.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, September 22, 2013

பால் கொழுக்கட்டை - சமையல்!


 Paccarici flour with salt, hot pudding and mashed scroll to the terms.

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1/2 கப்,
பொடித்த வெல்லம் - 1/2 கப்,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிது.


எப்படிச் செய்வது?


பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, வெந்நீர் விட்டு கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக  உருட்டிக் கொள்ளவும். தேங்காய் துருவி, முதல் இரண்டு பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தையும் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இரண்டாம்  தேங்காய் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு அதிலேயே உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு  வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும் முதல் பால் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி, பின் பறிமாறவும்.

பால் பாயசம்! - சமையல்!









 Cotton-wool in milk and add a little water and cook cooker 3 whistles.


என்னென்ன தேவை? 

பால் - 1 லிட்டர்,
பச்சரிசி நொய் - 1/4 கப்,
சர்க்கரை - 300 கிராம்,
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை,
முந்திரி, திராட்சை - அலங்கரிக்க,
குங்குமப்பூ - சிறிது,
நெய் - சிறிது.



எப்படிச் செய்வது?  

பாலில் சிறிது தண்ணீர் விட்டு நொய் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். பாலில் வெந்த நொய்யில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து  அடிப்பிடிக்காமல் கிளறவும். நெய்யில் ஏலக்காய், முந்திரி, திராட்சை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். குங்குமப்பூ வேண்டுமென்றால் கையால்  நொறுக்கிச் சேர்க்கவும். சுலபமான, சுவையான பால் பாயசம் ரெடி.


தமிழ்வழி பி.இ. படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை!




தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் 120 மாணவ-மாணவிகளுக்கும் படிப்பை முடிக்கும்போது கண்டிப்பாக அரசு வேலை உறுதியாக காத்திருக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உறுதியாக அரசு வேலை காத்திருக்கிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடுதான் இந்த அதிர்ஷ்டத்திற்கு காரணம். 


தமிழ்வழியில் கல்வி 

 
தமிழில் படித்தால் வேலையே கிடைக்காது என்ற ஏளனப்பேச்சை சர்வ சாதாரணமாக எங்கும் கேட்கலாம். மழலை கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள போதும், மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் தமிழ்வழியிலா அம்மாடியோவ் என்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் வந்ததுதான் அந்த அதிரடி அரசாணை. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணைதான் அது. 


20 சதவீத சிறப்பு ஒதுக்கீடு 

 
கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்புத்தூர் நகரில் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிப்பை அந்த மாநாட்டில் அப்போதைய முதல்வர் கரு ணாநிதி வெளியிட்டார்.அதற்கான அரசாணையும் (எண் 145: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, தேதி: 30.9.2010 ) வெளியிடப்பட்டது. 


இதையடுத்து 2011-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் படிப்புகளில் தமிழ்வழி பி.இ. படிப்பு தொடங்கப்பட்டது. தலா 60 இடங்கள் கொண்ட இந்த படிப்புகளில் கலந்தாய்வின்போது மாணவ-மாணவிகள் கொஞ்சம் யோசித்துத்தான் சேர்ந்தனர். தமிழ்வழியில் பி.இ. படிக்கப் போகிறோமே, அதற்கு மதிப்பு இருக்குமா, வேலை கிடைக்குமா என்று அவர்கள் யோசித்து இருக்கலாம். எனினும் துணிந்து தமிழ்வழிப் படிப்பில் சேர்ந்தனர்.


தமிழ் பாடப்புத்தகங்கள் 

 
பாடப்புத்தகங்கள் தமிழில் உரு வாக்கப்பட்டன. முடிந்தவரைக்கும் அந்த பாடங்களின் தொழில்நுட்ப வார்த்தைகள் தமிழாக்கப்பட்டன. பேராசிரியர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடம் நடத்துவார்கள். 2011-ம் ஆண்டு சேர்ந்த மாணவ-மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் (2013-14) அதாவது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். தற்போதும் தமிழக அரசுப் பணிகளில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டுத்தான் வருகிறது. 


நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளிலும், தமிழ்நாடு மின்சார வாரியம், போக்குவரத்துக்கழகங்களிலும் உதவி பொறியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படுகின்றன. ஆனால் தற்போது தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்கள் யாரும் இல்லாததால் அந்த பணியிடங்கள் ஆங்கில வழி படித்த பொதுப்பிரினரால் நிரப்பப்பட்டுவிடுகின்றன. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் 120 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்று படிப்பை முடிக்கும்போது அரசு வேலை உறுதியாக காத்திருக்கும். 



ஆனால் அவர்களுக்குள் போட்டி போட வேண்டியதிருக்கும். 21 வயதில் அரசுப் பணியில் சேரும் இந்த நாளைய தமிழ் பொறியாளர்களுக்கு பணிக்காலம் 36 ஆண்டு, 37 ஆண்டுக்கும் இருப்பதால் அனைவரும் துறை யின் தலைமை பதவியை நீண்ட காலம் அலங்கரிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். 


வளர்ச்சிக்கு வழிகாட்டிய வண்ணத்துப் பூச்சிகள்!


வடிவழகன் 
வடிவழகன் 
 
 
 
குறிப்பிட்ட வகைப் பூக்களிடம் மகரந்தச் சேர்க்கை
 
 
 
குறிப்பிட்ட வகைப் பூக்களிடம் மகரந்தச் சேர்க்கை
விவசாயத்தில் குறிப்பிட்ட வகை பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளின் மரபணுவைத் தூண்டியோ, கட்டுப்படுத்தியோ, சில நுண்ணிய மாற்றங்களைச் செய்தோ அவை பயிர்களுக்கு தீங்கு செய்யாதபடி மாற்றலாம். அது கடினமாக இருக்கும்பட்சத்தில் பயிரின் மரபணுவில் மாற்றம் செய்து அக்குறிப்பிட்ட வகை பூச்சி தன்னிடம் வராமல் செய்யலாம்.

 

கேயாஸ் கோட்பாடு கேள்விப்பட்டி ருப்போம். ஏறத்தாழ அப்படியான ஓர் கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார் இளம் ஆராய்ச்சியாளரும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை முனைவருமான வடிவழகன். வண்ணத்துப் பூச்சிகளின் மரபணுக்கள் தொடர்பாக இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற ஆச்சர்ய விடைகள் நமது விவசாயத் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் என்கின்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. 



"எங்கள் கல்லூரியின் விலங்கியல் துறைப் பேராசிரியர் குணசேகரனின் வழிகாட்டுதலில் உருவான ஆய்வு இது. உயிரினங்களும் தாவரங்களும் நெருங்கியத் தொடர்புடையவை. அந்தத் தொடர்பே பல்லுயிர் சமநிலையை உறுதிப்படுத்துகின்றன. உலகம் முழுவதும் 2 லட்சம் வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருக்கின்றன. அவற்றில் 1,439 இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்குறுத்தி தேசிய பூங்காவில் இருக்கும் வண்ணத்துப் பூச்சிகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டேன். குறிப்பிட்ட சில வகை வண்ணத்துப்பூச்சிகள் எதிரிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தங்கள் இறகுகளின் நிறத்தை விதவிதமாக மாற்றியும், வினோதமாக மடித்தும், இயல்பாக பறக்காமல் வினோதமாக நடித்தும் எதிரிகளை குழப்பமடைய செய்கின்றன. வண்ணத்துப் பூச்சிகளின் சிறப்பு மரபணு பண்பால் விளைந்த விலங்கியல் உண்மை இது. 



ஆனால், ‘நிம்பாலிடே' (Nymphalide) குடும்பத்தைச் சேர்ந்த ‘டெனாய்னே’ (Danainae) துணை குடும்பத்து வண்ணத்துப் பூச்சிகளுக்கு மேற்கண்ட யுக்தி தேவைப்படுவதில்லை. மாறாக, எதிரிகள் இவைகளைக் கண்டால் விலகி ஓடிவிடுகின்றன. இதற்கான விடையை தேடியபோது இவ்வகை வண்ணத்துப் பூச்சிகள் குறிப்பிட்ட வகைத் தாவரங்களின் பூக்களை (Calotropis gigantea, Chromolaena odorata, Crotalaria retusa) மட்டுமே மகரந்தச் சேர்க்கை செய்வது தெரிந்தது. அது ஏன் என்று ஆய்வு செய்ததில் அவ்வண்ணத்துப் பூச்சிகள் தங்களது லார்வா எனும் புழுப் பருவத்தில் மேற்கண்ட தாவரங்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டது தெரியவந்தது. 



இதில் ஆச்சர்யம் என்னவெனில் அத்தாவரங்களில் இருந்த விஷத்தையே அந்தப் புழுக்கள் உணவாக எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த விஷம் புழுக்களை ஒன்றும் செய்யவில்லை. விஷத்தை உட்கொள்ளும் புழுக்கள் எப்படி உயிரோடு இருக்கின்றன என்கிற கேள்விக்கான விடைக்காக புழுவின் மரபணு மற்றும் தாவரத்தின் மூலக்கூறுகளை உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் உயிர்த் தகவியல் ஆய்வுக்கு உட்படுத்தினேன். அப்போதுதான் அப்புழுவிடம் விஷத்தை முறியடிக்கச் செய்யும் அல்லது விஷத்தை ஏற்றுக்கொள்ளும் விஷ எதிர்ப்பு மரபணுக்கள் (Taxin resistance gene) இருப்பது தெரியவந்தது. 



மேலும் அக்குறிப்பிட்ட தாவரத்தின் மரபணுவும் புழுவின் மரபணுவும் ஒன்றுக்கொன்று நெருங்கியத் தொடர்பையும் ஒற்றுமைகளையும் கொண்டிருந்தன. ‘டெனாய்னே’ வகை வண்ணத்துப் பூச்சிகள் மட்டும் அல்ல... Tirumala limniace, Danaus genutia, Euploea core, Danaus chrysippus வகை வண்ணத்துப் பூச்சிகளும் இதே பாணியைப் பின்பற்றுகின்றன. 



சரி, இந்த ஆராய்ச்சியின் பலன் என்ன? இதன் மூலம் விவசாயத்தில் குறிப்பிட்ட வகை பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளின் மரபணுவைத் தூண்டியோ, கட்டுப்படுத்தியோ, சில நுண்ணிய மாற்றங்களைச் செய்தோ அவை பயிர்களுக்கு தீங்கு செய்யாதபடி மாற்றலாம். அது கடினமாக இருக்கும்பட்சத்தில் பயிரின் மரபணுவில் மாற்றம் செய்து அக்குறிப்பிட்ட வகை பூச்சி தன்னிடம் வராமல் செய்யலாம். அப்படியே வந்தாலும் தாக்குதலை முறியடிக்கவோ அல்லது தற்காத்துக் கொள்ளவோ செய்யலாம்.
இன்னும் எளிமையாக புரிய வேண்டுமெனில், ‘ஏழாம் அறிவு’ படத்தின் கான்செப்ட் போலத்தான் இது. ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளேயும் பல்வேறு தலைமுறைகளுக்கு முன்பு இருந்த மரபணு செயல்பாடற்ற நிலையில் உறங்கிக்கிடக்கும். அதை சில தூண்டல்கள் மூலம் மாற்றங்கள் செய்வதும் உயிர்ப்பிப்பதும்தான் இந்த தொழில்நுட்பம். ஒரு பூச்சி ஏன் குறிப்பிட்ட வகை பயிரை மட்டும் தாக்குகிறது என்று மரபணு ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து, மரபணு மாற்றத்தின் மூலம் அதைத் தடுக்கிறோம். 



இந்த ஆராய்ச்சியும் கிடைத்த விடைகளும் ஆரம்பக் கட்டம் மட்டுமே. அதில் பல்வேறு குழப்பங்கள், கேள்விகள் இருக்கின்றன. இதில் படிப்படியாக நூல் பிடித்து மேலும் மேலும் கேள்விகளுக்கு விடைதேடி ஆய்வுகளை விரிவுப்படுத்தும்போது உலகம் வியக்கும் உயிரியல் உண்மைகள் புலப்படும். விவசாயத் துறையில் மட்டுமின்றி வனங்களின் வளர்ச்சிக்கும் இதே தொழில்நுட்பம் உபயோகமாக இருக்கும்" என்றார்.


 
back to top