.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, September 22, 2013

இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழர் கட்சி முன்னணி ஆட்சியை பிடித்தது!


இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு ஆட்சியை பிடித்தது.இதைத் தொடர்ந்து விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வர் ஆகிறார்.

sep 22 - srilanka. TAMIL

 


இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு, 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இன்று தேர்தல் நடைபெற்றது. தனித்தமிழ் ஈழ நாடு கோரி நடத்திய போரின்போது, விடுதலைப்புலிகளின் மையப்பகுதியாக வடக்கு மாகாணம் திகழ்ந்தது. இந்த மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனினா ஆகிய மாவட்டங்கள் அடங்கி உள்ளன.
வடக்கு மாகாண கவுன்சிலில் மொத்தம் 36 உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கு நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து ஓட்டு போட்டனர். 


பெரும்பாலான வாக்காளர்கள் நெற்றியில் விபூதி–குங்குமம் வைத்து ஓட்டுப்போட காத்து நின்றதை பார்க்க முடிந்தது. ‘‘தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டும். எங்கள் சொந்த மண்ணை எங்களிடமே திருப்பித்தர வேண்டும். இங்கு நாங்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமை வேண்டும்’’ நல்லூர் வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட வந்திருந்த 4 குழந்தைகளின் தாயாரான கோபால சுதந்திரன் புஷ்பவல்லி நிருபர்களிடம் கூறினார். 


இந்நிலையில் மொத்தம் உள்ள 36 ‌இடங்களில் 28ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. ராஜபக்சேவின் ‌ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சிக்கு 7 இடங்கள் மட்டும் தான் கிடைத்தது. இலங்கை முஸ்லீம் கட்சி 1 இடத்தை பிடித்தது. தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வர் ஆகிறார்.


Tamil party sweeps Sri Lanka’s regional vote

****************************************


 Sri Lanka’s main Tamil party has scored a landslide victory in the first semi-autonomous council elections in the island’s north after decades of ethnic war.The Tamil National Alliance (TNA) swept all five districts in the Northern Provincial Council which went to the polls on Saturday, the department of Elections results showed on Sunday.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைனில் வசதி!



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இப்படி ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்கெனவே உள்ளது. அனால் சொந்தமாக இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் மையங்கள் மூலம் இனி பலன் கிடைக்கும். வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைன் வசதியை பெற வெப்சைட் முகவரி: www.elections.tn.gov.in


sep 22 - election comision
 



இது தொடர்பாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் “இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்யும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 994 இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களோடு தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் மட்டும் 86 மையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த மையங்கள் செயல்பட துவங்கும். தங்களது வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் இந்த மையங்களுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அரசு அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வந்து சோதனை செய்து 40 நாளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டை வழங்குவார்கள். கம்ப்யூட்டர் மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்கும் விண்ணப்பத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்க ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். வாக்காளர் பெயர் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்க ரூ.3 மட்டுமே பணம் வசூலிக்கப்படும். வாக்காளர்கள் பெயரை சேர்ப்பது குறித்து விண்ணப்பம் கொடுத்தவர்கள், அதுகுறித்த சந்தேகங்களை 1950 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம். 



மேலும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் வரும் 1ம் தேதி முதல் நடைபெறும். இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை பொதுமக்கள் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஏற்காடு எப்போது?: ‘ஏற்காடு தொகுதி எம்எல்ஏ பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி, ஜனவரி 16ம் தேதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தேதி முடிவு செய்து அறிவிக்க வேண்டும்’ என்றார்.

Saturday, September 21, 2013

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு!

In kelvarak calcium, iron is high. Kelvarak than the calcium in milk is higher in calcium.


கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது.  கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு   கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.


தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய்  பிரச்சனைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும்.  கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது  கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும்.


இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன.  கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.  தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும்   இருக்கின்றன. கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை  கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

சோனி SmartWatch 2 இந்தியாவில் அறிமுகம்!



சோனி நிறுவனம் அக்டோபர் மாதம் முதல் சோனி SmartWatch 2 இந்திய கடைகளில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. சோனி SmartWatch 2 கடிகாரத்தின் விலை ரூ.14.990 ஆகும். இந்த smartwatch, NFC வழியாக மற்ற சாதனங்களுடன் இணையும். 1.6MP கேமரா கொண்டுள்ளது.

சோனி SmartWatch 2, 220x176 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. பெரிய 1.6 இன்ஞ் திரை உள்ளது. அழைப்புகளை மேற்கொள்ளவும் மற்றும் உரை(text) செய்திகள், மின்னஞ்சல்கள், பேஸ்புக் அல்லது டிவிட்டர், காலெண்டர் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற அறிவிப்புகளை அண்ட்ராய்டு சாதனங்களுடன் இணைந்து பெறலாம்.

ஸ்மார்ட் கேமரா அப்ளிக்கேஷன்ஸ் பயன்படுத்தி தொலைவிலிருந்து SmartWatch மூலமாக புகைப்படம் எடுக்கலாம். தரமான மைக்ரோ-USB கேபிள் வழியாக சார்ஜ் செய்ய முடியும். சோனி SmartWatch 2 waterproof (IP57) கொண்டுள்ளது. SmartWatch 2 நான்கு வண்ணங்களை வரும்.

சோனி SmartWatch 2 சிறப்பம்சங்கள்:

1.6 இன்ஞ்,
220 × 176 காட்சி
அலுமினியம் உடல்
மைக்ரோ USB சார்ஜ்
பெரும்பாலான Android தொலைபேசிகளுடன் இணக்கத்தன்மை கொண்டதாக இருக்கும்
NFC இணைப்பு
ப்ளூடூத் 3.0 கொண்டுள்ளது
பேட்டரி 3 முதல் 4 நாட்களுக்கு பயன்படுத்தப்படும்
கேமரா, Mic அல்லது ஸ்பீக்கர்கள் இல்லை


 
back to top