.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, August 31, 2013

டீசல்,மண்ணெண்னை விலை உயரப்போகிறது!

Hike in petroleum products


டீசல்,மண்ணெண்னை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயரப்போகிறது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.இதனால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


பெட்ரோலிய துறை அமைச்சர் இது தொடர்பாக நிதி அமைச்சர் பி.சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார்..அந்த சந்திப்பின் போது பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் இந்த வருடம் மட்டும் 180000 கோடி இழப்பு ஏற்படும் அதை ஈடுகட்ட விலை உயர்வு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

விலையை உயர்த்த வேண்டும் என பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
டீசல் விலை ஐந்து ரூபாய் வரையிலும்,மண்ணெண்னை விலை இரண்டு ரூபாயும்,எரிவாயு விலை ஐம்பது ரூபாயும் அதிகரிக்கும் என அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Diesel price may be hiked by Rs 3-5 a litre, LPG by Rs 50

ஆப்பிள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய iWatch!


apple_iwatch_001 



ஆப்பிள் நிறுவனமானது புதிய iWatch உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுவருவது அறிந்த விடயமே.

தற்போது குறித்த iWatch தொடர்பான வடிவமைப்பு தொடர்பான தகவல்களை அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 2014ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனம் அப்பிளின் முன்னைய ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.
மேலும் இதனை செல்பேசிக்கு இணையாக பயன்படுத்தக்கூடியவாறு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே அப்பிளுக்கு போட்டியாக விளங்கும் சம்சுங் நிறுவனம் இவ்வருட இறுதியில் தனது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




பேஸ்புக் பயனர்களுக்காக Canon வடிவமைத்துள்ள அதிநவீன கமெரா



 


முதற்தர கமெராக்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான Canon ஆனது தற்போது பேஸ்புக் பயனர்களுக்காக அதிநவீன கமெரா ஒன்றினை வடிவமைத்துள்ளது.

PowerShot N Facebook Edition Compact Camera என அழைக்கப்படும் இக்கமெராவில் பேஸ்புக் பொத்தான் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை அழுத்துவதன் மூலம் புகைப்படத்தினை நேரடியாகவே பேஸ்புக் தளத்தில் தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.

இது தவிர 2.8 அங்குல LCD தி
ரை, 12.1 மெகாபிக்சல்களை உடைய உயர் தரத்தினை உடைய CMOS சென்சார் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இதன் பெறுமதியானது 300 டொலர்களாகும்.

ஸ்டெம் செல் மூலம் மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்



human_brain_002 


முதன் முறையாக ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர் கிருமிகளை வளர்க்க பெட்ரி தட்டுகள் பயன்படுத்தப்படுகிறது.



இந்த தட்டுகளில் முதன் முறையாக ஸ்டெம் செல்லை பயன்படுத்தி மனித மூளையின் ஒத்த பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அந்த பகுதி ஒன்பது வாரக் கருவினுடைய மூளையை ஒத்தது போன்ற தோற்றத்தில் மூன்றிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் வளர்ந்துள்ளது.



இன்னும் முழுவதும் வளர்ச்சியடையாத போதிலும், மூளையைப் போன்றே முதுகு புறணி, முன்மூளையின் கீழ்ப்புறம் மற்றும் முதிராத ஒரு விழித்திரை போன்றவை அதில் உள்ளன.



இதில் உருவாகியுள்ள பகுதிகள் சரியானவை என்றபோதிலும் அவை ஒருங்கிணைந்து உருவாகவில்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள துணைச்செயலர் ஜுவெர்கன் நோபிளிச்  தெரிவித்துள்ளார்.



மேலும் மூளை பாதிப்பினால் ஏற்படக்கூடிய மனநோய் மற்றும் குழந்தைகளிடத்தில் காணப்படும் ஆட்டிசம் போன்ற வியாதிகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த மாதிரிகள் உபயோகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 
back to top