.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, September 15, 2013

டி-சர்ட் அணிந்து அலுவலகம் வரத் தடை!: கர்நாடக அரசு அதிரடி!!



அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது. இது தொடர்பாக கர்நாடக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்.அதில் “புதிய பணி நியமனம் பெற்றுள்ள ஊழியர்கள் அணியும் உடை அலுவலக கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அரசு அலுவலகங்களின் கவுரவத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அலுவலக நேரத்தில் ஆடை கட்டுப்பாட்டு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது.



sep 15 Karnataka State Secretariat

 


அதாவது ஆண் ஊழியர்கள் சட்டை, முழு பேண்ட், பைஜாமா மற்றும் குர்தா மட்டுமே அணிய வேண்டும். டி-சார்ட் அணியக்கூடாது. அதேபோல் பெண் ஊழியர்கள் சேலை, சுடிதார் ஆகியவற்றை மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் பாவாடை, டி-சார்ட் மற்றும் பேண்ட் ஆகியவற்றை அணிந்து அலுவலகங்களுக்கு வரக்கூடாது.அரசு வாகன டிரைவர்கள் மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீருடையை கட்டாயம் அணிய வேண்டும். அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.”என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Karnataka govt to enforce dress code for its employees.
 
*********************************************** 


 Now a dress code for Karnataka government employees–pant and shirt/pyjama/kurta for men and saree or “chudidar” for women. The state government has announced enforcement of a dress code for its officials and staff after some were found to wear clothes “that did not bring any repute” to the offices. 

கம்பு அடை!

கம்பு அடை


தேவையானப் பொருள்கள்:
கம்பு மாவு-ஒரு கப்
சின்ன வெங்காயம்-7
பச்சை மிளகாய்-1
பெருஞ்சீரகப் பொடி-சிறிது
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
கறிவேப்பிலை-ஒரு கொத்து
உப்பு-தேவைக்கு
நல்லெண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:


* வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி,பெருஞ்சீரகப் பொடி,உப்பு இவற்றைப் போட்டு பிசைந்துகொண்டு அதில் கம்புமாவை சேர்த்து நன்றாகப் பிசையவும்.

* பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் சப்பாத்தி மாவு பதத்தைவிட கொஞ்சம் இறுக்கமாகப் பிசைந்துகொள்ளவும்.

* கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு மாவு முழுவதும் தடவி ஒரு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.

* கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.

* ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.

* இதற்கு எல்லா வகையான சட்னியும் பொருத்தமாக இருக்கும். 

மனதில் உறுதி வேண்டும்.........குட்டிக்கதை



 
அது ஒரு சிறு கிராமம்...அந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்னை வந்தது...மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கிணறு வெட்ட தீர்மானித்தனர்.ஒரு இடத்தை தீர்மானித்து ...அந்த இடத்தில் இருபது அடி ஆழம் தோண்டினர்.ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை..


இடம் சரியில்லை என நினைத்து வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு முப்பது அடி வெட்டினர்.அங்கும் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.


அந்த இடமும் சரியில்லை என மூன்றாவதாக ஒரு இடத்தை கண்டுபிடித்து அங்கு ஐம்பது அடி வெட்டினர்.தண்ணீர் இல்லை.


மூன்று இடங்களிலும் சேர்த்து அவர்கள் நூறடிக்கு மேல் தோண்டியுள்ளனர்.


அவர்கள் தங்கள் முயற்சியை ஒரே இடத்தில் பொறுமையுடன் மேற்கொண்டிருந்தால் முதலில் வெட்டிய இடத்திலேயே தண்ணீர் கிடைத்திருக்கும்.


மனதில் உறுதியுடன் செய்யும் காரியத்தில் ஈடுபடவேண்டும்....அப்போது தான் வெற்றி கிடைக்கும்.


எடுத்த காரியத்தில் கவனம் செலுத்தி மனதை ஒருமுகபடுத்தினால் வெற்றி நிச்சயம்.

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?






கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில் இவ்விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர்.



 தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 



8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதையும் அறியமுடிகிறது. இவ்விழாவின் போது "ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம்.


 
back to top