நீரிழிவு நோய் வருவதற்கு காரணம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். கிவி கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். செர்ரி செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். கொய்யா கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது. பீச் மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். பெர்ரிப் பழங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. அன்னாசி அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது. பேரிக்காய் சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால் பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். பப்பாளி பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அத்திப்பழம் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. தர்பூசணி தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும் . மாதுளை அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். முலாம்பழம் முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும். நட்சத்திரப் பழம் இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும். வெள்ளை கொய்யா(White Jamun) நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நெல்லிக்காய் கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. |
Sunday, September 1, 2013
சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச் சிறந்த பழங்கள்!
9:33 PM
Unknown
No comments
ESI கழகத்தில் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் பணி!
9:26 PM
Unknown
No comments
மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ESI -ல் காலியாக உள்ள இந்தி மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Hindi Translator
காலியிடங்கள்: 62
சம்பளம்: ரூ.9,300 – 34,800
வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: இளங்கலை பட்டத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்து இந்தி அல்லது ஆங்கிலம் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ESI Fund Account No.1, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.esic.nic.in/recruitment.php என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். அல்லது வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Joint Director(Recruitment), E.S.I. Corporation, Panchdeep Bhawan, C.I.G.Marg. New Delhi -110002.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2013

புதுப்பிக்கப்படாத பாலிசிகளை அக்டோபருக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்: எல்.ஐ.சி. தகவல்!
9:24 PM
Unknown
No comments
கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் எனறும் பாலிசி இலக்கை அடையும் நோக்கத்தில் தவறான தகவல்கள் தரும் முகவர்கள் குறித்து பாலிசிதாரர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனவும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்( எல்.ஐ.சி) தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் கூறினார்.
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 57-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை(செப்.1) கொண்டாடப்படுகிறது. இது குறித்து எல்.ஐ.சி. தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் செய்தியாளர்களிடம் பேசும் போது,”தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தை உள்ளடக்கிய எங்கள் நிறுவனத்தின் தென்மண்டலத்தில் வாடிக்கையாளர் வசதிக்காக, தற்போது 264 கிளைகள், 248 துணை கிளை அலுவலங்கள் உள்ளன. 57- ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, 10 ஆயிரம் மக்கள்தொகை உள்ள பகுதிகளில், 2014- ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் 234 சிறு கிளைகள் நிறுவப்பட உள்ளன.பங்குச் சந்தையுடன் தொடர்புடைய பாலிசிகளை எடுப்பதற்கு முன் அவை குறித்த சந்தேகங்களை வாடிக்கையாளர்கள் தங்கள் முகவர்களிடம் தெளிவாக கேட்டறிய வேண்டும். பாலிசி இலக்கை அடையும் நோக்கத்தில் தவறான தகவல்கள் தரும் முகவர்கள் குறித்து பாலிசிதாரர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 1.7 கோடி பேர் உட்பட தென்மண்டலத்தில் எல்.ஐ.சி. வாடிக்கையாளர் அல்லாதவர்களாக கண்டறியப்பட்டுள்ள 2.5 கோடி பேரை, நடப்பு நிதியாண்டில் பாலிசிதாரர்களாகச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வட்டித் தொகையில் இருந்து 2,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். இதுதொடர்பான விவரங்களை எல்.ஐ.சி. அலுவலகங்கள் மற்றும் முகவர்களிடம் பாலிசிதாரர்கள் பெறலாம்.செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை, மண்டலம் மற்றும் கிளை அலுவலங்களில் பாலிசிதாரர் சிறப்பு சேவை மையங்கள் செயல்படும். இவற்றில் பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசி தொடர்பான பல்வேறு சந்தேகங்களைக் கேட்டறியலாம்” என்றார் சித்தார்த்தன்.

கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் ரஜினி!!
9:17 PM
Unknown
No comments
என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளி விழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று நாடு தழுவிய ஒரு கருத்துக்கணிப்பை இணையதளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்த பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச்சிறந்த 25 பேர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதலிடம் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 2-வது இடத்திலும், அப்துல் கலாம் 3-வது இடத்திலும், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளனர். ஆன்லைனில் வெளியாகும் நேரடியான கருத்துக்கணிப்பு என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
மூன்று தினங்களுக்கு முன் 5-ம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் 6.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அமிதாப் பச்சனுக்கு 10-வது இடமும், ஷாரூக்கானுக்கு 13-வது இடமும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.