.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, September 8, 2013

சீமான்–கயல்விழி திருமணம் சென்னையில் இன்று நடந்தது! மினி ஆல்பம்!!


நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். 


சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார்.மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார்.தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணி வித்தார்.பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

sep 8 seeman marrage.JODI
 


சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.



விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு, திருச்சி வேலுசாமி, தமிழருவி மணியன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன், கலைக்கோட்டுதயம் பால்வியூமன்,நடிகர்கள் சத்யராஜ், ஜெயம்ரவி, விவேக், ராஜேஷ், டைரக்டர் பாரதிராஜா மகன் மனோஜ், விக்னேஷ், டைரக்டர்கள் பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, சேரன், அமீர், பாலா, பாலாஜிசக்திவேல், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து வாழ்த்தினர்.





திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன.

Saturday, September 7, 2013

உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணையஉலாவி மூலம் பார்க்கலாம்!

 
 
உலகத்தில் இருக்கும் அனைத்து டிவி நிகழ்ச்சிகளையும்
எந்த ஒரு டிவி டியூனர் கார்டு துனையும் இல்லாமல்
பார்க்க முடியுமா ? அதுவும் நேரடியாக ?  ஆம் உங்களால்
பார்க்க முடியும். எந்த இணையதளத்துக்கும் செல்ல வேண்டாம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவி சானல்கள். குழந்தைகளின்
கார்ட்டூன் நிகழ்ச்சி முதல் அனைத்து தொழில்நுட்ப செய்திகளையும்
உடனுக்கூடன் நேரடியாக பார்க்கலாம். எந்த கட்டணமும் செலுத்த
வேண்டியதில்லை.இதையெல்லாம் விட சிறப்பு நம்மூர்
“Vijay Tv ” கூட பார்க்கலாம். எப்படி என்பதை இனி பார்ப்போம்.
 
 
 
 
உங்கள் “ Firefox ” இணைய உலாவியை திறந்து கீழ்கண்ட
முகவரியை Addresbar-ல் கொடுக்கவும்.
 
 
வரும் இணையபக்கத்தில் ” Add to Firebox ” என்ற பட்டனை
அழுத்தவும்.
 
 
அதுவாகவே டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் ஆகும்
இன்ஸ்டால் ஆகி முடிந்ததும். பயர்பாக்ஸ் உலாவியை “Restart”
செய்யவும். இப்போது படம்-2 ல் காட்டியபடி ” TV Toolbar “
தானாக வ்ந்துவிடும். இப்போது எந்த நாட்டு சானல் பார்க்கவேண்டுமோ
அதை தேர்வு செய்து பார்க்கலாம்.
 
 
உதாரணமாக நாம் விஜய்டிவி தேர்வு செய்துள்ளோம்.
 

இணையதள சொந்தகாரருக்கும் வடிவமைப்பாளருக்கும் ஒரு வரப்பிரசாதம்!

நாம் சொந்தமாக இணையதளம் ஒன்று வைத்து இருந்தால்
அது எல்லா கம்யூட்டரிலும் மற்றும் எல்லா இணைய உலாவி
(web browser)-களிலும் எப்படி தெரியும் ? நாம் வடிவமைத்தபடி
தெரியுமா ?  எந்த உலாவிகளில் எல்லாம் நம் இணையதளம்
வேறுபட்டு தெரிகிறது ? லினக்ஸ்(Linux ) ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில்
நன்றாக தெரியுமா ?  மெக் (Mac OS) ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில்
எப்படி தெரியும் ? இப்படி பல கேள்விகள் அத்தனைக்கும்
ஒரே பதில் இந்த இணையதளம் வழங்குகிறது.
 
 
 
 
உங்கள் இணையதள முகவரியை கொடுக்க வேண்டும்.
எந்தெந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் , எந்தெந்த உலாவி ,
பக்கதின் அளவு , ஜாவா துணை வேண்டுமா என்பதை
எல்லாம் தேர்வு செய்த பின் ” Submit ” பட்டனை அழுத்த்வும்.
அவ்வளவு தான் அடுத்த பக்கத்தில் இரண்டு நிமிடம் காத்திருக்க
சொல்லும். அதன் பின் அந்த பக்கத்தை “Refresh ”  செய்யவும்.
உங்கள் இணையதளம் எப்படி எல்லாம் தெரியும் என்று
பார்க்கலாம் சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.
இணையதள முகவரி:  www.browsershots.org
 
 
 
 

2016 ஒலிம்பிக்குடன் ஓய்வுபெற உசைன் போல்ட் திட்டம்!



பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்குப் பின்பு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக ஜமைக்காவின் உசைன் போல்ட் அறிவித்துள்ளார்.


உலகின் அதிவேக மனிதர் என்றழைக்கப்படும் போல்ட், களத்தில் மின்னல் வேகத்தில் இலக்கைக் கடந்து பதக்கங்களை குவித்து வருபவர். இவர், களத்தில் இருக்கும் வரை மற்றவர்கள் பதக்கம் வெல்வது இயலாது என்ற சூழல் தற்போது நிலவி வருகிறது.


இந்நிலையில், 2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு தனது ஓய்வு குறித்து பரிசீலிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும். 200 மீற்றர் ஓட்டப் பந்தயப் போட்டியில் மீண்டும் உலக சாதனை படைக்க வேண்டும்.


காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம் வெல்ல வேண்டும். அதற்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் விளையாட்டில் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு பெறுவது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனவும் தெரிவித்தார்.


போல்ட் வென்ற தங்கங்கள்:


ஒலிம்பிக் போட்டியில் போல்ட் இதுவரை 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும், 2012 லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும் தங்கம் வென்றுள்ளார்.


 
back to top