
இந்திய கடல் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக தோரியம் கடத்தப்படும் விவகாரத்தில் ரூ.60 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது. மேலும் பொதுத்துறை ஒன்றையும், அணுசக்தி துறை நிறுவனங்களையும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற இருப்பதை அறியும் முடியும் என்றும் கூறப்படுகிறது. தோரியம் கடத்தலில் மத்திய மண்டல தாது பொருட்கள் கட்டுப்பாடு அதிகாரியாக உள்ள ரஞ்சன் சகாய் என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய...