
பொதுவாக உடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானதுதான் மிகவும் இன்றியமையாதது.எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும்.அதுமட்டுமின்றி, அசுத்த இரத்தமானது உடலில் இருந்தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப் படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை...