
சந்திரனின் வான்வெளி குறித்தும், அதை சுற்றிலும் தூசுகள் மிதப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மைய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.அதற்காக ‘லாட்’ என்ற ஆளில்லா விண்கலம் தயாரிக்கப்பட்டது. அது நேற்று விர்ஜீனியா விண்வெளி தளத்தில் இருந்து மின்போவர் வி.ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த விண்கலம் ‘ரோபோ’ மூலம் இயங்கும் சிறிய கார் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கலிபோர்னியாவில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ் பீட்டர் வோர்டன் உருவாக்கியுள்ளார்.இது வருகிற அக்டோபர் மாதம் 6–ந்தேதி அதாவது இன்னும் 2 மாதத்தில் சந்திரனை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தரை இறங்கும் ‘லாடீ’ விண்கலம் தனது ஆய்வை தொடங்குகிறது.அங்கிருந்து...