..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
7:36 PM
Unknown
No comments
தேவையானவை:
பீட்ரூட் –2
கேரட் – 2
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கவும்),
வெங்காயம் – ஒன்று
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு,
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
வெண்ணெய் - தாளிக்க
செய்முறை:
• கேரட், பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
• வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
• காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.
• இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டவும்.
• அதில் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
6:46 PM
Unknown
No comments
சென்னை மாநகராட்சி மூலம் அம்மா உணவகம் 200 இடங்களில் தொடங்கப்பட்டு குறைந்த விலை யில் உணவு வழங்கி வரு கிறது. இதில் அந்தந்த பகுதி மகளிர் சுயஉதவி குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.இதேபோல காய்கறிகள், பழங்கள் பூ விற்பனையிலும் மகளிர் குழுக்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், பழங்களை நேரிடையாக கொள்முதல் செய்து பொது மக்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டு சென்று விற்கலாம்.தள்ளுவண்டியில் எப்படி தெருத்தெருவாக பழங்கள், காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறதோ அது போல சிறிய வேன், ஆட்டோ போன்றவற்றில் காய்கறிகள், பழங்களை கொண்டு வந்து முக்கிய வீதிகளில் சந்திப்புகளில் விற்க திட்டமிடப்படுகிறது.இந்த பணியில் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்களை ஈடுபடுத்தினால் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று அரசு கருதுகிறது.கோயம்பேட்டில் பொது மக்கள் நேரிடையாக சென்று காய்கறிகள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. மார்க்கெட்டிற்கு சென்று வாங்குவதற்கு பதிலாக ஒவ்வொரு பகுதியிலும் சுயஉதவி குழு பெண்கள் மூலமாக குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய அரசு பரிசீலனை செய்கிறது.இதனால் பொது மக்கள் அலைந்து திரியாமல் வீட்டிற்கு அருகிலேயே மலிவான விலையில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பெற முடியும்.கோயம்பேடு மார்க்கெட் அருகில் மெட்ரோ ரெயில் நிலையம், பராமரிப்பு மையம் போன்றவை கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. பொது மக்கள் காய்கறிகள் வாங்க வாகனங்களில் வர முடியாத நிலை உள்ளது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் பொது மக்களுக்கும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு பகுதி ஏழை பெண்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதாக அமையும்.
6:11 PM
Unknown
No comments
ஒரு கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறால்...கடலில் மூழ்கியது.அதிலிருந்த அனைவரும் மடிந்தனர்.கப்பல் கேப்டன் மட்டும் உயிர்பிழைத்து..நீந்தியபடியே ஆள் இல்லாதீவு ஒன்றிற்கு வந்தான்
தனியாக என்ன செய்வது எனத்தெரியாத அவன்..அந்தத்தீவில் கிடைத்த ஓலை..குச்சி எல்லாவற்றையும் சேகரித்து இருக்க ஒரு குடிசையை அமைத்துக்கொண்டான்.
பின் வயிற்றைக் கிள்ளியதால் ..உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா..என்று தீவைச் சுிற்றிவரக் கிளம்பினான்.திரும்பி வந்து பார்த்தபோது...அவன் அமைத்திருந்த குடிசை தீப்பற்றி எறிஞ்சிருந்தது...
அதைப் பார்த்த அவன் கண்களில் நீருடன் 'கடவுளே நான் என்ன தீங்கு செய்தேன்..என்னை யாருமில்லா தீவில் சேர்த்தாய்.உண்ண உணவில்லை.இருக்க கட்டிய குடிசையும் தீப்பற்றி எறிய வைத்துவிட்டாயே' எனக் கதறினான்.
அப்போது ..அந்தத் தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது..அதில் இருந்தவர்கள் இவனைக் காப்பாற்றி தங்கள் கப்பலில் ஏற்றினர்.
'நான் இங்கு மாட்டிக்கொண்டது உங்களுக்கு எப்படித் தெரிந்தது'என அவர்களிடம் இவன் கேட்டான்.
அவர்கள் சொன்னார்கள்..'யாருமில்லா தீவில் நெருப்பு பற்றி எறிந்ததைக் கண்டோம்...உடன் யாருக்கோ உதவி தேவை என்பதை உணர்ந்து வந்தோம்'. .என்றனர்.
கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்கே என்பதை உணர்ந்தான் அவன்.
5:50 PM
Unknown
No comments
ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பெருமளவில் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.அதாவது ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பட்டினி கிடக்கின்றனர்.அதாவது நாள் ஒன்றுக்கு 87 கோடி பேர் உணவு இன்றி பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது.
உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதன் மூலம் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மீன்கள் மற்றும் கடல் உணவு பொருட்கள் அடங்காது.உலகம் முழுவதும் 28 சதவீதம் நிலங்களில் விவசாயம் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை வளர்ந்த நாடுகளில் பெருமளவில் வாங்கப்பட்டு சாப்பிடாமல் குப்பையில் கொட்டப்படுகின்றன.இவை தவிர அதிகமாக விளையும் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததும் ஒரு காரணமாகும்.ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற காரணங்களால் உணவு பொருள் வீணாகிறது. அதே வேளையில் சீனா மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.One third of food wasted, costs world economy $750 bn: UN
************************************************** One third of the food produced worldwide is wasted, costing the global economy around $750 billion a year, a new report by the UN food agency said today.The Rome-based Food and Agriculture Organisation (FAO) said some 1.3 billion tonnes of food are wasted every year, with the Asia region including China seen as the worst culprit.The food agency’s director general, Jose Graziano da Silva, told a press conference that in total, “one third of the food produced today is lost or wasted… equivalent to the Gross Domestic Production (GDP) of Switzerland.”