
முதல்ல நெடு நாளைக்கு பிறகு மனது மிகவும் கனத்துடன் இந்த விமர்சனத்தை உள்ளது உள்ளபடி எழுதுகிறேன். என் இனத்தை பெருமைபடுத்தும் படமா அல்லது இந்தியர்களை சிறுமைபடுத்தும் படமா என்று எனக்கே தெரியாத ஒரு கேள்வி என்னுள் இந்த படத்தை பார்த்ததிலிருந்து எழுந்தது. இத்தனைக்கும் இந்த படத்தை பற்றி ஒரு மாதம் முன்பே கூறியிருந்தேன் இதை ஒரு தமிழ் படமாய் அல்லது தமிழர் எடுத்திருந்தால் அவர் பாதி ஆயுள் சென்சார் / ரிவைஸிங் கமிட்டியில் முடிந்து போயிருக்கும் என்று ஏன் என்றால் இயக்குனர் செல்வமணி இதே கதை களத்தை வேறு விதமாக எடுத்து அவர் பட்ட பல ஆண்டு துயரம் சொல்லி மாளாது.படத்தின் முதன் முதலில் ஒரு ஸ்லைடு – அதில் 1980 முதல் இலங்கையின் இனக்கலவரத்தில் தமிழர்கள் கொல்லபடுகின்றனர்...