..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
8:59 PM
Unknown
No comments
அழகான புன்னகையால் ஆயிரம் இதயங்களை கவர முடியும். ஆகவே அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அத்தகைய வெள்ளையான பற்களை பெறுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டுவிட்டால், பற்களில் உணவுக் கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன. மேலும் சில நேரங்களில் அத்தகைய கறைகளால் வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளைப் போக்கி, பற்களின் இருக்குகளில் சிக்கிக் கொள்ளும் பொருட்களை தவிர்க்கவும், வாய் துர்நாற்றத்தையும் நீக்கவும், அத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!எலுமிச்சைஎலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.கடுகு எண்ணெய்பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.பேக்கிங் சோடாபேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.சாம்பல்அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.உப்புஅனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.ஆரஞ்சு தோல்ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.வினிகர்தினமும் வினிகரை நீருடன் சேர்த்து கலந்து வாயில் விட்டு, கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களில் உள்ள மஞ்சள் நிறக் கறையும் நீங்கும்.கிராம்பு எண்ணெய்ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.வேப்பங்குச்சிபற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.பிரியாணி இலைபிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.
6:51 PM
Unknown
No comments
பூமியில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்து விஞ்ஞானிகளிடையே பல விதமானக் கருத்துக்கள் நிலவுகின்றன. லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் பிராசியர் தலைமையிலான குழுவினர் உயிரினங்கள் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வின் முடிவில் மிதக்கும் எரிமலை பாறைகளில் இருந்து ஆதிகால உயிரினங்கள் தோன்றியிருக்கக்கூடும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளன.சுமார் கடந்த 3,500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரில் மிதக்கும் தன்மையுள்ள எரிமலை பாறைகள் உருவாக்கியிருக்கலாம். அவற்றின் மீது மின்னல் தாக்கியதால் அவை நொறுங்கி பலவித ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அதில் இருந்து எண்ணை வடிவிலான ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் உலோகங்கள் உருவாகி அதன் மூலம் உயிரினங்கள் தோன்றி இருக்கக்கூடும் என பேராசிரியர் மார்ட்டின் பிராசியர் தெரிவித்துள்ளார்.
6:31 PM
Unknown
No comments
பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்.கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால், ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி, சருமம் அழகாகும். ஏனெனில் அதில் உள்ள வேதிப் பொருட்கள், பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி, சருமத்தை ஈரப்பசையுடன் ஆரோக்கியமாக வைக்கிறது.லாவெண்டர் ஆயில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்க சிறந்த பொருளாக உள்ளது. அதிலும் இதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தினமும் மூன்று முறை தடவி மசாஜ் செய்து வந்தால், புதிய செல்கள் உருவாகி, ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைய வைக்கும்.ஆப்ரிக்காட் பழத்தை வைத்து தழும்பு உள்ள இடத்தில் ஸ்கரப் செய்தால், அது அங்குள்ள சருமத் துளைகளை விரிவடையச் செய்து, அதில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை கண்டுபிடித்து, அதன் நிறத்தை மங்க வைத்து, நாளடைவில் படிப்படியாக தழும்புகளை மறைய வைத்துவிடும்.அவோகேடோ, பாதாம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தால் நாளடைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கிவிடும். அதிலும் இந்த எண்ணெய்களை லாவெண்டருடன் சேர்த்து தடவி மசாஜ் செய்தால், மறுமுறை அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கும்.பிரசவத்திற்குப் பின் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுப்பதற்கு கொக்கோ பட்டர் சிறந்ததாக இருக்கும். அதிலும் இதனை கர்ப்பமாக இருக்கும் போதே தடவி மசாஜ் செய்து வந்தால், திசுக்கள் பாதிப்படையாமல், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுககலாம். அதையே மார்க்குகள் வந்த பின்பு செய்தால், அந்த தழும்புகளை மறைய வைக்கலாம்.
5:53 PM
Unknown
No comments
உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன.மேலும் சமையல் செய்யும் போது காய்கறிகளை வெட்டும் போது, கவனக்குறைவால் விரல்களை தெரியாமல் வெட்டிக் கொள்வோம். இத்தகைய நேரங்களில் எல்லாம், என்ன செய்வது என்று பதட்டப்படாமல், பாட்டி வைத்தியமான வீட்டு கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்து சரிசெய்யலாம்.* அடிப்பட்டு இரத்தம் வரும் போது, உடனே அந்த இடத்தை கழுவி விட்டு, வீட்டில் இருக்கும் காப்பி பொடியை, அந்த காயத்தின் மேல் வைக்க வேண்டும். இதனால் காப்பி பொடி இரத்தத்தை உறைய செய்யும்.
* இரத்த வடிதலை சரிசெய்ய மைதா அல்லது கோதுமை மாவை வைத்தால், அடிப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வடிதல் நின்றுவிடும். இது ஒரு சிறந்த ஹோம் ட்ரீட்மெண்ட்.* இந்த முறை சற்று வித்தியாசமானது. ஆனால் உண்மையானது. எலக்ட்ரிக்கல் டேப் வைத்து இரத்த வடிதலை தடுக்கலாம். எப்படியெனில், எலக்ட்ரிக்கல் டேப்பை காயம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இறுக்கமாக சிறிது நேரம் கட்ட வேண்டும். இதனால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் தடைபடும்.* சிறுவயதாக இருக்கும் போது, ஏதேனும் அடிப்பட்டால், வீட்டில் இருக்கும் அம்மா உப்பை அந்த இடத்தில் வைப்பார்கள். ஏனெனில் உப்பு மற்றும் உப்பு நீர், காயங்களை மட்டும் சரிசெய்யாமல், இரத்த வடிதலையும் தடுக்கும்.
* காயத்தால் இரத்தம் வரும் போது, சிலந்தி வலைகளை, அதன் மேல் வைத்தால், சிறிது நேரத்தில் இரத்தக் கசிவு நின்றுவிடும். பின் அதனை சுத்தமாக கழுவிட வேண்டும். இந்த சிகிச்சையை நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் சரியாகிவிடும்.ஆகவே மேற்கூறியவாறு செய்து வந்தால், இரத்தக் கசிவு நீங்கிவிடும். மேலும், வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…