.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, August 31, 2013

டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்!

உலகின் கண்ணி வெடிகளை அகற்ற தன் ராஜ அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்திய தொண்டுள்ளம் கொண்ட ஒரு இளவரசியின் வாழ்வில் ஏற்பட்ட பரிதாப முடிவின் கதைதான் இது.

கூரைக் கொட்டடியில் வாழ்பவரும் தன் செயலூக்கத்தால் ஒரு நாட்டுக்கே ராணியாகமுடியும் என்று அச்சிடப்பட்டு படமாக்ககப்பட்ட கதைகளில்தான் நாம் கேட்டிருப்போம். ஆனால் தற்காலத்திலே அதேபோல் ஏழ்மை நிலையில் இருந்து ஒரு தன் ஆற்றலால் ராணியானவர்தான் டயானா.

31 - diana_tout
 

வேல்ஸ் இளவரசி டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர், (ஜூலை 1, 1961 – ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்லசின் முதலாவது மனைவி இவர். இவர்களின் காதல் கதை சுவாரசியமானது. உலகப்பிரசித்தம் பெற்றது. காதல் கனிந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டனர். இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹரி) ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள்.
இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய அரசில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.

பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்குப் பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. இதன்படி “இவரது மரணம் டயானாவின் கார் ஓட்டுநர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பப்பராசிகளின் செய்கைகளினாலுமே விளைந்தது” எனத் தீர்ப்புக் கூறப்பட்டது.
15 வருட இங்கிலாந்தின் இளவரசி என்ற படோட வாழ்க்கை யால் மீடியாக்களில் படாதபாடுபட்டார் டயானா.

விவாகரத்திற்குப் பின்னர், தன்னை மருமகளாக ஏற்ற வின்ட்ஸர் அரச குடும்பத்தாலேயே தான் கொலை செய்யப்பட இருக்கிறோம் என்பதை சுதாரித்துக்கொண்டார். அதை ஆவணமாகவும் பதிவுசெய்து கீழ்க்கண்ட வாறு எழுதியும் வைத்தார்.

”இந்த அக்டோபர் 1996 ம் நாளில் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து உதவிசெய்பவர் யாரும் உண்டோ என்று ஏங்கிய வண்ணம் இருக்கிறேன். எனது கணவரோ (சார்லஸ்) என்னை கார் விபத்துக்குள்ளாக்க விரும்புகிறார். எனது காரின் வேகம் நிறுத்தியை செயலிழக்கச்செய்தும் எனது தலையில் பயங்கர காயத்தை ஏற்படுத்தியும் அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்…”
இந்நிலையில் டோடி என்னும் இமாத் முஹம்மது அல் ஃபாயித் என்ற முஸ்லிம் இளைஞரை தனக்கு ஆதரவு அளிப்பவராகக் கண்டு காதலித்தார். வழக்கம்போல இருவருக்கும் உள்ள உறவு பற்றிய சர்ச்சையில் மீண்டும் சிக்கினார்.

எயிட்ஸ் நோயாளிகளுக்கு சேவைகள், தர்ம அறக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத் துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலே தான் தன் தலையாயக் கடமை என்றிருந்தார். அன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார்.
அந்த நேரத்தில்தான் அவர் யூகித்த அந்தப் படுகொலை சம்பவம் நடந்தும் விட்டது. 1997 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் தேதி நள்ளிரவு. உலகிலேயே அதிக விலையும், பாதுகாப்பும் நிறைந்த கார்களில் ஒன்றாகக் கூறப்பட்ட அந்தக் கார் இளவரசி டயானாவையும், அவரது அப்போதைய காதலர் டோடி ஃபாயிது, இவர்களுக்கு மெய்க்காப்பாளர் ஒருவர் மற்றும் ஓட்டுநர் என்று நால்வரைச் சுமந்து சென்றது.

டயானாவின் நடத்தைகளைப் புகைப்படமெடுத்து பரபரப்பு செய்தி களை வெளியிட காத்துக்கிடந்த பத்திரிகைப் புகைப்படக் குழுவினர் டயானாவின் காரை அசுர வேகத்தில் பின்தொடர்ந்தனர்.

பாரிஸ் நகர சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் சென்ற டயானாவின் கார் பெரும் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சில வினாடிகளில் டோடி ஃபாயிதும் ஓட்டுனரும் இறந்துபோயினர். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த டயானா சிகிச்சை பலனிற்றி இறந்தார். அவரது மெய்க்காப்பாளர் மட்டும் உயிர் தப்பினார்.

டயானா ரசிகர்களின் கோபக்குமுறல்கள் அந்தப் புகைப்படக் குழுவி னரை நோக்கிப் பாய்ந்தன. ஃபிரான்ஸின் தடவியல் துறையினருடன், உளவுத் துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்து நடத்திய புலன் விசாரணையில் ஓட்டுநர் அதிகமாக மது அருந்தியிருந்ததாகவும் அதனா லேயே கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளான தாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

டயானா இறந்த ஒரு வாரத்திற்குள் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை டயானா பெயரில் தானம் செய்து ஃபிரான்ஸின் ஸ்பென்ஸர் குடும்பம் டயானாவின் இறப்பின் துக்கத்தை வெளிக்காட்டினர். மேற்கத்திய பத்திரிகைகள் இப்படுகொடுலையை இப்படி எழுதின “அவள் அரச குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தும் அவர்களாலேயே பலி வாங்கப்பட்டார்.”
டயானாவின் உடல் அடக்கம் 1997 செப்டம்பர் 6ம் நாள் நடை பெற்றது. தனது இருமகன்கள் மற்றும் முன்னாள் கணவர் சார்லஸ், அவரது அரச குடும்பம் மற்றும் டயானா தன் பொறுப்பில் தொடங்கிய 110 அறக்கட்டளைகளிலிருந்தும் பிரதிநிதிகள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட அவரது இறுதி ஊர்வலத்தை இப்பூமியில் பாதிக்கும் அதிகமான மக்கள் அன்று (இன்று அந்த நாள்) தொலைக்காட்சி மூலம் கண்டதாகத் தகவல். அதனால்தானோ என்னவோ பிரிட்டனை ஆளும் வின்ட்ஸர் அரசாங்கம் தங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அனுதாபம் தேடிக் கொண்டனர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் அழகாலும் சேவை மனப்பான்மையாலும் உயர்ந்த இடத்தில் வாழ்க்கைப்பட்டு அரண்மனை, கணவன் என்று முடங்காமல் பொதுச்சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவர்களுக்கும் மேலாகப் புகழ் பெற்றுவந்தார் டயானா.
இது மன்னர் குடும்பத்துக்கு சங்கடத்தைத் தந்தது நாடறியும். அதனால் குறைந்த காலத்திலேயே அவரது வாழ்வும் தொண்டும் முடக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய ஒரு இளவரசியின் வரலாறை இந்தப் பூமி அவ்வளவு சீக்கிரத்தில் மறக்காது.

உலகின் மிக துல்லியமான நேரம் காட்டும் கடிகாரம் இதுதான்!

Element ytterbium-ல் இருந்து தயாரிக்கப்பட்ட உலகின் மிக துல்லியமான நேரம் காட்டும் கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதனுடைய tick rate ஒரு quintillion விட இரண்டு பகுதிகளுக்கும் குறைவான நிலைப்பெற்றுள்ளது, வேறு எந்த சாதனத்தையும் விட பத்து மடங்கு சிறந்ததாக இருக்கும். ytterbium அணுக்களின் அடிப்படையில் அணுசார்ந்த கடிகாரங்களை சோதனை செய்து நிலைப்புத் தன்மையைக்காக ஒரு புதிய சாதனையை படைத்துள்ளோம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

yb-clock-2-2013-burrus

 

21 ஆம் நூற்றாண்டின் pendulums அல்லது metronomes போல பிரபஞ்சத்தின் 
வயதை ஒப்பிடக்கூடிய ஒரு சரியான நேரத்துடன் முன்னும் பின்னுமாக ytterbium கடிகாரம் இயங்கும் என்று கூறியுள்ளனர். தேசிய நியமங்கள் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் இயற்பியல் அறிஞர்கள் ytterbium கடிகாரத்தின் tick மற்ற அணு கடிகாரத்தை விட நிலைப்பெற்றுள்ளது என்று கூறியுள்ளனர். நிலைப்புத்தன்மை ஒவ்வொரு tick கால அளவை மற்ற tick உடன் பொருந்துகிறதா என்பதை துல்லியமாக கருதப்படுகிறது. 

ytterbium கடிகாரத்தின் tick, ஒரு quintillion விட இரண்டு பகுதிகளுக்கும் குறைவான நிலைப்பெற்றுள்ளது (1 தொடர்ந்து 18 பூஜ்ஜியங்களைக்), மற்ற அணுசார்ந்த கடிகாரங்களின் முன்பு வெளியிடப்பட்ட முடிவுகள் விட சுமார் 10 மடங்கு சிறந்துள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புவியீர்ப்பு, காந்த துறைகள் மற்றும் வெப்பநிலை போன்ற அணு கடிகாரங்கள் ticks rate சிறிய விளைவுகளின் அளவை கொண்டு சென்சார்கள் அளவிடும் என்றும் கூறியுள்ளார்கள். 

New atomic clock’s precision ‘groundbreaking’

*********************************************** 

If you follow scientific developments as if they were football games, this would be a good time to cheer “Tick-tick-tick-tick! Tick-tick-tick-tick! Go, clock, go!”
The reason for such enthusiasm? Researchers have released a study in the journal Science describing what they believe is the world’s most precise clock.

டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வங்கிகளில் கிளார்க் பணிக்கான IBPS வாய்ப்பு!

இந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேர வேண்டுமானால் INstitute of Banking Personnel Selection (IBPS) நடத்தும் பொது எழுத்துத்தேர்வுக்கான (Common Written Examination) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கிகளில் ஏற்படும் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்யும் அமைப்பாக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (ஐ.பீ.பி.எஸ்) செயல்படுகிறது. இந்த அமைப்பு முதன் முதலில் பொதுத்துறை வங்கிகளுக்கான பொது எழுத்து தேர்வு நடத்தி வந்தது. கடந்த ஆண்டில் எழுத்து தேர்வுடன் பொது நேர் காணலும் நடத்தியது. ஐ.பீ.பி.எஸ். நடத்தும் பொது எழுத்து தேர்வு முடிவுகளை சில தனியார் வங்கிகளும் பயன்படுத்திக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

30 - vazhikatti IBPS-Clerk-2-Score-Card

 


தகுதிகள்: 1. வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர், வங்கி அமைந்துள்ள மண்டல மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லான் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட எதாவதொரு வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன், ஆப்லைன் இரு முறைகளில் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய பின்னரே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய முடியும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2013

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.09.2013 வரை
செல்லான் படிவம் மூலம் கட்டணம் செலுத்தும் கால அவகாசம்: 12.09.2013 வரை

அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச தேதி: 21.09.2013 – 22.09.2013

மேலும் நேரமுகத் தேர்வு மற்றும் இலவச பயிற்சி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
.

தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 24 மருந்துப் பொருள்களுக்கு மருத்துவ சேவைக்கழகம் தடை!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் 24 மருந்துப் பொருள்களுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் தடைவிதித்துள்ளது.இதில் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த 15 மருந்துகளும் தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 9 மருத்துவப் பொருள்களும் அடங்கும். கடந்த எட்டு மாதங்களில் நடத்திய பரிசோதனையில் இந்த பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம்தான் கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. இதற்கென்று ஒவ்வொரு ஆண்டும் அரசு 210 கோடியை ஒதுக்குகிறது.

31- banned medicines

 

மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு டென்டர்கள் விடப்பட்டு, அதில் குறைந்த தொகையை நிர்ணயிக்கும் நிறுவனத்தின் மருந்துகள் வாங்கப்படும். கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் அந்தந்த கிடங்குகளில் வைத்து பரிசோதனை செய்யப்படும். குறிப்பிட்ட ஒரு தேதியில் தயாரான மருந்துகள் அனைத்தும் சுமார் 5 அல்லது 6 முறை பரிசோதனை செய்யப்படும். மருத்துவ சேவைக்கழகம் நிர்ணயித்துள்ள கோட்பாடுகளின் கீழ் வராத மருந்துகள் தரமற்ற மருந்துகளாக கருதப்பட்டு, கழகத்தின் மறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும்.

இதுகுறித்து மருத்துவ கழகத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர்,”இருமல் மருந்து, காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மாத்திரை, நெஞ்செரிச்சலுக்கான மருந்துகள் உள்ளிட்ட 15 மருந்துகளை தடை செய்துள்ளோம்.
மருந்துகள் பயன்படுத்தப்படும் அரசு மருத்துவமனையோ, அந்த மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் பரிந்துரைக்கும் மருத்துவரோ மருந்துகள் குறித்து புகார் தெரிவித்தால் அதன் அடிப்படையிலும் பரிசோதனை நடத்தப்பட்டு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகள் தடைசெய்யப்படும். மேலும் கையிருப்பில் உள்ள அந்த நிறுவனத்தின் மருந்துகள் உடனடியாக திருப்பி அனுப்பப்படும்.

சுகாதாரத் துறையை பொருத்தவரை தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதால், தமிழக மருத்துவ சேவைக்கழகம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகளை தடை செய்துவிட்டால் மற்ற மாநிலங்களும் அதன் கொள்முதலை நிறுத்திக் கொள்ளும்.
தடை செய்யப்பட்ட மருந்துகள், அதனை தயாரிக்கும் நிறுவனத்தின் விவரங்கள, எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் தமிழக மருத்துவ சேவைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என்றார் அவர்.
 
back to top