..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
7:20 PM
Unknown
No comments
கத்திலுள்ள சருமம் மாசு மருவின்றித் திகழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியெனில் பின்வரும் தேன் ஃபேஸ் மாஸ்க்கை செய்து பாருங்கள். அதற்கு சிறிது தேன், கடலை மாவு, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்கள்.
பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் நன்றாகக் காயவிடுங்கள். நன்கு காய்ந்ததும், முகத்திலிருந்து உரித்தெடுங்கள். இம்மாஸ்க்கானது முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி, முகத்தை மென்மையாகவும் ஆக்கும்.
அதிலும் வாரமொரு முறையாவது இதனைச் செய்து வந்தால், நல்ல பலன் தெரியும். சூரிய ஒளி அதிகம் படுவதால், சருமம் கருமை அடைகிறதா? அப்படியென்றால் அதற்கு சிறப்பான தீர்வாக தேன் அமையும். தேன், பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து கொள்ளுங்கள்.
பின் அதனை சூரிய ஒளியால் கருமை அடைந்த பகுதிகளில் இக்கலவையைத் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் தண்ணீர் கொண்டு நன்கு அலசிவிடுங்கள். தீப்புண் தழும்புகள் நெருப்பில் சுட்டுக் கொண்டீர்களா? உடனடியாக தீக்காயத்தின் மீது சிறிது தேனைத் தடவுங்கள்.
தேனுக்குக் காயத்தினை ஆற்றும் தன்மையும், கிருமி நாசினித் தன்மையும் உண்டு. இதன் காரணமாக தீப்புண் எளிதில் ஆறுவதோடு, தீக்காயத்தால் உண்டாகும் தழும்புகளும் வழக்கத்தை விட குறைவான அளவில் இருக்கும்.
7:16 PM
Unknown
No comments
ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும், கீழ்கோர்ட்டுகளில் தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று, கடந்த 1994-ம் ஆண்டு தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான நீதிபதிகள் குழு கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வக்கீல்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீல்கள் எழிலரசு, சூரியபகவான்தாஸ், வினோத், சட்டக்கல்லூரி மாணவர் திசைஎந்திரன் ஆகியோர் கடந்த 16-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். நேற்று 3-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.இதனால் அவர்களது உடல்நிலை மோசமானது. மதுரை ஐகோர்ட்டு கிளையில் செயல்பட்டு வரும் ஆஸ்பத்திரி டாக்டர்கள், உண்ணாவிரதம் இருந்தவர்களின் உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது வக்கீல் வினோத் உடல்நிலை மோசமாக இருந்ததால், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வினோத், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் நேற்று ஐகோர்ட்டு கிளைக்கு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே விடுவதற்கு மறுத்து விட்டனர். தடையை மீறி ஐகோர்ட்டு வளாகத்திற்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மேலும் 45 பேர் ஊர்வலமாக வந்தனர். மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே வந்த அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களுக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், போராடும் வக்கீல்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அக்ரவால், கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று, நீதிபதி சாமி தலைமையிலான குழுவின் பரிந்துரை அடிப்படையிலான விதிமுறை ரத்து செய்யப்படும் என்றும், அவர் அறிவித்தார்.நேற்று மாலை 3.30 மணிக்கு, உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களிடம் மதுரை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் உறுதிமொழி பற்றி தெரிவித்து, உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெற வேண்டும்” என்று வற்புறுத்தினார்கள்.அதை ஏற்றுக்கொண்ட வக்கீல்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.
7:09 PM
Unknown
No comments
பொதுவாக அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகிற்கு மெருகூட்டுவதும், கவர்ச்சியைக் கொடுப்பதும் கண்களே. கண்களின் பார்வையில் பல அர்த்தங்களும் உண்டு. மனித உடலில் கவர்ச்சிப் பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் மிகச்சிறந்த உறுப்புகள் அவையே. முகத்தின் மெருகிற்கு முத்திரை பதித்தது போல் இருக்கும் கண்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் ஜொலிக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அதனால் எல்லோரும் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இவ்வளவு முக்கியமான கண்களை அல்லது கண்பார்வையை இழப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவு, எமது பழக்க வழக்கங்கள், நாம் வாழும் சூழ்நிலை, நாம் செய்யும் தொழில், தூக்கமின்மை என்பனவற்றுடன் நாம் அவற்றை சரியாக பராமரிக்காது விடுவதுமே முக்கிய காரணிகளாகும்..கண் பார்வைக் குறை ஏற்படாதிருக்க அவற்றிக்கு வேண்டிய போசாக்கான உணவு அவசியம். விற்றமின் “ஏ” யும் “சீ” யும், இரும்புச் சத்தும் முக்கியமாக கண்களிற்கு தேவைப்படுகின்றன. அவை பழங்களிலும், மரக்கறிகளிலும், கீரைகளிலும் போதுமான அளவு கிடைக்கின்றன.
போதை வஸ்து, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கும் போது அவற்றில் உள்ள நஞ்சுப் பொருள்கள் இரத்தத்தில் சேர்ந்து மிகவும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட கண்களின் பார்வையை பாதிக்கின்றன.. எனவே அவற்றை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.நாம் வாழும் சூழ்நிலை மாசு பட்டதாகவும், தூசு நிறைந்ததாகவும், நச்சுப் புகையுள்ளதாகவும், பசுமையற்றதாகவும் இருக்கும் போது விழித்திருக்கும் கண்கள் அவற்றால் தாக்கமடைந்து பார்வை பாதிப்படைகின்றது. நாம் செய்யும் தொழிலும் எமது கண்பார்வையை கெடுத்து விடுகின்றது. அதிக நேரம் கணினி பாவித்தல், தொழிற் சாலைகளில் தெறித்து வரும் உலோகத் துண்டுகளின் தாக்கங்களும், இரசாயன வாயுக்கள் கலந்த காற்றும் கண்பார்வையை கெடுத்து விடுகின்றன. அச்சந்தற்பங்களில் தவறாது பாதுகாப்பு கவசம் அணிதல் வேண்டும்.காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..கண் எரிச்சலைப் போக்ககோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.புத்துணர்ச்சி பெறவெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.கருவளையம் போக்கவெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.கண்கள் குளிர்ச்சி பெறஉள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.வசீகர கண்கள்கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மாறும்.மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.ப்ளீச் வேண்டாமேமுகத்திற்கு ப்ளீச் செய்யும் போது கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை கண்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.உங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம்.பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன்படுத்தும் போது, சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த் தியாகவும், சிறிய கண்கள் உடையவர் கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.
6:24 PM
Unknown
No comments
2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7.இதன் பயன்கள் பல இருப்பதால் – முக்கியமானதை மட்டும் பார்ப்போம்.1. முதலில் இதன் கலர்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வகையில் அமைக்கபட்டிருக்கிற்து.2. ஒவ்வொரு ஐகானும் புது மாதிரி செய்திருக்கிறார்கள், அதனால் அந்த பழைய ஐகான் இல்லவே இல்லை.3. ஆப் ஸ்வாப் எனப்படும் ஒவ்வொரு ஆப்பின் நடுவே இன்னொரு ஆப்பை இயக்கும் ஸ்மூத் டிரான்ஸிஷன்.
4. ரொட்டேஷன் லாக் ஐ போட் போன்று இதற்க்கு உள்ளதால் இனிமேல் ஆப் சங்கு சக்கரம் மாதிரி சுத்தாது.5. டூ நாட் டிஸ்டர்ப் – ஒரு செம்மை ஆப்ஸ் – பல பேர் அருகில் இருந்தும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்கள்.6. ஏர் டிராப் எனப்படும் ஒரு வசதி நெட்வொர்க்கில் இருக்கும் யாருக்கும் மெயில் இல்லாமலே ஃபைல்களை அனுப்ப முடியும்.7. சிரி எனப்படும் ஐஃபோனின் சக்காளத்தி இனிமேல் மனித குரலில் பேசும் மற்றும் உங்கள் குரலை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும்.8. சஃபாரி பிரவுசர் இனிமேல் ஒரே பிரவுசரில் மற்ற பக்கங்கள் தெரியும் வண்ணம் அது போக ஆட் நியூ பேஜ் தொல்லை இல்லை.9. கேமரா இன்டர்ஃபேஸ் கலக்கலாய் உள்ளதால் புதுசா படம் பிடிக்கிறவங்க கூட பி சி ஸ்ரீ ராம் கண்க்கா பிடிக்கலாம் ரெடி ஆப்ஸ் அதில் டிங்கரிங் பட்டி பார்க்கலாம் வேறு ஆப்ஸ் இல்லாமல்.10.ஃபோட்டோக்கள் இனிமேல் எந்த எடத்தில் எடுத்தோம் என கவலைஇல்லாமல் மேப்பில் இந்த படங்கள் இங்கே எடுக்கபட்டது என கூறூம். இன்ஸ்டாகிராமும் டோட்டல் சேஞ்ச ஓவர்11. ஐ டியூன்ஸ் ரேடியோ – சூப்பர் இலவச ரேடியோ ஆப் மிகவும் குறைந்த பேன்ட்வித்தில் இயங்குகிறது – அதே போல் இதன் உபயோகம் அமெரிக்கா மக்களுக்கு மட்டுமே – கூடிய சீக்கிரம் அனைத்து நாட்டுக்கு தனி தனியே வருகிறது.12. நோட்டிஃபிக்கேஷன் சென்ட்டர் எனப்படும் தகவல் பலகை – நீங்கள் ரெகுலராய் பார்க்கும் இன்றைய வானிலை / ஷேர் மார்க்கெட் நிலவரம் / மிஸ் கால்ஸ் / அப்பாயின்ட்மென்ட் என அத்தனையும் ஒரே ஆப்ஸில் காட்டும் நல்ல டைம் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர்.13. ஆப்ஸ் ஸ்டோர் – ஃபைன்ட் மை ஐஃபோன் எனப்படும் ஆப்ஸ் மூலம் தொலைந்த ஃபோன் மற்றூம் அனைத்து ஆப்ஸும் ஒரே இடத்தில் சங்கமம்.14. கலர்ஃபுல் வால்பேப்பர்ஸ் – மிக அழகாக கண்ணை பறிக்கும் டிரான்ஸ்பரன்ட் மற்றூம் முழு கலர் வால்பேப்பர்ஸ் மிக அற்புதமான சேவை.15. பேட்டரி லைஃப் – இதில் 11% வரை பேட்டரியை சேமிக்கலாம் என கூறுகின்றனர் ஆனால் டெக்னிக்கள் பர்ஸனாய் இது 3ஜி எஸ் / 4 / 4 எஸ் இதில் முடியாது ஒன்லி ஃபர்ம் ஆப்பிள் 5 அன்ட் 5 எஸ் மட்டுமே முடியும்.