வாரம் இரு முறை நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து நன்றாக ஊறிய பின்னர் சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும்.குளியல் அறையில் கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பின்னர் குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உடலில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும். தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள். இது மனதை ஒரு நிலைப்படுத்தும். சருமத்தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும். வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். கைக்குட்டையில் ரோஜா எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு அடிக்கடி நுகர்ந்து பாருங்கள். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். கடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடுங்கள். சென்ட் அடித்தது போன்று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது தெரப்பி. அதேபோல், நாம் உட்கொள்ளும் உணவிலும் அக்கறை காட்டினால் ஆரோக்கியம் அரவணைக்கும். அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள் * காலை 5 .30 மணிக்கு தேன் கலந்து ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும். எந்தப் பிரச்னையும் சீக்கிரத்தில் அண்டாது. * காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு டம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும். * காலை 9.30 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் சாறு கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும். * காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட். இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும். * மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும். * இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது பருப்பு. வயிறை மிதமாக வைத்திருக்கும். இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது. சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும். |
Saturday, August 31, 2013
உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில வழிகள்
4:51 PM
Unknown
No comments
கருச்சிதைவை தடுக்க சில வழிகள்!
4:46 PM
Unknown
No comments
ஒரு பெண் தாயாவது அற்புதமான தருணமாகும். தன்னுள் உருவான கருவை பலவித கனவுகளுடன் தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள்.ஆனால் எல்லா பெண்களாலுமே முதல் குழந்தையை முழுமையாக பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே ஒரு சில காரணங்களினால் இறந்து வெளியேறி விடுகிறது. இதனையே கருச்சிதைவு என்கின்றனர் மருத்துவர்கள். கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது? கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச்சிதைவு அபாயம் ஏற்படும். அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல் இருத்தலும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் அபார்சன் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகளை சரிசெய்ய தகுந்த மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டு விடும். இதேபோல் கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது. மது, போதை பாதிப்பு சில குறிப்பிட்ட நோய்களுக்கு (புற்றுநோய், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்படுத்துகின்றன. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிகள். மனநலக் கோளாறுகள் கருச்சிதைவில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன. இதன் காரணமாகவே கருவுற்று மூன்று மாதங்களுக்கு கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். பயணங்களை தவிர்க்கவும் குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம். முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி இருக்கவேண்டும். அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை. ஊட்டச்சத்துணவு அவசியம் நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் செய்யக் கூடாது. கர்ப்பிணிகள் இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும் கருச்சிதைவை முடிந்தவரை தடுத்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். |
Desktop கணினிகளுக்கான Viber அப்பிளிக்கேஷன் அறிமுகம் !
4:08 PM
Unknown
No comments
இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றினை ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி ஊடக இலவசமாக வழங்கிவந்த Viber நிறுவனம், தற்போது தனது தயாரிப்பை Desktop கணனிகளிலும் பயன்படுத்தக்கூடியதான வடிவமைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
Viber Desktop App 3.0 எனும் இப்புதிய பதிப்பின் மூலம் கையடக்கத்தொலைபேசியில் இருந்து Desktop கணனிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடியதாகவும் ஒரே கணக்கினை டெக்ஸ்டாப், மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தும்போது ஏதாவது ஒரு சாதனத்திற்கு அனுப்பப்பட்ட செய்தியினை மற்றைய சாதனத்தில் படிக்கக்கூடியதாகவும், ஒரு சாதனத்தில் குறுஞ்செய்தி அழிக்கப்படும்போது மற்றைய சாதனத்திலிருந்தும் அழிந்துபோகக்கூடிய வகையிலும் இப்புதிய பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூகுள் ஏர்த்தில் Leap Motion Controller தொழில்நுட்பம் அறிமுகம்!
3:19 PM
Unknown
No comments
உலகின் அனைத்து பாகங்களையும் ஒரே இடத்திலிருந்து பார்த்து அறிந்துகொள்ளும் Google நிறுவனத்தின் "Google Earth" சேவையில் முப்பரிமாண (3D) வடிவங்களைக் கட்டுப்படுத்தும் Leap Motion Controller தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
"Google Earth" சேவையை பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் Google Earth Pro 7.1 பதிப்பு மென்பொருளின் ஊடாக இவ்வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என Leap Motion நிறுவனம் தெரிவித்துள்ளது.
முப்பரிமாண வரைபடத்தினை துல்லியமாக காட்டும் வசதியும், அது தொடர்பான பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் வசதியும் Google Earth Pro 7.1 பதிப்பில் காணப்படுவதுடன் குறித்த முப்பரிமாண வரைபடங்களை பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை தற்போது 199 டாலர்கள் எனும் சலுகை விலையில் பெற்றுக்கொள்ள முடியும்