
”கதைக்கு ஏற்ற தலைப்பு 'ஆரம்பம்'. இந்த தலைப்பு வைத்ததே படத்திற்கு மிகவும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது” என்று அடக்கமாக பேசுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இறுதிகட்ட பணிகள், இசை வெளியீடு என மும்முரமாக பணியாற்றி கொண்டிருந்தவரிடம் பேசினோம். 'ஆரம்பம்' ஏன் இவ்வளவு லேட்? “படத்தில் நடித்து இருக்கும் நடிகர்களின் பெயர்களை கேட்டால் 'ஏன் இவ்வளவு தாமதம்' என்று கேட்க மாட்டீர்கள். அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா (கெஸ்ட் ரோல்), சுமன் ரங்கநாதன், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்சுரேகர் மட்டுமன்றி, அக்ஷ்ரா கெளடா என்ற பெண்ணையும் இப்படத்தில் அறிமுகம் செய்கிறேன். இவ்வளவு நடிகர்களின் கால்ஷீட் வாங்கி, படப்பிடிப்பு போக வேண்டும். படம் தாமதம் என்று...