.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, September 16, 2013

உண்மையே பேசவேண்டும்.(நீதிக்கதைகள்)



 
கந்தன் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் ..எதற்கெடுத்தாலும் பொய்யைச் சொல்லி...மக்களை ஏமாற்றி வந்தான்.


அதனால் ...அவனது தந்தை,,,அவனிடம் ...வீட்டிலிருந்த ஆடுகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்திருந்தார்.


ஆடுகளை....ஊருக்கு வெளியே இருந்த காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றான் கந்தன்.


ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க..சற்றே தள்ளி அமர்ந்திருந்த கந்தன் 'புலி வருது புலி வருது காப்பாத்துங்க...' எனக் கத்தினான்.


அருகாமையில் பக்கத்து வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த மக்கள் அவனைக் காக்க ஓடி வந்தனர்.ஆனால் வந்ததும்தான் கந்தன் பொய் சொல்லியிருக்கிறான் என்று உணர்ந்தனர்....ஏமாந்த அவர்களைப் பார்த்து கந்தன் சிரித்தான்.


அடுத்த நாளும்..கந்தன் முந்தைய நாள் சொன்னது போல 'புலி வருது புலிவருது..'எனக் கத்த ஓடி வந்த மக்கள் ஏமாந்தனர்....கந்தனும் அவர்களைப் பரிகசிப்பதுபோல சிரித்தான்.


மூன்றாம் நாள் ..ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க ...உண்மையிலே புலி வந்து விட்டது. கந்தன் கத்த ...மக்களோ அவன் தங்களை மீண்டும் ஏமாற்றவே கத்துகிறான் என நினைத்து போகவில்லை.


புலி..சில ஆடுகளை அடித்து கொன்றுவிட்டு அவன் மேலும் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தி விட்டு மறைந்தது.


அப்போது தான் கந்தன் ....தான் முன்னர் பொய் சொன்னதால் ...தான் கூறும் உண்மைகளையும் மக்கள் பொய்யாக எண்ணியதை எண்ணி மனம் வருந்தினான்.


இனி எக்காரணம் கொண்டும் பொய் சொல்லக்கூடாது என்று எண்ணியதுடன் நில்லாது....அடுத்த நாள் முதல் ஒழுங்காகப் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். 

நிமிர்ந்து நில் படத்தில் வில்லனாக ஜெயம்ரவி!




நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்திருக்கிறார்.
போராளி வெற்றிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கி வரும் திரைப்படம் நிமிர்ந்து நில். இதில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதாவது 24 வயது இளைஞன் மற்றும் 48 வயது நடுத்தர வயது மனிதன் என இரண்டு கேரக்டர்கள். 


அவருக்கு ஜோடிதான் அமலாபால். சரத்குமார் சிபிஐ அதிகாரியாக வருகிறார். இவர்களுடன் சூரி, தம்பி ராமையா, பஞ்சு சுப்பு, கோபிநாத் உட்பட பலர் நடிக்கின்றனர். வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கிறார். 


இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தெலுங்கில் ‘ஜண்டாபாய் கப்பிராஜூ’ என்ற பெயரில் உருவாகிறது. இதில் நானி ஹீரோ. கிட்டதட்ட 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 


இது குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாவது: உன்னை சரிசெய்துகொள். உலகம் தானாக சரியாகிவிடும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். 48 வயது கேரக்டர் இதுவரை தமிழ் சினிமா பார்க்காததாக இருக்கும்.  இதற்காக ரவி நிறைய உழைத்திருக்கிறார். இளம் வயது ரவியும் வில்லன் ரவியும் மோதும் சண்டைக் காட்சி அதிகப் பொருட்செலவில் சமீபத்தில் படமாக்கப்பட்டது என்றார்.

அதிரடி மாற்றம் : மோடியை புகழ்ந்து தள்ளும் அத்வானி!




மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக கொடி பிடித்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.


சட்டீஸ்கர் மாநிலம் கர்பாவில் நடைபெற்ற பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அத்வானி, குஜராத் மாநிலம் உள்கட்டமைப்பிலும், மின்சார வசதியிலும் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ஏன் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்திருப்பதற்கு இதுவே உதாரணமாகும் என்று கூறிய அத்வானி, குஜராத்தின் மேம்பாட்டுக்காக நரேந்திர மோடி ஏராளமான பணிகளை செய்துள்ளார் என்று கூறினார்.

மிஸ் அமெரிக்கா அழகி போட்டி: இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு!



மிஸ் அமெரிக்கா அழகி போட்டி:
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு
    நியூயார்க்கில் நடைபெற்ற மிஸ் அமெரிக்கா அழகி போட்டியில் முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அழகி நீனா டவ்லுரி வயது (24 ) மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கபட்டார்.



2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டிகள் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 52 அழகிகள் கலந்து கொண்டனர். இதில் அமெரிக்காவின், மிஸ் நியூயார்க் அழகி , நினா தவுலுரி (24) , ‘மிஸ் அமெரிக்கா’ பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இதன் மூலம் இப்பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி என பெயர் பெற்றுள்ளார்.


 
back to top