.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, September 1, 2013

ESI கழகத்தில் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் பணி!

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ESI -ல் காலியாக உள்ள இந்தி மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Hindi Translator

காலியிடங்கள்: 62

sep 1 - vazhikatti esi

 


சம்பளம்: ரூ.9,300 – 34,800

வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: இளங்கலை பட்டத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்து இந்தி அல்லது ஆங்கிலம் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ESI Fund Account No.1, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை: 


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.esic.nic.in/recruitment.php என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். அல்லது வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Joint Director(Recruitment), E.S.I. Corporation, Panchdeep Bhawan, C.I.G.Marg. New Delhi -110002.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2013

புதுப்பிக்கப்படாத பாலிசிகளை அக்டோபருக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்: எல்.ஐ.சி. தகவல்!

கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் எனறும் பாலிசி இலக்கை அடையும் நோக்கத்தில் தவறான தகவல்கள் தரும் முகவர்கள் குறித்து பாலிசிதாரர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனவும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்( எல்.ஐ.சி) தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் கூறினார்.


sep 1 - lic policies

 


இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 57-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை(செப்.1) கொண்டாடப்படுகிறது. இது குறித்து எல்.ஐ.சி. தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் செய்தியாளர்களிடம் பேசும் போது,”தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தை உள்ளடக்கிய எங்கள் நிறுவனத்தின் தென்மண்டலத்தில் வாடிக்கையாளர் வசதிக்காக, தற்போது 264 கிளைகள், 248 துணை கிளை அலுவலங்கள் உள்ளன. 57- ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, 10 ஆயிரம் மக்கள்தொகை உள்ள பகுதிகளில், 2014- ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் 234 சிறு கிளைகள் நிறுவப்பட உள்ளன.பங்குச் சந்தையுடன் தொடர்புடைய பாலிசிகளை எடுப்பதற்கு முன் அவை குறித்த சந்தேகங்களை வாடிக்கையாளர்கள் தங்கள் முகவர்களிடம் தெளிவாக கேட்டறிய வேண்டும். பாலிசி இலக்கை அடையும் நோக்கத்தில் தவறான தகவல்கள் தரும் முகவர்கள் குறித்து பாலிசிதாரர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 1.7 கோடி பேர் உட்பட தென்மண்டலத்தில் எல்.ஐ.சி. வாடிக்கையாளர் அல்லாதவர்களாக கண்டறியப்பட்டுள்ள 2.5 கோடி பேரை, நடப்பு நிதியாண்டில் பாலிசிதாரர்களாகச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வட்டித் தொகையில் இருந்து 2,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். இதுதொடர்பான விவரங்களை எல்.ஐ.சி. அலுவலகங்கள் மற்றும் முகவர்களிடம் பாலிசிதாரர்கள் பெறலாம்.செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை, மண்டலம் மற்றும் கிளை அலுவலங்களில் பாலிசிதாரர் சிறப்பு சேவை மையங்கள் செயல்படும். இவற்றில் பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசி தொடர்பான பல்வேறு சந்தேகங்களைக் கேட்டறியலாம்” என்றார் சித்தார்த்தன்.

கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் ரஜினி!!

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளி விழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று நாடு தழுவிய ஒரு கருத்துக்கணிப்பை இணையதளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்த பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச்சிறந்த 25 பேர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதலிடம் பிடித்துள்ளார்.

sep 1 rajini-kanth

 


அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 2-வது இடத்திலும், அப்துல் கலாம் 3-வது இடத்திலும், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளனர். ஆன்லைனில் வெளியாகும் நேரடியான கருத்துக்கணிப்பு என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. 

மூன்று தினங்களுக்கு முன் 5-ம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் 6.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அமிதாப் பச்சனுக்கு 10-வது இடமும், ஷாரூக்கானுக்கு 13-வது இடமும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

பழைய ஐபோனுக்குப் பதில் புதுசு! – ஆப்பிளின் அதிரடி விரைவில் ஆரம்பம்!

ஆப்பிள் நிறுவனம் USல் ஆப்பிள் ஐபோன்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் டிரேட் இன் புரோகிராம் என்று அழைக்கப்படும் இந்த சலுகையின் மூலம் ஐபோன் பயன்படுத்துபவர்கள் தங்கள் பழைய ஐபோனை ஆப்பிள் ஸ்டோரில் கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தை புதிய ஐபோன் வாங்குவதற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.


sep 1 Apple-iphone-5- 


செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை வெளியிடும் என்ற தகவல் பரவலாக உள்ளது. ஆப்பிள் நிறுவனம் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் ஆப்பிள் அறிவித்துள்ள இந்த சலுகை விரைவில் ஐபோன்கள் வரும் என்பதை உறுதி செய்கிறது.

பழைய ஐபோன்களுக்கு US மார்கெட் மற்றும் உலக அளவில் உள்ள மார்கெட்களில் வரேவேற்பு நிறைய உள்ளது. ஈபே(ebay) போன்ற ஆன்லைன் மார்கெட்டில் இது போன்று ஐபோன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பழைய ஐபோன்களுக்கு மவுசு இருப்பதால்தான் ஆப்பிள் நிறுவனம் இந்த சலுகையை வெளியிட்டுள்ளது.

பழைய ஐபோன்களுக்கு ஆப்பிள் ஸ்டோரில் எவ்வளவு விலை கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. அநேகமாக ஆப்பிள் ஐபோன் 5க்கு ரூ.18,000 முதல் ரூ.20,000 வரை விலை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
back to top