..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
6:18 PM
Unknown
No comments
ஒரு காட்டில் இருந்த மான் தண்ணீர் குடிக்க தண்ணீர் அதிகம் இருந்த குளத்தருகே வந்தது.
தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்தது.தனக்கு ஆண்டவன் அளித்துள்ள அழகான உருவத்தையும்...புள்ளிகளையும் கொம்புகளையும் கண்டு மகிழ்ந்தது.
அப்போது சிறுத்து நீண்ட தன் கால்களைப் பார்த்தது.என்னை இவ்வளவு அழகாக படைத்த இறைவன் ...கால்களை இப்படி படைத்துவிட்டாரே என வருந்தியது.
அச்சமயம் ஒரு சிங்கம் ...அந்த மானை அடித்து சாப்பிட எண்ணி மானை நோக்கிப் பாய ...அலறி அடித்து மான் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடி தப்பியது.
அப்போது அது.. ஆண்டவன் தனக்கு ஏன் இப்படிப்பட்ட கால்களைக் கொடுத்தான் என்பதை உணர்ந்து கடவுளுக்கு நன்றியைச் சொன்னது.
ஆண்டவன் படைப்பில் காரணமில்லாமல் எதையும் அவன் செய்வதில்லை.
5:44 PM
Unknown
No comments
இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆன சுவாமிகந்தன் இயக்கியிருக்கும் ‘தி சீக்ரெட் விள்ளேஜ் திரைப்படத்தில் ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர், ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஜேசன்பி.விட்டியர்-உடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார்.ஜோனாதன்பென்னட்-ன் 50வது படம்தான் இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘மெமோரியல்டே’, மீன்கேர்ள்ஸ்’ படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.அலிஃபால்க்னர்–“திடிவிலைட்சகா – பிரேக்கிங்டான் – பார்ட் 1” மற்றும் “பேட்கிட்ஸ்கோடூஹெல்”படத்திலும், ஸ்டெலியேசவன்டே–“ஏ பியூட்டிபுல்மைன்ட்,” “அக்லிபெட்டி” படத்திலும் நடித்தவர். ரிச்சர்ட்ரைல்-ன் 210வது படம்இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘ஹாலோவின்’, ஆபீஸ்ஸ்பேஸ்” ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.கதைச்சுருக்கம்ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ,திடீர் திடீரென நோய் வாய்ப்பட்டு இறந்து போவது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் மட்டும்தான் இது நடப்பது என்பது புரியாத புதிராக இருக்கிறது!வெற்றிபெற முடியாத திரைக்கதையாசிரியரானகிரேக் (ஜோனாதன்பென்னட்), துணிச்சல் மிக்க பத்திரிகையாளரான ராச்சேல் (அலிஃபால்க்னர்) இருவரும் அந்த கிராமத்திற்கு சென்று ஒரு வீடு எடுத்து தங்கி இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இவர்களது ஆராய்ச்சிக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த எவரும் ஒத்துழைப்புக் கொடுக்க மறுக்கும் நிலையில் ஒரே ஒருவர் மட்டும் இவர்களுக்கு உதவ முன் வருகிறார். இவர்களோடு பேசிய மறுநாள் அந்த நபரும் திடீரென இறந்து போக அதிர்ச்சி மேலும் அதிகமாகிறது.அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜோ (ஸ்டெலியோசவன்டே), ஜேஸன் (Kef Lee) அந்த கிராமத்தின் வழிபாட்டு நடவடிக்கைகளை ரகசியமாக காத்து வருகிறார்கள்.ஒரு சந்தர்ப்பத்தில் கிரேக் காணாமல் போகிறார். இதனால் தனித்து விடப்படும் ராச்சேல் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள ரகசியங்களை வெளிக்கொண்டு வருவதை திகில் நிறைந்த காட்சிகளோடு சொல்லியிருப்பதே இந்தபடத்தின் கதை.இயக்குனர் சுவாமிகந்தன் பற்றி….ஃபிலெடெல்பியாவைச் சேர்ந்த இப்படத்தின் இயக்குனரான சுவாமிகந்தன் இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர். அமெரிக்காவிற்குச் சென்ற பின், திரைப்படத் தயாரிப்பு, விஷுவல்எபெக்ட்ஸ் மற்றும் திரைப்பட மார்க்கெட்டிங் பற்றிய படிப்பை நியூயார்க் பல்கலைக்கழகத்திலுள்ள ஃபிலிம்ஸ் கூலில்படித்தவர்.2008ல் வெளிவந்த ‘கேட்ச்யுவர்மைன்ட்’ என்ற படம்தான் சுவாமிகந்தன்எழுதி, இயக்கி, தயாரித்த முதல்படம். குடும்பக்கதையான இப்படம் அமெரிக்கா, கனடா, கரீபியன்தீவுகள் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியானது. 2009ல் டிவிடி வடிவில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.தற்போது திகில், மர்மப்படமான ‘திசீக்ரெட்வில்லேஜ்’ படத்தை முடித்துள்ளார். இந்த ஆண்டு அக்டோபர்மாதம் இப்படம் உலகம் முழுவதும் வெளிவரத் தயாராகஉள்ளது.‘தி மெசேன்ஜர்’ என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். ஆரம்ப நிலையில்உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது.சுவாமிகந்தன் மற்றும் டாக்டர்ராஜன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருப்பதோடு, உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.
5:22 PM
Unknown
No comments
தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: அதிகாரிகல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கிளார்க் பணியில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager (HR BD), City Union Bank Ltd., Cenetral Office, 149, TSR (BIG) Street, KUMBAKONAM 612001, Tamil Nadu.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2013மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cityunionbank.com என்ற இணையதளத்தைப்ப பார்க்கவும்.
5:16 PM
Unknown
No comments
ஒரு நாள் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் ஒரு சிறுவன் உதைத்த பந்து அருகில் இருந்த மரத்தின் பொந்திற்குள் விழுந்தது.
பந்துக்கு சொந்தக்காரச் சிறுவன் அழ ஆரம்பித்தான்.
அந்தப் பந்தை பொந்திலிருந்து எப்படி எடுப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.
அப்பொழுது ஒரு புத்திசாலிச் சிறுவன் அருகிலிருந்த வீட்டிலிருந்து ஒரு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து பொந்திற்குள் கொட்ட பந்து எழும்பி தண்ணீரின் மேல் வந்தது. அந்த பந்தை எடுத்து உரிய சிறுவனிடம் ஒப்படைத்தான்.
எந்த ஒரு காரியத்திற்கும் சற்று சிந்தித்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம்.