..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
12:50 PM
Unknown
No comments
இந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேர வேண்டுமானால் INstitute of Banking Personnel Selection (IBPS) நடத்தும் பொது எழுத்துத்தேர்வுக்கான (Common Written Examination) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வங்கிகளில் ஏற்படும் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்யும் அமைப்பாக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (ஐ.பீ.பி.எஸ்) செயல்படுகிறது. இந்த அமைப்பு முதன் முதலில் பொதுத்துறை வங்கிகளுக்கான பொது எழுத்து தேர்வு நடத்தி வந்தது. கடந்த ஆண்டில் எழுத்து தேர்வுடன் பொது நேர் காணலும் நடத்தியது. ஐ.பீ.பி.எஸ். நடத்தும் பொது எழுத்து தேர்வு முடிவுகளை சில தனியார் வங்கிகளும் பயன்படுத்திக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதிகள்: 1. வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர், வங்கி அமைந்துள்ள மண்டல மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லான் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட எதாவதொரு வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன், ஆப்லைன் இரு முறைகளில் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய பின்னரே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய முடியும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2013ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.09.2013 வரைசெல்லான் படிவம் மூலம் கட்டணம் செலுத்தும் கால அவகாசம்: 12.09.2013 வரை
அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச தேதி: 21.09.2013 – 22.09.2013மேலும் நேரமுகத் தேர்வு மற்றும் இலவச பயிற்சி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
12:30 PM
Unknown
No comments
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் 24 மருந்துப் பொருள்களுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் தடைவிதித்துள்ளது.இதில் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த 15 மருந்துகளும் தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 9 மருத்துவப் பொருள்களும் அடங்கும். கடந்த எட்டு மாதங்களில் நடத்திய பரிசோதனையில் இந்த பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம்தான் கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. இதற்கென்று ஒவ்வொரு ஆண்டும் அரசு 210 கோடியை ஒதுக்குகிறது.
மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு டென்டர்கள் விடப்பட்டு, அதில் குறைந்த தொகையை நிர்ணயிக்கும் நிறுவனத்தின் மருந்துகள் வாங்கப்படும். கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் அந்தந்த கிடங்குகளில் வைத்து பரிசோதனை செய்யப்படும். குறிப்பிட்ட ஒரு தேதியில் தயாரான மருந்துகள் அனைத்தும் சுமார் 5 அல்லது 6 முறை பரிசோதனை செய்யப்படும். மருத்துவ சேவைக்கழகம் நிர்ணயித்துள்ள கோட்பாடுகளின் கீழ் வராத மருந்துகள் தரமற்ற மருந்துகளாக கருதப்பட்டு, கழகத்தின் மறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும்.இதுகுறித்து மருத்துவ கழகத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர்,”இருமல் மருந்து, காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மாத்திரை, நெஞ்செரிச்சலுக்கான மருந்துகள் உள்ளிட்ட 15 மருந்துகளை தடை செய்துள்ளோம்.மருந்துகள் பயன்படுத்தப்படும் அரசு மருத்துவமனையோ, அந்த மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் பரிந்துரைக்கும் மருத்துவரோ மருந்துகள் குறித்து புகார் தெரிவித்தால் அதன் அடிப்படையிலும் பரிசோதனை நடத்தப்பட்டு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகள் தடைசெய்யப்படும். மேலும் கையிருப்பில் உள்ள அந்த நிறுவனத்தின் மருந்துகள் உடனடியாக திருப்பி அனுப்பப்படும்.சுகாதாரத் துறையை பொருத்தவரை தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதால், தமிழக மருத்துவ சேவைக்கழகம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகளை தடை செய்துவிட்டால் மற்ற மாநிலங்களும் அதன் கொள்முதலை நிறுத்திக் கொள்ளும்.தடை செய்யப்பட்ட மருந்துகள், அதனை தயாரிக்கும் நிறுவனத்தின் விவரங்கள, எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் தமிழக மருத்துவ சேவைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என்றார் அவர்.
12:03 PM
Unknown
No comments
முதல்ல நெடு நாளைக்கு பிறகு மனது மிகவும் கனத்துடன் இந்த விமர்சனத்தை உள்ளது உள்ளபடி எழுதுகிறேன். என் இனத்தை பெருமைபடுத்தும் படமா அல்லது இந்தியர்களை சிறுமைபடுத்தும் படமா என்று எனக்கே தெரியாத ஒரு கேள்வி என்னுள் இந்த படத்தை பார்த்ததிலிருந்து எழுந்தது. இத்தனைக்கும் இந்த படத்தை பற்றி ஒரு மாதம் முன்பே கூறியிருந்தேன் இதை ஒரு தமிழ் படமாய் அல்லது தமிழர் எடுத்திருந்தால் அவர் பாதி ஆயுள் சென்சார் / ரிவைஸிங் கமிட்டியில் முடிந்து போயிருக்கும் என்று ஏன் என்றால் இயக்குனர் செல்வமணி இதே கதை களத்தை வேறு விதமாக எடுத்து அவர் பட்ட பல ஆண்டு துயரம் சொல்லி மாளாது.படத்தின் முதன் முதலில் ஒரு ஸ்லைடு – அதில் 1980 முதல் இலங்கையின் இனக்கலவரத்தில் தமிழர்கள் கொல்லபடுகின்றனர் என்று.
ஜான் ஆபிரகம் – கற்றது தமிழ் ஹீரோ மாதிரி தாடி மீசையுடன் ஒரு அதிகாலை கெட்ட கனவில் கண் முன்னே கொத்து கொத்தாய் தமிழர்கள் சாவதை கண்டு அதிர்ந்து எழுகிறார். பின்பு நேரே ஒரு மதுக்கடையில் போய் ஒரு குவார்ட்டரை வாங்கி சிப்பிகொண்டே சர்ச்சுக்குள் நுழைந்து கண்கலங்கும் போது அந்த் சர்ர்சின் ஃபாதர் உங்களை இரண்டு மூன்று வருடங்களாய் பார்க்கிறேன் ஆனால் ஏன் இந்த கோலத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்க ஒரு சதியில் நானும் ஒரு அங்கத்தினர் ஆகி இன்னும் குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன் என்று கூறும்போது அப்படியே பச்சை பசேல் ஜாஃப்னா தமிழ் நகரம், ஒரு பேருந்தில் அனேக தமிழர்களுடன் பஸ் பயணிக்கிறது. திடீரென்று இரண்டு வேன்களில் ஆயுதம் தாங்கியவர்கள் இறங்கி தமிழர்களை சுட்டு கொல்கின்றனர். சிங்களம் ராணுவம் தான் இதை செய்தது என நீங்களும் நானும் என்னும் போது இது பதவி சுகத்துக்காக இன்னொரு தமிழ் கூட்ட தலைவர் செய்வதாய் படம் காட்ட உடனே இந்தியா இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என எண்ணி இந்திய பிரதமர் அமைதி படை என்று இந்திய படையை இலங்கையில் தமிழ் ஏரியாவுக்கு அனுப்புகின்றனர். அப்போது அவர்களுக்கும் எ. டி எஃப் என்னும் புலிகளின் படையோடு மோதல் வருகிறது. இதில் இரு தரப்புக்கும் நிறைய இழப்பு வர இந்தியாவின் பிரதமரின் தவறான அணுகுமுறை தான் காரணம் என்று இந்தியாவின் எதிர்கட்சிகள் கூற அந்த புலிகளின் படையின் பலத்தை லன்டனில் இருந்து பத்திரிக்கையாளராய் வந்த பெண் முதல், ரா என்னும் இந்திய உளவு அமைப்பு வரை சொல்லி மிரட்ட, புலிகளை நேர் கொண்டு வெல்ல இந்திய படை கூட முடியாது அதனால் இதை ஒரு அன்டர் கவர் ஆப்பரேஷன் செய்து புலிகளையும் புலிகளின் தலைவன் அன்னா பிரபாகரனையும் மடக்க எண்ணி ஜான் ஆப்ரகாம் ஜாஃப்னாவுக்கு ஒரு பத்திரிக்கையாளரால வர, இந்திய உளவுப்படை கே பாலகிருஷ்னனை சென்னையில் இருந்து ஜாஃப்னாவுக்கு கமான்டர் இன் சீஃபாக இந்த ஆப்பரேஷன் நடக்கிறது. ஜான் ஆப்ரகாம் முதல் காட்சியில் தமிழர்களை கொன்ற இன்னொரு தமிழ்ப்படையான அந்த தலைவனிடம் எப்படியாவது புலிகளை அழிக்க நீங்கள் தான் உதவ வேன்டும் என கேட்க அவரும் வரும் தேர்தலில் ஜாஃப்னாவில் தான் ஒரு பெரிய தலைவராய் ஆக வேண்டும் என எண்ணி எனக்கு இந்தியா ஆயுத உதவி தந்தால் புலிகளையும் புலிகளின் தலைவனையும் அழிக்க உதவுகிறேன் என் கூற அதற்க்கு ஜான் ஆப்ரகாம் இந்தியாவின் உதவியோடு வெளி நாட்டில் இருந்து ஆயுதங்கள் வர, ஆனால் அந்த ஆயுதங்கள் நேரே புலிகளுக்கு கிடைக்குமாறு டபுள் கிராஸ் செய்து இந்திய ராணுவம் / இந்திய உளவுப்படையின் ஒவ்வொரு திட்டத்தையும் முடக்கும் புலிகளின் சாமர்த்தியம் என காட்ட, ஜான் ஆப்ரகாமுக்கு தன் கூடவே இருந்து புலிகளுக்கு தகவல் தருவது பாலகிருஷனன் தான் என கன்டறிய அதற்க்குள் பாலகிருஷ்ன்னன் ஜான் ஆப்ரகாமாய் கடத்தி ஒரு இடத்தில் வைக்க, ஜான் ஆப்ரகாமின் அன்டர் கவர் எக்ஸ்போஸ் ஆகிறது.இந்த சதியை உணராத இந்திய உளவுப்படை அதே பாலகிருஷனனுக்கு எப்படியாவது ஜான் ஆப்ரகாமை விடுவிக்க வேண்டும் என கேட்க அவரை விடுவித்து கொலம்போவின் சேஃப் ஹவுஸில் வைக்கின்றனர். இதன் நடுவே புலிகளை ஒழிக்க முடியாமல் / இந்தியாவின் அமைதி படை இலங்கையை விட்டு வெளியேறுகிறது கூடவே இந்திய பிரதமரும் பதவி விலகுகிறார். புலிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் வெளி நாட்டினர் பதிலுக்கு தக்க சமயத்தில் நீங்களும் எங்களுக்கு உதவ வேண்டும் என முன்பே கேட்டு வைக்க அதற்க்கு புலிகள் சம்மதித்து பதவியை துறந்த பிரதமர் திரும்பவும் ஆட்சியில் உட்கார போவதாய் சர்வே தெரிவிக்க எங்கே இந்தியா முன்னேறிவிடுமோ என்று வெளி நாட்டு இந்திய எதிர்ப்பாளர்கள் ஆயுதம் சப்ளை செய்தவர்கள் லண்டனில் உள்ள மதராஸ் கஃபேயில் கூடி இந்தியாவின் முன்னாள் பிரதமரை எப்படி புலிகளின் மூலம் ஸ்ரீ பெரும்பதூரில் குண்டு வைத்து கொல்கின்ற்ன்ர் என்பது தான் பிற்பாதி கதை. படம் இரு இனத்தின் போராட்டத்தை கூடவே கொஞ்சம் மசாலா தடவி இலங்கை தாய்லாந்து சிங்கப்பூர் என ஒரு சுற்று சினிமாத்தாக சுற்றீ கடைசியில் உளவுப்படைக்கும் இந்தியாவின் அத்தனை ஏஜன்ஸிக்கும் இன்று இரவு பத்து மணிக்கு முன்னாள் பிரதமரை குண்டு வைத்து தகர்க்க போகும் தற்கொலைப்படை யார் என்று தெரிந்திருந்து அதை தடுக்க முடியாமல் போன மாதிரி காட்டியிருப்பது நிறைய சினிமாத்தனம். தமிழன் ஒரு ஆள்காட்டி பரம்பரை / இந்தியா இதில் பலிகடா என்பது போல் காட்டி புலிகளின் தலைவன் மற்றும் புலிகளின் வீரத்தை சூப்பராய் சித்த்ரித்திருந்தாலும் கடைசியில் சொன்ன விதம் ஒரு இனத்தை கேவலமாய் காட்டியிருப்பது போல் உள்ளது. ஒன்று உண்மைச்சம்பவம் என கூறியிருக்கலாம் அல்லது இது கற்பனை கதை யாரையும் குறிப்பிடும் விதத்தில் இல்லை என கூறியிருக்கலாம் இப்படி இரண்டும் இல்லாமல் கொஞ்சம் கதைக்கரு கொஞ்சம் மசாலா கொஞ்சம் சொந்த திரைக்கதை என படம் பப்படமாய் நொறுங்கியது ஆச்சர்யபடுத்தவில்லை.ஏற்கனவே கூறியிருந்தேன் இந்த படம் வெளியானால் பலரின் துரோகங்களை உரித்து காட்டும் என அது தமிழர்களின் உணர்ச்சியை கொச்சைபடுத்தும் இந்த படத்தை எடுத்த ஒரிஜினல் தயாரிப்பாளர்கள் (ரைஸிங் சன் பிக்ச்சர்ஸ் – Rising Sun Pictures) யார் எனக்கேட்க வேண்டாம் உங்களின் அனுமாத்திற்க்கே விட்டு விடுகிறேன். படத்தை பார்த்தால் மனது வலிக்கிறது ஆனால் யாருக்காக என்பதில் உண்மையை கூற மனம் மறுக்கிறது என்ற உண்மையோடு…..ஒரு வரி விமர்சனம் – மதராஸ் கஃபே – சேக்ஷ்பியர் எழுதிய திருக்குறள்.
11:55 AM
Unknown
No comments
மலைகளில் இருந்து உருவாகி பாய்ந்தோடி வரும் நீரைச் சேமிக்க, வாய்க்கால்கள் மூலம் ஆற்றுப் பாசனப் பகுதியில்லாத இடங்களில் குளங்களாகவும், ஏரிகளாகவும் இயற்கையான நீர் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்கிவைத்தனர் நம்முடைய முன்னோர்கள்.இவற்றின் நீர்ப்போக்கைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வாய்க்கால்கள் மூலம் ஒரு குளம் நிரம்பி, அடுத்த குளத்துக்கும் நீர் செல்ல பாதை வைத்திருக்கிறார்கள்.இதேபோலத்தான் கோவில்களுக்குள் இருக்கும் குளங்களும். எல்லாக் குளங்களுக்கும் நீர்வழிப்பாதை உண்டு. இப்போது அவையெல்லாம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த தகவல்.குளங்கள், ஏரிகள் இல்லாவிட்டால்தான் என்ன என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் வளர்த்துவிடப்பட்டிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏராளமான கோடிகளைக் கொட்டி ஆற்றுப் படுகைகளில் இருந்து தொடங்கப்பட்ட குடிநீர்த் திட்டங்கள், இந்த மனப்பான்மையை நீரூற்றி(!) வளர்த்து விட்டிருக்கலாம்.
குடியிருப்புப் பகுதிகளுக்கு குழாய்களில் தண்ணீர் வரும்போது, அருகே ஏன் குளம், ஏரி என்று கேள்வி எழுப்புகிறார்கள் பலர். இதனால், நீர்வழிப் பாதைகளை அடைத்துவிட்டு, நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளை எழுப்பி, வாய்ப்புள்ள குளங்களில் கூடாரம் எழுப்பி, கிணறு வெட்டி, டிராக்டர் விட்டு உழுது விவசாயம் பார்க்கும் “பெரிய’ மனிதர்களும் இருக்கிறார்கள்.இன்னும் பல இடங்களில், அரசு சொத்தான குளம், ஏரிகளை பட்டா போட்டு விற்று கைமாற்றிவிட்ட சோகங்களும் இருக்கின்றன. சில இடங்களில் அரசே குளங்களை மூடிவிட்டு கட்டடங்களை எழுப்பிவிட்டது, ஏழைகளுக்கென இலவச மனைகளாகவும் வழங்கியிருக்கிறது.தண்ணீர் எங்கே வருகிறது என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். படிப்படியாக நீர்வரத்தை மூடிவிட்டு வீடு கட்டினால் தண்ணீர் வரத்து இருக்காதுதான்.பெருமழை பொழியும்போது பெருவெள்ளமாகப் பிரவாகம் எடுத்த தண்ணீர் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு செல்லும்போது, “வெள்ளம் வந்துவிட்டது’ என்கிறார்கள். காரணம் என்னவென்று பார்க்கத் தவறுகிறார்கள்.வெறுமனே பாசனத்துக்கும், கால்நடைகளுக்கும், வீட்டு உபயோகங்களுக்கும், குடிக்கவும் மட்டுமே தண்ணீர் தேவை என்பதல்ல, இந்தப் பூமிக்கும் தண்ணீர் தேவை இருக்கிறது. பூமியும்கூட இயங்கும் உயிரினம்தான். எந்தச் சந்தேகமும் தேவையில்லை.நிலத்தடியில் தண்ணீர் இருக்க வேண்டும். நிலத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் நல்ல தண்ணீர் கடலுக்குள் சென்று கடலின் உப்புநிலையைச் சமப்படுத்தவும் வேண்டும்.எனவே, “கடலுக்குள் வீணாகக் கலந்தது’ என்ற வாதமும்கூட சரியானதல்ல.அதேநேரத்தில், தேவைக்கு பயன்படுத்தாமல் தவறிவிட்டோம் என்பதையும் சொல்லாமல் இருக்க முடியாது.அண்மையில் கர்நாடகத்தில் பெய்த மழையால் காவிரியில் “தானாக’ வந்த தண்ணீர், காவிரி- கொள்ளிடத்தில் கரை ததும்பிச் சென்றும்கூட, அருகேயுள்ள சிறு வாய்க்கால்களும், குளங்களும் வழக்கம்போல மண்மேடாகக் காட்சி தந்ததையும் காண முடிந்தது.ரத்த நாளங்களை வெட்டிவிட்டு உடல் உறுப்பு செயல்படவில்லையென குறை சொல்ல முன்வந்திருக்கிறோமே. என்ன மருந்து சாப்பிட்டாலும், நவீன சிகிச்சை எடுத்தாலும், ரத்தம் செல்லாவிட்டால் உயிர் இருக்குமே தவிர, உடல் சடலம்தானே?எனவே, ரத்த நாளங்களைப் போன்ற வாய்க்கால்கள், குளங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இப்போது அந்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இதை முழுமையாக – முறையாக வழிநடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது.அதோடு, அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இருந்த நீர்வழிப் போக்குகள் குறித்து பட்டியல் எடுத்து, குறைந்தபட்சம் தற்போது எந்தச் சிக்கலும் (ஆக்கிரமிப்பு) இல்லாமல் இருக்கும் பாதைகளையாவது முதல் கட்டமாக கைவைத்து சீரமைத்து ஒழுங்கு செய்ய வேண்டும்.எதிர்காலத்தில் எந்த வகையிலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருக்கவும், அரசேகூட ஆக்கிரமிக்க வழியில்லாமல் செய்யவும் தீர்க்கமான தொலைநோக்குப் பார்வை கொண்ட சட்டத் திருத்தங்கள் அவசியம்.அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினால், எந்த மாநிலத்தாரிடமும்- எந்தக் காலத்திலும் தண்ணீருக்காக கையேந்தி நிற்கும் நிலை வராது.”யாரோ செய்கிறார்கள், நல்லவர்கள்’ என்ற ஒற்றை வரி வியாக்யானத்தோடு நிறுத்திக் கொண்டு, கடந்து செல்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் தன்னார்வ குழுவினரின் முயற்சிகளுக்கு கைகொடுத்து அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.இயற்கை ஆர்வலர்கள் நீர்வழிப் பாதைகளைச் சீரமைக்க வேண்டிய அவசியம் குறித்து இன்னும் கூடுதலாக ஆய்வு செய்து, எளிமையாக தகவல் கையேடுகளை – பாடத் திட்டங்களை – வகுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். “சிரம்’ கொடுத்துத்தான் தியாகம் செய்ய வேண்டுமென்பதில்லை, “கரம்’ கொடுத்தும் செய்யலாம்.