.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, September 2, 2013

ஆண்களே இது உங்களுக்காக….


 
man-sleeping 

இளைஞர் ஒருவர், நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் அளவு குறைந்துவிடும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதுவும் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்போது, ஒரு வார காலத்திற்குள்ளாகவே இந்த பாதிப்பை உணரலாம் என்கிறது அந்த ஆய்வு.

ஆண்களின் பாலியல் உணர்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது ஹார்மோன்கள்தான். இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு இருந்தால்தான் பாலியல் உணர்வு தூண்டப்படும். அவ்வாறு பாலியல் உணர்வை தூண்டுவதற்கு ஆதாரமாக விளங்கும் ஹார்மோன் அளவை ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ என்று அழைக்கிறார்கள். இந்த டெஸ்டோஸ்டெரோன் அளவுக்கும்,சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ முக்கிய பங்காற்றுவதாக இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார். ஈவ் வான் உள்ளிட்ட சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த விவரம் தெரியவந்துள்ளது. 


அந்த பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த 10 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சராசரியாக 24 வயது கொண்ட இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோதனைகளும், உளவியல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
அதன் பிறகு இவர்கள் மூன்று நாட்களுக்கு இரவில் 10 மணி நேரம் வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்கப்பட்டனர். 


ஆய்வின் ஒவ்வொரு நாளின்போதும்,24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களுக்கும் அவர்களது ரத்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தபட்டது. இதில் குறைவாக தூங்கியதற்கு பிற்கு இவர்களது’டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்ததாக சொல்லும் ஈவா வான், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைதலுக்கும் தொடர்பு இருப்பதால்,தூக்கமின்மை நிச்சயம் பாலியல் உணர்வை பாதிக்கும் என்று அடித்துக் கூறுகிறார்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள்!


bubble-gum-girl 


உலகில் உள்ள அனைவருக்குமே நிச்சயம் ஒருசில கெட்ட பழக்கங்கள் இருக்கும். கெட்ட பழக்கங்கள் என்றதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பெரிய அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம். இங்கு குறிப்பிடப்படும் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் சாதாரணமானது தான். மேலும் இத்தகைய பழக்கங்களை எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்த பழக்கங்களை தவிர்க்க முடியாது.

ஏனெனில் தற்போ துள்ள வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் இத்தகைய பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் நிறைய சிரமம் இருக்கும். உதாரணமாக, தாமதமாக எழுவது, சூயிங்கம் மெல்லுவது, நகங்களை கடிப்பது மற்றும் இது போன்று நிறைய கெட்ட பழக்கங்கள் அனைவரிடமும் உள்ளது.

இத்தகைய செயல் களை மேற்கொள்ளும் போது, பெற்றோர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்தால், அதனை செய்யாதே என்று கண்டிப்பார்கள். ஆகவே பலர் அந்த பழக்கங்களை தவிர்க்க முயற்சிப்பார்கள். இருப்பினும், தவிர்க்க முடியாமல் தவிப்பார்கள். ஆனால் அவ்வாறு மேற்கொள்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.

அது என்ன வென்றால், அத்தகைய பழக்கங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது அந்த மாதிரியான சில நல்ல கெட்டப் பழக்கங்களை பட்டிய லிட்டுள்ளோம். அதைப் படித்து, அத்தகைய பழக்கம் இருந்தால், உடலுக்கு ஆரோக்கியம் தான் என்று நினைத்து சந்தோஷப்படுங்கள்.

நகம் கடிப்பது :

சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் தான் நகம் கடிப்பது. இதை கெட்ட பழக்கம் என்று நினைக்கிறோம். ஆனால் ஆய்வு ஒன்று, நகங்களை கடிப்பது ஒரு நல்ல பழக்கம் என்று சொல்கிறது.

ஏனெனில், நகங்களை கடிக்கும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படுகிறது. எனவே நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு பழக்கமாகும்.

வாயுவை வெளியேற்றுவது :

பொது இடங்களில் எதையும் மனதில் கொள்ளாமல் வாயுவை வெளியேற்றுவது ஒரு சங்கடப்பட வைக்கும் கெட்ட செயலாக இருக்கலாம். ஆனால் வாயு வெளியேறும் போது, அதனை அடக்கி வைக்காமல், வெளியேற்றி விட வேண்டும்.

ஏனெனில் இவ்வாறு வாயுவை வெளியேற்றினால், வயிற்று உப்புசம் வருவதை தவிர்க்கலாம். ஒருவேளை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால், வயிறானது தொல் லையை கொடுத்து, பின் வயிற்றுப் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

சொடக்கு எடுப்பது :

சொடக்கு எடுப்பது கெட்ட பழக்கமாக இருக்கலாம். மேலும் இது மூட்டுகளை வலுவிழக்கச் செய்யும் என்று பலர் சொல்வார்கள். அது உண்மையல்ல. ஏனென்றால், சொடக்கு எடுப்பதால், விரல் மூட்டுகள் நன்கு ரிலாக்ஸாவதோடு, விரல்கள் நன்கு செயல்படும்.

துப்புதல் :

அடிக்கடி எச்சில் துப்புவது எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அது ஒரு கெட்ட பழக்கம் என்று சொல்வோம். ஆனால் எச்சில் துப்புதலும் ஒரு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஒரு நல்ல பழக்கம் தான். எப்படியெனில், எச்சில் துப்பினால், சுவாசிக்க எளிதாக இருக்கும். அதுமட்டு மல்லாமல், உடற்பயிற்சி செய்யும் போது, வாயில் அதிகப்டியான எச்சிலானது சுரக்கும். அவ்வாறு சுரக்கும் எச்சிலை உடனே துப்பினால், நன்கு நிம்மதியாக சுவாசிக்கலாம்.

படபடப்புடன் இருப்பது :

எப்போதும் படபடப்புடன், அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அந்த பழக்கமும் உடலுக்கு மிகவும் நல்லது. எப்படியெனில், இவ்வாறு படபடப்புடன் இருக் கும் போது, மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி கிடைத்து, மூளை எப்போதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும்.

அதிகமான தூக்கம் :

பெரும்பாலான வீடுகளில், விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் தூங்கும் பழக்கம் இருக்கும். பலர் இத்தகைய பழக்கத்தை ஆரோக்கியமற்ற பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல பழக்கம். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு நீண்ட நேரம் தூங்கினால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.

பெட் காபி மற்றும் காலை உணவு :

சிலருக்கு படுக்கையிலேயே உணவை உண்ணும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கத்தை மிகவும் மோசமான பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் இந்த பழக்கத்தை மேற்கொண்டால், செரிமான பிரச்சினையில் இருந்து விடுபடலாம். வேண்டுமெனில் முயற்சித்து பாருங்கள்.

உடற்பயிற்சியை தவிர்ப்பது :

ஆம், உண்மையில் தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு, திடீரென்று அவற்றை சிறிது நாட்கள் தவிர்த்தாலும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எப்படியெனில், இவ்வாறு உடற்பயிற்சியை திடீரென்று தவிர்க்கும் போது, உடற்பயிற்சியினால் தசைகளில் ஏற்பட்ட காயங்களானது குணமாகி, மறுமுறை உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது வலுவுடன் செயல்பட முடியும்.

ஏப்பம் :

ஏப்பம் விடும் போது சப்தமாக விட்டால், அது கெட்டபழக்கம் என்று பலர் சொல்வார்கள். ஆனால், அவ்வாறு ஏப்பத்தை அடக்கி வைத்து விட்டால், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, நெஞ்சு வலியை ஏற்படுத்தும். எனவே யாரேனும் ஏப்பம் விட்டால், அவர்களை தவறாக நினைக்க வேண்டாம்.

சூயிங்கம் :

கெட்ட பழக்கத்திலேயே மிகவும் மோசமானது என்று சொல்வது சூயிங் கம்மை மெல்லுவது தான். அதிலும் பேசிக் கொண்டிருக்கும் போது சூயிங் கம்மை மென்றால், மற்றவர்களுக்கு அது எரிச்சலை உண்டாக்கும். மேலும் திமிர் அதிகம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும்.

ஆனால் சூயிங் கம்மை மெல்லுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் இந்த பழக்கத்தால், மூளையானது நன்கு செயல்படுவதோடு, அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும். இவை அனைத்தும் நல்ல பழக்கங்கள்தானே என்று கருதி நகம் கடிப்பது, சூயிங்கம் மெல்வது உள்ளிட்ட பழக்கங்களை புதிதாக கற்றுக் கொள்ள நீங்கள் விரும்பாதீர்கள்.

கூகுளில் கூட குறுக்கு வழிகளா! அடபாவிகளா..!



Google 


கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

1. இணைய தளம் கட்டளை (The site: command): இந்த ஆப்பரேட்டர் மூலம், நாம் நமக்குத் தேவையான தகவல்களை, ஒரே ஒரு தளத்தில் மட்டும் தேடும்படி செய்திடலாம். எடுத்துக்காட்டாக, தினமலர் இணைய தளத்தில் மட்டும் bluetooth என்ற சொல்லைத் தேடுவதாக இருந்தால், bluetooth site  http://goodluckanjana.blogspot.com/  எனக் கொடுக்க வேண்டும். இந்த கட்டளையானது, தினமலர் இணைய தளத்தில் மட்டும், bluetooth என்ற சொல் உள்ள பக்கங்களைத் தேடித்தருமாறு கேட்கிறோம். இதனால், மற்ற இணையதளங்களில் இந்த சொல் பயன்பாடு உள்ளதா என்ற தேடல் மேற்கொள்ளப்பட மாட்டாது.


2. குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடல் (inurl:command): இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், நாம் தேடிப் பெற விரும்பும் தேடலை, குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடும்படி அமைக்கிறோம். எடுத்துக்காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல்விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், Computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும்.

3. விளக்கம் வேண்டும் தேடல் (define: “word”): தேடல் கட்டத்திலேயே நாம் சிலவற்றிற்கான விளக்கம் மற்றும் விரிவான குறிப்புகளைத் தேடிப் பெறலாம். ஒரு சொல் துல்லியமாக என்ன பொருளைக் கொண்டுள்ளது என்று நீங்கள் தெரிந்து கொள்ள இந்தக் கட்டளையைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, Super Computer என்பதற்கான விளக்கம் தேவை எனில், define: super computer என்ற கட்டளையைக் கொடுக்கலாம்.

4. குறிப்பிட்ட சொல்ல உள்ள டெக்ஸ்ட் பக்கம் மட்டும் தேடிப் பெற (intext command): இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்துத் தேடுகையில், குறிப்பிட்ட சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இணையப் பக்கங்களை மட்டும் தேடிக் காட்டச் செய்கிறது. எடுத்துக்காட்டாக, Soup Recipes என்பது குறித்த தகவல்களைத் தேடிப் பெறுகையில், நமக்கு ‘Chicken’ என்ற சொல் பயன்படுத்தப்படும் தளங்கள் மட்டும் தேடிப் பெற, Soup Recipes in text:chicken என்று கட்டளை கொடுக்க வேண்டும். கூகுள், Chicken என்ற சொல் உள்ள, Soup recipes குறித்த இணையப் பக்கங்களை மட்டும் காட்டும்.

5. ‘Convert’ கட்டளை: இது ஒரு ஆப்பரேட்டர் இல்லை; டூல் என்று சொல்லலாம். இது பன்னாட்டு பண மதிப்பைக் கையாள்கிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு அமெரிக்க டாலர் எவ்வளவு? என்ற வினாவிற்கு, அன்றைய பன்னாட்டளவிலான மதிப்பில் டாலர் மதிப்பைக் காட்டும். இதே போல எந்த நாட்டு கரன்சிக்கும் பெறலாம். எடுத்துக்காட்டாக, Convert 100 INR to usd என்ற கட்டளைக்கு ரூ.100க்கு இணையான அமெரிக்க டாலர் எவ்வளவு என்று காட்டப்படும்.

மேலே காட்டப்பட்டுள்ள குறுக்கு வழிகள், நம் தேடலை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள வழி தருகின்றன. இதே போல பல குறுக்கு வழிகள் உள்ளன. இவற்றை அறிந்து நாம் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

உடல் எடையைக் குறைக்கும் இயற்கை உணவுப்பொருட்கள்!


 


இந்தியா முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன.

அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு அதற்கு மாற்றாக இந்தியா, இலங்கையில் விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம்.
அப்படிப்பட்ட மிளகு முதல் நறுமணமிக்க மஞ்சள் வரை இங்கு கொட்டிக் கிடக்கிறது.

அவை உடலுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களாகப் பயன்படுவதுடன் சமையலில் வாசனையைக் கூட்டுவதற்கும் இங்குள்ள மசாலாப் பொருட்களும், மூலிகைகளும் பயன்படுகின்றன.

நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும் மசாலாப் பொருட்களும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பனவாகவும், சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துவனவாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவனவாகவும், உணவின் தரத்தை மேம்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே அத்தகைய உடலின் எடையைக் குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும், மசாலாப் பொருட்களையும் காண்போம். இவற்றை உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, உங்கள் எடையைக் குறைக்க முயலுங்கள்.

* உடல் எடையைக் குறைப்பதற்கு சிறந்ததொரு உணவுப்பொருள் இலவங்கப்பட்டை ஆகும். ஏனெனில், இலவங்கப்பட்டையானது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது.
மேலும் நீண்ட நேரத்திற்கு பசியுணர்வு தோன்றா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக கொழுப்பினை விரைவாக செரிக்கச் செய்கிறது.


* இஞ்சியானது இரத்தத்தினை மிகவும் நன்றாக சுத்திகரிக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடக்கா வண்ணம், எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் கொழுப்புகள் தேங்காமல் விரைவில் செரிமானமடைந்து உடல் எடையும் குறைகிறது.


* ஏலக்காயானது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளைத் தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனைக் கூட்டுகிறது.


* மஞ்சளுக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்புத் திசுக்கள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து, எடை கூடுவது தடுக்கப்படுகிறது.


* பிரேசில் நாட்டில் காணப்படும் காப்ஃபைன் நிறைந்த ஒரு ஆற்றல் தரும் பழம் குவாரானாகும். இது சிறுநீரை பிரிக்கும் சக்தி நிறைந்தது. எடை குறைப்பில் மிக உதவுகிறது. நரம்பு மண்டலத்தைத் தூண்டி, மன அழுத்தத்தினாலும், வெறுப்பினாலும் அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது.


* வரமிளகாயில் கேப்சைசின் என்னும் பொருள் அடங்கியுள்ளது. இது கொழுப்பினை எரித்து, பசியுணர்வை அடக்கி வைக்கிறது. புருடியு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, காய்ந்த மிளகாயானது உடல் எடைக் குறைப்பில் மிக உதவுகிறது.
உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாட்டினை ஊக்குவித்து, உடலானது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.


* ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டினைத் தூண்டி உணவுகளை நன்கு செரிப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறவும் சீரகம் உதவுகிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் சீரகம் உதவுகிறது.


* நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது செரிமான சக்தியைத் தூண்டி, கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது.


* ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விளையும் ஒரு வகை மலர் தான் டான்டேலியன். இதற்கு நமது உடலை சுத்தப்படுத்தும் திறன் மற்றும் ஜீரண வேகத்தை மட்டுப்படுத்தும் திறன் உண்டு.
மேலும் நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் இருக்கச் செய்யும் திறன் உண்டு. நிறைய சத்துக்கள் மிகுந்தது. குறிப்பாக உடல் எடை குறைய, இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


* ஆளி விதைகள் நமது வயிறு நிறைந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால், நம்மால், அதிகம் சாப்பிட முடியாமல் போகும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.


* கொத்தவரங்காயானது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. நமது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது.


* உடலின் எடையைக் குறைக்கும் தன்மையை கடுகு கொண்டுள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் நன்றாகத் தூண்டுகிறது.


* உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தினை அதிகரித்து, அதிக ஆற்றலை விடுவித்து, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் திறன் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.


* உணவு செரிப்பதற்கு சோம்பு சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும், கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.


* செம்பருத்தியில் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்களான குரோமியம், அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளது.


 
back to top