.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, September 8, 2013

அன்ரோயிட் கைப்பேசிகளில் அழகான ஹோம் ஸ்கிரீனை உருவாக்க உதவும் அப்பிளிக்கேஷன்!


 myColourScreen_001

தற்போது காணப்படும் கைப்பேசி இயங்குதளங்களில் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


இவ் இயங்குதளத்தில் அதனை வடிவமைத்தவர்களாலும், பயனர்களாலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதே இதற்கு காரணமாகும்.
இது தவிர பல புதிய அம்சங்களையும் இந்த இயங்குதளம் கொண்டுள்ளமையையும் குறிப்பிடலாம்.


தற்போது அன்ரோயிட் இயங்குதளத்தினை மேலும் பயனர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் விதமாக MyColourScreen எனும் தீம் (Theme) அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த அப்பிளிக்கேஷன் கைப்பேசியின் ஹோம் ஸ்கிரீனை அழகுபடுத்துவதற்கும், விட்ஜெட்களை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி கையாள்வதற்கும் உதவுகின்றது.


மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற இணையதளங்கள்!


கடவுளுக்கு அடுத்து இரண்டாவது மிக்பெரிய சேவை செய்துவரும்
நல்ல எண்ணம் உள்ள  மருத்துவர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு
சொல்ல காத்திருக்கிறார்கள். நம் நண்பர் இமெயில் மூலம்
கேட்டிருந்தார் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு சொல்ல
 


ஏதாவது இணையதளம் இலவசமாக உள்ளதா என்று அதற்கான
சிறப்பு பதிவு தான் இது.மருத்துவத்தை வைத்து காசு பார்க்க
அலையும் கூட்டம் மத்தியில் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கான
தீர்வை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம் என்று வந்துள்ளது
இந்த  இணையதளங்களும்.




முதல் இணையதள முகவரி :

 http://askmedicaldoctor.com

ஆஸ்க் மெடிக்கல்  டாக்டர் இந்த இணையதளத்திற்கு சென்று
உங்களுக்கு ஏற்படும் சிறு தலைவலியிலிருந்து காய்ச்சல்,
இரத்த அழுத்தம், போன்ற அத்தனை பிரச்சினைகளையும்
நீங்கள் கேள்வியாக கேட்கலாம் உடனடியாக அந்தந்தத் துறையில்
உள்ள சிறப்பு மருத்துவர்கள் நமக்கு பதில் அளிக்கின்றனர்.


 
 இரண்டாம் இணையதள முகவரி :


 http://www.medhelp.org


மெட் கெல்ப் இந்த இணையதளத்திற்கும் உங்கள் உடம்பில்
நோயினால் ஏற்படும் மாற்றங்களை கூறினால் அவர்கள்
உங்களுக்கு எந்த மருந்து ஏற்றதாக இருக்கும் எவ்வளவு
நாள் சாப்பிட வேண்டும் என்ற அத்தனை தகவல்களையும்
கொடுக்கின்றனர் இதில் ஒரு இலவச கணக்கை உருவாக்கி
உங்கள் கேள்விகளை பதியலாம்.

செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் ஆய்வு விண்கலம்: இஸ்ரோ முடிவு!


 space_shuttle_001.w245


செவ்வாய் கிரகத்துக்கு வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆய்வு விண்கலம் அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் இந்தத் திட்டத்தை இஸ்ரோ வருகிற 11-ஆம் தேதி அறிவிக்க உள்ளது.


பி.எஸ்.எல்.வி.- சி25 ராக்கெட்டின் உதவியுடன் நிகழாண்டு அக்டோபர் 21 முதல் நவம்பர் 19-ஆம் தேதிக்குள் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


விண்வெளி போன்ற சூழலில் விண்கலம் சோதிக்கப்பட்டுள்ளது. வெப்ப, வெற்றிடச் சோதனைகளையும் விண்கலம் கடந்துள்ளது. அதேபோல, பி.எஸ்.எல்.வி.- சி25 ராக்கெட்டை பொருத்தும் பணிகள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியுள்ளன.


பி.எஸ்.எல்.வி.-சி25 ராக்கெட்டின் வெளிப்புறத் தகடுகளைப் பொருத்தும் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ராக்கெட் ஒருங்கிணைப்புப் பணி அக்டோபர் 10-ஆம் தேதி நிறைவடையும்.


பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து நவம்பரில் விண்ணில் செலுத்தப்படும் விண்கலம், 10 மாதங்கள் விண்வெளியில் பயணம் செய்த பிறகு, செவ்வாய் கிரகத்தை சென்றடையும். பின்னர், அங்கு நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும் விண்கலம், அதன் பரப்பில் இருந்து 500 கி.மீ. நெருக்கத்திலும், 80 ஆயிரம் கி.மீ. தொலைவிலும் சுற்றி வரும். 1,350 கிலோ எடை கொண்ட விண்கலத்தில் 5 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.


விண்வெளி அறிவியலுக்கான ஆலோசனைக் குழுவின் (ஆட்காஸ்) பரிந்துரையின்படி, 5 கருவிகளின் மொத்த எடை 15 கிலோவாக இருக்கும். ஆய்வுக் கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பரப்பு, காற்று மண்டலம், கனிம வளங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும். மீத்தேன் இருப்பு, பரப்பின் அமைப்பு ஆகியவற்றைச் சோதிப்பதுடன், அவை தொடர்பான தகவல்களை பூமிக்கு அனுப்பி வைப்பதே விண்கலத்தின் முக்கியப் பணியாக அமையும்.


இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரோ வருகிற 11ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது.


சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம் நாசா அனுப்பியது!


 nasa


சந்திரனின் வான்வெளி குறித்தும், அதை சுற்றிலும் தூசுகள் மிதப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மைய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.


அதற்காக ‘லாட்’ என்ற ஆளில்லா விண்கலம் தயாரிக்கப்பட்டது. அது நேற்று விர்ஜீனியா விண்வெளி தளத்தில் இருந்து மின்போவர் வி.ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.


இந்த விண்கலம் ‘ரோபோ’ மூலம் இயங்கும் சிறிய கார் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கலிபோர்னியாவில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ் பீட்டர் வோர்டன் உருவாக்கியுள்ளார்.


இது வருகிற அக்டோபர் மாதம் 6–ந்தேதி அதாவது இன்னும் 2 மாதத்தில் சந்திரனை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தரை இறங்கும் ‘லாடீ’ விண்கலம் தனது ஆய்வை தொடங்குகிறது.


அங்கிருந்து தகவல்களையும், போட்டோக்களையும் பூமிக்கு அனுப்புகிறது. ரூ.1900 கோடி செலவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 மாத ஆய்வுக்கு பின் ‘லாடீ’ விண்கலம் சந்திரனிலேயே தனது வாழ்நாளை முடித்து கொள்ளும். பூமிக்கு திரும்பாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
back to top