
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எப்படியாவது தமிழ் சினிமாவில் வெற்றி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் '6 மெழுகுவர்த்தி' படத்தை தயாரித்து, நடித்துள்ளார் ஷாம்.ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள்.தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள். காவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர். அங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல் கடத்தியிருப்பது...