| ||
|
Thursday, September 19, 2013
'ஆலப்புழா' - சுற்றுலாத்தலம்
'தல' அஜித்தின் தனிமனிதப் போராட்டம்!
”கதைக்கு ஏற்ற தலைப்பு 'ஆரம்பம்'. இந்த தலைப்பு வைத்ததே படத்திற்கு மிகவும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது” என்று அடக்கமாக பேசுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இறுதிகட்ட பணிகள், இசை வெளியீடு என மும்முரமாக பணியாற்றி கொண்டிருந்தவரிடம் பேசினோம்.
'ஆரம்பம்' ஏன் இவ்வளவு லேட்?
“படத்தில் நடித்து இருக்கும் நடிகர்களின் பெயர்களை கேட்டால் 'ஏன் இவ்வளவு தாமதம்' என்று கேட்க மாட்டீர்கள். அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா (கெஸ்ட் ரோல்), சுமன் ரங்கநாதன், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்சுரேகர் மட்டுமன்றி, அக்ஷ்ரா கெளடா என்ற பெண்ணையும் இப்படத்தில் அறிமுகம் செய்கிறேன். இவ்வளவு நடிகர்களின் கால்ஷீட் வாங்கி, படப்பிடிப்பு போக வேண்டும். படம் தாமதம் என்று நீங்கள் கூறுவதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன். அதுமட்டுமல்ல நான் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்தவே இல்லை என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.”
படத்தலைப்பிலும் நிறைய குழப்பம் இருந்தது போல?
“படத்தலைப்பில் குழப்பம் இருக்கிறது நான் எப்போதாவது நான் கூறினேனா? நான் முதலில் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தேன். படப்பிடிப்பு தொடங்கிவிட்டதால் படத்தலைப்பு பற்றி யோசிக்கவில்லை. 'ஆரம்பம்' என்ற டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றவுடன் வைத்தேன். அவவளவு தான். அந்த தலைப்பு வைத்தவுடன், இணையத்தில் கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.”
விஷ்ணுவர்தன் படம் என்றாலே அஜித் அல்லது ஆர்யா இருப்பார் என்றாகிவிட்டதே... வேறு நடிகருடன் படம் பண்ணும் ஐடியா எதும் இல்லையா?
“விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கண்டிப்பாக எனது அடுத்த படத்தில் இதனை பிரேக் பண்ணுவேன். அதுமட்டுமன்றி எனக்கு அஜித், ஆர்யா இருவரிடம் நடிகர்கள் என்பதையும் கடந்து நட்பு இருக்கிறது அதனால் நான் அவர்கள் இருவருடன் பணியாற்றும் போது மிக நன்றாக செயல்பட முடிகிறது. நல்ல சூழல் கிடைக்கிறது.”
'பில்லா' நயன்தாரா - 'ஆரம்பம்' நயன்தாரா எப்படி இருக்காங்க?
“பில்லா' படத்தில் ரொம்ப கிளாமரா நடிச்சு இருப்பாங்க. ஆனால் இப்படத்தில் அப்படியில்லை. 'ஆரம்பம்' படத்தில் அஜித்திற்கு ஜோடி என்பதையும் தாண்டி ஒரு நல்ல பாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார்.”
'ஆரம்பம்' கதை என்ன? அஜித்திற்கு என்ன ரோல்?
“ஒரு வரிக்கதையினை கூறினால் படத்தின் கதை உங்களுக்கு தெரிந்துவிடும். ஒரு தனிமனிதப் போராட்டம் தான் 'ஆரம்பம். அஜித் சார் என்ன பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதினை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படத்தில் இன்னும் ஒரு சில பணிகள் இருக்கின்றன். 19ம் தேதி இசை வெளியீடு இருக்கிறது. தீபாவளிக்கு திரைக்கு வரும். படத்தின் பைனல் எடிட் பார்த்தேன். 'ஆரம்பம்' மிகவும் ஸ்டைலீஸாகவும், பரபரப்பாகவும் வந்து இருக்கிறது. படம் பார்க்கும் ஒருவருக்கு கூட 'ஆரம்பம்' போர் அடிக்காது.
காகமும் ...அறிவுரையும்.(நீதிக்கதை)

ஒரு மரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.அதே மரப்பொந்தில் ஒரு ஆந்தை இருந்தது.
அது நள்ளிரவில் காக்கை தூங்கி இருக்கும் வேளையில் வந்து அதை விரட்டி அடித்தது.
மறு நாள் வேறொரு மரத்தில் காக்கை கூடு கட்டியது.அதையும் தெரிந்து கொண்ட ஆந்தை அங்கேயும் சென்று இரவில் காக்கையை விரட்டியது.
அடுத்த நாள் காக்கைஅடுத்த ஊரிலிருந்த தன் தாய் காகத்திடம் இதைப் பற்றிக் கூறியது. 'இதிலிருந்து தப்ப வழி என்ன?' என்று கேட்டது.
அப்போது தாய் காகம்..'ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஆகவே நீ பகலில் சென்று ஆந்தையை விரட்டு' என்றது.
காகம் அதன் படியே செய்ய ...ஆந்தை காகத்தை விட்டு ஓடியது.
காகத்தின் புத்திசாலித்தனமும்...தாயார் சொன்ன அறிவுரையும்...அதையும் அதன் குஞ்சுகளையும் காப்பாற்றியது.
சாம்சங் நோட் 3 ஸ்மார்ட் போன் அறிமுகம்!

செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவின் சாம்சங் நிறுவனம் அதிக செயல்பாடுகளைக் கொண்டுள்ள நோட் 3 எனும் உயர்ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 49,900 ஆகும். வெறுமனே போனாக மட்டுமின்றி பல்வேறு பயன்பாடுகளுக்கு இதைப் பயன்படுத்தும் வகையில் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில்செயல்படும் இந்த ஸ்மார்ட்போனின் எடை வெறும் 168 கிராம்தான். 5.7 அங்குல திரை, 13 மெகாபிக்சல் கேமரா ஆகியன இதன் சிறப்பம்சம், கருப்பு, வெள்ளை, இளம் சிவப்பு ஆகிய கண்கவர் நிறங்களில் இது வெளிவந்துள்ளது. 3200 எம்ஏஹெச் பேட்டரி 24 மணி நேரம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்கிறது.
இந்நிறுவனம் முதல் முறையாக கையில் அணியக்கூடிய தண்ணீர் புகாத கேலக்ஸி கியரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 22,900 ஆகும். இந்த இரு தயாரிப்புகளும் செப்டம்பர் 25 ம் தேதி முதல் சந்தையில் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.
விற்பனையை அதிகரிக்க நோட் 3 ஸ்மார்ட் போனுக்கு எளிய தவணை முறைத் திட்டத்தையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 3ஜியில் செயல்படும் வகையிலானது நோட் 3 ஸ்மார்ட்போன். இந்த செல்போனில் திருடுபோனால் கண்டறியும் வசதியும் உள்ளது.



7:54 AM
Unknown

'
ஆலப்புழா இத்தாலி நாட்டின் வெனிஸ் நகருக்கு இணையான அமைப்பை உடையது. வெனிஸ் நகர மக்கள் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு செல்வதென்றால் கூட படு வழியாகத்தான் பயணம் செய்வார்கள். கிட்டத்தட்ட ஆலப்புழாவும் அப்படிப்பட்டதுதான். அனைத்து பொருட்களும் படகு வழியாகத்தான் வீடுகளுக்கு வருகிறது.
ஊரை சுற்றிலும் ஆறுகள், ஏரிகள், அடர்ந்த பசுமையான மரங்கள் இவை அனைத்தும் இயற்கை அன்னையின் மடியில் நம்மை தவழச் செய்கிறது
படகு இல்லம்:
கேரள சுற்றுலா துறையின் மூலமாகவும் பல்வேறு படகு இல்லங்கள் உள்ளன. படகு இல்லங்கள் சாதரணம் முதல் நவீனம் வரை உள்ளது. பயணிகளின் பொருளாதார வசதிகளை பொறுத்தது. இந்த படகு இல்லங்களில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு 9000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 7000 ரூபாய் வரையும் செலவாகலாம். மூன்று வேலை உணவும் உங்களுக்கு அதில் வழங்கப்படும்.
இப்போது நாம் வள்ளத்தில் பயணிப்போம் ;
குமரகோமை அடைந்ததும் நாம் இன்னொரு விந்தையான உலகிற்குள் நுழைந்தது போல உணரமுடியும் . தீவுக்கூட்டம் நிறைந்த இந்த சிறிய காயல் கிராமத்தின் தனக்கென பிரத்தியேக வாழ்க்கை முறையும் மெல்லிய அழகான மனதை வருடும் காட்சிகள் ஒலிகள் மற்றும் நறுமணம் யாவும் நம்மை அப்படியே கட்டிப்போட்டு விடும்.குமரகோமில் சிறிது தங்கி இளைப்பாறிவிட்டு வைக்கமிற்குச் செல்லலாம்.
வைக்கம் இது பல மனோரம்மியமான காட்சிகளையும் வாழ்க்கை முறைகளையும் கண்முன் கொண்டு நிறுத்து
ஃபோர்ட் கொச்சிக்கு விடைகொடுத்து விட்டு நாம் பால்கட்டி தீவை நோக்கி செல்வோமானால்
ஆலப்புழாவில் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப படகுகளை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். சிறிய நாட்டுப் படகுகள், ஆடம்பரப் படகுகள், சிறிய விரைவு படகுகள், பெரிய பயணிகள் மோட்டார் படகுகள் என்று எல்லாவிதமான படகுகளும் இங்கு கிடைக்கும். சிறிய படகுகள் கால்வாய்கள் வழியாக பயணம் மேற்கொள்ள உதவும்.
கிருஷ்ணர் கோவில் :
காயங்குளம்-கிருஷ்ணாபுரம் அரண்மனை:
சக்குலத்
எடத்துவா தேவாலயம் :
நேரு ஸ்னேக் கோப்பை படகுப் போட்டி
ஆலப்புழா செல்வது எப்படி :