அதை வாங்கி அதற்குரிய இயந்திரத்தில் ஒரு முறை உரசி எடுத்தால் போதும். நீங்கள் பெற்றுக்கொண்ட பொருளுக்குரிய தொகையை உங்கள் கிரடிட் கார்டிலிருந்து எடுத்துக்கொள்ளும். 
NFC Technology
NFC Technology
அதுபோலவேதான் அதாவது உங்கள் செல்பேசியை கிரடிட் கார்ட்டுக்குப் பதில் அருகில் கொண்டு சென்றாலே போதும்.. உங்கள் கணக்கில் உள்ள பணம், நீங்கள் செலுத்தவேண்டியவருக்கு மாறிவிடும். இதற்கு நீங்கள் password அமைத்துக்கொள்வதால் பலமடங்கு உங்கள் பணத்திற்கு பாதுகாப்பு. கிரடிட் கார்ட்டை இந்த முறையும் உங்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும். 

கிரடிட் கார்ட் மட்டுமல்ல, Electronic Checque, Mobile Banking 
ஆம் நண்பர்களே கிரடிட் கார்டாக மட்டுமல்ல... எலக்ட்ரானிக் செக், மொபைல் பேங்கிங் போன்ற பயன்மிக்க செயல்பாடுகளையும் இதன் மூலம் செய்துகொள்ள முடியும். 
பிரபல google wallet -ம் இந்த NFC தொழில்நுட்ப அடிப்படையிலேயே இயங்குகிறது. 
ஒரு விசித்திரம்: 
விளம்பரங்களை சுவரொட்டியில் பார்க்கும்போதே  விளம்பரத்துக்குரிய பொருளை நீங்கள் அங்கிருந்தே வாங்க முடியும். எப்படி?
நாம் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளை வாங்கும்போது அதில் Barcode இருக்கும் இல்லையா? பொருட்களின் விலை மற்றும் சில தகவல்கள் அந்த பார்கோடில் இருக்கும். Barcode Scanner பயன்படுத்தி அவற்றின் மீது ஒரு முறை ஒளியை செலுத்தினால் அப்பொருளுக்குரிய விலையானது விலைப்பட்டியில் வந்துவிடும் அல்லவா? 
படத்தைப் பாருங்கள்... சுவரில் இருக்கும் விளம்பரத்தின் அருகே செல்போனை கொண்டு சென்றதும் நடக்கும் மாயாஜாலத்தை...!
NFC TECHNOLOGY
NFC Technology
அதுபோன்றதொரு தொழில்நுட்பம்தான் NFC யிலும் இருக்கிறது. அதற்கு NFC Tag என்று பெயர்.. விளம்பரத்தில் NFC Tag அச்சிட்டிருப்பார்கள்.. நீங்கள் உங்கள் Smart Phone கொண்டு அதன் மீது இலேசாக தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் வைத்தெடுத்தாலே போதும். அந்த விளம்பரத்துக்குரிய அனைத்து விபரங்களும் உங்கள் Smart Phone-க்கு வந்துவிடும். பிறகு உங்கள் போனிலிருந்து அப்பொருளை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்
பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் இவ்வாறான வியாபார நடைமுறை சாத்தியப்பட்டிருக்கிறது. ஜப்பானில் இவ்வாறு NFC தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தியே செயல்படும் கடைகளும் இருக்கிறது. அந்த கடைகளில் பொருளுக்குரிய NFC TAG அச்சிடப்பட்ட விளம்பரங்களை மட்டுமே சுற்றிலும் ஒட்டி வைத்திருப்பார்கள். அங்கு சென்று வேண்டிய பொருளின் NFC Tag மீது உங்கள் Smart Phone-வை வைத்தெடுத்தாலே போதும். 
அதிலிருந்து தகவல்கள் அனைத்திலும் உங்கள் ஸ்மார்ட்போனில் ஏறிவிடும். பிறகு உங்களுக்குத் தேவையானவற்றிற்கு அங்கேயே உங்கள் போன் மூலம் பண மாற்றம் செய்துவிட்டு, உங்கள் வீட்டு முகவரியைக் கொடுத்தால் போதும்.. உங்கள் வீடு தேடி பொருட்கள் வந்துவிடும். 
பிரான்ஸ் நாட்டின் விமானநிலையத்தில் இத்தொழில்நுட்பத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள். உங்களிடம் Smart Phone மட்டும் இருந்தாலே போதும். அதில் NFC தொழில்நுட்பத்தின் மூலம் Check-in செய்யலாம். அதிலேயே உங்கள் Boarding Pass எல்லாம் இருக்கும். உலக அரங்கில் முதன் முதலாக இந்த தொழில்நுட்பத்தை இந்த விமானநிலையத்தில் அரங்கேற்றியிருக்கிறார்கள்.
ஒரே ஒரு SmartPhone  போதும். அது உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிடும். 
ஒவ்வொரு தொழில்நுட்ப முறைக்கும் ஒரு விதிமுறை, வரையறைகள் இருக்கும். அப்போதுதான் அது சரிவர கட்டுப்படுத்தப்பட்டு இயங்கும். NFC Technology விதிமுறையை வகுத்து வெளியிட்டவர்கள் தொழில்நுட்ப வர்த்தகத்தில் முன்னணி வகிக்கும் SONY, PHILPS, NOKIA நிறுவனங்களே..!
NFC Technology -ன் அடிப்படை விதி: 
எலக்ட்ரான்கள்  ஒரு ஊடகம் வழியாக பாயும்போது ஒரு மின்காந்த தளத்தை உருவாக்கும். மின்காந்த தளம் மாறும்போது Electoronகள் அதன் வழியாக பயணிக்கும். இந்த இரட்டை இயக்கத்தை Inductive Coupling என்று சொல்வார்கள். இதன் அடிப்படையில் அமைந்தது தான் NFC தொழில்நுட்பம். 
இத்தொழில்நுட்பத்தின் ரகசியம் என்று சொன்னால் ரேடியோ அலைவரிசைதான். Radio Frequency Identification என்ற நுட்பம்தான் இத்தகவல் பரிமாற்றத்தின் பரம ரகசியம். இதில் இரண்டு வகைகள் இருக்கிறது. 1. Basic RFID, 2. Active RFID  இந்த இரண்டிற்குமுள்ள வித்தியாசம் Active RFID   என்பது பேட்டரியால் charge செய்யப்பட்டு இயங்கும். 
இந்த NFC தொழில்நுட்பம் 13.6 MHz அலைவரிசையில் இயங்கக்கூடியது. ஒரு வினாடிக்கு 106லிருந்து 424 Kilo bite அளவிலான தகவல்களை பரிமாற்றும் தன்மை கொண்டது. இத்தொழில்நுட்பத்தில் மூன்று வகை உள்ளது. 
1. Read and write. 
அதாவது விளம்பரங்களில் உள்ள இணைப்பை வாசிக்க இம்முறை பயன்படும். 
2. Peer to Peer .  
 அதாவது இரண்டு செல்போன்களுக்கு (Smart Phone) இடையே தகவல் பரிமாற்றம் செய்யப்படும் நுட்பம். சாதாரணமாக நாம் போன்களில் Photos, Visiting card, songs, videos ஆகியவைகளைப் பயன்படுத்துவதைப் போன்றது.
3. Card Emulation Mode. 
 இந்த நுட்ப முறையானது Credit Card பயன்பாடு, டிக்கெட்கள் வாங்குவது, மற்ற பொருட்கள் வாங்குவது போன்ற அதிமுக்கிய விஷயங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. 
நாளடைவில் இந்த NFC தொழில்நுட்பமானது உலகெங்கும் பரவி வியாபிக்கும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் தமது ஆச்சர்யம் தரக்கூடிய முடிவுகளை வெளியிட்டுள்ளனர். 
விரைவிலேயே நம் நாட்டிலும் இந்த NFC தொழில்நுட்பம் பரவிவிடும். நாம் எங்கு சென்றாலும் நம்முடைய Smart போன் ஒன்றை எடுத்துச் சென்றாலே போதுமானது. சென்ற இடத்தில் நமக்கு என்னத் தேவை அவற்றை இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெற முடியும். அதாவது கையிலே காசு வாயிலே தோசை என்று சொல்கிறோமே.. அதுபோல கையிலே செல்போன் பையிலே பொருட்கள் என மாற்றிச்சொல்லும் அளவுக்கு இத்தொழில்நுட்பம் பரவும் என்பதில் சந்தேகமில்லை..
மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.  உங்களிடம் ஒரே ஒரு SmartPhone  இருந்தால் போதும். அது உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிடும். இந்த வீடியோவைப் பாருங்கள். பதிவின் சாராம்சம் முழுவதையும் ஆங்கிலத்தில் விளக்கியிருக்கிறார்கள். NFC Technology-யைப் பற்றியும் செயல்படும் விதத்தையும் இதில் காணமுடியும்.
 
back to top