..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar

4:55 PM

Unknown
No comments
விநாயக சதுர்த்தி வரலாறு! (History of vinayagar sathurthi)
பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு
அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம். . பிள்ளையாரின் அவதார தத்துவம்.
ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் அதிகாலையில் எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.
பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.
விநாயக விரதங்கள்.(Ganesh fasts)
ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன. சுக்கில பட்சச் சதுர்த்தியை 'சதுர்த்தி விரதம்' என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'நாக சதுர்த்தி' என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'விநாயக சதுர்த்தி' என்றும் கைக்கொள்கின்றனர்.
மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை 'சங்கடஹர சதுர்த்தி' என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை 'சங்கடஹர விநாயக சதுர்த்தி' (sangadagara vinagar sathurthi) என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் 'விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான 'தேவி' விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.ஸ
4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
ஜ21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானதுஸ
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்
. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாமம் பல தத்துவம் ஒன்று! (One name many Philosophy!)
வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.
இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.
இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை! (prayers will be for all homes!)
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!
என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.
இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், ஏன் உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

7:36 AM

Unknown
No comments
வணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுக்கு வியாழக்கிழமை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வழக்கம் போன்று, தேர்வாணைய இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) விண்ணப்பம் செய்யலாம்..

துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1064 காலி பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு நடக்கிறது. இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. தலைமை செயலக உதவி பிரிவு அதிகாரி, நகராட்சி கமிஷனர், சார் பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி, சிறை துறை நன்னடத்தை அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எழுதுவதற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், 2013-2014-ம் ஆண்டுக்கான காலி பணியிடங்களில், 1064 இடங்களை நிரப்புவதற்காக குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், 66 துணை வணிகவரி அதிகாரி பதவிகள், 302 கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர் பதவிகள், 147 கைத்தறித்துறை ஆய்வாளர் பதவிகள், 14 சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி பதவிகள், 71 உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் பதவிகள், 370 வருவாய் உதவியாளர் பதவிகள், 2 சார் பதிவாளர் பதவிகள் உள்ளிட்டவை அடங்கும். இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் அக்டோபர் 8-ந் தேதி ஆகும்.
-மேற்கண்ட தகவலை டி.என். பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

7:33 AM

Unknown
No comments
இன்று ஆசிரியர் தினம்.
நிகழ் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) பெறுவோர் பட்டியலை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசும் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கிறது. ஆசிரியர்களைப் பாராட்டுமுகமாக, அவர்களை ஊக்குவிக்க இத்தகைய விருதுகள் வழங்கப்படுவது இன்றியமையாதது. ஆனால் நல்லாசிரியர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறு தெரிவு செய்கிறார்கள் என்று பார்த்தால், இன்னமும், அதிகார வரம்புக்குள்தான் இந்த விருது அடங்கிக் கிடக்கிறது என்பதும் இந்தப் பரிந்துரை இன்னமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவர் மூலமாகத்தான் அரசுக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரியும்.இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த ஆசிரியர்களே வாங்கி, தங்கள் சாதனைக்கான சான்றுகளாகப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவற்றை இணைத்து, பிரமுகர்களின் பரிந்துரைகளைப் பெற்று, மாவட்ட கல்வித் துறையிடம் கொடுக்க வேண்டும். அதை இதற்கென அமைக்கப்பட்ட ஒரு குழு தேர்வு செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தரும். அவர் இந்தப் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைப்பார்.

தனது பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பள்ளிச் சீருடையில் சில குறைந்திருந்தால் அதற்காக குரல் கொடுத்து, சண்டைபோட்டு அனைவருக்கும் சீருடை வாங்கித்தரும் ஒரு கிராமத்து பள்ளித் தலைமையாசிரியரை கல்வித் துறை எதிரியாக புறக்கணிக்கும்.அரசு வழங்கும் இலவச புத்தகம் வந்து சேரவில்லை என்பதற்காக போராடவும், உள்ளூர் நிருபர்கள் மூலம் செய்தியாக்கி, அரசுக்கு நெருக்கடி தரும் ஆசிரியர்கள், நேரத்துக்கு ஆசிரியர்கள் வகுப்புக்கு போக வேண்டும், ஒழுங்காக பாடம் நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தலைமையாசிரியர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கல்வித் துறைக்கும் பெருந்தலைவலி! அவர்களுக்கு நல்லாசிரியர்கள் விருது நிச்சயம் கிடைக்காது.இந்த நிலையில், நல்லாசிரியர் விருது என்பது, மாவட்டக் கல்வித் துறைக்கு இணக்கமாக செயல்படும் பணிவான ஆசிரியர்களுக்குத்தான்! இதிலும் விதிவிலக்காக சில நல்லாசிரியர்கள் அமையலாம்.இந்த விருது இன்னமும் கௌரவ விருதாக இருப்பதால் – அதாவது சன்மானம் மிகக் குறைவாக இருப்பதால் – இதில் ஊழல் இருக்காது என்று நம்புவோம். இருப்பினும்கூட, மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுடன் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதைப் பொருத்தும்தான் விருது கிடைப்பது உறுதியாகிறது என்பதை மறுப்பதற்கில்லை. விதிவிலக்காக சில விண்ணப்பங்கள் அமையலாம். இதன் பிறகு இந்த நல்லாசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில், ரோட்டரி, அரிமா சங்கங்கள் மூலமாக பாராட்டு விழா நடத்துவதும் நடத்திக்கொள்வதும் நடக்கிறது இத்தகைய தெரிவு முறை இந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடியதா என்ற சிந்திக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.ஒரு ஆசிரியரை நல்லாசிரியர் என்று சொல்லத் தகுதி படைத்தவர்கள் மாணவர்கள் மட்டுமே!ஒரு ஆசிரியர் தன்னிடம் எப்படி அன்பாக அல்லது கண்டிப்புடன் இருந்தார்; பாடம் நடத்துவதில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினார்; மாணவர்கள் எழுதிய பாடங்களை திருத்திக்கொடுத்து, அவர்களை நேரடியாக அழைத்து அந்த மாணவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தினார்; பாடத்திட்டத்துக்கு வெளியிலான நூல்கள், நல்ல எழுத்தாளர்களைப் பற்றி அறிமுகம் செய்து, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தார்; எத்தனை ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியாக இருந்தார்; மாணவ/மாணவிகளிடமும் உடன்பணிபுரிந்த ஆசிரியை/ ஆசிரியர்களிடமும் அவர் (ஆசிரியை/ஆசிரியர்) நடந்துகொண்ட விதம், பேசிய விதம் எவ்வாறு என்பதையெல்லாம் நேரில் கண்ட மாணவர் சமுதாயம் மட்டுமே ஒரு ஆசிரியரை நல்லாசிரியர் எனச் சொல்ல தகுதி பெற்றவர்கள்.2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, ராசிபுரம் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான குரு நிவாஸ் என்ற வீட்டை, வெங்கட்ராமன் என்கிற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் தங்கள் சொந்தச் செலவில் கட்டி, அவரிடம் ஒப்படைத்தார்கள். இவர், குருசாமிபாளையம், செங்குந்தர் மகாஜனம் மேனிலைப் பள்ளியில் 1954 முதல் 85 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கழிந்த பிறகும் அவரை முன்னாள் மாணவர்கள் நினைவில் நிறுத்தி வைக்கிறார்கள் என்றால், அவரது தாக்கம், பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்! இது ஒரு சம்பவம் மட்டுமே. இதுபோன்று வெளியில் தெரிய வராத நிகழ்வுகள் பல இருக்கும். முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு நிதிஉதவி செய்வதும், மருத்துவ உதவி செய்வதும், ஊர்ப்பக்கம் போகும்போது அவரை இனிப்புடன் சந்தித்து பேசுவதும், குறைந்தபட்சமாக ஒரு பொதுநிகழ்வில் தனது மனம் விரும்பும் ஆசிரியர் வரும்போது முகமலர்ச்சியுடன் எழுந்து வணக்கம் சொல்வதும்கூட மிகப்பெரிய விருதுதான்.ஒரு ஆசிரியரை, அவர் சொன்ன வார்த்தைக்காக, அவருடைய பண்புக்காக, நடத்தைக்காக, சொல்லித்தந்த கல்விக்காக, ஒரு மாணவர் தன் வாழ்வின் பல நேர்வுகளில் திரும்பத் திரும்ப நினைவுகூர முடிகிறது என்றால், அந்த ஆசிரியர் நல்லாசிரியர்தான் – அரசு விருது பெறாத போதிலும்! “இந்த ஆளுக்கா விருது கொடுத்தாங்க…’ என்று ஒரு முன்னாள் மாணவர் விரக்தியுடன் விமர்சனம் செய்தால், அவர் நல்லாசிரியர் விருது பெற்று, பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டாலும்கூட, அவர் நல்லாசிரியர் அல்லர்.

7:39 PM

Unknown
No comments
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவதாகக் கூறப்படுகிற ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. அதை பற்றி விசாரித்தால்,”‘‘நமது உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியாகிற இடங்கள் இரண்டு. 2 மார்பகங்களுக்கும் இடையில் உள்ள எலும்பிலும், இடுப்பெலும்பிலும்தான் உற்பத்தியாகும். அந்த இடங்களில் ஊசியைச் செலுத்தி, திசுக்களை எடுத்து, அதிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுக்க வேண்டும். அப்படி எடுத்த செல்களை, உடலின் எந்த உறுப்பில் செலுத்தினாலும், அந்த உறுப்புக்குரிய செல்களாக உருமாறிக் கொள்ளும்.

உதாரணத்துக்கு ஒருவருக்கு கல்லீரல் பழுதடைந்து விட்டது என வைத்துக் கொள்வோம். வேலை செய்யாத கல்லீரல் பகுதியில் அவரது ஸ்டெம் செல்களை செலுத்தினால், அந்த செல்கள் கல்லீரல் செல்களாகவே மாறி, ஊட்டம் கிடைத்து, அந்த உறுப்பின் வளர்ச்சிக்கு உதவும். இப்படி இன்று சிறுநீரகம், இதயம், நுரையீரல் என எல்லா உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கும் ஸ்டெம் செல் பயன்படுகிறது. அதே டெக்னிக்தான் குழந்தையின்மை சிகிச்சையிலும் பயன்பட ஆரம்பித்திருக்கிறது.பெண்களின் கர்ப்பப் பையின் உள் சுவர் என்டோமெட்ரியம் எனப்படும். மாதவிலக்கின் போது அது உறைந்து, ரத்தப் போக்காக வெளியேறும். மாதவிடாய் நின்னதும், மறுபடி அந்தச் சுவர் வளர ஆரம்பிக்கும். கருத்தரித்து விட்டால், அது உறையாது. அதில்தான் கருவானது ஒட்டி வளர ஆரம்பிக்கும். பெண்களுக்கு வயது கூடக் கூட, அதாவது, மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் போது, இந்த என்டோமெட்ரியம் வளர்ச்சியும் குறைய ஆரம்பிக்கும். 30 பிளஸ்சிலேயே சில பெண்களுக்கு திசுக்களின் பாதிப்பினால், இந்த என்டோமெட்ரியம், ‘ப்ரீ மெச்சூர் ஏஜிங்’ எனப்படுகிற முன்கூட்டிய முதுமை நிலையை அடையும். உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை என இதற்கு எத்தனையோ காரணங்கள்… அதன் தொடர்ச்சியாக, குழந்தையின்மைக்காக ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, எல்லாம் நல்லபடியாக முடிந்தாலும், கடைசியில் கருவானது, ஒட்டாமலேயே போகும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை.ஸ்கேன் மூலம் இதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலிலிருந்தே ஸ்டெம் செல்களை எடுத்து, உடனடியாக கர்ப்பப் பையின் உள்ளே செலுத்தி, என்டோமெட்ரியத்தை வளரச் செய்யலாம். அதன் பிறகு ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, கருவானது ஒட்டி, நன்கு வளரும் என நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஸ்டெம் செல்களை செலுத்திய பிறகு, அடுத்த மாதவிலக்கு வரும் வரை காத்திருந்து, என்டோமெட்ரியம் வளர்ச்சியடைகிறதா எனப் பார்த்து, பிறகு குழந்தையின்மைக்கான சிகிச்சையைத் தொடரலாம். குழந்தையில்லாத தம்பதியருக்கு இது நிச்சயம் இனிப்பான செய்தியாக அமையும்…’’ என்கிறார்கள்.