.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, September 4, 2013

கண் கருவிழி மூலம் இனி கோமா நோயாளிகள் தவல்களை பரிமாறிக்கொள்ளலாம்!

news_15213 (1)


ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய ஒரு வெட்டும்விளிம்பு தொழில்நுட்பம் பயன்படுத்தி இதன் மூலம் நகர்த்த அல்லது பேச முடியாத மூளை பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் கண் கருவிழி விரிவுபடுத்தி தகவல் பரிமாற்றிக் கொள்ள முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு லேப்டாப் மற்றும் கேமரா உதவியுடன் கண் கருவிழி அளவை கொண்டு தொடர்பு கொள்ள முடியாத நோயாளிகள் எளிய முறையில் ஆம் அல்லது இல்லை என்ற கேள்விகளுக்கு நொடிகளுக்குள் பதில் சொல்ல முடியும். இந்த கருவி மக்கள் மனக்கணிதம் செய்யும் போது இயற்கையாகவே ஏற்படும் கருவிழி அளவில் ஏற்படும் மாற்றங்களை பயன்படுத்தி எடுக்கிறது.

இதில் சிறப்பு கருவிகளோ அல்லது பயிற்சியோ தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கணினியில் தொழில்நுட்ப இடையூறுகள் உள்ளதால் இன்னும் அதன் அமைப்பை வேகம் மற்றும் துல்லியம் வகையில் முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கிறது. என்ஹாசர் அவர்கள் இந்த இடையூறுகளை உடனடியாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். உணர்வற்ற நோயாளிகள், கோமா அல்லது மற்ற செயற்படாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எந்த தகவல்தொடர்பும் ஒரு பெரிய முன்னோற்ற நடவடிக்கை ஆகும்,’ என்று அவர் கூறினார்.

Tuesday, September 3, 2013

கேரட் மருத்துவ பயன்கள்!


 
 
 
கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது.
 
வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை. 
 
 100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:

*சக்தி 41 கலோரிகள்

*கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்

*சர்க்கரை 5 கிராம்

*நார்சத்து 3 கிராம்

*கொழுப்புச் சத்து 0.2 கிராம்

*புரோட்டின் 1 கிராம்

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.
வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
 

கழுத்து கருமை நிறம் மறைய!


 news_03-04-2013_14ne-280x150


       சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.



வறண்ட கூந்தல் பொலிவு பெற வழிகள்!


news_12-04-2013_80hair          


  கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். வறண்ட தன்மையுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள்..

தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல் வறட்சியடைகிறது. மேலும், அதிகமாக சூரிய கதிர்வீச்சிற்கு உட்படுதல், கடின தன்மையுள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சில ரசாயன சிகிச்சை போன்றவற்றாலும் கூந்தலில் வறட்சி தன்மை உண்டாகிறது.

* வறண்ட கூந்தலுடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும். மேலும் மைல்டான தன்மையுடைய ஷாம்புக்களை பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி தன்மை குறையும்.
 
* விளக்கெண்ணெய், கிளிசரின், வினிகர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தலின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.
 
* சிலருக்கு ஷாம்பு போட்டு குளிப்பதாலும் கூந்தல் அதிகப்படியாக வறண்டு காணப்படும். அப்படிபட்டவர்கள் தலைக்கு குளித்த பின் சிறிது பாலை தலையில் தேய்த்து நன்கு அலசி விட வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் பட்டுப் போல மின்னும்.
 
* வறட்சியான கூந்தலை உடையவர்கள் ஹேர் -டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
 
 
back to top