.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, September 7, 2013

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போமா?


பொதுவாக உடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானதுதான் மிகவும் இன்றியமையாதது.

எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும்.

sep 7 - kealth veg food

அதுமட்டுமின்றி, அசுத்த இரத்தமானது உடலில் இருந்தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப் படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை ஏற்படும்.


 எனவே தான், கடைகளில் இரத்தத்தை சுத்திகரிக்கும் பல்வேறு மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த மருந்துகளால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆகவே இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கும்
கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நிணநீர் நாளங்கள் நன்கு செயல்பட்டு, இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் இரத்தத்தை சீராக ஓட வைக்கும்.


இங்கு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போம். அதைப் படித்து, அவற்றை உணவில் சேர்த்து வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சருமமும் நன்கு அழகாக மின்னும் என்று உறுதிபட கூறுகிறார்கள்.


அதாவது வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது சுத்தமாகும்.

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.


வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.
பூண்டு ஒரு சிறந்த ஆன்டி-பயாடிக் மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.


கேரட் கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால் தான். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.


எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.


பழங்களில் அன்னாசிப் பழம் இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே அன்னாசியை டயட்டில் சேர்த்து, இரத்தத்தை மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.


இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், இரத்தம் சுத்தமாக இருக்கும்.

சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில் அதிகம் உள்ளது. மேலும் இது இரத்தத்தை சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும் பிரபலமான பொருளும் கூட.
நெல்லிக்காயிலும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

தகவல் சுரங்கம் - திலகரின் "விநாயகர் சதுர்த்தி'


சமய விழாவான விநாயக சதுர்த்தியை, சமூக விழாவாக மாற்றியவர் பாலகங்காதர திலகர். 


முதன்முதலில் புனேயில் தான் விநாயகர் சதுர்த்தி, சமூக விழாவாக கொண்டாடப்படும் வழக்கம் தோன்றியது. 

பின் இந்த வழக்கம் மும்பைக்கு பரவியது. சிவாஜியின் சாம்ராஜ்யத்தில் விநாயகர் சதுர்த்தி, அரச விழாவாக கொண்டாடப்பட்டது. 


பேஷ்வாக்களின் குல தெய்வமாக விநாயகர் இருந்தார். பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி, வீட்டிற்குள் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறி விட்டது. 


பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், திலகர் இதனை மீண்டும் சமூக விழாவாக மாற்றினார். ஜாதி வேறுபாடுகளை களைய இந்த விழா உதவும் என எண்ணினார். 

பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக மாற்றினார். 

விநாயகர் சதுர்த்தியை போன்றே, சிவாஜி ஜெயந்தியையும் மகாராஷ்டிராவில் சமூகவிழாவாக திலகர் மாற்றினார்.

இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீலனை!


 மத்தியில் மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்றும் விதத்தில் காங்கிரஸ் இலவச மொபைல் போன் மற்றும் இலவச கம்ப்யூட்டர் வழங்க பரிசீலனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக 10 ஆயிரம் கோடி செலவு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆட்சி்யை கைப்பற்ற முயற்சி:


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையி்ல் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும்நோக்கில் இலவச பொருட்களை விநியோகம் ‌செய்து வாக்காளர்களை கவரும் நடவடிக்கையி்ல் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில் மத்தியில் பதவியேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009-ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையி்ல் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் மொத்த கடன் அளவான 50 ஆயிரம் கோடி‌யை தள்ளுபடி செய்தார். இதன் பயனாக மீண்டும் 2009-ம் ஆண்டில் அதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்றது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதற்கு கடன் தள்ளுபடி திட்டமும் ஒரு காரணியாக கூறப்பட்டது.
இலவச மொபைல் தி்ட்டம்:


தற்போதைய அரசின் பதவி காலம் வரும் 2014-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இருப்பினும் முன்னதாகவே தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நிலக்கரிசுரங்க ஊழல் வழக்கு என பல்வேறு பிரச்னைகள் காரணமாக மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்ற முடியுமா என்ற அச்ச நிலையி்ல் காங்கிரஸ் உள்ளது.
இதனையடுத்து மீண்டும் ஆட்சியை பி டிக்க அதிரடியாக ரூ 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச பொருட்கள் வழங்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு ஒன்றிற்கு ரூ.360 மதிப்பு கொண்ட ரீசார்ஜ் உடன், 30 நிமிடம் டாக்டைம், 30 இலவச எஸ்.எம்.எஸ்., 30 நிமிடம் இண்டர் நெட் பயன்பாட்டுடன் கூடிய வகையில் இலவச மொபைல் போன்களை வழங்க முடி வு செய்துள்ளது. இதற்காக 4 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ( 2 ஆயிரத்து 983 கோடி ரூபாய் செலவி்ல் 60 சதவீத ஊரகப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், ஆயிரத்து 989 கோடி செலவி்ல் 40 சதவீத கிராம புற மாணவர்கள் பயன்படத்தக்க வகையி்ல) கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மீ்ண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் அரசு திட்டமிட்டு்ள்ளது. இத்திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கான சாத்தியக்கூறுகைளை மத்திய அமைச்சரவைக்குழு தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பதவிநீக்கம்: உடனடியாக அமலுக்கு வருகிறது சுப்ரீம் கோர்ட் உத்தரவு!



  குறைந்தபட்சம் 2 வருடம் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்களின் பதவிகள் உடனடியாக பறிக்கப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வர உள்ளது. இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட் நேற்று பிறப்பித்தது. தண்டனை பெற்ற உறுப்பினர்களை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தால் பாதுகாக்கப்பட முடியாது எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு :


தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர்களின் பதவிகள் பறிக்கப்படும் எனவும், சிறையில் இருக்கும் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் ஜூலை 10ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு குரல் எழுப்பின. இதனால் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதற்கும் சுப்ரீம் கோர்ட் மறுத்ததால், தீர்ப்பிற்கு விலக்கு அளிக்கும் மசோதா நேற்று பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்த மசோதா சட்டமாக மாற, ஜனாதிபதி ஒப்புதல் உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிரான மசோதா சட்டமாகும் வரை, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே நடைமுறையில் இருக்கும்.

பார்லி., சட்ட மசோதா :


பார்லி.,யில் நேற்று நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி குற்றம்சாட்டப்பட்ட உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட முடியும். உறுப்பினர்கள், 2 அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால் மட்டுமே அவர்களிடம் இருந்து பதவி பறிக்கப்படும் எனவும், 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்படும் உறுப்பினர்களுக்கு, மீதமுள்ள பதவி காலத்திற்கான இழப்பீடு ஏதும் வழங்கப்படாத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகள் குழப்பம் :


நேற்று மசோதா நிறைவேற்றப்பட்ட போது கடைசி நிமிடத்தி‌லேயே பா.ஜ., ஆதரவு அளித்தது. மசோதா குறித்த விவாதம் நடைபெற்ற போது பா.ஜ., தலைவர் அருண் ஜெட்லி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது சரியானது அல்ல என தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு தீவிர காட்டி வருவது ஏன் என பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சந்தேகத்தை கிளப்பின. காமன்வெல்த், 2ஜி, நிலக்கரி உள்ளிட்ட ஊழல் விவரகாங்களில் இருந்து கட்சியையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிரான ஊழல்களை மறைப்பதற்காகவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. 

 
back to top