.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, September 17, 2013

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்!



இந்தியமொபைல் போன் தயாரிப்பாளரான, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அண்மையில் தன் தயாரிப்புகளிலேயே, மிகப்பெரிய அளவிலான மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. கேன்வாஸ் டூடில் 2 (Canvas Doodle 2 ) என அழைக்கப்படும் இந்த போன் தான், இந்நிறுவனத்திலிருந்து அதிக விலையிடப்பட்டு வந்திருக்கும் போன் ஆகும். இதில் 5.7 அங்குல திரை தரப்பட்டுள்ளது. சாம்சங் காலக்ஸி நோட் 3 போனிலும் இதே அளவில் திரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Snapdeal வர்த்தக இணைய தளத்தில், தற்போதைக்கு இந்த போன் விற்பனைக்கு உள்ளது. இதன் விலை ரூ.19,900. இதற்கான விளம்பரத்தில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், பேஸ்புக் தளத்தில், உங்கள் கற்பனை இதைக் காட்டிலும் பெரியதாக இருக்குமா? என்று கேட்டிருந்தது.


இதன் திரை டிஸ்பிளே ரெசல்யூசன் 1280 x 720 என உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராச்சர், இந்த போனில் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 1 ஜிபி ஆகவும்,ஸ்டோரேஜ் மெமரி 12 ஜிபிஆகவும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதனை இயக்குகிறது. 12 எம்.பி. திறன் கொண்ட, டூயல் எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த கேமரா செயல்படுகிறது. 2ஜி, 3ஜி மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்புகள் கிடைக்கின்றன. இதன் 2,600 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 8 மணி நேரம் பேச மின்சக்தியினை அளிக்கிறது. 



இந்த ஆண்டில், 30 ஸ்மார்ட் போன் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக, மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது. இதன் கேன்வாஸ் எச்.டி.மற்றும் கேன்வாஸ் 4 ஆகிய ஸ்மார்ட் போன்களுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும், மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது.


Click Here

‘மூச்சு’ பற்றிய முக்கிய தகவல்கள்!



நாம் ஒவ்வொருவரும் ஒரு நிமிடத்தில் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது.இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும். ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும். அடிப்படையில் நம்மில் எவருமே முழுமையான சுவாசம் செய்வதில்லை என்பதுதான் உண்மை.

இதற்கிடையில் – மூச்சு வாங்குது.

- மூச்சு திணறுது.

- மூச்சுவிட கஷ்டமா இருக்கு.

- மூச்சு நின்னுடுச்சு.

sep 17 breathing.walk

 


இப்படி மூச்சு, மூச்சு என்று அடிக்கடி எல்லோரும் சொல்வதை, நீங்களும் கேட்டிருப்பீர்கள். மூக்கு வழியாக காற்றை உள்ளிழுத்து, வெளியே விடுவதைத்தான் `மூச்சு’ என்று சொல்லிப் பழகி விட்டோம். இதையே `சுவாசித்தல்’ என்றும் நாம் சொல்வதுண்டு.நம்மை அறியாமலே, இயற்கையாக, தன்னிச்சையாக, சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை.


சுவாசித்தல், நுரையீரல் என்கிற உறுப்பு மூலமாகத்தான் நடைபெறுகிறது. நுரையீரல் நமது உடலில் மார்பின் இரண்டு பக்கமும் நிறைந்திருக்கிறது. நமது மார்பிலுள்ள இரண்டு நுரையீரல்களிலும், கண்ணுக்குத் தெரியாத அளவில் மிகமிகச் சிறிய பலூன் போன்ற காற்றுப்பைகள் சுமார் முப்பது கோடி எண்ணிக்கையில் இருக்கின்றன. வெளியிலிருந்து உள்ளே இழுக்கப்படும் காற்று, இந்த முப்பது கோடி காற்றுப் பைகளுக்குள்ளும் சென்றுதான், மாற்றமாகி, மறுபடியும் வெளியே வருகிறது.


உலகமெங்கும் பரவியிருக்கும் காற்றைத்தான், நாம் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். காற்று, கண்ணுக்குத் தெரியாதது. ஆனால் எங்கும் நிறைந்து இருப்பது. செடி, கொடிகள் அசையும்போது நாம் காற்று அடிக்கிறது என்று சொல்கிறோம். காற்றை நம்மால் உணர மட்டும் தான் முடியும்.


காற்றை நாம் சுவாசிப்பதனால்தான் உயிர் வாழ்கிறோம். சுவாசித்தல் நின்று விட்டால், உயிரும் நின்று விட்டதாக அர்த்தம். `தூங்கையிலே வாங்குகிற மூச்சு, சொல்லாமல் நின்னாலும் போச்சு’ “ராத்திரி படுத்து, காலையில் எழுந்தால்தான் உயிர் நிச்சயம்” என்று சுவாசித்தலைப் பற்றி கிராமத்திலுள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு.


காற்றில் கலந்திருக்கும் `பிராணவாயு’ என்ற `ஆக்ஸிஜன்’ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத காற்றில், ஆக்ஸிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாகக் கலந்துள்ளன. அதாவது, காற்றில் சுமார் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவும், 21 சதவீதம் ஆக்ஸிஜன் வாயுவும் இருக்கின்றன. மீதமுள்ள ஒரு சதவீதத்தில் 0.93 சதவீதம் ஆர்கான், 0.039 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நியான், ஹீலியம், மீதேன், கிரிப்டான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓஸோன், அயோடின், அம்மோனியா போன்ற சுமார் பதினாறு விதமான வாயுக்கள் கலந்திருக்கின்றன.


காற்றில் 21 சதவீதம் இருக்கும் ஆக்ஸிஜன் வாயுதான், நம்மை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த 21 சதவீத ஆக்ஸிஜன் வாயு, 1 சதவீதம் குறைந்தால் கூட, உடலில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் ஐந்து சதவீதம் குறைந்தால் எல்லோர் உயிருக்கும் ஆபத்துதான்.


இந்த 21 சதவீத ஆக்ஸிஜனே உலகிலுள்ள அனைவரும் உயிர்வாழ போதுமானது. இதைக் கெடுக்காமல், இது இன்னும் குறையாமல் பார்த்துக் கொண்டால் சரிதான். காற்றின் அழுத்தமும், காற்றின் அடர்த்தியும் உயரம் போகப் போக குறைந்துகொண்டே போகும். சுமார் பத்தாயிரம் மீட்டருக்கு மேலே போகும்போது, காற்றில் உள்ள வாயுக்களின் சதவீதம் மாறும்.


நீருக்குள் காற்று இருக்கிறது, நீருக்குள்ளேயே வாழும் உயிரினங்கள் அனைத்துமே, தனக்குள்ள `கில்ஸ்` என்று சொல்லக்கூடிய விசேஷ நுரையீரலைப் பயன்படுத்தி, தண்ணீரிலுள்ள காற்றிலிருந்து, ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை மட்டும் பிரித்தெடுத்து சுவாசிக்கின்றன.


விண்வெளியில் ஆக்ஸிஜன் வாயு கிடையாது. ஆகவே விண்வெளி வீரர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை உடன் எடுத்துச் சொல்கிறார்கள். வானத்தில் `ஓஸோன் திரை’ என்று சொல்லக்கூடிய இடம் வரைக்கும் தான் ஆக்ஸிஜன் வாயு உண்டு. அதற்கு மேல் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு காற்று இருக்கும். ஆனால் ஆக்ஸிஜன் வாயு இருக்காது.


பூமிக்கடியில் அதிக ஆழத்திலுள்ள சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு, `வென்டிலேடிஸ் ஷாப்ட்’ என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ராட்சத குழாய், பூமியிலிருந்து சுரங்கத்திற்குள் நுழைக்கப்பட்டு, தரையிலுள்ள இயற்கைக்காற்று உள்ளே அனுப்பப்படுகிறது. இதன் மூலம்தான் சுரங்கத் தொழிலாளர்கள் சுவாசிக்கிறார்கள்.


தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களுக்கு, நுரையீரலில் காற்று இருப்பதற்குப் பதிலாக தண்ணீர் நிரம்பி விடுகிறது. இதனால்தான் இறக்கிறார்கள்.`சூரிய ஒளிச்சேர்க்கை’ அதாவது `போட்டோ சிந்தெஸிஸ்’ (Photo Synthesis) என்று சொல்லக்கூடிய செயல்முறையில், தாவரங்கள் அனைத்தும், சூரிய ஒளிசக்தியை பயன்படுத்தி, ஆக்ஸிஜன் வாயுவை உண்டாக்குகிறது. இந்த ஆக்ஸிஜனை உயிரினங்கள் எடுத்துக் கொள்கின்றன. உயிரினங்கள் தான் உண்ணும் உணவை எரித்து, அதன் மூலம் கிடைக்கும் சக்தியை உடலுக்கு கொடுக்க, ஆக்ஸிஜன் வாயு மிகவும் உபயோகப்படுகிறது.


மனிதன் ஆக்ஸிஜன் வாயுவை சுவாசித்து, (அதாவது உள்ளே இழுத்து) கார்பன் டை ஆக்சைடு என்கிற வாயுவை வெளியே விடுகிறான். இதற்கு நேர்மாறாக, எல்லா செடி, கொடிகளும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளே இழுத்து, ஆக்ஸிஜன் வாயுவை வெளியே விடுகிறது. சூரிய வெளிச்சம் இருந்தால்தான் இப்படி நடக்கும். சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் அதாவது இரவில், மனிதனைப் போல தாவரங்களும் ஆக்ஸிஜன் வாயுவை உள்ளே இழுத்து, கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியே விடுகிறது.


ஆக்ஸிஜன் வாயு நமக்கு தேவை. கார்பன் டை ஆக்ஸைடு வாயு நமக்குத் தேவையில்லை. பகலில் ஆக்ஸிஜன் மரத்தடியில் கிடைக்கும். அதனால் பகலில் மரத்தடியில் படுக்கலாம். இரவில் ஆக்ஸிஜன் மரத்தடியில் கிடையாது. கார்பன் டை ஆக்ஸைடு தான் கிடைக்கும். இரவில் மரத்தடியில் படுக்கக்கூடாது என்று சொல்வதன் காரணம் இதுதான்.


என் நண்பர் ஒருவர் வாக்கிங் போகும்போதும், சும்மா இருக்கும்போதும், வழியிலிருக்கும் செடி, கொடிகளின் அருகில் போய் இலைகளுக்கு பக்கத்தில் மூக்கைக் கொண்டு போய், நன்றாக மூச்சை உள்ளே இழுத்துவிட்டு வருவார். “என்ன சார் இது, வழியெல்லாம் செடி, கொடிகளை மோப்பம் பிடித்துக்கொண்டே வருகிறீர்கள்” என்றேன்.


“எல்லாச் செடி கொடிகளும் பகலில் ஆக்ஸிஜனை வெளியே விடும். இவைகளிலிருந்து வெளியே வரும் இந்த சுத்தமான ஆக்ஸிஜன் நமக்குத் தேவை. அதனால்தான் இலைகளின் கிட்டே போய் அந்த சுத்தமான ஆக்ஸிஜனை, கலப்படமில்லாத ஆக்ஸிஜனை உள்ளே இழுத்து, உடம்பை தெம்பாக்கிக் கொள்கிறேன் டாக்டர்” என்றார் அந்த நண்பர். அவர் செய்வது சரிதான்.


அதிக மக்கள் கூட்டத்தில் நாம் இருக்கும்போது, ஆக்ஸிஜன் நமக்கு கிடைப்பது குறைந்து விடுகிறது. அதாவது பத்து பேர் இருக்க வேண்டிய இடத்தில் நூறு பேர் இருந்தால் நமக்கு ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும். அதே நேரத்தில், எல்லோரும் சுவாசித்து விட்டு, காற்றை வெளியே விடும்போது அந்த இடத்தில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு அதிகமாகி விடுகிறது. கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று சொல்வது இதனால் தான்.


மேலும் தாம்பத்ய உறவின் போது வெளிப்படும் ஆழமான மூச்சு அதிக அளவில் ஆக்சிஜனை மூளைக்கு கொண்டு செல்கிறது. இதனால் மூளை மட்டுமல்லது உடலின் அனைத்து அவயங்களும் ஆரோக்கியமடையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதிலும் வாரத்திற்கு மூன்று முறை உறவில் ஈடுபடுவதன் மூலம் 7500 கலோரிகள் வரை காலியாகிறதாம். இது 75 மைல்கள் நடந்து சென்றதற்கு சமம் என்கின்றனர் பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மேலும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் எரிக்கப்பட்டு இதயத்தை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

தன் கையே தனக்கு உதவி (நீதிக்கதை)!







ஒரு மாட்டு வண்டிக்காரன் தன் மாட்டு வண்டியை ஒரு குறுகலான தெருவில் ஓட்டிக் கொண்டுச் சென்றான்.அப்போது அருகில் இருந்த பள்ளம் ஒன்றை நோக்கி மாடுகள் செல்ல..வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் நன்கு சிக்கிக் கொண்டது.


பள்ளத்தில் மாட்டிக் கொண்ட வண்டியை மீண்டும் சரியாக சாலைக்குக் கொண்டு வர யாரேனும் வருகிறார்களா? எனறு பார்த்த வண்டிக்காரன்..யாரும் வராததால்..'ஆண்டவா! இந்த வண்டியை சரியான பாதைக்குக் கொண்டுவா.." என கடவுளை வேண்டினான்.


இறைவன் அவன் முன் தோன்றி' 'உன் தோள்களால் முட்டுக் கொடுத்து சக்கரத்தை பள்ளத்தில் இருந்துத் தூக்கி நிறுத்தி...மாடுகளையும் அதட்டி ஓட்டு..அதை விடுத்து..உன் அனைத்துக் காரியங்களுக்கும்..யாரேனும் வந்து உதவி செய்ய வேண்டும் என எதிர்ப்பார்க்காதே!' என்று கூறி மறைந்தார்.


தன் கையே தனக்கு உதவி என உணர்ந்துக் கொண்ட வண்டிக்காரன்...வண்டியை மீண்டும் சாலைக்குக் கொண்டு வந்தான்.


பின்னர்..அவன் எந்த தன் வேலைக்கும் யாரையும்...ஏன்..ஆண்டவனையும் கூட அழைக்கவில்லை.
 

கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!




கடவுள் நம்பிக்கை, நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவை நிறைந்தது சினிமா உலகம். படத்திற்கு பூஜை போடுவதில் இருந்து, படப்பிடிப்பு தொடங்கி கடைசியில் பூசணிக்காய் உடைக்கிறது வரைக்கும் இதையெல்லாம் சரியாக கடைபிடிப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட சினிமாவில் இது எதையும் பார்க்காமல் தனது திறமை, முயற்சி, உழைப்பு இவற்றையே மூலதனமாகக்கொண்டு இன்று வரை வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார் கமல். குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.



ஆனால், அப்படிப்பட்ட கமல், ரீ ரிலீசாகும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தபோது., அவரது ரசிகர்களும் பெருந்திரளாக கூடியிருந்தனர். கமலின் பெயரை மேடையில் பேசுவோர் உச்சரிக்கும்போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நேரத்தில் சிலர், ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்றும் அவ்வப்போது குரல் கொடுத்தனர்.



இதை மேடையில் அமர்ந்திருக்கும்போது கேட்ட கமல் அவ்வப்போது ரசிகர்களை மெளனமாக இருக்குமாறு கை சைகையில் கேட்டுக்கொண்டு வந்தார். ஆனால், அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா மட்டும் ரசிகர் கூட்டத்தில் இருந்து ஒலித்துக்கொண்டேயிருந்தது. அதுவும் கமல் மைக் முன்னே பேச வரும்போது இன்னும் வேகமாக ஒலித்தது.



இதனால், ரசிகர்களைப்பார்த்து, நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா என்று ரசிகர்களைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொல்ல, அதோடு ஆப்பாகி விட்டனர். அதன்பிறகு அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா சத்தம் அரங்கில் ஒலிக்கவேயில்லை. 

 
back to top