.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, September 2, 2013

உடல் எடையைக் குறைக்கும் இயற்கை உணவுப்பொருட்கள்!


 


இந்தியா முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன.

அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு அதற்கு மாற்றாக இந்தியா, இலங்கையில் விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம்.
அப்படிப்பட்ட மிளகு முதல் நறுமணமிக்க மஞ்சள் வரை இங்கு கொட்டிக் கிடக்கிறது.

அவை உடலுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களாகப் பயன்படுவதுடன் சமையலில் வாசனையைக் கூட்டுவதற்கும் இங்குள்ள மசாலாப் பொருட்களும், மூலிகைகளும் பயன்படுகின்றன.

நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும் மசாலாப் பொருட்களும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பனவாகவும், சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துவனவாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவனவாகவும், உணவின் தரத்தை மேம்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே அத்தகைய உடலின் எடையைக் குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும், மசாலாப் பொருட்களையும் காண்போம். இவற்றை உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, உங்கள் எடையைக் குறைக்க முயலுங்கள்.

* உடல் எடையைக் குறைப்பதற்கு சிறந்ததொரு உணவுப்பொருள் இலவங்கப்பட்டை ஆகும். ஏனெனில், இலவங்கப்பட்டையானது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது.
மேலும் நீண்ட நேரத்திற்கு பசியுணர்வு தோன்றா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக கொழுப்பினை விரைவாக செரிக்கச் செய்கிறது.


* இஞ்சியானது இரத்தத்தினை மிகவும் நன்றாக சுத்திகரிக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடக்கா வண்ணம், எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் கொழுப்புகள் தேங்காமல் விரைவில் செரிமானமடைந்து உடல் எடையும் குறைகிறது.


* ஏலக்காயானது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளைத் தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனைக் கூட்டுகிறது.


* மஞ்சளுக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்புத் திசுக்கள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து, எடை கூடுவது தடுக்கப்படுகிறது.


* பிரேசில் நாட்டில் காணப்படும் காப்ஃபைன் நிறைந்த ஒரு ஆற்றல் தரும் பழம் குவாரானாகும். இது சிறுநீரை பிரிக்கும் சக்தி நிறைந்தது. எடை குறைப்பில் மிக உதவுகிறது. நரம்பு மண்டலத்தைத் தூண்டி, மன அழுத்தத்தினாலும், வெறுப்பினாலும் அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது.


* வரமிளகாயில் கேப்சைசின் என்னும் பொருள் அடங்கியுள்ளது. இது கொழுப்பினை எரித்து, பசியுணர்வை அடக்கி வைக்கிறது. புருடியு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, காய்ந்த மிளகாயானது உடல் எடைக் குறைப்பில் மிக உதவுகிறது.
உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாட்டினை ஊக்குவித்து, உடலானது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.


* ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டினைத் தூண்டி உணவுகளை நன்கு செரிப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறவும் சீரகம் உதவுகிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் சீரகம் உதவுகிறது.


* நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது செரிமான சக்தியைத் தூண்டி, கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது.


* ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விளையும் ஒரு வகை மலர் தான் டான்டேலியன். இதற்கு நமது உடலை சுத்தப்படுத்தும் திறன் மற்றும் ஜீரண வேகத்தை மட்டுப்படுத்தும் திறன் உண்டு.
மேலும் நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் இருக்கச் செய்யும் திறன் உண்டு. நிறைய சத்துக்கள் மிகுந்தது. குறிப்பாக உடல் எடை குறைய, இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


* ஆளி விதைகள் நமது வயிறு நிறைந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால், நம்மால், அதிகம் சாப்பிட முடியாமல் போகும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.


* கொத்தவரங்காயானது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. நமது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது.


* உடலின் எடையைக் குறைக்கும் தன்மையை கடுகு கொண்டுள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் நன்றாகத் தூண்டுகிறது.


* உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தினை அதிகரித்து, அதிக ஆற்றலை விடுவித்து, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் திறன் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.


* உணவு செரிப்பதற்கு சோம்பு சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும், கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.


* செம்பருத்தியில் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்களான குரோமியம், அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளது.


தாங்க முடியாத தலைவலிக்கு இயற்கை வீட்டு மருந்துகள்!

head 

தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.

அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறை யில் குணமாக்குங்கள்.

கிராம்பும் உப்பும் கலந்த கலவை :

கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு :

ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் :

தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

சூடான பால் அருந்துதல் :

சூடான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உண வில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

பட்டையை அரைத்துத் தடவுதல் :

தலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.

மல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல் :

சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந் தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

சந்தனத்தை அரைத்துத் தடவுதல் :

சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

சிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல் :

சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.

கால்களை வெந்நீரில் வைத்திருத்தல் :

ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும்.

சைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வரவேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.

ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல் :

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

தலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல் :

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமாப அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையை அரைத்துத் தடவுதல் :

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் :

தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து விட வேண்டும். இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும்.

அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியிலிருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

நன்றாக தூங்குதல் :

பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும். மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்கள்.

இவற்றை நீங்களும் பின்பற்றி, தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள்.


13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி!

       உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி இளநிலை அறிவியல் பட்டம் முடித்து தற்போது முதுநிலை அறிவியல் படிப்பில் சேர லக்னோ பல்கலைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் நாட்டிலேயே 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.இப்படி பல்கலையில் இடம் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

sep 2 - susma 13 year lucnow
 


லக்னோ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பகதூரின் கடைசி மகள் சுஷ்மா வயது 13. இந்த சிறு வயதிலேயே அறிவுக் கூர்மையுடன் காணப்பட்டார். 2000ம் ஆண்டில் பிறந்த சுஷ்மா தன் இரண்டரை வயதில் லக்னோவில் நடைபெற்ற ராமாயணம் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

சிறு வயதில், கடினமான ராமாயணத்தை மனப்பாடம் செய்து ஒப்பித்த சுஷ்மா தன் 5 வது வயதில், 10ம் வகுப்பு பாடங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்தார். 


எனினும், 5 வயதில், நேரடியாக, 10ம் வகுப்பில் சேர அனுமதி கிடைக்காததால், 2005 – 06 ல், 9 ம் வகுப்பில் சேர்ந்தார். 2006 – 07ல், 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று, நாட்டிலேயே மிகக் குறைந்த வயதில் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவி என்ற பெருமையை பெற்றார்.

அதன் பின் 2009 – 10 ம் ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று தன், 10 வது வயதில் லக்னோ பல்கலை அனுமதியுடன் பி.எஸ்சி., விலங்கியல் மற்றும் உயிரியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தார். இந்த ஆண்டு ஜூனில் வெளியான பி.எஸ்சி., பட்டத் தேர்வு முடிவுகளில் 66 சதவீத மதிப்பெண்களைப் பெற்று பட்டப் படிப்பை நிறைவு செய்தார்.

இதன் பின் அதே லக்னோ பல்கலையில் எம்.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படிப்பில் சேர விண்ணப்பித்தார். இதிலும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே அதிலும் 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.இப்படி பல்கலையில் இடம் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார். இந்த தகவல் அறிந்த பலரும் சுஷ்மாவுக்கு உதவ முன் வந்துள்ளனர்.பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர் சுஷ்மாவின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை அனுப்பும்படி பல்கலை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் சுஷ்மாவின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார் என்று தெரியவருகிறது.
இம்மாணவிக்கு நீங்கள் உதவ விரும்பினால்::
 


If you would like to make a donation to help Sushma, here are the details of her bank account:

A/C no: 683410110000481
Account holder’s name: Sushma Verma, D/O Sri Tej Bahadur
Bank name: Bank of India
Branch: LDA Colony, Lucknow
IFSC: BKID0006834

At 13, she’s a senior student at Lucknow University.

 
********************************************


 At an age when she should be in school, the 13-year-old daughter of a poor labourer in Uttar Pradesh has baffled everybody by galloping to a master’s programme in microbiology.Sushma Verma was the youngest ever to pass class 12 exams, at just over 9 years. Now the teen prodigy has finished her graduation and has been named in the merit list for microbiology at the Lucknow University. She begins her master’s classes next week.

வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன் கிடைக்கும்!


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அதன் கார் கடன்களுக்கான தகுதி முறையை நிர்ணயித்துள்ளது. இனிமேல் வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன்களை வழங்க முடிவு செய்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கி, பணவீக்கம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டது. ஆனால், பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதால் எஸ்.பி.ஐ வங்கி எச்சரிக்கையாக இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று ஆதாரங்கள் கூறியுள்ளது.


sep 2 -sbi-car-loan
 


‘பெட்ரோல், பராமரிப்பு, காப்பீடு மற்றும் பிற செலவுகளின் செலவை பார்க்கும்போது, நாம் குடும்ப வருமானம் ரூ.50,000 இருந்தால் மட்டுமே கார் வாங்க திட்டமிட வேண்டும்’ என்று ஒரு வங்கி அதிகாரி கூறியுள்ளார். வங்கி வாகனத்தின் செலவாக 0.51% பதப்படுத்தும் கட்டணமாக வசூலிக்க தொடங்கியுள்ளது. 

வங்கியாளர்கள் தகுதி விதிமுறைகளை கடுமையாக்கி பொருளாதாரத்தின் சரிவு காலத்தில் ஒரு தரமான செயல்படும் நடைமுறை ஆகும் என்று கூறியுள்ளனர். இளைஞர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் காலங்களில் வங்கிகளின் காரணியாகும். ஆனால் வேலைகள் வளர்ச்சி இல்லாமல் சரிவு ஏற்படும் காலத்தில், சம்பள உயர்வு என்பது இல்லை, ‘என்றும் அவர் கூறியுள்ளார்.

Earn at least Rs 6 lakh per year for SBI car loan
 

**************************************************** 
The State Bank of India (SBI) has tightened the eligibility criteria for its car loans and will now extend finance to only those earning over Rs 6 lakh per annum. The bank has cited inflation as the reason behind the move, but, sources say, that the bank is being cautious given the slowdown in the economy. 
 
back to top