.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, September 5, 2013

நல்லாசிரியர் விருதின் லட்சணம் இதுதான்!


இன்று ஆசிரியர் தினம்.

நிகழ் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) பெறுவோர் பட்டியலை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசும் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கிறது. ஆசிரியர்களைப் பாராட்டுமுகமாக, அவர்களை ஊக்குவிக்க இத்தகைய விருதுகள் வழங்கப்படுவது இன்றியமையாதது. ஆனால் நல்லாசிரியர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறு தெரிவு செய்கிறார்கள் என்று பார்த்தால், இன்னமும், அதிகார வரம்புக்குள்தான் இந்த விருது அடங்கிக் கிடக்கிறது என்பதும் இந்தப் பரிந்துரை இன்னமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவர் மூலமாகத்தான் அரசுக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரியும்.

இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த ஆசிரியர்களே வாங்கி, தங்கள் சாதனைக்கான சான்றுகளாகப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவற்றை இணைத்து, பிரமுகர்களின் பரிந்துரைகளைப் பெற்று, மாவட்ட கல்வித் துறையிடம் கொடுக்க வேண்டும். அதை இதற்கென அமைக்கப்பட்ட ஒரு குழு தேர்வு செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தரும். அவர் இந்தப் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைப்பார்.

sep 5 - Happy-Teachers-Day-Card

 

தனது பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பள்ளிச் சீருடையில் சில குறைந்திருந்தால் அதற்காக குரல் கொடுத்து, சண்டைபோட்டு அனைவருக்கும் சீருடை வாங்கித்தரும் ஒரு கிராமத்து பள்ளித் தலைமையாசிரியரை கல்வித் துறை எதிரியாக புறக்கணிக்கும்.
அரசு வழங்கும் இலவச புத்தகம் வந்து சேரவில்லை என்பதற்காக போராடவும், உள்ளூர் நிருபர்கள் மூலம் செய்தியாக்கி, அரசுக்கு நெருக்கடி தரும் ஆசிரியர்கள், நேரத்துக்கு ஆசிரியர்கள் வகுப்புக்கு போக வேண்டும், ஒழுங்காக பாடம் நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தலைமையாசிரியர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கல்வித் துறைக்கும் பெருந்தலைவலி! அவர்களுக்கு நல்லாசிரியர்கள் விருது நிச்சயம் கிடைக்காது.

இந்த நிலையில், நல்லாசிரியர் விருது என்பது, மாவட்டக் கல்வித் துறைக்கு இணக்கமாக செயல்படும் பணிவான ஆசிரியர்களுக்குத்தான்! இதிலும் விதிவிலக்காக சில நல்லாசிரியர்கள் அமையலாம்.

இந்த விருது இன்னமும் கௌரவ விருதாக இருப்பதால் – அதாவது சன்மானம் மிகக் குறைவாக இருப்பதால் – இதில் ஊழல் இருக்காது என்று நம்புவோம். இருப்பினும்கூட, மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுடன் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதைப் பொருத்தும்தான் விருது கிடைப்பது உறுதியாகிறது என்பதை மறுப்பதற்கில்லை. விதிவிலக்காக சில விண்ணப்பங்கள் அமையலாம். இதன் பிறகு இந்த நல்லாசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில், ரோட்டரி, அரிமா சங்கங்கள் மூலமாக பாராட்டு விழா நடத்துவதும் நடத்திக்கொள்வதும் நடக்கிறது
இத்தகைய தெரிவு முறை இந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடியதா என்ற சிந்திக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.
ஒரு ஆசிரியரை நல்லாசிரியர் என்று சொல்லத் தகுதி படைத்தவர்கள் மாணவர்கள் மட்டுமே!

ஒரு ஆசிரியர் தன்னிடம் எப்படி அன்பாக அல்லது கண்டிப்புடன் இருந்தார்; பாடம் நடத்துவதில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினார்; மாணவர்கள் எழுதிய பாடங்களை திருத்திக்கொடுத்து, அவர்களை நேரடியாக அழைத்து அந்த மாணவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தினார்; பாடத்திட்டத்துக்கு வெளியிலான நூல்கள், நல்ல எழுத்தாளர்களைப் பற்றி அறிமுகம் செய்து, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தார்; எத்தனை ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியாக இருந்தார்; மாணவ/மாணவிகளிடமும் உடன்பணிபுரிந்த ஆசிரியை/ ஆசிரியர்களிடமும் அவர் (ஆசிரியை/ஆசிரியர்) நடந்துகொண்ட விதம், பேசிய விதம் எவ்வாறு என்பதையெல்லாம் நேரில் கண்ட மாணவர் சமுதாயம் மட்டுமே ஒரு ஆசிரியரை நல்லாசிரியர் எனச் சொல்ல தகுதி பெற்றவர்கள்.

2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, ராசிபுரம் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான குரு நிவாஸ் என்ற வீட்டை, வெங்கட்ராமன் என்கிற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் தங்கள் சொந்தச் செலவில் கட்டி, அவரிடம் ஒப்படைத்தார்கள். இவர், குருசாமிபாளையம், செங்குந்தர் மகாஜனம் மேனிலைப் பள்ளியில் 1954 முதல் 85 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கழிந்த பிறகும் அவரை முன்னாள் மாணவர்கள் நினைவில் நிறுத்தி வைக்கிறார்கள் என்றால், அவரது தாக்கம், பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்! இது ஒரு சம்பவம் மட்டுமே.


 இதுபோன்று வெளியில் தெரிய வராத நிகழ்வுகள் பல இருக்கும். முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு நிதிஉதவி செய்வதும், மருத்துவ உதவி செய்வதும், ஊர்ப்பக்கம் போகும்போது அவரை இனிப்புடன் சந்தித்து பேசுவதும், குறைந்தபட்சமாக ஒரு பொதுநிகழ்வில் தனது மனம் விரும்பும் ஆசிரியர் வரும்போது முகமலர்ச்சியுடன் எழுந்து வணக்கம் சொல்வதும்கூட மிகப்பெரிய விருதுதான்.

ஒரு ஆசிரியரை, அவர் சொன்ன வார்த்தைக்காக, அவருடைய பண்புக்காக, நடத்தைக்காக, சொல்லித்தந்த கல்விக்காக, ஒரு மாணவர் தன் வாழ்வின் பல நேர்வுகளில் திரும்பத் திரும்ப நினைவுகூர முடிகிறது என்றால், அந்த ஆசிரியர் நல்லாசிரியர்தான் – அரசு விருது பெறாத போதிலும்! “இந்த ஆளுக்கா விருது கொடுத்தாங்க…’ என்று ஒரு முன்னாள் மாணவர் விரக்தியுடன் விமர்சனம் செய்தால், அவர் நல்லாசிரியர் விருது பெற்று, பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டாலும்கூட, அவர் நல்லாசிரியர் அல்லர்.

Wednesday, September 4, 2013

ஸ்டெம் செல் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு!


இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவதாகக் கூறப்படுகிற ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. 

அதை பற்றி விசாரித்தால்,”‘‘நமது உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியாகிற இடங்கள் இரண்டு. 2 மார்பகங்களுக்கும் இடையில் உள்ள எலும்பிலும், இடுப்பெலும்பிலும்தான் உற்பத்தியாகும். அந்த இடங்களில் ஊசியைச் செலுத்தி, திசுக்களை எடுத்து, அதிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுக்க வேண்டும். அப்படி எடுத்த செல்களை, உடலின் எந்த உறுப்பில் செலுத்தினாலும், அந்த உறுப்புக்குரிய செல்களாக உருமாறிக் கொள்ளும்.

sep 4 stem-cells-

 


உதாரணத்துக்கு ஒருவருக்கு கல்லீரல் பழுதடைந்து விட்டது என வைத்துக் கொள்வோம். வேலை செய்யாத கல்லீரல் பகுதியில் அவரது ஸ்டெம் செல்களை செலுத்தினால், அந்த செல்கள் கல்லீரல் செல்களாகவே மாறி, ஊட்டம் கிடைத்து, அந்த உறுப்பின் வளர்ச்சிக்கு உதவும். இப்படி இன்று சிறுநீரகம், இதயம், நுரையீரல் என எல்லா உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கும் ஸ்டெம் செல் பயன்படுகிறது. அதே டெக்னிக்தான் குழந்தையின்மை சிகிச்சையிலும் பயன்பட ஆரம்பித்திருக்கிறது.

பெண்களின் கர்ப்பப் பையின் உள் சுவர் என்டோமெட்ரியம் எனப்படும். மாதவிலக்கின் போது அது உறைந்து, ரத்தப் போக்காக வெளியேறும். மாதவிடாய் நின்னதும், மறுபடி அந்தச் சுவர் வளர ஆரம்பிக்கும். கருத்தரித்து விட்டால், அது உறையாது. அதில்தான் கருவானது ஒட்டி வளர ஆரம்பிக்கும். பெண்களுக்கு வயது கூடக் கூட, அதாவது, மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் போது, இந்த என்டோமெட்ரியம் வளர்ச்சியும் குறைய ஆரம்பிக்கும். 

30 பிளஸ்சிலேயே சில பெண்களுக்கு திசுக்களின் பாதிப்பினால், இந்த என்டோமெட்ரியம், ‘ப்ரீ மெச்சூர் ஏஜிங்’ எனப்படுகிற முன்கூட்டிய முதுமை நிலையை அடையும். உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை என இதற்கு எத்தனையோ காரணங்கள்… அதன் தொடர்ச்சியாக, குழந்தையின்மைக்காக ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, எல்லாம் நல்லபடியாக முடிந்தாலும், கடைசியில் கருவானது, ஒட்டாமலேயே போகும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை.

ஸ்கேன் மூலம் இதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலிலிருந்தே ஸ்டெம் செல்களை எடுத்து, உடனடியாக கர்ப்பப் பையின் உள்ளே செலுத்தி, என்டோமெட்ரியத்தை வளரச் செய்யலாம். அதன் பிறகு ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, கருவானது ஒட்டி, நன்கு வளரும் என நிரூபிக்கப்பட்டு வருகிறது. 

ஸ்டெம் செல்களை செலுத்திய பிறகு, அடுத்த மாதவிலக்கு வரும் வரை காத்திருந்து, என்டோமெட்ரியம் வளர்ச்சியடைகிறதா எனப் பார்த்து, பிறகு குழந்தையின்மைக்கான சிகிச்சையைத் தொடரலாம். குழந்தையில்லாத தம்பதியருக்கு இது நிச்சயம் இனிப்பான செய்தியாக அமையும்…’’ என்கிறார்கள்.

ஃபேஸ்புக்கில் குற்றம் கண்டுபிடித்து 8 லட்சம் அன்பளிப்பினைப் பெறும் தமிழர்!

             
           முகநூல் எனப்படும் ஃபேஸ்புக் என்பது பிரபல சமூக இணையதளம் ஆகும். இதன் மூலம் பல தகவல் பரிமாற்றங்கள் உலகெங்கிலும் நொடிப்பொழுதில் கொண்டு செல்ல முடியும் என்பதும் இதில் தனி நபருக்கான தகவல் பக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளதால் தனி ஒரு நபர் தன்னுடைய தகவல் தொடர்புகள் அனைத்தையும் இதன் மூலம் பராமரித்துக் கொள்ள முடியும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷ்யம்தான்.அதே சமயம் இத்தகைய வலைத்தளங்களிலும் தொழில்நுட்பக் குறைகள் ஏற்படுவது உண்டு. அவ்வாறான குறைகள் தலைமை நிறுவனத்திற்குத் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படுமேயானால் அந்த நபர்களுக்குத் தகுந்த சன்மானமும் அளிக்கப்பட்டு வருகின்றது.

sep 4 -facebook-paying-

 


இதையடுத்து தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த அருள் என்ற 21 வயது பொறியியல் பட்டதாரி சமீபத்தில் இப்படிப்பட்ட பிழை ஒன்றினை அந்நிறுவனத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளார். கோயம்புத்தூரில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன்னர்தான் தகவல்தொடர்பு துறையில் தனது பட்டப்படிப்பை இவர் முடித்துள்ளார். தொழில்நுட்பக் குறைகளை கண்டறிவோருக்கு பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் இதனைப் பார்க்க ஆரம்பித்தவர் அதன்மூலம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டுள்ளார்.


இதே சமயம் ஒரு மாதத்திற்கு முன்னாலும், பிழை ஒன்றினை சுட்டிக்காட்டி அருள் எழுதியபோது அவருக்கு 1,500 டாலர் அன்பளிப்பாகத் தரப்படும் என்று பேஸ்புக் நிறுவனத்திலிருந்து தகவல் வந்துள்ளது. ஆயினும், இன்னும் அந்தப் பணம் அவருக்குக் கிட்டவில்லை. இப்போது, ஒருவரால் தனது தகவல் பக்கத்தில் போடப்படும் போட்டோவை அவருக்குத் தெரியாமல் அழிக்ககூடிய தவறினை அருள் கண்டறிந்தார். இதனை முதலில் நிறுவனத்திடம் தெரியப்படுத்தியபோது அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர். 


பின்னர், தகுந்த வீடியோ ஆதாரங்களுடன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் வெளியிட்டிருந்த போட்டோ ஒன்றினை அகற்றும் முறையை அருள் விளக்கியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனம் பரிசுத்தொகையாக 12,500 டாலர் அளிப்பதாகத தெரிவித்துள்ளது.


மேலும் சமீபத்தில், பாலஸ்தீனிய ஆராய்ச்சியாளர் ஒருவர் இதுபோன்ற பிழை ஒன்றினைக் குறித்து எழுதியபோது பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் அதனை நிராகரித்தனர். அதனால், அந்த ஆராய்ச்சியாளர் நிறுவனர் மார்க் சக்கர்பர்கின் தகவல் பக்கத்திலேயே நுழைந்து இதனைத் தெரிவித்திருந்தார். இது தவறான அணுகுமுறை என்று கூறிய பேஸ்புக் நிறுவனம் ஆராய்ச்சியாளரது தகவல் தொடர்புப் பக்கத்தையும் துண்டித்து விட்டது நினைவுகூறத்தக்கது.


Facebook to pay over Rs 8 lakh to Indian engineering graduate for finding critical bug.
 
*****************************************************


 Arul Kumar, a 21-year-old engineering graduate, has netted a $12,500 bounty from Facebook after he found a critical bug that allowed anyone to delete any photo hosted on the social networking website. At the current rate of dollar, the bounty which Arul will get this month, is worth around Rs 8,25,000.

சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள்!



thulasi 



சர்க்கரை நோயால பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவதுஇருதயம்,கிட்னி,கண்கள்,நரம்புகள் மற்றும் பாதம்.பொதுவாக துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் மூலம் அலர்ஜி மற்றும் ஆஸ்த்மா போன்றவைகள் குணமாவது நாம் ஏற்க்கனவே அறிந்த ஒன்று.

துளசி இலைகள் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறைக்க மட்டுமின்றி உடல் உறுப்புகளையும் பாதிக்கப்படாமல்பாதுகாக்கும் என ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர்.ஜி. முரளி கிர்ஷ்ணன் தலைமையிலான மாணவர்குழு மேற்கொண்ட ஆய்வில் துளசி இலையில் உள்ள ஆசிமம் சாங்க்டம் என்ற சத்து சர்க்கரை நோயை போக்கிவிடும் என கண்டுபித்து ஆய்வு பூர்வமாக நிருபித்துள்ளனர்.

இந்த குழு முதலில் எலிகளை கொண்டுஅதற்க்கு ஸ்ரேப்டோசிசின் என்ற ரசாயனத்தை செலுத்தி அதனுடைய சர்க்கரை அளவை அதிகபடுத்தி பின்ன இந்ததுளசி இலைகளில் கண்டு பிடித்த் மருந்தை ஒரு நாளுக்கு ஒரு முறை என 30 நாளும் செலுத்தி வந்தனர். முடிவில் உடலில் உள்ள சர்க்கரை அளவு குறைவது மட்டுமின்றி உடல் உறுப்புகளான கிட்னி, மற்றும் லிவ்வர் பாதிக்கப்படாமல்பாத்காக்கப்பட்டதையும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் குழு ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர்வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும்,புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

கோடை காலம்த்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசிஇலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.
சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்குவது கடினம்.
துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாகசீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.....

இன்னும் நிறைய மருத்துவம் உடையது துளசி.


 
back to top